14 October 2012

கிறுக்கலும் கீதமும்!

கனவுகளுடனும் கவிதைகளுடன்
கனப்பொழுதுகள் கடந்து
கண்கள் தேடுவது உன்னை.
காத்திருப்பின் காலமும்
கதைகள் பல சொன்ன நாட்களும்
கனவில் தீண்டுகின்றது காதலியே !
காலம் கடந்தாலும்
காத்திருப்பேன் நீ வரும்
காலம் என் வாழ்வில் மீண்டும்
கார்கால மழையாக அன்புமழை.



:::::::::
வேதனைகள் வெற்றிக்கு வழிகாட்டும்.
வேண்டாம் காதல் என்றால் பிரிவுகாட்டும்.
வெட்டிப்பயல் வெட்டி விடு உறவை,
வேசம் போடும் உறவுகள்
வேள்விக்கு கேட்பது?
வெளிநாட்டுக்காசு.
வெளியில் சொன்னால்
வேதம் ஓதுகின்றேனாம்!
வெள்ளையன் நாட்டில் நான் படும்
வேதனைகள் வெளியில் தெரியாது
வெட்கம் விட்டுச் சொல்ல எனக்கும்
வேசம் போடத் தெரியவில்லை
வேர்கள் தேடி ஓடுவது விட
வெட்டிவிட்டுப் போவது தனிமைக்கு அழகு!

தேடலில் ஓடும் போது தொலைவது
தேடிவரும் தூக்கம்
தேடலின் பின் தேடினாலும் வருவதில்லை
தேடும் தூக்கம் முரண்பாடு
தேடலிலா இல்லை தூக்கத்திலா?

உன்னை நினைத்து உருகியகாலம்
உன் நெஞ்சில் யாரோ?
உனக்காக எழுதி கவிதையில்
உன் பெயர் இல்லை.
உருகும் இன்றைய காலத்தில்
உன்னை மறந்தவன்.
உன்னைக்காணும் போதெல்லாம்
உனக்குத் தெரியாமல்
உன் விழியின் வழியில் விலகிப் போகின்றான்.
உன்னை நேசித்த வலியினை மறக்க.

உருகிப் போகாமல் உணர்வுகள் தொலைத்து.
உருகுவதும் காதலினால் தான்.

16 comments :

MANO நாஞ்சில் மனோ said...

வேசம் போடும் உறவுகள்
வேள்விக்கு கேட்பது?
வெளிநாட்டுக்காசு.
வெளியில் சொன்னால்
வேதம் ஓதுகின்றேனாம்!
வெள்ளையன் நாட்டில் நான் படும்
வேதனைகள் வெளியில் தெரியாது
வெட்கம் விட்டுச் சொல்ல எனக்கும்
வேசம் போடத் தெரியவில்லை
வேர்கள் தேடி ஓடுவது விட
வெட்டிவிட்டுப் போவது தனிமைக்கு அழகு!//

நல்லா முகத்தில் அறைஞ்சாப்புல சொன்னேய்யா, சத்தியமும் உண்மையும்.... இதுதான் நம் வெளிநாட்டு வாழ்க்கை...!

Seeni said...

kavithai !

kalakkal!

vaazhthukkal!

Easy (EZ) Editorial Calendar said...

சோக கவிதைகள் கூட ஒரு வகையான சுகம் தான்...

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

குட்டன்ஜி said...

வேதனை புரிகிறது நண்பா!

முற்றும் அறிந்த அதிரா said...

என்னாச்சு தனிமரத்துக்கு?:) ஒரே சோக மயம்... தனிமை சோகத்தை உருவாக்குதோ?.. அழகாக இருக்கு கவிதை, பாடல்களும் சூப்பர்..

சொல்ல மறந்திட்டேன்... போட்ட படங்களும் அழகு.

முற்றும் அறிந்த அதிரா said...

