07 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -34

"உயிர் கொடுத்த அன்னை அங்கே தோள் கொடுத்த நண்பன் இங்கே இன்ப துன்பம் எதுவந்தாலும் பங்கு கொள்ள நண்பன் உண்டு என்ற "ஆபாவணனன் வரிகளுக்கு அமைய!

நட்பில் ரவி முதலில் பாரிஸ் வந்தவன் அவனைத்தொடர்ந்து என் வருகை 2002 மாசியில்முதல் வாரத்தில் அவனை பாரிசில் பார்த்த போது!

" வாடா மச்சான் ஜீவன் ஒரு வழியாக பாரிஸ் வந்திட்டாய் .எப்படி பெருமாள் அண்ணாவை சந்தித்தாய் ?

தாய்லாந்தில் பிரிந்த நம் நட்பு இப்போது பாரிசில் மீண்டும் சந்திக்கின்றோம்!
" அது பெரிய கதை அதை பிறகு பார்க்கலாம் இப்ப இனி நான் என்ன செய்ய வேண்டும் அதைச் சொல்லு முதலில் "

ஈழத்தில் இருக்கும் அம்மா,ஐயாவுக்கு நான் வந்து சேர்ந்துவிட்டேன் என்ற தகவல் கொடுக்கணும் .

அதுக்குத் தான் இந்தா என் கைபேசியில் இருந்து நேரடியாக அழைப்பு எடுக்கின்றேன் .கனநேரம் அலட்டாமல் வந்திட்டன் என்று சொல்லு பிறகு அலைபேசி அட்டை வாங்கி ஆறுதலாக கதைக்கலாம் என்றவாறே அம்மாவுக்கு அழைப்பு கிடைத்ததும் ஐயாவின் குரல் அழைபேசியில் கேட்டதும், மீண்டும் பிறந்த உணர்வையும் இனி என் வாழ்க்கையில் உயிர் அச்சுறுத்தல் இல்லை என்ற அவர்களின் நிம்மதிப்பெருமூச்சும் !

தங்கைகளின் குரலில் அண்ணா வெளிநாடு போய்விட்டார் என்ற ஆர்ப்பரிப்பும் உற்சாகமாக இருக்க தைரியம் வந்தது .அழைபேசியை துண்டித்துவிடு என்ற நண்பனின் சைகைச் செயலில் இனி தொடர்பில் பின் வெளிநாடு வர கஸ்ரப்பட்ட விடயத்தை பகிர்ந்து விட்டு வருவேன் என்று ஐயாவிடம் பேசிய பின் .

"ரவியுடன் பிறகு சொல்லு மச்சான் இங்கத்தைய நடைமுறையை . "

அதுதான் வந்து விட்டாயே இனி அனுபவி ராஜா .முதலில் இங்கு இருக்கும் அடுத்த கட்டச் செயல்களை இலகுவாக சொல்லுகின்றேன் கேள்!

"ஈழநாட்டில் இனவாத ,மதவாத, மொழிவாத அரசியல் காரணமாக உன் தனிப்பட்ட வாழ்வில் உனக்கு இருக்கும் உயிர் அச்சுறுத்தல், பாதுகாப்பு இன்மை ,பயங்கரவாதம் என்பவற்றில் இருந்து உயிர்தப்பி வாழ்வதுக்கு முதலில் அரசியல் தஞ்சம் கோரல் மணுச் செய்தல் வேண்டும் "

அதுக்கு முதலில் நீ இலங்கைவாசி என்பதுக்கான அடிப்படை சான்றிதல்கள் எதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் .அத்தோடு இணைத்து இங்கே பாரிசில் எந்த முகவரியில் இருக்கின்றாய் என்ற (domicile)வீட்டு உரிமையாளர் கடிதம் ,அந்த உரிமையாளர் கைப்பட எழுதிய அத்தாட்சிக்கடிதம் ,அவருக்கு பாரிசில் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் பிரதிக்கொப்பி,அந்த நபர் அரசிற்கு செலுத்தும் மின்சார(EDF) அல்லது தொலைபேசி(TPf) பாவனைக்கான ஆவணச்சான்று, அத்தோடு உன் நிழற்படம் எல்லாம் சேர்த்து .

