28 September 2012

அந்த நாள் ஞாபகம் தொடர்-1

வணக்கம் உறவுகளே நலமா?

தனிமரம் அதிகம் தொடரினை தாங்கிவந்தாலும்.

 நேரம் கிடைக்கும் போது சில சின்னச்சின்ன சிலிர்ப்புக்கள் தந்த சினிமாத் திரையரங்குகள் பற்றி அசைபோடலாம் என்ற ஆசையில் தொடரும் தொடர் இந்த அந்தநாள் ஞாபகம்.!

மனோகரா -யாழ்ப்பாணம்.

.ஒவ்வொருத்தரும் பொழுதுபோக்கும் வழிமுறைகளில் இந்த சினிமாவும் ஒன்று பல்வேறுமொழியில், பல்வேறுநாட்டில் இருந்து வரும் சினிமா என்னையும் சீண்டியிருக்கின்றது

.இப்போது கொஞ்சம் பொருளாதார தேடலில் அதிகம் சினிமா பார்ப்பது இல்லை என்றாலும் முன்னர் நானும் அதிகம் படம் பார்த்தவன் .:)))))

என் முதல் சினிமா திரையரங்கை நோக்கிய பயணம் சின்ன வயதில் தொடங்கியது.!

ஈழத்தில் வடக்கே ஒரு தீவில் பிறந்த எனக்கு சினிமா பார்க்க திரையரங்கு காட்ட கூட்டிக்கொண்டு போனவர்கள் அயல்வீட்டுக்கார மாமாவும் ,மாமியும் தான் தங்கள் பிள்ளைகளுடன் என்னையும் சேர்த்துக்கொண்டு.

எங்கள் கிராமத்தைவிட்டு பட்டணம் போவது என்பது 1990 இல் விண்வெளிக்குப் போவது போல ஆச்சரியமானவிடயம். .தாத்தா பட்டணம் போனாலும் பேரன்களுக்கு எள்ளுப்பொரி வாங்கியந்து பாசம் பொழிவதுடன் போய்விடும் காலத்தை பக்கத்துவீட்டு மாமிதான் மாற்றிக் காட்டினவா.

" உவனை நான் பத்திரமாக கூட்டிக்கொண்டுவருவேன் என்று .

அயல்நாட்டுப்படை அமைதி என்று வந்து அலங்கோலப்படுத்திய நிலையைப் பொறுக்கமுடியாமல் மாமாக்கள் ,அண்ணாக்கள் ,போராட்ட வழியில் போனதால் கிராமத்தில் இருந்த சின்னவர்களும் வழி மாறிப்போய்விடுவார்கள் என்ற பயத்தில் பட்டணம் போகவிட்டது இல்லை பலர் வீட்டில்.

என்றாலும் என் வீட்டில் அந்த மாமியின் வார்த்தைக்கு மதிப்புக்கொடுத்து அனுப்பிய பட்டணம் பார்த்தநாள் இன்னும் மனதில் பசுமரத்தாணி போல .

அந்த மாமியின் உடன் பிறப்பு பட்டணத்தில் (நல்லூர்)குடும்பமாக குடியிருந்தார்கள். கிராமத்தில் இருந்து அதிகாலையில் வெளிக்கிட்ட நாம் மதியம் மாமியின் தம்பி வீட்டில் சாப்பிட்ட பின் திரையரங்கு போக முதலில் போனது ராஜா திரையரங்கு.

அப்போது ஓடிய படம்!பூப்பூவாய் பூத்திருக்கு.

அந்தக்காட்சிக்கு முன் கூட்டியே காட்சிகூடம் நிறைந்த நிலையில்.

மனோகராவில் பார்த்த படம் மனிதன்.

அன்று முதல் ரஜனி எனக்குப் பிடித்த நடிகர்கள் வரிசையில் சேர்ந்துகொண்டார்

.ரஜனிகாந்த்,ரூபினி,வினுச்சக்கரவர்த்தி,ரகுவரன்,சிறிவித்யா ,மற்றும் பலர் நடித்த இந்தப்படம் ரஜனிக்கு இன்னொரு வெற்றிப்படம்.ரூபினி பின் ரஜனியுடன் உழைப்பாளியில் குத்துப்பாட்டுக்கு ஆடியது மறக்கமுடியாது.

