11 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி-37

"உனக்கான காத்திருப்புக்ளில்
வீரமாத்தி அம்மன் கோவில்
மரமாகிப் போவேன்.
ஒரு நாளில்
என்றேனும்
நிழலில் நீ வந்து
அமரும்போது
பூக்களாய்ப் பொழிவேன்
உன்மீது "!

(காதலன்றி வேறில்லை -சூரியபாரதி கவிதை)

உன்னைப்பார்த்த பின்புநான் நானாக இல்லையே என்ற பாடல் போலத்தான் மனசு சொல்லத்துடிக்கு நிசாவை எனக்குப் பிடிக்கும் என்று.

இதைச் சொன்னபோதே உதவி செய்வான் என்று இருந்த ரவியா இப்படி விசரோ என்று கேட்கின்றான் .?

பாரிஸ் ரயிலில் ஏறி அமர்ந்த போது இருவருக்கு இடையிலும் மெளனம் இளையராஜா வைரமுத்து போல இருந்த நட்பில் விருசல் வந்தது போல .

பாரிஸ் வந்தாச்சு இனி அடுத்த கட்டம் என்ன ?இந்த நாட்டில் என்பதை அறிந்தவன் ரவிதானே !

நான் அவனில் தங்கித் தான் இருக்க வேண்டும் என்ற நிலை ஒரு புறம்!

இன்னும் இந்த நாட்டு இயல்பு வாழ்க்கை புரியாத நிலையில் என் மனம் ஏன் இப்படி ஆச்சு மனதில் சலனம் .

வரும் வழியில் ரவி தொடர்ந்தான் மச்சான் ஜீவன் நீ நல்லா இருக்க வேண்டும் என்றுதானே உன் குடும்பம் எத்தனை சொத்து இழந்து இங்கு வரை உன்னை அனுப்பி இருக்கு .


அதை நினைச்சியா ??உனக்கு இருக்கும் தங்கைகளின் எதிர்கால வாழ்வுகளைப் பற்றி நினைத்தாயா ?

உனக்கு என்று எதுவும் இல்லை இந்த நாட்டில் .முதலில் முகவரி இல்லை அதுமட்டுமா ?

இந்த நாட்டில் நிம்மதியாக வாழ அரச அனுமதி வேண்டும் .அதாவது அகதி அந்தஸ்த்து (refugies visa)இல்லை , தொழில்சிறப்பில் கடமைபுரியும் குடிவரவு ,குடியகல்வு அனுமதி அதாவது இமிக்கிரேசன் விசா(L,IMMIGRATION) .

இதில் ஏதாவது ஒன்று கிடைத்தால் பின் தான் நம் போன்ற வந்தேறு குடிகள் குடியுரிமை பெறமுடியும் .
http://www.frenchlaw.com/Immigration_Visas.htm
அந்தச் சிக்கல் எல்லாம் இனித்தான் உனக்குப் புரியும்.

அதுக்கு முன் ஏன் இந்த நிசாமீது உனக்கு ஈர்ப்பு மச்சான்?

இங்க உன்னைப்போல இப்படி வந்தவுடன் பார்த்த பிள்ளையை காதல் என்றும் உடனே கலியாணம் என்று போவார்கள் .

இங்க பெண் பிள்ளைகளுக்கு இருக்கும் போட்டியே ஒரு தனிக்கதை அன்று ஜனகன் சபையில் இராமன் வில்லு உடைத்து சீதையை கரம்பிடித்தான் சுயம்வரம் என்ற நிலை மாறி இங்கு ஒருத்தியை கை பிடிப்பதுக்கு பின் இருக்கும் கதையே வேறுடா.

தனிமரமாக ஆகப் போறாயடா மச்சான் ஜீவன் வேண்டாம் நிசாவை விட்டு விடு நான் சாலிக்கா மாதிரி நினைவுகளுடன் போராட்டும் வாழ்க்கை உனக்கு வேண்டாம் மச்சான் .

உருகும் நிலைக்கு ஒரு நாள் போகும் நிலை வரும் போது அயல் நாட்டில் இருந்து நான் வரமாட்டன் .ஜீவன் நீ போய் பந்தியில் சிரித்துக்கொண்டு இந்த நிசாவுக்கு கலியாண சபை வைத்துவிட்டு வந்து கவிதையை நாட்குறிப்பில் எழுதி வைக்கும்
நிலை பின் ஒரு காலம் வரவேண்டாம் மச்சான் .உனக்கு தெரியும் தானே ராகுலுக்கும் பின் ஒருநாள் கல்பனாவை தேடிப்போன போது குடும்பம் முக்கியம் என்ற நிலை தானே பங்கஜம் பாட்டி கட்டுப்பாடு போட்டா மறந்து போச்சோ??

