18 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -24

விற்பனைப் பிரதிநிதி வேலையில் பலரைச் சந்தித்து பேசும் சூழல் வந்த போதும், பெண்களுடன் அதிகம் கதைத்தாலும் ,என் எல்லை மீறிப் போனது இல்லை .கோட்டெஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு முன்னால் இருக்கும்
கழிவறையையும் சங்கவிக்கு காட்டிவிட்டு வீதியின் கரையில் காத்து இருந்த போது நாட்டில்

பல யுவதிகள் தூர இடமான கொழும்பு போக என்னோடு மதவாச்சியில் இருந்து வாகனத்தில் வந்த போதும் அவர்கள் மனதில் சஞ்சலம் வர நான் காரணமாக இருந்ததில்லை என்பதை மனதில் எண்ணிய வண்ணம் எல்லையைப் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே சங்கவியிம் வந்தாள்.!

என்ன ஜீவன் சார் ஜோசனை? ஒன்றும்மில்லை

.இந்த சார் பட்டம் எல்லாம் வேண்டாம் சங்கவி நாட்டைவிட்டு வரும் போதே என் சுயத்தை இழந்துவிட்டுத்தான் வருகின்றேன் .முன்னால் போற பொடியங்கள் பலர் பட்டதாரிகளாக இருக்கலாம் .என்னை உங்களுக்கும் ,பிரசாத்துக்கும் தான் தெரியும் .அவனையும் குமார் தன் காரில் கையோடு கூட்டிக்கொண்டு போய்விடுவார் அப்படித்தான் என்னிடம் சொல்லி விட்டுப் போறார்.

இனிமேல் ஜீவன் என்றோ ,அண்ணா என்றோ கூப்பிடுங்கோ .அதுதான் உறவாக இருக்கும் ,சரியா சங்கவி .

சரி ஜீவன் .

"இந்தாங்கோ காசு தக்க சமயத்தில் உதவியதுக்கு நன்றி "

.சங்கவி நானும் சகோதரிகளுடன் பிறந்தவன் ,மச்சாள்களுடன் வளர்ந்தவன் இந்தக்காசு வேண்டாம்.

இனியும் தாமதிக்காமல் கொஞ்சம் வேகமாக நடக்கணும் .பல்லைக்கடித்துக் கொண்டு சரியா?

பாதைகள் பலவிதம் எல்லைக்கோடுகள் சில விதம் .

என்ன ஜீவன் பயணமுகவர் எல்லையில் ஆமிக்காரன் நிற்பான் ,அதிகம் சோதனை இருக்கும் என்றார் .இங்க யாரையும் காணவில்லை, சாதாரனமாக எல்லையைக் கடக்கினம் நடந்தே .!

எனக்கும் தெரியவில்லை நானும் முதல் முறைதானே வாரன் சங்கவி.

ஆனால் இந்த நாடுகளில் எங்கள் நாடு போல இனவாத யுத்தம் இல்லைத்தானே. அதனால் எல்லைப்பகுதி அமைதிப் பூங்காவாக இருக்குது போல.

நாங்கள் போய்ச் சேர்ந்தால் போதும் எல்லைப்பகுதியில் எந்த துன்பமும் வராமல்.

1மைல் நடந்தாச்சு ஜீவன் .வெரசா வாங்க சிஸ்டர் நீங்களும் தான் முன்னால் நடந்து போன பிரசாத் எல்லாம் இப்போது காரில் போவதைப் பார்த்துக்கொண்டு நிற்கையில் குமார் கூப்பிட்டது கேட்டது.

நடந்துவந்த வேகத்தைவிட இவர்களின் கார்கள் வந்த வேகம் திகைப்பாக இருந்தது. பயண முகவர்கள் எப்படி எல்லாம் திட்டம் போடுகின்றார்கள் நம் நாட்டு அரசியல்வாதிகள் போல இல்லை .

.ஓட்டி குமார் சோதனை என்று பயம் காட்டிக் கொண்டு இருந்தார் .எல்லையில் இருந்த காவல்படையினர் ஒன்றும் கேட்கவில்லை.

ஒரு நேரம் அவர்களுக்குள்ளும் மனித நேயம் இருக்குமோ ?யுத்ததேசத்தில் இருந்து வரும் இந்த ஏதிலிகள் அமைதியாக வாழ ஆசைப்பட்டு நாடுவிட்டுப் போகின்றார்கள் என்ற நினைப்பு வந்திருக்குமோ? கவலையில்லாமல் ஒரு எல்லை தாண்டியாச்சு என்ற நிலையை குமார் உறுதி செய்தார் .

ஜீவன் இந்த பஸ் kl போகுது இதில் நீங்களும் சிஸ்ரரும் சேர்ந்து வாங்க .நீங்க ரெண்டு பேரும் தான் வேற பார்ட்டியின் ஆட்கள் .