முதலில் இங்கே இருக்கும் காவல்நிலையத்தில் உன்னை கூட்டிக்கொண்டு போய்ப்பதிவு செய்ய வேண்டும் .

அதன் பின் அவர்கள் அகதியாக பதிவு செய்ய ஒரு நாளினை தெரிவு செய்து தருவார்கள் .

அத்தாட்சியில் ஒன்று குறைந்தாலும் உள்ளே விடமாட்டார்கள் மச்சான் !

இப்படி வேற இருக்கா ரவி ?

"எனக்கு ஒன்றும் தெரியல .

"ஓம் நாங்கள் எல்லாரும் வெளிநாட்டுக்கு விமானம் ஏறியவுடன் விண்வெளிக்கு போனவர்கள் போலத்தானே நினைக்கின்றோம்."!

இங்கு என்ன அடிப்படை நடைமுறை என்று எத்தனைபேர் சிந்திச்சோம் ?வெளிநாடு போகணும் என்று ஜோசிக்கும் நாம் தாயகத்தில் இருக்கும் போது வெளிநாட்டு வாழ்க்கையின் அடிப்படை வாழ்க்கை முறை பற்றி ஒரு விடயம்கூட நினைத்தும், பேசியும் இருப்போமா?

நாட்டில் இருந்த போது எந்த சினிமா ,எந்த நடிகைகைக்கும் ஹீரோவுக்கும் கிசுகிசு எந்த எழுத்தாளர் அரசுக்கு வாழ்பிடித்தார் என்று தானே வெட்டியாக பேசுவோம் ???

"அதுதான் வந்திட்டன் இல்ல இனி அடுத்த கட்டம்"

ம்ம் காவல் நிலையத்தில் பதிவு செய்த பின் அவர்கள் அகதி அந்தஸ்த்து கோரும் படிவம் தருவார்கள் .அதில் உன் பூரண சுயவிபரங்கள், நீ இந்த நாட்டுக்குள் வந்த வழிமுறைகளுடன் .

உன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதுக்காக நீ சொல்லும் வாக்கு மூலம் கதை போல எழுதணும்.

இது ஆங்கிலப்படத்தையோ மற்ற மொழிப்படங்களையோ பிரதி எடுத்து தன் கதை என்று தமிழில் பீலா விடுவது போல இல்லாமல் நிஜமான இனவாத,மொழிவாத,மதவாத அரசியலினால் உன் தனிப்பட்ட வியாபார நடிவடிக்கை எப்படிப் பாதிக்கப்பட்டது .

அதுக்கு பின்னனியில் இருந்த அரச அடக்குமுறையின் கப்பம் கோரல் ,வெள்ளைவான் கடத்தல், அரச பலாத்காரம் பொதுவெளியில் உதைச் சொன்னால் ஊடக அடக்குமுறை.

அதன் தாக்கம் என்ன என நிஜமாக எழுதி அதனை மொழிபெயர்க்க வேண்டும். அதுக்காக மஹாவம்சம் போல பிரட்டாக எல்லாம் எழுதக்கூடாது மச்சான் .

உள்ளதை உள்ளபடி வெட்கம் விட்டு எழுத வேண்டும் மிகவும் முக்கியம் நீ எழுதும் வாக்கு மூலம் தான் உன் எதிர்கால வாழ்வைத் தீர்மானிக்கும் துருப்புச் சீட்டு இது இந்தியா ஒளிர்கின்றது என்பது போல இல்லை .

அந்த வாக்கு மூலத்தையும் அதுக்கான அத்தாட்சி ,ஆவணங்களையும் நேரிலோ ,பதிவுத் தபால் மூலமோ அனுப்பும் இடம் தான் ஓப்ரா[ (ofpra) -அகதிகள் மற்றும் நாடற்றவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அமைப்பு .இது உட்துறை அமைச்சின் பொறுப்பில் இருந்தாலும் வெளியுறவுத்துறையின் அமைச்சுடனும் சேர்ந்து இயங்கும் ஒரு அமைப்பு.) ]

ஓ இப்படி எல்லாம் இங்க இருக்கா நான் கேள்விப்படவில்லையே மச்சான்"

நீ புத்தகம் படிச்சாத்தானே ஓரே சினிமா தியேட்டர்களில் விசில் அடிக்க முதல் ஆளாக இருந்தது தானே உன் பொழுது போக்கு.