வைரமுத்துவின் பாடல் பிரபல்யம்" வானத்தைப்பார்த்தேன் .
இசை -சந்திரபோஸ்.

.."எஸ்.பி.முத்துராமன் இயக்கம் .ஏவிஎம் தயாரிப்பு என இந்தப்படம் வெள்ளித்திரையில் பெல்கனியில் இருந்து பார்த்த பரவசம் பின் எந்தப்படமும் மனோகரா திரையரங்கில் நான் மீண்டும் பார்க்கும் நிலையை நம்நாட்டு யுத்தம் காரணமாக முடியவில்லை.. திரையரங்கும் பின் வந்த நாட்களில் இயங்கவில்லை இன்றுவரை என நினைக்கின்றேன் தாயக உறவுகள்தான் நிஜம் சொல்லணும்!:))))

இந்தப்படம் ஒன்றாக பார்த்த அந்த மாமி இன்று கனடிய தேசத்திலும் நான் பாரிஸ் தேசத்திலும் என வாழ்ந்தாலும் நம் உறவு அலைபேசியில் தொடர்கின்றது.என்னோடு ஒன்றாக படித்தவள் அன்று படம் முடிந்து யாழ் கல்யானி கூல்பாரில் என்னோடு ஐஸ்சொக் ஐஸ்க்கிரீம் சாப்பிட்டவள் இன்றும் என்னிடம் கேட்பது எப்படா நீ ?கோபத்தை குறைக்கப்போறாய்?? என் மகன் பள்ளிக்கூடம் போறான் நீ பாரிசில் என்ன செய்கின்றாய் ??
என்ன பதில் சொல்ல ஹீ இன்னும் திருந்தாத ஜென்மன் என்றா????

மனிதன் படத்தில் இந்தப்பாடல் அதிகம் பிடிக்கும்.-பாடிய மலேசிய வாசுதேவன் இன்று நம்மோடு இல்லை,அத்தோடு ரகுவரன், சிறிவித்யா, என யாரும் நம்மோடு இல்லை அதே போல மனோகரா திரையரங்கும் தான்! ஆனால் நினைவு வாழ்கின்றது.!

//

34 comments :

Angel said...

1 st cup :)) cappuccino

Angel said...

நம் நாட்டில் விதை முளைத்து வேர் விட்டு வெளிநாட்டில் கிளைகள் பரப்பி வாழ்வதால்தானோ என்னவோ ....எனக்கும் அந்த நாள் நினைவுகள்
இப்பெல்லாம் அடிக்கடி வருகிறது ...

தனிமரம் said...

வாங்க அஞ்சலின் நலமா இத்தாலியன் கப்பனிச்சோ கேட்டாள் பால்க்கோப்]பி என்னாகும்!ஹீ

தனிமரம் said...

நம் நாட்டில் விதை முளைத்து வேர் விட்டு வெளிநாட்டில் கிளைகள் பரப்பி வாழ்வதால்தானோ என்னவோ ....எனக்கும் அந்த நாள் நினைவுகள்
இப்பெல்லாம் அடிக்கடி வருகிறது //ஹீ அப்ப அஞ்சலின் அக்காள் நல்ல பாட்டு போடுங்கோ நான் வருவேன் எப்போதும்!ஹீ

Angel said...

அப்ப டெக் வந்த புதிது மற்றும் எங்க குடும்பத்தில் நிறைய உறவு அக்காமாருக்கு திருமணம் நடந்த நேரம் அதனால் வீட்டில் காசெட் வாடகைக்கு எடுத்து இந்த படத்தை பார்த்த நினைவு இருக்கு

தனிமரம் said...

