23 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -26

டிஸ்கி!!!
மீண்டும் ஒரு முறை இந்த தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் தொடர்பு இல்லை!!!!
//

இனி!!!
////////////////தொடர் -26 !!
போட்டி என்பது இந்தப்பூமியில் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் செயல் .ஈழத்து இலக்கியத்தில் சமதர்மம் பேசிய கைலாசபதியும் எஸ்.பொன்னத்துரையும் போட்ட போட்டிகள், உள்குத்துக்கள் பல வாசகர்கள் அறிந்த ஒன்று .

அதே போல இந்த ஓட்டி வேலையில் அதிகம் பேர் இருக்கும் நாடும் மலேசியா தான்!

எத்தனை முகம்கள் ,எத்தனை பெயர்கள் ,என அவர்களை இனம் காட்டிக்கொள்ள.

அவர்கள் ஒவ்வொரு அடையாளங்கள் மட்டும்மல்ல பல அடிதடிகள் என பொலிஸ் அறியாத வண்ணம் நடக்கும் .

சில நேரம் பொலிஸ் வந்தால் நண்பர்கள் என்று கூறிவிட்டு கைகொடுத்துப் போகும் நட்புக்களாகவும் இருப்பார்கள்.

இந்த ஓட்டிகளிடம் ஏமாந்தவர்கள் கதைகள் ஏராளம். ஏட்டிலும் வரவில்லை ,எழுதியும் செல்லவில்லை பலர் என்பது வேதனையான விடயம் .

ஈழம் என்ற போர்வையின் உள்ளே நடந்த சீரழிவுகளை வலி ஏன்று ஒதுக்கிவிட்டுப் போக முடியாது .


அப்படித்தான் ஜீவனும் சிவகாசியை ஒதுக்கிவிட்டுப் போக நினைக்கவில்லை. கைபேசி அழைப்பில் சிவதாஸ் "இடப்பக்கம் வந்து கொண்டு இருக்கும் காடியில் ஏறுங்க என்ற போது வாடகைக்காரும் தயாராக வந்துகொண்டு இருந்தது" எங்களைநோக்கி.

" சிவகாசியைக் கூப்பிடாமல் போவது சரியில்லை ஜீவன் "என்றால் சங்கவி .

என்ன செய்வது ஹலோ சிவகாசி வா போவம்.

" நீங்க போங்க எனக்கு வழி தெரியும் போக "
என்று அவன் அடம்பிடித்த நிலையில் நாம் போய் ஆகணும் சிவதாஸ் அவசரம் காட்டுகின்றார் அழைபேசியில்.

சங்கவி முதலில் காரில் ஏறுங்க பொலிஸ் வந்தால் சோலி. இனி அவன் முடிவு இவ்வளவு தூரமும் வந்தவனுக்கு தெரியணும். புது இடத்தில் எப்படி எல்லாம் ஒத்தும் ,விட்டுக்கொடுத்தும் போகணும் என்று.

அவனுக்கு வியாபார நலன் தெரியாது போல விட்டுத்தள்ளு சங்கவி மீண்டும் அழைப்பில் வந்தார் சிவதாஸ் .

"ஜீவன் குமார் சார் சொல்லி இருந்தார் மூவர் என்று உங்கள் ரெண்டு பேரைத்தான் நான் பார்க்கின்றேன்"

மற்றவர் எங்க ?அவன் அங்களிப்பக்கம் ஓட்டலில் tea குடிக்கப்போட்டான் .

ok ,,நீங்கள் அருகில் வரும் காடியில் ஏறுங்க .காடியா ??

ஓ !!!உங்க ஊரில் கார் பிரெண்டு. இங்க காடி என்பாங்க நீங்க அதில் ஏறுங்க மற்றதைப்பார்க்கலாம் என்றதும் கார் அருகில் வரவும் சரியாக இருந்தது.

ஏறுங்கசார் என்றான் கார்ச்சாரதி உள்ளே சங்கவியும் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்ட நேரத்தில் மீண்டும் அழைப்பில் வந்தார் சிவதாஸ்.(அவர்களின் நண்பர்தான் கார் ஓட்டியும் )

ஜீவன் குமாருக்கு நான் இப்ப பேசிவிட்டேன் .