எங்கே யோகா அண்ணனும் இப்போ வருவது குறைஞ்சு போச்சு.. ஒவ்வொருவராக காணாமல் போவது கவலையைத் தருகுது.

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் வலி வரிகளில் புரிகிறது...

நெற்கொழுதாசன் said...

வேசம் போடும் உறவுகள்
வேள்விக்கு கேட்பது?
வெளிநாட்டுக்காசு.
வெளியில் சொன்னால்
வேதம் ஓதுகின்றேனாம்!
வெள்ளையன் நாட்டில் நான் படும்
வேதனைகள் வெளியில் தெரியாது

நம்மால நாலுபேர் சந்தோசப்படுவார்கள் என்றால் எதுவுமே தப்பில்லை.ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் வாழ்த்துக்கள் நண்பா,நான் சும்மா பகிடிக்கு சொன்னேன். நல்லாயிருக்கு

தனிமரம் said...

வேசம் போடும் உறவுகள்
வேள்விக்கு கேட்பது?
வெளிநாட்டுக்காசு.
வெளியில் சொன்னால்
வேதம் ஓதுகின்றேனாம்!
வெள்ளையன் நாட்டில் நான் படும்
வேதனைகள் வெளியில் தெரியாது
வெட்கம் விட்டுச் சொல்ல எனக்கும்
வேசம் போடத் தெரியவில்லை
வேர்கள் தேடி ஓடுவது விட
வெட்டிவிட்டுப் போவது தனிமைக்கு அழகு!//

நல்லா முகத்தில் அறைஞ்சாப்புல சொன்னேய்யா, சத்தியமும் உண்மையும்.... இதுதான் நம் வெளிநாட்டு வாழ்க்கை...!//
வாங்க மனோ அண்ணாச்சி முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

kavithai !

kalakkal!

vaazhthukkal!// நன்றி சீனி அண்ணா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

சோக கவிதைகள் கூட ஒரு வகையான சுகம் தான்...

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

15 October 2012 01:56 // நன்றி மலர் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வேதனை புரிகிறது நண்பா!

15 October 2012 07:14 // நன்றி சகோ வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

என்னாச்சு தனிமரத்துக்கு?:) ஒரே சோக மயம்... தனிமை சோகத்தை உருவாக்குதோ?.. அழகாக இருக்கு கவிதை, பாடல்களும் சூப்பர்..

சொல்ல மறந்திட்டேன்... போட்ட படங்களும் அழகு.

15 October 2012 08:00 வாங்க அதிரா சோகம் இல்லை ஒரு உணர்வு ஹீ நன்றி பாராட்டுக்கு!

தனிமரம் said...

எங்கே யோகா அண்ணனும் இப்போ வருவது குறைஞ்சு போச்சு.. ஒவ்வொருவராக காணாமல் போவது கவலையைத் தருகுது.

15 October 2012 08:01 // யோகா ஐயா கொஞ்சம் இனையத்துக்கு வரமுடியாத நிலை!ம்ம் கலை பணியில் இணையம் இல்லை .ஹேமா விடுமுறையில் என கொஞ்சம் பிசிதான்! அஞ்சலின் அக்காள் வருவா நேரம் கிடைக்கும் போது! நன்றி அதிராவின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தங்களின் வலி வரிகளில் புரிகிறது...// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வேசம் போடும் உறவுகள்
வேள்விக்கு கேட்பது?
வெளிநாட்டுக்காசு.
வெளியில் சொன்னால்
வேதம் ஓதுகின்றேனாம்!
வெள்ளையன் நாட்டில் நான் படும்
வேதனைகள் வெளியில் தெரியாது

நம்மால நாலுபேர் சந்தோசப்படுவார்கள் என்றால் எதுவுமே தப்பில்லை.ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் வாழ்த்துக்கள் நண்பா,நான் சும்மா பகிடிக்கு சொன்னேன். நல்லாயிருக்கு

16 October 2012 15:23// நன்றி நெற்கொழுதாசன் வருகைக்கும் கருத்துரைக்கும்.