நம் நாட்டில் விதை முளைத்து வேர் விட்டு வெளிநாட்டில் கிளைகள் பரப்பி வாழ்வதால்தானோ என்னவோ ....எனக்கும் அந்த நாள் நினைவுகள்
இப்பெல்லாம் அடிக்கடி வருகிறது //ம்ம் நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

Angel said...

பிரபு படம் அந்தமான் நிக்கோபார் தீவில் பாதி படம் காட்சிகள் இருக்கும் சரியா :)

தனிமரம் said...

அப்ப டெக் வந்த புதிது மற்றும் எங்க குடும்பத்தில் நிறைய உறவு அக்காமாருக்கு திருமணம் நடந்த நேரம் அதனால் வீட்டில் காசெட் வாடகைக்கு எடுத்து இந்த படத்தை பார்த்த நினைவு இருக்கு // டெக் எடுத்து பார்த்து என் சின்னவயது அது ஒம்பது சின்னமாமா கலியாணம் ஆனால் திரையில் பதின்னொன்று!ஹீ

Angel said...

சாப்பிட்டாச்சா நேசன் ..எங்க வீட்டில் எப்பவும்போல சப்பாத்தி வெஜிடபிள் குர்ர்ர்ர் மா :))
யோகா அண்ணா மற்றும் ஹேமா எல்லாருக்கும் கொடுத்திடுங்க
இன்னிக்கு காபியுடன் சப்பாத்தியும்

தனிமரம் said...

பிரபு படம் அந்தமான் நிக்கோபார் தீவில் பாதி படம் காட்சிகள் இருக்கும் சரியா :)

28 September 2012 13:43 //ம்ம் உண்மைதான் அமலா /சரிதா இரட்டை வாழ்க்கை அவருக்கு!ம்ம் இடையில் ஒரு பாடல் வரி பொண்டாட்டியோ புயலைப்போல பொங்கி வந்தா !ம்ம்

தனிமரம் said...

சாப்பிட்டாச்சா நேசன் ..எங்க வீட்டில் எப்பவும்போல சப்பாத்தி வெஜிடபிள் குர்ர்ர்ர் மா :))
யோகா அண்ணா மற்றும் ஹேமா எல்லாருக்கும் கொடுத்திடுங்க
இன்னிக்கு காபியுடன் சப்பாத்தியும்

28 September 2012 13:// இனித்தான் அஞ்சலின் அக்காள் சாப்பாடு நீண்டநாளின் பின் ஒன்றாக!ம்ம் சொல்லுவிடுகின்ரேன் யோகா ஐயா காலையில் வருவார் சப்பாத்தி நல்லம் அவருக்கு ஹேமாவுக்கு கிச்சடி ஒக்கே!ஹீஈஈஈஈஈஈஈஈஈ

Angel said...

மலேசிய வாசுதேவன் பாட்டு மனிதன் மனிதன் ..பாட்டு..உண்மையிலேயே கருத்துள்ள பாடல்கள் அப்பெல்லாம்

இப்பவும் வருதே பாடல்கள் :(((

Angel said...

சரி நேசன் போய் சாப்பிடுங்க ..நல்லிரவு வணக்கம் ..
தொடர்ந்து எழுதுங்கள் அந்த நாள் நினைவுகள் ...குறிப்பா பாடல்கள் எனக்கு ரொம்ப விருப்பம் ...சனி ஞாயிறு மிஸ் செய்தாலும் லேட்டாக வந்து பின்னூட்டமிடுவேன் ..

தனிமரம் said...

மலேசிய வாசுதேவன் பாட்டு மனிதன் மனிதன் ..பாட்டு..உண்மையிலேயே கருத்துள்ள பாடல்கள் அப்பெல்லாம்

இப்பவும் வருதே பாடல்கள் ://ம்ம் கால மாற்றம் என்று சொல்லுகின்றார்கள்§ம்ம் நான் அறியேன் வானொலி மறந்து சில் வாரம் ஆச்சு!ம்ம்

தனிமரம் said...