அது எல்லாம் ஒரு காலம் ரவி கடந்து வந்தாச்சு.

முதலில் வெளிநாடு வரபட்ட
கடனை எல்லாம் தீர்க்க வேண்டும்.

அது சரி முதல் விடயம் சொன்னேன் என் அனுபவமாக.

அடுத்த வேலைவிடயம் சொல்லவில்லை அதுக்கு முன் உனக்கு ஞாபகம் இருக்கா சோதி மாமா ?

யார் வட்டிக்கடை பேரம்பலத்தாத்தா வீட்டுக்கு பக்கத்து வீட்டு ஆட்கள் தானே?
ஓம் !

பதுளையில் கடைவைத்து இருந்து விட்டு பிரேமதாச ஆட்சியில் நாட்டைவிட்டு ஒடியவர்தான்.

ஞாபகம் வருகின்றது 1991 இல் அவரின் மூத்தவள் 7 வயது நிசாவும், அவள் தங்கை பவனியும் கைக்குழந்தையுமாக ,ராகுலின் மாமி மச்சாள் அனோமா எல்லாரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழி அனுப்பி வைக்க என் ஐயாவோடு வந்த ஞாபகம் இருக்கு.

அப்பத்தான் சோதி மாமி எனக்கு நிசாவை முத்தம் கொடுத்துவிட்டு வா என்று சொல்லி இந்த நாட்டை விட்டுப் போறம் என்ற போது என் மூக்கை கடித்துவிட்டுப் போனவள். காயம் வைத்துவிட்டுப்போனவள்.

இன்னும் அந்த தழும்பு இருக்கு பாரு மச்சான்.

" ஜீவன் அப்ப நீ பாப்பாவாகப் பார்த்த நிசா இப்ப பீப்பா "

என்னடா அந்தளவு குண்டோ ???அவள் !

"சீச்சீ சும்மா சொன்னேன்!

இரு சோதி மாமா வேலையாள வந்திட்டாரோ? என்று கைபேசியில் அழைத்துப்பார்க்கின்றேன் .

"ஏண்டா வீட்டில் யாராவது இருப்பினம் தானே ?

இங்க இயந்திர வாழ்க்கை மச்சான் எல்லாரும் வேலை ,இதர தேவைகள் என்று வெளியில் ஒடவேண்டும். வீடு நித்திரைக்கு வரும் மாட்டுத்தொழுவம் போல .

ஊரில் போல நினைத்த நேரத்தில் வீட்டு வாசலில் போய் நிக்க முடியாது. முன் அறிவிப்பு கொடுக்கணும் .நாங்கள் வாரம் என்று .அது நண்பனாக இருந்தாலும் !

அப்ப உன்னைப் பார்க்க நான் இனி வந்தாலும் அப்படியோ?

பின்ன நானும் இப்ப பிஸிடா !உனக்காக இரண்டுநாள் விடுப்பு எடுத்து இருக்கின்றேன் .

இனித்தானே நீ பிரெஞ்சைப்படிக்கப் போறாய்!

" என்னைப்போல் காலையில் கோப்பி குடிக்க நினைத்தாலும் கையில் காசு இருந்தும் நேரம் இல்லாமல் போகும் போது நெஞ்சில் தைக்கும் பாரு "எப்படி ஊரில் ஜாலியாக விற்பனைப்பிரநிநிதியாக இருந்த நான் .இப்படி ஆகிவிட்டேனே என்று புலம்பும் நிலையை சொல்லி உன்னைப் பயப்புடுத்த விருப்பம் இல்லை .

