09 September 2012

விழியில் ஏனோ ஈரம்!!!!!!!!!!!!!!!!!

நீ தானே என் பொன்வசந்தம் பாடல் பற்றி அதிகம் பதிவுலகம் எழுத்தாக பதிவு செய்து கொண்டு இருக்கும் இன்நிலையில் !

இந்தப்பாடல்களை தர இறக்க நிறைவான நேரம் கிடைக்காத நிலையில் எதிர்பாராமல் இன்று பாடல்கள் எல்லாத்தையும் ஐபோனுக்கு சேமிக்க முடிந்திருக்கு.

பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் இளையராஜா தன் இசைச்சரம் கோர்த்து இருக்கின்றார்.


கேட்ட நொடியில் இருந்து என்னோடு வா வா என்று .சாய்ந்தாடு சாய்ந்தாடு. வானம் மெல்லகீழ் இருந்து...  என எல்லாவற்றிலும்  என்னை அதிகம் மனதையும், செவியையும் மொத்த மாக கடன் வாங்கிய பாடல்களில் "முதல் முறைய் பாடல் "

கவிதையும் இசையும் இணைந்து கலக்கும் வித்தையை கேட்டே ரசித்துக்கொண்டே இருக்கின்றேன் 8 பாடலையும் எதைக்கேட்பது முதலில் என்ற அலைபாயும் மனதில் ராஜாவின் இசை என்றால் எப்போதும் ஒரு மயக்கம் இன்றுவரை இது இன்னும் தொடரும் ஆயுள்வரை .
முதல் முறையாக பாட்டில் .ஒவ்வொரு வரியும் நா.முத்துக்குமாரின் ! கவித்துவத்தை ஆழ்ந்து ரசிக்கும் போது இதயத்தில் ஏதோ பாரம். பெண்மையின் உணர்வை கவியாக்கிய கவிக்குப் பின்னால். ராஜாவின் இசை செய்யும் மாயம் இன்னும் சிலிப்பாக இருக்கின்றது. வயலின் வாத்தியம் மனதை எங்கோ அழைத்துச் செல்கின்றது!.
எப்படி எல்லாம் ராஜாவின் இசை என்னோடு பயணிக்கின்றது வாழ்க்கையின் வழிப்பயணத்தில், இன்னும் ராஜா அதிகம் இசையுலகில் ஆளவேண்டும் என்பதே என் ஆசை. பாடலில் ஒலிக்கும் சுனிதி செளஹான்! பாடகியின் தேன் தடவிய குழைவுக்குரல் அதிகம் ஈர்த்து இருக்கின்றது.விழியில் ஏனோ ஈரம்!ம்ம்
.நீ தானே என் பொன்வசந்தம் இப்போதே எதிர்பார்ப்பைத் தந்து இருக்கும் கெளத்தம் மேனன் இந்தப்பாடலை எப்படி காட்சிப்படுத்துவார் என்பதைக்கான காத்திருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.

8 comments :

Seeni said...

mmmmm

Anonymous said...

முதல் முறை பார்த்த ஞாபகம் அருமையான பாடல் இன்றுதான் காலை கேட்டேன் கேட்ட மாத்திரத்திலேயே மனதை கொள்ளை கொண்டு விட்டது அருமை......

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!ம்ம்ம்.......பாடல் கேட்கவில்லை.இசையில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம்.........ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்!

திண்டுக்கல் தனபாலன் said...

எனக்கு பாடல்கள் பிடித்திருக்கு...

நெற்கொழுதாசன் said...

கேட்டுப்பார்ப்போம்

”தளிர் சுரேஷ்” said...

பாடல்கள் கேட்கவில்லை! சிலர் நன்றாக இருப்பதாகவும் சிலர் ஏமாற்றுவதாகவும் கூறுகின்றனர்! கேட்டபின் தான் என் கருத்து!

இன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆவ்வ்வ். பாடலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நேசன்... நன்றாக இருக்கு.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

மாரியம்மா பாட்டு சூப்பர்.