இயந்திரமான வெளிநாட்டு வாழ்வில் இயந்திரமாகிப்போனான் ஜீவன். ஆன்மீகம் என்றும், அடுப்படியில் வாரத்தில் 7நாட்களும் வேலை வேலை என்று ஓடிய வாழ்க்கைப்படகில் மீண்டும் 2010 இல் ராகுல் வந்தான் வழிகாட்டியாக!
எப்படி இருக்கின்றாய் ஜீவன்?
ம்ம் இருக்கின்றேன். நீ செய்கின்ற வேலை சரியோ ? வந்து போகும் பாதையில் ஏண்டா இப்படி தனித்தீவாக இருக்கிறாய்! உங்க வீட்டில் தினமும் அம்மா என்னோடு தொலைபேசியில் ஒரே தொல்லை தன்ர மோனையும் உங்களைப்போல பிரமச்சாரியாகவா இருக்க வைக்கப்போறீங்க? இந்த வருடம் அவனுக்கு கலியாணம் முடிக்காவிட்டால் இனி கலியாணம் 40 வயதிலாம். கலியாணம் சாத்திரம் சொல்லுகின்றது. இங்க பலர் பெண்கேட்டு வருகின்றனர். நீ தான் அவனுக்கு உறைக்கச் சொல்ல வேண்டும் ராகுல். அவனை சம்மதம் சொல்லவை ஒரு சம்மந்தம் வந்து இருக்கு! என்று இந்தப்படத்தை அனுப்பி இருக்கின்றா..
இல்ல ராகுல் இப்ப கலியாணம் முடிக்கும் ஆசையில் நான் இல்லை.
எனக்குத் தெரியும், நீ இன்னும் நிசாவை நினைத்துக் காத்திருப்பது. ஒன்றா இரண்டா 5 வருசம் முடிஞ்சுது. ஒரு வார்த்தை சொல்லவில்லை. நிசா இனியும் காத்து இருக்காத? இங்க விசா இருந்தால்!
ஒவ்வொரு மாப்பிள்ளையும் டாக்குத்தர் ரேஞ்சுக்கு ஹீரோ தான். அதுவும் வீடு வாங்கி ஒழுங்கா வேலை செய்து எந்தக்குழுவோடும் வீதியில் நின்று வாள்வெட்டும் அடிதடி என்று போகாமல் நாகரிகமாக வாழ்ந்தா ஒவ்வொருதனும் ஒரு ஹீரோதான். அதுவும் அகதியாக வந்து அலைந்து புதிய தொழில் தேடி நிறைவான சிந்தனையுடன் போகும் ஒவ்வொரு ஈழத்தவனும் மாஸ் ஹீரோதான். இந்த ஹீரோக்களுக்கு முன் பின்புலதகுதியில் வரும் சினிமாக் ஹீரோக்கள் சீரோ தான்!
இனியும் ஜோசிக்காத, நாட்டில் இப்பதான் யுத்தம் முடிஞ்சுது என்று உலகநாட்டை ஏமாற்றுகின்றாங்க. எத்தனை உயிர்கள் உடமைகள் இழப்புக்கள் நாங்கள் ஒவ்வொரு வீதியில் நின்று கதறிய சோகம் யார் காதிலும் விழவில்லையே. இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும் எந்த சர்வதேசம் எமக்கு விடிவு தரும்?
சோகங்களும் சுமைகளும் நம் தேசத்தவரின் முகாரி ராகமாகிவிட்டது. இனியும் இப்படி இருக்காத.
இல்லடா அடுப்பில் சட்டி வைக்கும் போதும் நிசாவின் ஞாபகம் வரும். அவள் அசைவம் சாப்பிடுவது இல்லை. போடா விசரா! நினைப்பு எல்லாம் வேண்டாம். கொதிக்கும் எண்ணையில் கோழியைப்போட்டு பொறிப்பது போல அவள் நினைப்பையும் அழிச்சுவிடு. சந்தோஸமாக சமையல் செய். உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா என்று பாட்டு கேட்காத மச்சி! எல்லோருக்கும் ஒரு காலம் உண்டு என்று நம்பிக்கையான பாட்டு கேளு! லங்காசிரியில் இமையும் இசையில் கவிதை எழுது நாலு பேர் கேட்டு ரசிப்பாங்க. ஜீவன் ஒரு நண்பனாக சொல்லிவிட்டன்.
இன்னொன்று! வாழ்வில் பலதடைகள் கடக்க வேண்டும். நிசாவை மறந்திட்டு.. இந்தா பாரு படத்தை. பங்கஜம் பாட்டியின் பேர்த்தி, என் மாமா மகள் இவளைக்கட்டிக்க நல்லா படிச்சு இருக்கின்றாள். நல்ல குணம் பெயர் மாயா. என்ன சொல்லுகின்றாய் ஜீவன். இந்த கலியாணம் நடக்க வேண்டும். ஒரு நண்பனாக ஒரு மச்சானாக இதைத் தான் நானும் பார்க்க ஆசைப்படுகின்றேன். என்ன ரவி நீயும் சொல்லுகின்றாய்.
