அவமானப்படும்
போதெல்லாம்
அதில் உண்டாகும்
காயங்களிடம்
அதிவேகத்தைக்
கற்றுக்கொள்!
.....( பா.விஜய் கவிதை)!
இன்று ஏற்றுவார் நாளை ஏற்றுவார் என்று காத்திருந்த போது அழைப்பிலும் சரி, நேரிலும் சரி, குமாரும் சரி ,சிவதாசும் சரி வந்து பார்க்கவில்லை. !
வெளிநாடு வெளிக்கிட்டு 4 மாதம் கடந்த நிலையில் அடுத்து என்ன செய்வது கையில் இருந்த கடவுச் சீட்டையும் அல்லவா வாங்கிச் சென்று விட்டார் குமார் என்று நிலை குலைந்து
நின்ற போதுதான் .
அந்த நேரத்தில் ஆறுமுகசாமி சொன்னார் "தம்பி குமார் உங்களை ஐரோப்பா ஏற்றுவார் என்று நம்பி காலத்தை கடத்தாதீங்க .உங்க நாட்டுக்குப் போகும் வழியைப்பாருங்க "
அவர் வீடு இருக்கும் இடம் என்னக்குத் தெரியும் வாங்க அங்கே கொண்டே விடுகின்றேன் .
நீங்கள் என் வீட்டில் இருந்த 2 மாதச் செலவுகூட இன்னும் தரவில்லை. குமாரும் அவரின் தோஸ்த்தும் சட்டவிரோத மாக செய்த ஓட்டிவேலையாள் பொலிஸார் கைது செய்து சிறைப்படுத்தி இருக்கும் விடயம் எனக்கே இப்பத்தான் ஒரு தோஸ்த்து சொன்னான் தம்பி ஜீவன் என்ற போது தான் புரிந்தது.
இந்த ஓட்டிகள் எல்லாம் அப்பாவிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள் போல என்று .
கையறு நிலையில் வந்த என் வாழ்க்கைப்பயணம் இப்படி சீரழிவதை விட சிறையில் இருந்திருந்தால் நிம்மதியாக இருந்து இருக்கலாமோ ?என மனதில் சஞ்சலம் வந்தபோது தான் மலேசியாவின் முகம் வரலாற்றில் மாறத்தொடங்கியது !
மிதவாதம் பேசிய வாஜ்பாய் போலத்தான் மலேசியாவை நன்கு நீண்ட காலமாக ஆண்ட மஹாதீர் முகமட் அரசியலில் ஒதுங்கிச் செல்ல .
இனக்கொள்கையை முன்னிறுத்தி பாத யாத்திரை போன எல்.கே .அத்வானி போல பதவிக்கு வரக்காத்திருந்தார் அப்துல்லா அஹாமத் படாபி !
அயல்நாட்டில் (இந்துனேசியா வாசிகள்)இருந்து வரும் மக்கள் மலேசியாசில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் ,அதனைக் கட்டுப்படுத்தி மக்கள் நலன் பேண வேண்டும் என்பதே தன் கடமை என்றும் தேர்தல் பிரச்சாரம் செய்த அஹாமட் பாடாவி !
ஒரு அறிவிப்பை தேசிய நாளிதல்களில் வெளியீடு செய்தார். மலேசிய நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஆசிய நாட்டவர்கள் 2 மாதகால இடைவெளியில்
வெளியேறிவிட வேண்டும்
.விமான நிலையம் ,கடல் வழி ,தரை எல்லைவழி எல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் திறந்தே விடப்படும் .என்றதுடன் பொலிஸ்சார் தேடுதலில் பிடிப்பட்டாள் 5000 வெளிக்காசு தண்டப்பணமும் ,ரோத்தான் அடி இரண்டும் விதிக்கப்படும் என்று !
இந்த ரோத்தான் அடி என்பதுகூட ஒரு கருணைக்கொலை போல நின்றே கொல்லும் விசம்
.அவரின் அறைகூவல் பல காலம் மலேசியாவில் அப்பாவிகளாக ஐரோப்பா போக காத்து இருந்து கைவிடப்பட்டவர்கள் ஈழத்துக்கு திரும்பவும் வழி கொடுத்தது ஒரு புறம் என்றால் !