முன்னால் வந்தவங்க வேற ஆட்கள் இந்த போனில் kl சேர்ந்ததும் கோல் பண்ணுங்க இந்த மேலே இருக்கும் நம்பருக்கு.எத்தனை மணித்தியாலம் பஸ் ஓடும் குமார் சார்.11மணித்தியாலம் பிடிக்கும் .சில நேரம் தாமதமாகலாம் அங்க நம்ம பிரெண்டு உங்களைப் பிக்கப் பண்ணூவார்.

"கவலையில்லை உங்களுக்கு இங்க போகும் வழியில் உங்க நாட்டைப்ப்போல இடையிடை இறக்கி ஏத்த மாட்டாங்க சோதனை என்ற பெயரில் சீண்டமாட்டாங்க.சரியா பயம் இல்லாமல் ஏறுங்க ."

எனக்கு உங்க நாட்டுக்காரங்கள்(சிலோன்) கூட அதிக பழக்கம் நாளை சந்திப்போம் ஜீவன் பின்னால் வருவது இன்னொரு ஓட்டியின் ஆள் அவன் பெயர் சிவகாசி கொஞ்சம் யாக்கிருதை தம்பி அவன் வயசு அப்படி சரியா .

kl சேர்ந்த பின் சந்திப்போம்!


தொடரும்...
//////
kl-கோலாலம்பூர்
வெரசா-விரைவாக!

18 comments :

Seeni said...

சொந்தமே!

போகும் பாதைஎங்கே ..
பாடல் வரி கலங்க செய்தது...

இதுவரை நான் கேட்காத வரிகள்!

தொடருங்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

இந்த நாடுகளில் எங்கள் நாடு போல இனவாத யுத்தம் இல்லைத்தானே. அதனால் எல்லைப்பகுதி அமைதிப் பூங்காவாக இருக்குது போல.//

மனசு மிகவும் கனக்கவே செய்கிறது.

K.s.s.Rajh said...

வலிகள் நிறைந்த வாழ்க்கை பயணம் தொடருங்கள்

ஆத்மா said...

தொடருங்கள் சந்திப்போம்

Angel said...

படபடப்புடன் என்ன ஆகுமொவென்று படித்தேன் ..

Angel said...

ஜேசுதாஸ் குரலில் அந்த பாடல் நெகிழ வைத்தது ..பதிவுக்கு பொருத்தமாக

முற்றும் அறிந்த அதிரா said...

அழகான பாடல்.. இதுவரை கேட்டதில்லை. நானும் தொடர்ந்து வந்து கோலாலம்பூரில் சந்திக்கிறேன்.

Anonymous said...

KL ல உங்கள சந்திப்பனா நேசரே...?

Anonymous said...

ஜேசுதாஸ் Nice...

தனிமரம் said...

சொந்தமே!

போகும் பாதைஎங்கே ..
பாடல் வரி கலங்க செய்தது...

இதுவரை நான் கேட்காத வரிகள்!

தொடருங்கள்...//வாங்க சீனி அண்ணா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.இனிமையான பாடலை ரசித்ததுக்கு நன்றி. வருகைக்கும் கருத்துக்கும் இன்னொரு நன்றி!

தனிமரம் said...

இந்த நாடுகளில் எங்கள் நாடு போல இனவாத யுத்தம் இல்லைத்தானே. அதனால் எல்லைப்பகுதி அமைதிப் பூங்காவாக இருக்குது போல.//

மனசு மிகவும் கனக்கவே செய்கிறது.

18 October 2012 17:48 // நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வலிகள் நிறைந்த வாழ்க்கை பயணம் தொடருங்கள்// நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தொடருங்கள் சந்திப்போம்/ நன்றி சிட்டு வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

படபடப்புடன் என்ன ஆகுமொவென்று படித்தேன் ..

19 October 2012 06:39 // வாங்க அஞ்சலின் அக்காள் நலமா.

தனிமரம் said...

ஜேசுதாஸ் குரலில் அந்த பாடல் நெகிழ வைத்தது ..பதிவுக்கு பொருத்தமாக

19 October 2012 06:49 // நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கு அஞ்சலின் அக்காள்

தனிமரம் said...

அழகான பாடல்.. இதுவரை கேட்டதில்லை. நானும் தொடர்ந்து வந்து கோலாலம்பூரில் சந்திக்கிறேன்.// வாங்க அதிரா தொடர்ந்து! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் பாடல் ரசிப்புக்கும்.

தனிமரம் said...

KL ல உங்கள சந்திப்பனா நேசரே...?// வாங்க் ரெவெரி ந்ல்மா ச்ந்திக்க்லாம் நிச்சயமாக.ஹீ என்னையில்லை பல நட்புக்களை.

தனிமரம் said...

ஜேசுதாஸ் Nice...//அது அமுதசுரபி கடல் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்