ஓம் மச்சான் இந்த வருடம் உனக்கு கலியாணம் நடக்கணும் என்று நானும் ஆசைப்படுகின்றேன். இந்த நாட்டில் அடுப்பிலும் நெருப்பிலும் இருந்து விட்டு வரும் நமக்கும் ஒரு துணைவேண்டும்; தோள் கொடுக்க.. இந்தா பியர். இத்தோடு உன் இந்த நாட்டில் அகதி விசாவில் இருந்தால் கலியாணம் முடிக்க தாய் நாட்டுக்கு போக முடியாது. வேற ஒரு நாட்டில் கலியாணம் சட்டப்படி செய்ய வேண்டும். அதுக்கான ஆவணங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். பின் வெளிநாட்டில் இருக்கும் பிரெஞ்சு தூதகரத்தில் உறுதிப்படுத்தணும். இதன் பிரதிகளுடன் இங்கு வந்து ஒப்ராவில் கொடுக்கணும். பின் குடிவரத்துறையின் கிளையில் எல்லா ஆவணத்தையும் கொடுத்து விட்டு காத்திருக்கணும். மனைவி வந்து சேரும் வரை காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்று தொலைபேசியில் பாட்டு பாடணும். வீட்டுக்காரி வாரதுக்குள் சமுகத்தில் நடக்கும் நல்லது கெட்டதில் தனியாக போனால் எப்போ வருவாளோ என்று ஏங்க வைப்பதில் நம் சமுகம் கில்லாடி மச்சிஇங்க! தனித்து இருந்தால் என்ன? பிரமச்சாரியோ ஏதும் ஏடாகூடமான வருத்தம் இருக்கோ இல்லை வெள்ளைக்காரியை சின்னவீடாக வைத்திருக்கின்றானோ என்று எல்லாம் கதை வரும்.
ஜீவன் 30 வயதில் இந்த வயதில் நீ நல்லா ஜோசி !நிசா காதல்விட எனக்கு என் நண்பன் அமைதி முக்கியம். உன் எதிர்கால நட்பில் நான் கூட வரவேண்டும் முகம் தெரிந்தவன் பின்னால் முகம் தொலைந்தவன் இருக்கின்றான்.
பொதுவில் அவன் இல்லாவிட்டாலும் அவன் நட்பு உனக்கு முக்கிய உதவிகள் செய்வார்கள். ஏன் ஜோசிக்கின்றாய் புதிய பயணம் தொடங்கு !காதலையும் மறந்திடு .
நீண்ட குழப்பத்தின் பின் நட்புக்கு மரியாதை செய்யும் ஜீவனும், சரிடா இனி விதிவழிப்பயணம் மாயாவின் கைபிடிக்கின்றேன் துரை ரவி நீதான் எப்போதும் !காதலில் தோற்றாலும் நிமிர்ந்து செல்வேன். எனக்கும் காதல் வருமா என்று இருந்தேன். இந்த 5 வருட சந்தோஸம் போதும் மச்சான் ராகுல் நீ தான் துரை நாளைக்கே மாயாவின் தொலைபேசியில் சம்மதம் சொல்லுகின்றேன். அதுக்கு முன் ஒரு போத்தல் இன்று எல்லாரும் சேர்ந்து இருப்பதால் அன்று இரவு அதிக சந்தோஸத்தில் இருந்தார்கள் நண்பர்கள். ஜீவனுக்கு மனதில் வலி இருந்தாலும் அவன் காட்டவில்லை என்பது ராகுல் அறிவான். ரவி அறிவான் இந்த நண்பர்களுடன் பழகும் இன்னொரு நண்பனும் அறிவான் என்பதை இந்த நட்பு வட்டம் அறியும் மும்மொழி என்றாலும் ஐக்கியம் முக்கியமானது. இனவாதம் மதவாதம் மொழிவாதம் கடந்த இந்தக்கூட்டணிக்கு எப்போதும் விற்பனைப்பிரதிநிதி வேசம் நண்மை தந்தது. அடுத்த சில வாரத்தில் கலியாண ஏற்பாட்டில் ரவி இருந்தான். தோள் கொடுக்க ஜீவனுக்கு....
நீண்ட குழப்பத்தின் பின் நட்புக்கு மரியாதை செய்யும் ஜீவனும், சரிடா இனி விதிவழிப்பயணம் மாயாவின் கைபிடிக்கின்றேன் துரை ரவி நீதான் எப்போதும் !காதலில் தோற்றாலும் நிமிர்ந்து செல்வேன். எனக்கும் காதல் வருமா என்று இருந்தேன். இந்த 5 வருட சந்தோஸம் போதும் மச்சான் ராகுல் நீ தான் துரை நாளைக்கே மாயாவின் தொலைபேசியில் சம்மதம் சொல்லுகின்றேன். அதுக்கு முன் ஒரு போத்தல் இன்று எல்லாரும் சேர்ந்து இருப்பதால் அன்று இரவு அதிக சந்தோஸத்தில் இருந்தார்கள் நண்பர்கள். ஜீவனுக்கு மனதில் வலி இருந்தாலும் அவன் காட்டவில்லை என்பது ராகுல் அறிவான். ரவி அறிவான் இந்த நண்பர்களுடன் பழகும் இன்னொரு நண்பனும் அறிவான் என்பதை இந்த நட்பு வட்டம் அறியும் மும்மொழி என்றாலும் ஐக்கியம் முக்கியமானது. இனவாதம் மதவாதம் மொழிவாதம் கடந்த இந்தக்கூட்டணிக்கு எப்போதும் விற்பனைப்பிரதிநிதி வேசம் நண்மை தந்தது. அடுத்த சில வாரத்தில் கலியாண ஏற்பாட்டில் ரவி இருந்தான். தோள் கொடுக்க ஜீவனுக்கு....
2 comments :
தொடர்கிறேன் அடுத்த பகிர்வுக்கு...
tm2
(ஒரே நாளில் இரண்டு பகிர்வு...)
தொடர்கிறேன் அடுத்த பகிர்வுக்கு...
tm2
(ஒரே நாளில் இரண்டு பகிர்வு...)
22 November 2012 18:39 //வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ம்ம் கொஞ்சம் அவசரம் அதுதான்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!
Post a Comment