04 November 2012

அந்தநாள் ஞாபகம் -6

வணக்கம் உறவுகளே அந்த நாள் ஞாபகம் ஊடாக மீண்டும் தனிமரம் அசைபோடும் திரையரங்குகள் வரிசையில் இன்று உங்களை அழைத்துச் செல்வது என் லட்சியத் தொடரில் ஒன்றில் நீங்கள் நன்கு அறிந்த ஊர் தான்! முகம் தொலைந்தவன் கோட்டையான பதுளைக்கு. :::))))


மலையகத்தின் முக்கிய தேர்தல் தொகுதியும் ,தென் இலங்கை அரசியலில் அதிகம் சிறுபான்மை மக்களின் வாக்கு ஆட்சியில் தாக்கம் செலுத்தும் ஊரும் இந்த ஊர் .

உடரட்டை மெனிக்கே நீண்ட ரயில் பயணம் முடித்து வைக்கும் நகரம் இந்த பதுளை!

. என் தனிப்பட்ட வாழ்வில் ஒரு பல்கலைக்கழகம் கொடுக்க முடியாத பல பால பாடங்களை அனுபவரீதியாக கற்றுக்கொடுத்த ஊர் .

நான் பார்த்த ஒரு நண்பனின் நட்பு !

நட்பில் ஏற்பட்ட பிரிவு ,துரோகம் ,போட்டி, பொறாமை ,மத அரசியல் , இனப்பார்வை, ,பிரதேசவாதம்,அன்பு,குடும்பம் ,காதல் காதல் பிரிவு ஆசைப்பட்ட நெஞ்சங்கள் சீரழிந்த வாழ்வு, நேசித்த இதயங்களின் நெஞ்சில் ஆடும் பூ ,

என இந்த ஊரில் பொதுவெளியில் சொல்லப்படாத பல
விடயங்களை என் விழிகளும் செவிகளும் !ஒரு வழிப்போக்கனாக இருந்து பார்க்க வைத்து என்னையும் இந்த ஊரில் வியாபாரம் செய்யும் விற்பனைப்பிரதி நிதி பட்டம் தந்து பல விடயங்களை படிப்பித்த ஊர் என்பதை நான் என்றும் மறந்தவன் இல்லை!

. அதனால் தான் இன்றும் பல நட்புக்கள் மச்சான் நீ இந்த கதையை இன்னும் நீண்டதாக எழுதியிருக்கணும் !

விடுபட்ட பாத்திரங்கள் எல்லாம் நாங்கள் சொல்லுகின்றோம் .என்று முகநூலில் மல்லுக்கட்டும் போது சில நேரம் சங்கடமாக இருக்கும் எனக்கு!

.இந்த நட்புக்களுக்கு எல்லாம் பதிவுல அரசியலும் ,தொடருக்கு இருக்கும் பாராமுகமும் பற்றி பல தடவை சொன்னாலும் கேட்பதில்லை.

நீ சுதந்திரதேசத்தில் இருக்கின்றாய் எங்கள் நட்பிற்கு மரியாதை செய்வது என்றால் இந்த விடயங்கள் எல்லாம் எழுத வேண்டும் என என் நண்பன் டெனில் அடிக்கடி சண்டை போடுவான்.

நான் என்ன செய்வேன் எழுத்துப்பிழைவிடும் படிக்காத தனிமரம் என்று ஒத்துக்கொண்டாளும் உங்களிடம் அவன் அப்படித்தான் ..

என் பிடிவாதம் தெரிந்தவன் இந்த ஊரில் இருந்து இன்னும் இரு தொடரினை என்றாவது எழுதுவேன் என்பெருமான் வழிவிட்டால் !{(முடியலசாமி என்பது கேட்குது காதில்:))) }

எனக்கும் இலக்கிய ஆசையை ஊட்டிவிட்ட ஊர் இந்த பதுளைதான் [வேலை குறைவான ஊர் ] ஏன் இந்த ஆசை எனக்கு வந்தது என்று இன்றும் தேடுகின்றேன் பதில் இல்லை .

சில நாட்களுக்கு முன் ஒரு நண்பி என் ஸ்கைப் ஊடாக வந்து என் தூக்கத்தை தொலைத்து சிந்திக்க வைத்தாள் .

என் முகநூலில் இந்த ஊர் பற்றிய நீண்ட தொடரினை எழுதிய காலத்தில் பகிர்ந்தது இல்லை .அது பலருக்கு மீண்டும் மனதில் புயலைத் தரும் என்பதால் ஆனால் அதன் வரலாற்றுத் தாக்கம் பலர் அறிய வைத்ததில் என் எழுத்துக்கு நான் நடுநிலையோடு எழுதியிருக்கின்றேன் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு 15 வருடத்தின் பின் அந்த நண்பியின் நேரடி உரையாடலும், பாராட்டும் என்னை இன்னும் இந்த ஊர் மாந்தர்களின் முகத்தினை வலையில் ஏற்ற வேண்டும் என்ற ஆவம் இருக்கின்றது.

யார் தடுத்தாலும் என்ன முட்டுக்கட்டை போட்டாலும் நேரம் தான் இல்லாமல் தவிக்கின்றேன்!? !

இந்த ஊரில் இரண்டு திரையரங்கு கிங்ஸ் (இன்று இது இடிக்கப்பட்டுவிட்டது ),ரெக்ஸ், இரண்டிலும் நானும் நண்பர்களும், நான்கு மொழிப்படங்கள் தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்,ஹிந்தி என பார்த்த வசந்தகாலம் இன்னும் நீங்காத நினைவுகள்
.
இந்தப்படம் வெளிவந்த நாட்களில் தியேட்டரில் அதிக கூட்டம்! மூவின மக்களும் இந்தப்படம் பார்த்தார்கள். அதில் இந்த தனிமரமும் ஒருவன் என்னோடு இருந்த நட்புக்கள் பலரில் முதலிடம் இவனுக்குத் தான் .!


இந்தப்பாட்டுக்கு இசைநிகழ்ச்சியில் ஆடாதவர்கள் இல்லை ஒரு காலத்தில்!

அதில் சிரியஸ் பார்ட்டி தனிமரம் என்று இன்று சிலர் சொல்லுகின்றார்கள் அந்நாட்களில் பொதுவெளியில் ஆடியவனில் நானும் ஒருவன் :))) விஜய் மட்டும் தான் ஆடணுமோ ?:))) !


6 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல நட்பு...! தொடர்கிறேன்...

Anonymous said...

is it very nice anna...

melum padithen mika neenda naadkalin pin viry very nice......

தமிழ் காமெடி உலகம் said...

ரொம்ப நல்லா இருக்கு.....பகிர்வுக்கு மிக்க நன்றி.........

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

தனிமரம் said...

நல்ல நட்பு...! தொடர்கிறேன்.// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும் ஒரு பால்க்கோப்பி குடித்துவிட்டு போங்கோ!

தனிமரம் said...

s it very nice anna...

melum padithen mika neenda naadkalin pin viry very nice......

4 November 2012 20:52 // நன்றி எஸ்தர் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

ரொம்ப நல்லா இருக்கு.....பகிர்வுக்கு மிக்க நன்றி.........

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/// நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!