இந்த நாட்டைப்பற்றி நான் படித்துக்கொண்டு இருக்கின்றேன் ஜீவன்

முதலில் எனக்கு ஒரு வேலை கிடைக்க ஒரு வழி செய் ரவி .

ஏன்ன நான் பத்திரேனோ ஜீவன் ?

. அப்படி என்றால் ரவி . பாரிசில் முதலாளியோ என்ற பொருள் தமிழில் !

பிரெஞ்சில் வேலை தேடு அப்பத்தான் இங்கு இருக்கும் நடை முறை புரியும்.வேலையில்லாத் திண்டாட்டம் புரியும்.

இப்ப வேற 2002 சமாதானம் என்று ஒரே பேச்சு வார்த்தை செய்தி வருகின்றது இனி உன் விசா நிலமை என்னவோ தெரியாது ??


அது எல்லாம் நீ பாரு நண்பேண்டா நான் நிசாவை நினைத்துக் கொண்டு இருக்கின்றேன் .அவளுக்கு இங்க எத்தனை மணிக்கு நாளை பள்ளிக்கூடம் ??


மூஞ்சூறு எலி தான் போக காணவில்லையாம் விளக்கு மாற்றினைக் காவிக்கொண்டு போனிச்சாம் என்ன புலம்பல் ரவி ??

தொடரும்!

விளக்குமாறு -துடைப்பம்!
பத்திரோன் ..- முதலாளி/பாஸ்

17 comments :

MANO நாஞ்சில் மனோ said...

one hot coffee pls....

MANO நாஞ்சில் மனோ said...

சிலிர்ப்பூட்டும் அந்த கவிதையை வெகுவாக ரசித்தேன்...!

MANO நாஞ்சில் மனோ said...



உள்ளுக்குள் பொங்கும் வேதனைகள் நன்றாக புரிகிறது மக்கா

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்...
நலமா
அந்த முதல் கவிதை...!!!
அப்பப்பா
அதன் பொருளில் தான்
எத்தனை அன்பும் பரிவும்
உனக்கான காத்திருப்புகளில்
என் எண்ணங்களை பூக்களாய்
உருவாக்கி வைத்திருக்கிறேன்..
என்றேனும் நீ வருவாய் என் நிழலுக்கு
அன்று பூ மழையாய் பொழிவேன்....

நிராகரிப்பையும் நிதர்சனமாக
அன்பாக மாற்றிகாட்டும்
அந்த உள்ளம்
எந்த சூழலையும் நேர்மறையாக
எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும்
காதல் உள்ளத்துக்கு
பழிவாங்கும் எண்ணம் இல்லை
என்பதையும்
வெகு அழகாய் சொல்கிறது..

முத்தரசு said...

ஆரம்ப கவி அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் மிகவும் அருமை...

பாராட்டுக்கள்...
tm2

Anonymous said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

தனிமரம் said...

வாங்க மனோ அண்ணாச்சி முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

கவிதை ரசிப்பு நன்றி மனோ அண்ணாச்சி!

தனிமரம் said...



உள்ளுக்குள் பொங்கும் வேதனைகள் நன்றாக புரிகிறது மக்கா

11 November 2012 14:12 
//நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

வணக்கம் நேசன்...
நலமா 
//வணக்கம் மகி
அண்ணா நான் நலம் தாங்களும் அவ்வண்ணமே!

அந்த முதல் கவிதை...!!!
அப்பப்பா 
அதன் பொருளில் தான் 
எத்தனை அன்பும் பரிவும் 
உனக்கான காத்திருப்புகளில் 
என் எண்ணங்களை பூக்களாய் 
உருவாக்கி வைத்திருக்கிறேன்..
என்றேனும் நீ வருவாய் என் நிழலுக்கு 
அன்று பூ மழையாய் பொழிவேன்....

நிராகரிப்பையும் நிதர்சனமாக 
அன்பாக மாற்றிகாட்டும் 
அந்த உள்ளம் 
எந்த சூழலையும் நேர்மறையாக 
எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் 
காதல் உள்ளத்துக்கு 
பழிவாங்கும் எண்ணம் இல்லை 
என்பதையும் 
வெகு அழகாய் சொல்கிறது..

//உண்மைதான் மகி அண்ணா அருமையான கவிதை நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

ஆரம்ப கவி அருமை

11 November 2012 19:23 
//நன்றி முத்தரசு முதல்வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

வரிகள் மிகவும் அருமை...

பாராட்டுக்கள்...
tm2

11 November 2012 20:19 
//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...


12 November 2012 05:26 
//நன்றி உங்களுக்கும் அவ்வண்ணம் ஆகட்டும் ரெவெரி அண்ணா! 

தனிமரம் said...

உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்//நன்றி அவர்கள் உண்மைகள் வாழ்த்துக்கும் வருகைக்கும்!

தனிமரம் said...

mmmm....// நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்.