வா சோதி மாமா வீட்டை போவம் இன்று நிசாவும் நிற்பாள் ,புதன் கிழமை இங்குப்பள்ளி விடுமுறை .

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லும் பங்கஜம் பாட்டியின் இன்னொரு பேர்த்தி தானேடா நிசா மறந்து போச்சா சொந்தம் எப்படி என்ற வழிமுறை உறவுகூட யுத்தத்தால் ?

தொடரும்.....

11 comments :

Angel said...

நேசன் ..நலமா ..எனக்கு கருப்பு காபிதான் வேணும் ...
பாரிஸ் சென்று சேர்ந்தது வாசிக்கும்போது மனம் நிம்மதியானது
பெருமாள் ஐயா பற்றி நேற்று பதிவில் வாசித்தேன் ..நேற்று நேரமில்லாமல் போனது பின்னூட்டமிட ..
நிஷா .....ஓகே ஓகே நீங்க தொடருங்க விவரம் வரும்தானே :))

Angel said...

உயிர் கொடுத்த அன்னை அங்கே தோள் கொடுத்த நண்பன் இங்கே இன்ப துன்பம் எதுவந்தாலும் பங்கு கொள்ள நண்பன் உண்டு என்ற "ஆபாவணனன் வரிகளுக்கு அமைய!//

அந்திநேர தென்ற காற்று பாடல் தானே அது ..எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள் நல்ல பாடல்

Angel said...

சொந்தம் வந்தது பாடலும் அருமையான தேர்வு

Angel said...

ஒரு காலத்தில் ராமராஜன் படங்கள் அதில் வரும் பாடல்கள் என்னமா ஹிட் ஆகும் ...இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் ..

தனிமரம் said...

நேசன் ..நலமா ..எனக்கு கருப்பு காபிதான் வேணும் ...
பாரிஸ் சென்று சேர்ந்தது வாசிக்கும்போது மனம் நிம்மதியானது
பெருமாள் ஐயா பற்றி நேற்று பதிவில் வாசித்தேன் ..நேற்று நேரமில்லாமல் போனது பின்னூட்டமிட ..
நிஷா .....ஓகே ஓகே நீங்க தொடருங்க விவரம் வரும்தானே :))

7 November 2012 12:39 // வாங்க அஞ்சலின் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ஹீ நலம் தானே!

தனிமரம் said...

உயிர் கொடுத்த அன்னை அங்கே தோள் கொடுத்த நண்பன் இங்கே இன்ப துன்பம் எதுவந்தாலும் பங்கு கொள்ள நண்பன் உண்டு என்ற "ஆபாவணனன் வரிகளுக்கு அமைய!//

அந்திநேர தென்ற காற்று பாடல் தானே அது ..எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள் நல்ல பாடல்//ம்ம் படமும் சிறப்பு அஞ்சலின் அக்காள்§

7 November 2012 12:40

தனிமரம் said...

சொந்தம் வந்தது பாடலும் அருமையான தேர்வு

7 November 2012 12:42 77ம்ம் நீங்க சொல்லிய பின் அதிராவா, ஹேமா ,கலையா முடிவு நான் அறியேன் !ஹீ நன்றி அஞ்சலின் அக்காள்§

தனிமரம் said...

ஒரு காலத்தில் ராமராஜன் படங்கள் அதில் வரும் பாடல்கள் என்னமா ஹிட் ஆகும் ...இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் ..//ம்ம் அது ராஜாவின் உழைப்பு அஞ்சலின் அக்காள்§ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்! நன்றி! குட் நைட்!

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்
நலமா...
இணையதள கோளாறும்..
விடுமுறையும் சேர்ந்துவிட்டதால்
என்னால் வலைப்பக்கமே வரமுடியவில்லை...
பிரெஞ்சுக் காதலியை ஒரே மூச்சில்
படித்துவிட்டு வருகிறேன்...

நெற்கொழுதாசன் said...

வாழ்த்துக்கள் பாஸ் கருத்திடாவிட்டாலும் கருத்தாழத்துடன் படித்து வருகிறேன்.தொடருங்கள்

Seeni said...

vanthutten.../