08 September 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -13

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.”
(விருந்தோம்பல் அதிகாரம் - குறள்-10)

விருந்தோம்புவோருக்கு இன்றியமையாதது இன்முகத்தோடு விருந்தோம்பலாகும் என்பான் வள்ளுவன். அது போல தாய்லாந்து விருந்துகளும் நாவிற்கும் மனதிற்கும் தித்திப்புக் கொடுக்கும் கடல் உணவுகள் இங்கு மிகவும் பிரபல்யமும் மிகவும் மலிவாகவும் கிடைக்கும் நம்நாட்டைவிட. விரும்பிய வகை கடல் மட்டி, மணலைமீன், நண்டு, இறால் கணவாய், நெத்தலி, ஒட்டி ஓரா பாரை என அவித்தும், நெருப்பில் வாட்டியும் வெட்டுக்கிளிப்பூச்சி பொரித்தும் தருவார்கள்! 

பாரை மீண் வாட்டி கல்லூண்டாய் வெளியில் தாத்தா கள்ளுக்குடித்த போது நான் சின்னவன். எனக்கு மீன் தீத்திய தாத்தாவுக்கு கூட நான் சிறையில் இருந்ததும் வெளிநாடு போவதும் தெரியாது. அந்தளவு தணிக்கை இனவாத போர் இடைவெளி தலைமுறை இடைவெளி போல! ம்ம் ஆனாலும் தாய்லாந்து கடல் உணவு சாப்பாடு தேவையான சோறு அல்லது நூடிஸ்ல் உடன் உறைப்புக்குத் தான் நம்மூர் மிளக்காய்த்தூள் தேடியலைய வேண்டும். 

ஆனாலும் எண்ணையில் பச்சமிளகாயும் மிளகும் சேர்த்து ஒரு வகை அச்சாரு (soauces-_சோஸ்) கிடைக்கும் ஆசையில் அதிகம் சேர்த்தால் அவர் மறுநாள் கழிவறையில் மாலைப் பத்திரிக்கை வரும் நேரம் வரை பொழுது கழிக்க வேண்டி வரும். அப்படித்தான் அன்று நாமலையும் ராஜா வெளியில் அழைத்துச் சென்றான். ஓட்டிகளிடம் வரும் பயணியிடம் பணம் இருக்கு என்று தெரிந்துவிட்டால்! திருப்பதியில் மொட்டை போடப் போன வெளிநாட்டு வாசிகள் போல ஆளுக்குகொரு காணிக்கையில் மொட்டை அடிப்பது போல ஓட்டிகளும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சலுகை கொடுப்பார்கள்.

இதனால் பணம் அதிகம் கொண்டு வராதவர்கள் மனம்கோனுவார்கள். பிறகு இருகும் நேரத்தில் தப்பான அபிப்பிராயம் வந்து விடும். சிங்களவன் எல்லாம் இனவாதி என்பது போல! அதுவும் நாமல் தாராளமாக ராஜாவுக்கு சோமபானம் வாங்கிக் கொடுப்பதும் தானும் குடிப்பதும் எங்களோடு வந்த அகிலனுக்கு பிடிக்கவில்லை. அகிலன் கட்டுப்பாடு மிக்கவன் என்று சொல்ல முடியும். வறுமையில் விடியல் தேடிப்போகும் ஒரு சாமனியன். நான்கு சகோதரிகள் அவனுக்கு பின் பிறந்தவர்கள். அவன் கையில் குடும்ப பாரம். அதனால் எப்படியும் வெளிநாடு போனால் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்ற ஆசையில் வந்தவன். 

விதி எல்லாரையும் ஒரே அறையில் தங்க வேண்டிய நிலை. அதுமட்டுமல்ல அகிலன் அமைதியானவன். கலகலப்பு நாமலுக்கும் ராஜாவுக்கும் ஒரே கூட்டணி என்றால் மார்க்கிஸ்ட் கட்சி போல அகிலன். நிறைவாக சோமபானம் அருந்தினால் ராஜா தாய்லாந்து வீதியில் தன்னை மறந்து விடுவான். 

"நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில் பேணிப் புணர்பவர் தோள்" என்ற வள்ளுவன் கூற்றுக்கு ஏற்ப பணம் கொடுத்தால் புணர்வாள் தாய்லாந்தில் பாலியல் தொழில் புரிவோர். உடம்பினால் உள்ளத்தினால் அல்ல ராசாவும் போக அவனோடு சேர்ந்து கொண்டான் நாமல். அனுராதபுரம் கொழும்பு எல்லாம் பாலியல் தொழிநடக்கும் இடம் அறிந்தவன். 

பஸ் பயணத்தில் எங்களோடு பேசும் போதே சொல்லியிருந்தான் அது எல்லாம் தெரியும் என்றாலும் நாய்க்கு ஏன் போர் தேங்காய் என்று விட்டு விட்டு வந்த இடத்தில் போய்ச்சேர வேண்டிய நிலையில் நாம் இருந்தோம். 

நாமலும் ராஜாவும் “நீங்கள் இங்கு இருங்கோ நாங்கள் வெளியில் போட்டு வாரம் சாப்பாடு வாங்கிக்கொண்டு”, 
என்று போனால் வருவது நேரம் கெட்ட நேரத்தில் ஓட்டிதானே பொறுப்பு எல்லாருக்கும். குமார் போய் 5 ஆம் நாள் தொலை பேசி அழைப்பு எடுத்தார்.

“ஹலோ எங்க ராஜா” மறுமுனையில் அகிலன் எடுத்தான். 

“அவர்கள் வெளியில் போய்விட்டார்கள்”

“ராசா வந்தவுடன் பேய்ச் சொல்லு கவலைப்படாதீங்க ராசா எல்லாரையும் கொண்டு வந்து சேர்த்துவிடுவார் மலேசியா நான் ஐரோப்பா ஆளிடம் பேசுகின்றேன் ஜோசிக்க வேண்டாம்!” தொடர்பை துண்டித்தார் குமார்!
 தொடரும்!....

(பேசுகின்றேன் – கதைக்கின்றேன் மலேசிய பேச்சுவழக்கு!

கலூண்டாய்வெளி - இலங்கையில் யாழிலில் இருந்து ஒரு கிராமத்துக்குப் போகும் ஒரு வழி)

9 comments :

Angel said...

எவ்வளவு நாட்ட்களாச்சு !!!!!!! இன்று முதல் காபி வேணாம் இங்கே வெயில் கொளுத்துகின்றது ...ஃபலூடா ப்ளீஸ் :))

Angel said...



தொடர்கிறேன் உங்களோடு பயணத்தில் ...
இங்கே வரும் அனைத்து நண்பர்களையும் விசாரித்ததாக கூறவும்

Angel said...

நெருப்பில் வாட்டியும் வெட்டுக்கிளிப்பூச்சி பொரித்தும் தருவார்கள்! //

நீங்க அதை சாப்பிட்டீங்களா ஆ ஆ !!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்...

தொடர்கிறேன்...

[ அதிகாரம் (9): விருந்தோம்பல் - குறள் எண் : 90௦ ] மாற்றவும்... நன்றி...

Yoga.S. said...

மாலை வணக்கம்,நேசன்!அருமை.கொஞ்சம் நெருடல்,கொஞ்சம் அதட்டல்,கொஞ்சம் சந்தோசம் என்று................தொடருங்கள்.தொடர்வோம்!/////அஞ்சலினுக்குப் ஃபலூடா வேண்டுமாம்,(யாழ்)ஐந்து முச்சந்திக்குத்தான் போக வேண்டும்,ஹி!ஹி!ஹீ!!!!!!!!

Yoga.S. said...

முகம் பார்த்தேன்,நேசன்!தயவு செய்து .................................................!

Anonymous said...

ம்ம் தொடருங்கள் அண்ணா வாசிச்சு கிட்டே இருக்கன்.........

Seeni said...

mmm..
thodarungal...

”தளிர் சுரேஷ்” said...

தொடருங்கள் தொடர்கிறேன்!

இன்று என் தளத்தில்
ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html