சரி நேசன் போய் சாப்பிடுங்க ..நல்லிரவு வணக்கம் ..
தொடர்ந்து எழுதுங்கள் அந்த நாள் நினைவுகள் ...குறிப்பா பாடல்கள் எனக்கு ரொம்ப விருப்பம் ...சனி ஞாயிறு மிஸ் செய்தாலும் லேட்டாக வந்து பின்னூட்டமிடுவேன் ..

28 September 2012 13:55 // நன்றி அஞ்சலின் அக்காள் நிச்சயம் எழுதுவேன் நேரம் அமையும் போது!நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் நல்ல பாடல்... (உங்களின் ஏக்கமும் தெரிகிறது...)

K.s.s.Rajh said...

மனிதன் மறக்க கூடிய படமா

எனக்கு இதில் ரஜனியைவிட ரகுவரனே வெகுவாக என்னைக் கவர்ந்தார்.

Anonymous said...

நம்ம கே கே எஸ் வீதியில் உள்ள திரையரங்கு தானே அண்ணா.............

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?////ஈழத்தில் வடக்கே ஒரு தீவில் பிறந்த எனக்கு!////அது நகர் ஆகி வெகு காலம் ஆகி விட்டதே?ஹி!ஹி!ஹி!!!!

Yoga.S. said...

"அந்த" நகரில் இருந்து தான் எங்களுக்கு பௌதிகவியல் கற்றுக் கொடுக்க ஒரு ஆசிரியர் வருவார்!சமயத்தில்,இன்று வீட்டுக்குப் போக முடியாது.உங்கள் ஊருக்கு இன்று பஸ்(பேரூந்து)இல்லை என்று "பின்"வரிசைப் பசங்கள் கலாய்ப்பார்கள்!பாடத்தையே மறந்து விடுவார் அந்த ஆசிரியர்,பாவம்!பின்னர் நாங்கள் சமாதானப்படுத்துவோம்!

Yoga.S. said...

angelin said...
சாப்பிட்டாச்சா நேசன் ..எங்க வீட்டில் எப்பவும்போல சப்பாத்தி வெஜிடபிள் குர்ர்ர்ர் மா :))
யோகா அண்ணா மற்றும் ஹேமா எல்லாருக்கும் கொடுத்திடுங்க
இன்னிக்கு காபியுடன் சப்பாத்தியும்!////ஐயகோ!இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல?எங்களுக்கு பேவரிட் புட்டுத்தானே,நேசன்?நேத்து நைட் தோசை,சாம்பார்&சம்பல் சாப்பிட்டோம்,ஹி!ஹி!ஹி!!!!(மகளுக்கு ஒரு வேளை,சப்பாத்தி&வெஜிடேபிள் குருமா பிடிக்கலாம்.////வெளியே சொல்லிடாதீங்க,எது குடுத்தாலும் அவவுக்கு ஓ.கே தான்!)

Yoga.S. said...

அந்த அரங்கில்(மனோகரா)அந்தக் காலத்தில் மிகவும் அகன்ற திரை!சம்பூரண ராமாயணம்,சம்பூரண மகாபாரதம் போன்ற படங்கள் சிறு வயதில் பார்த்திருக்கிறேன்!ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப் படங்களும் காண்பிக்கப்பட்டன.என்னவோ சினிமாஸ்கோப் பாமே அது..................ஹி!ஹி!ஹி!!!

தனிமரம் said...

முடிவில் நல்ல பாடல்... (உங்களின் ஏக்கமும் தெரிகிறது...)// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

மனிதன் மறக்க கூடிய படமா

எனக்கு இதில் ரஜனியைவிட ரகுவரனே வெகுவாக என்னைக் கவர்ந்தார்.

28 September 2012 21:35 //ம்ம் உண்மைதான் ராச். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நம்ம கே கே எஸ் வீதியில் உள்ள திரையரங்கு தானே அண்ணா.......//ஓம் எஸ்த்ர் அதேதான் . நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?////ஈழத்தில் வடக்கே ஒரு தீவில் பிறந்த எனக்கு!////அது நகர் ஆகி வெகு காலம் ஆகி விட்டதே?ஹி!ஹி!ஹி!!!!//காலை வணக்கம் யோகா ஐயா. உண்மைதான் இப்போது நகர்தான் நான் பிறந்த போது அது தீவுதான்!ஹீ

தனிமரம் said...