"நீங்க ரெண்டு பேரும் என்னிடம் வந்துவிட்டார்கள் என்று .அவர் ஐரோப்பாவிற்கு தகவல் சொல்லுவார் போனை காடி ரைவரிடம் கொடுங்க."

சார் சொல்லுங்க .சரி கார்ச்சாரதி மலேசிய மொழியில் பின் தொடர்பைத் தொடர்ந்துவிட்டு கைபேசிக்கு தொடர்பை துண்டித்தான் .

"என்ன ஜீவன் எங்களோட
வந்தவனை இடையில் விட்டு வருகின்றோம் எதிர்ப்பக்கம் ஏதோ அடிதடி நடந்திச்சு என்ன செய்வது "

சங்கவி வந்தவனுக்கு அறிவு வேண்டாம் ??தனக்கு கடவுள் நம்ம்பிக்கை இல்லை என்றாலும் சொன்ன இடத்தில் நின்றாள் தானே கூட்டிக்கொண்டு போக வருபவன் கண்டு பிடிப்பான் .

வருவது யார் ?முன்னப்பின்ன பார்த்தோமா? இல்லைத் தானே .சுற்றுலா வழிக்காட்டி போலத்தானே வந்த இடத்தில் சொன்ன அந்த இடத்தில் நிற்க வேண்டியது தானே !

அதைவிடுத்து நாத்திகம் பேசுகின்றான் !என்ன ஊத்தப்பேச்சு பேசுகின்றான் .பட்டுத் திருந்தட்டும் விடுங்க .

"என்னோடு இடையில் 17 பேர் வந்தார்கள் வெளிநட்டுக்கு என்று அதில் ரவிதான் என் நண்பன்  அவன் தோழி சாலிக்கா  ரவிக்கு உயிர் !

அவள் சிங்களத்தி என் பார்வையில் ஆனாலும் என் பிரெண்டு ரவி அவன்!  தான் முக்கியம் எனக்கு !!!

மற்றவர்கள் எல்லாம் ரயில் பயணிகள் போலத்தான்!

நான் போவது பின்கதவால் வெளிநாட்டுக்கு. எல்லாரையும் கூட்டிக்கொண்டு போக இது ஆன்மீக யாத்திரை அல்ல சங்கவி .நான் ஓட்டியும் இல்லை ,நானும் ஒரு பயணிதான் உங்களைப்போல நாளை உங்களைப்பிரிய நேர்ந்தாலும் எனக்கு எந்த உறுத்தலும் இல்லை .ஏன் தெரியுமா ?

நாம் போக வேண்டிய தூரம் அதிகம்..

"நீங்கள் சுயநலவாதி என்கின்றீங்க பொதுவாக "

ஆமா .அதில் என்ன தப்பு ?

முதலில் என் பயணம் சரியாக அமையணும் என்று என்னும் சாமானியன் நான் .

வரும் வழியில் பலரைப் பார்ப்பதும் பிரிவதும் தொடர்வதும் ஒரு அனுபவம் போல தொடர்கின்றது விற்பனைப்பிரதிநிதி வேலையில் சேர்ந்த பின் அது தான் எனக்கும் இப்போதும் கிடைப்பதும் .!

ஒரு வேளை ராகுலைச் சந்திக்க நேர்ந்தால் !

"அவனோடு பகிர்ந்து கொள்வேன் என் அனுபவங்களை அவனுக்கு எழுத்து ஆர்வம் எப்போதும் இருக்கும். ஆனால் அவனைச் சந்திப்பேனா ??என்பதும் நிச்சயம் இல்லை.

நீண்ட தூர ஓட்டத்தில் மலேசியாவின் அழகிய சாலையோரம் தாண்டி வந்து நின்ற இடம் செந்தோஸா கிளாங்க .

அப்போது கைபேசியில் அழைப்பு வந்தது என்னப்பா ஜீவன் சொளக்கியமா?