இன்னொரு பக்கம் மலேசியா ஊடகம் சர்வதேச செய்திப்பக்கத்தில் இலங்கை, தமிழ் ஈழம் என இரண்டு பட்ட செய்திகளை சிரித்துக்கொண்டு காட்சிப்படுத்தியதில் முதலிடம் தமிழரை நம்ப வைத்து கழுத்தறுத்த எரிக்சொல்ஹையூம் ,ரனில் விக்கிரமசிங்க இருவரும் பிரபாகரனுடன் சமாதான ஒப்பந்தம் என்ற செய்திகளாகும் . !
"ஈழத்தில் பாலாறும் தேன் ஆறும் ஓடப்போகுது "என்ற அப்பாவி சாமானிய மக்கள் எண்ணிய நம்பிக்கை போல பின் கதவால் ஓடிவந்த நானும் கஸ்ரப்பட்டு விற்பனைப்பிரதிநிதி வேலையில் சேமித்து கழுத்தில் போட்டிருந்த 10 பவுன் சிங்கப்பூர் தங்கச்சங்கிலியை விற்கப் போனது மஜீத் இந்தியாவில்.
இதை விற்கும் வழி தெரியாமல் தவித்த போதுதான் !
இந்தச் சங்கிலியை சிறைக்குப் போக முதல் நாள் அவசரதேவைக்கு அடைவு வைத்ததும் ராகுலிடம் மீட்கும் படி காசு கொடுத்ததும், பின் கதவால் நாட்டைவிட்டு வெளியேறும் தருணத்தில் விமான நிலையத்தில் மறக்காமல் எடுத்து வந்து தந்துவிட்டவன் நட்பை நான் பெற்றதில் என்றும் பெருமையான விடயம் என எண்ணிக்கொண்டு போன ஒரு அடைவு கடையில் உள்ளே சந்தித்தவர்தான். பெருமாள் ஐயா .
என் நிலையைச் சொன்னபோது தம்பி குண்டு விழும் தேசத்தில் உன் உயிர் போவதை விட குளிர் தேசத்தில் போய் குடியிரு குமுறலோடு.
"நான் உன்னை ஐரோப்பாவில் 3 நாட்களில் இறக்கிவிடுவேன் அங்கே வைத்து காசு தந்தால் போதும் என்றார் ."
கண்முன்னே கடவுள் வந்தது போல என்னை பாரிஸில் கரை சேர்த்தார் பெருமாள் ஐயா .2002 மாசி மாதம் 5 ம் நாள்§
என்னோடு வரும் போதும் சொல்லவில்லை என் நண்பன் ரவியையும் அவர் தான் கரை சேர்த்தார் என்று பின் தான் அறிந்து கொண்டேன் .
இரண்டாவது அங்கம் முற்றும்...!
இனி!!
அலைகடல் கடந்து அன்புக்கடலில் கரைந்து போகவா ??
ஆண்டவன் ஐயன் வடிவில் என்னை மலேசியாவில் இருந்து பாரிஸ்வரை பெருமாள் கூட பயணிக்க வைத்தார் ?என்று ஒரு மனம் என்னுகின்றது! சிங்கப்பூர் போகும் வழியில் இன்று.2010 இல் !
இது ஒரு புறம் என்றால் காதல் வரக்கூடாது என்று நண்பன் ரவி சாலிக்காவின் காதலைப்பார்த்து வந்தவனுக்கு!
"எனக்கும் காதல் வருமா என்று எண்ணிய நேரத்தில் உனக்கும் தானடா காதல் வரவேண்டும் என்பதைப்போல நீ கொடுத்துவிட்டுப் போய்விட்டாய் காதலை என்ற தபுசங்கர் கவிதையையும் இனிப்பூ எடுத்துக்கொள்ளுங்கோ எனக்கும் காதல் வந்து விட்டது என்ற கவிதை படிக்கும் ஆர்வம் தந்தவள் தான் நிசா !"
நிசா !
தொடரும்!!!!
/

3 comments :
மூன்றாவது அங்கம் ஆரம்பம்... தொடர்கிறேன்...
How r u? Catchup with you with Coffee...
inthaa padikkiren....
Post a Comment