அந்த" நகரில் இருந்து தான் எங்களுக்கு பௌதிகவியல் கற்றுக் கொடுக்க ஒரு ஆசிரியர் வருவார்!சமயத்தில்,இன்று வீட்டுக்குப் போக முடியாது.உங்கள் ஊருக்கு இன்று பஸ்(பேரூந்து)இல்லை என்று "பின்"வரிசைப் பசங்கள் கலாய்ப்பார்கள்!பாடத்தையே மறந்து விடுவார் அந்த ஆசிரியர்,பாவம்!பின்னர் நாங்கள் சமாதானப்படுத்துவோம்!

28 September 2012 22:40 //புதிய தகவல் ஐயா! அப்பவே வாத்தியாரை கலாய்த்தவர் யோகா ஐயா!ஹீ

தனிமரம் said...

ngelin said...
சாப்பிட்டாச்சா நேசன் ..எங்க வீட்டில் எப்பவும்போல சப்பாத்தி வெஜிடபிள் குர்ர்ர்ர் மா :))
யோகா அண்ணா மற்றும் ஹேமா எல்லாருக்கும் கொடுத்திடுங்க
இன்னிக்கு காபியுடன் சப்பாத்தியும்!////ஐயகோ!இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல?எங்களுக்கு பேவரிட் புட்டுத்தானே,நேசன்?நேத்து நைட் தோசை,சாம்பார்&சம்பல் சாப்பிட்டோம்,ஹி!ஹி!ஹி!!!!(மகளுக்கு ஒரு வேளை,சப்பாத்தி&வெஜிடேபிள் குருமா பிடிக்கலாம்.////வெளியே சொல்லிடாதீங்க,எது குடுத்தாலும் அவவுக்கு ஓ.கே தான்!)

28 September 2012 22:46 //ம்ம் புட்டுத்தான் என் முதல் தெரிவு சமயத்தில் சப்பாத்தி சென்னையில்!

தனிமரம் said...

அந்த அரங்கில்(மனோகரா)அந்தக் காலத்தில் மிகவும் அகன்ற திரை!சம்பூரண ராமாயணம்,சம்பூரண மகாபாரதம் போன்ற படங்கள் சிறு வயதில் பார்த்திருக்கிறேன்!ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப் படங்களும் காண்பிக்கப்பட்டன.என்னவோ சினிமாஸ்கோப் பாமே அது..................ஹி!ஹி!ஹி!!!

28 September 2012 23:08//ம்ம்ம் நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

நெற்கொழுதாசன் said...

நினைவை கிளறும் ஒரு பதிவு.உண்மையில் ஊரில் அனுபவித்தவைகளை மீளநினைவூட்டுவதால்தான் இன்னும் இங்கே நாம் இயங்க முடிகிறதோ என்னவோ ............

நெற்கொழுதாசன் said...

நினைவை கிளறும் ஒரு பதிவு.உண்மையில் ஊரில் அனுபவித்தவைகளை மீளநினைவூட்டுவதால்தான் இன்னும் இங்கே நாம் இயங்க முடிகிறதோ என்னவோ ............

முற்றும் அறிந்த அதிரா said...

தனிமரம் நேசன்.. அந்தநாள் ஞாபகங்கள் மறக்க முடியாதவை.

மனிதன் படம் நானும் பார்த்திருக்கிறேன்ன். சூப்பர்.

முற்றும் அறிந்த அதிரா said...

என்னாது உங்களுக்குக் கோபம் வருமோ? உண்மையாகவோ? நம்ப முடியவில்லை.. இல்லை..இல்லை..

ஆத்மா said...

நல்லதொரு அனுபவப் பகிர்வு.
///
வானத்தைப்பார்த்தேன்///
ஆமா இந்தப் பாடல் அந்தப் படத்துலதான் இருக்கா இன்னைக்குத்தான் தெரிஞ்சது எனக்கு