அந்த காடியில் இருந்து இறங்கி முன்னால் இருக்கும் kfc உள்ளே வாங்க என்றார் குமார்.

kl இலில் சந்திப்போம் என்றது ஞாபகம் வர சங்கவியோடு இறங்கி உள்ளே சென்றாள்!

குமார் கோக்கக்கோலாவோடு இருக்க அவர் அருகில் இருந்தான் கரன்!

கரன் எப்படி இங்கே என நானும் திகைக்க .சங்கவி கரன் நீங்கள் எப்படி? என்று சகஜமாக கேட்டாள் ?


தொடரும்!
//////

சோலி-கஸ்ரம்-சிக்கல்
காடி -கார்
ஊத்தப்பேர்ச்சு-கெட்டவார்த்தை /நாகரிகம் இல்லாத வார்த்தை /மூன்றாம் தரவார்த்தை.
கிளாங்க -மலேசியாவில் இருக்கும் ஒரு ஊர்.
kfc- ,எல்லாரும் அறிவோம் நவீன இறைச்சித்துண்டு விற்கும் பல்தேசிய விற்பனைநிலையம்!ஹீ

17 comments :

இமா க்றிஸ் said...

வாசிச்சாச்சுது நேசன். இருபத்தாறும் தொடர்ந்து வாசிக்கேல்ல. ;( அங்கங்க நேரம் கிடைக்கேக்க சிலது மட்டும் வாசிச்சிருக்கிறன். லீவு வரட்டும் மிச்சத்துக்கு.

சுதா SJ said...
This comment has been removed by the author.
சுதா SJ said...

தமிழ் மணத்தை எங்கே காணோம்???? ஓட்டுப்போட முடியவில்லையே :((

சுதா SJ said...

தொடரை இடையில் படிக்காமல் விட்டதால் தொடர கருத்து சொல்ல முடியவில்லை.... :((

Seeni said...

thodarum-
paadalum....


mmm..

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன்... நன்றி...

Angel said...

தொடர்கிறேன் /....

Anonymous said...

நலமா நேசரே...

படங்கள் புதிது...

kfc- ,எல்லாரும் அறிவோம் நவீன இறைச்சித்துண்டு விற்கும் பல்தேசிய விற்பனைநிலையம்!ஹீ -:)

ஆத்மா said...

ஏட்டிலும் வரவில்லை ,எழுதியும் செல்லவில்லை
/////////////////

சூப்பர் வரிகள்
தொடருங்கள் சகோ

தனிமரம் said...

வாசிச்சாச்சுது நேசன். இருபத்தாறும் தொடர்ந்து வாசிக்கேல்ல. ;( அங்கங்க நேரம் கிடைக்கேக்க சிலது மட்டும் வாசிச்சிருக்கிறன். லீவு வரட்டும் மிச்சத்துக்கு.//வாங்க இமா அக்காள் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ ! நேரம் இருக்கும் போது வாசியுங்கோ கூடவே கருத்தையும் பகிருங்கள். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தமிழ் மணத்தை எங்கே காணோம்???? ஓட்டுப்போட முடியவில்லையே :((

23 October 2012 14:35 //ம்ம் இணையம் சதி செய்துவிட்டது துசி!ம்ம்

தனிமரம் said...

தொடரை இடையில் படிக்காமல் விட்டதால் தொடர கருத்து சொல்ல முடியவில்லை.... :((// ஓ அப்படியா ஆறுதலாக படியுங்கோ அவா வந்த பின்!ஹீ

தனிமரம் said...

தொடரை இடையில் படிக்காமல் விட்டதால் தொடர கருத்து சொல்ல முடியவில்லை.... :((// நன்றி துசி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

thodarum-
paadalum....


mmm..// நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தொடர்கிறேன்... நன்றி.../ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் தனபாலன் சார்.

தனிமரம் said...

தொடர்கிறேன் /....// நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நலமா நேசரே...
// நலம் ரெவெரி அண்ணா!!
படங்கள் புதிது...

kfc- ,எல்லாரும் அறிவோம் நவீன இறைச்சித்துண்டு விற்கும் பல்தேசிய விற்பனைநிலையம்!ஹீ -:) ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

24 October 2012 07:14