15 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -41


அலைகடல் கடந்து அகதியாக வந்தேன்
அன்பே உன்னில் தொலைந்து போகவா?
ஆசைப்பட்ட பாவம் தொலைக்கவா?
ஆன்மீகத்தில் கலந்து போகின்றேன்!
( ஜீவனின் நாட்குறிப்பில் இருந்து)

குடிகாரா பரமக்கூடிகார குடிக்காதே என்ற இளையராஜாவின் அன்றும் இன்றும் என்றும் போலத்தான், கோப்பி குடித்துக்கொண்டிருக்கும் போதே ரவி சொன்னான் 'நேற்று நீ இல்ல சோதிமாமா காலையில் வேலை முடிந்த கையோட வீட்டவந்தார்.

என்னப்பா ரவி சவா? ஓம் மாமா வாங்கோ என்ன நின்றாப்போல நானும் இனித்தான் வேலைக்கு இறங்க வேணும் உவன் ஜீவனை நேற்று வேலையில் நிற்கும் போது கொன்றோல் பாய்ஞ்சு பிடிச்சிட்டுப் போட்டாங்க!
இப்ப அவன் இங்க இல்ல. உவனுக்கு ஏன் கொழுப்பு பிடிச்ச வேலை? வெளிநாடு வந்தவன் வீசா எடுக்கவில்லை, வீடு வாங்கவில்லை, கொழும்பில் ஒரு பிளாட்ஸ் எடுக்கவில்லை, அதுக்குள் காதலாம்! அதுவும் என்ர மோளிடம்!! நேற்று ரயிலில் நிசாவிடம் சொல்லியிருக்கின்றான்.. 


நாங்க பெரியவர்கள் இருக்கின்றோம், ஒரு வார்த்தை முதலில் சொன்னானா ??என்ன குடும்ப வளர்ப்பு? சீச்சீ நினைக்கவே வெட்கமாக இருக்கு; நீ அவன் நண்பன் தானே? இருக்க வீட்டில் அறைகொடுத்து உண்ண சோறுகொடுத்து உடுப்பு வாங்கிக்கொடுத்து பார்க்கின்றாய் என்று எனக்குத் தெரியும். சோதிமாமா! அவன் என் நண்பன் அடைகலம் தேடிவந்து இருக்கும் போது தோள் கொடுப்பதுதான் தோழன் பண்பு. நாங்க எங்கேயும் சண்டை போட்டாலும் மற்றவர்கள் குத்திக்காட்ட விட்டதில்லை! பார்த்தியா உனக்கு கோபம் வருகின்றது. நான் என்ன தப்பா சொல்லிப் போட்டன்; என்னையும் நீ பிரிச்சுப்பார்க்கின்றாய்?
சோதி மாமா நிசாவை அவனுக்கு பிடிச்சிருிருக்கு இதை முதலில் எனக்குத்தான் சொன்னவன்! 

அதில் என்ன தப்பு? நாங்கள் தூரம் இல்லையே, பங்கஜம் பாட்டியின் பேரன்கள் தானே! என்ன எங்க குடும்பங்களில் மூத்தவர்கள் மாமாக்கள் சிங்களத்தி, மலையகத்தி என்று குடும்பத்தில் பல குத்துவிளக்கு அதை ஒன்றாக அரவணைச்சுப் போகத்தெரியாத பங்கஜம் பாட்டி பிரிச்சுப் பார்க்கும் நிலை!
அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்று கொண்டாட்டம் இல்லாத மற்ற உறவுகள் எல்லாம் ஒவ்வொரு திக்கில் வாழ்ந்த நிலையில் இனவாதம் நாட்டில் தலைவிரித்து ஆடினாலும் , இனவாதம் கக்குவது இல்லையே! அடுத்த தலைமுறையில் வந்த பங்கஜம் பாட்டியின் பேரன்கள் சோதி மாமா என்றாலும், நீயும் சிங்களத்தியைத்தானே காதலிச்சாய் !நீங்கதான் அடிக்கடி என்னைக்குத்திக்காட்டிக்கொண்டு இருக்கின்றீங்க;சாலிகாவுடன் பழகியதை வைத்து.
அது இல்லடா ரவி உவன் ஜீவன் செய்தது பிழை! உன்னைவிடு நீதான் பிரமச்சாரி ஐய்யப்பன் என்று ஓடிக்கொண்டு இருக்கின்றாயே உது எங்க போய் முடியுமோ எனக்குத் தெரியாது!


 நான் கதைக்க வந்தது ஜீவனுக்கு நீ புத்திமதி சொல்லணும் என்று!அவனுக்கு முந்தி நீ வந்தனி இந்த நாட்டுக்கு, முன்னவர் வந்த காதை பின்னர்வந்த கொம்பு மறைக்க்ககூடாது. அதனால் தான் சொல்லுறன் இங்கத்தே கலாச்சாரத்தில் வளரும் நிசாவும் பாட்டி ,அம்மா,மாமி,மச்சாள் என எல்லாப் பெம்பிளையும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை அடுப்படியில் கிடப்பதையே பார்த்து வளர்ந்தவன் ஜீவன் மூளை எப்படி இருக்கும்? தனக்கு வருகின்றவளும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பான்.
மாமா உந்த எடுகோளே முதலில் பிழை! இங்க எல்லாரும் வேலைக்கு ஓடுகின்றாங்க, ஏன் மாமியும் அதிகாலை ஓடிப்போவது நாலு காசு உழைக்கத்தானே .இங்க இரண்டுபேரும் ஓடி உழைத்தால் தான் குடும்பம் தேர் இழுக்க முடியும்! அது இல்லடா ரவி அவள் இங்க படிக்கின்றாள் இவன் ஊரில் இருந்தமாதிரி நாலு நண்பர்களுடன் டெலிபோன் பேசினால் கைகொடுத்து பேசினால் தப்பாக நினைப்பான்! தாழ்வு மனப்பாண்மையில் பொதுவெளியில் சண்டை போடுவான்! புருசன் நான் இருக்க ரோட்டில் போகும் அவனோடு என்ன கதை என்று சந்தேகம் கொள்வான். வீட்டில் இருந்து வேலைக்கு போய்ச் சேருவதுக்குள் 10த்தரம் கைபேசியில் அழைப்பான், எங்க நிற்கின்றாய் என்ன செய்கின்றாய் என்று! இப்படியே நாளடைவில் சந்தேகம் வந்து இருவரும் பிரிஞ்சு நிற்கும் நிலை வேணுமோ ??உங்க பலர் இப்படித்தான் அவசரப்பட்டு காதலிச்சு அம்மாவாகியபின்விசாவுக்குத்தான் உன்னைக்கட்டினான் என்றுவிட்டுப் போய், அடுத்தவள் கூட குடும்பம் நடத்தும் கதை எல்லாம் அறியமாட்டியோ?
இப்படி எல்லாம் நானும் பின் புலம்பும் நிலை வேண்டாம் ரவி அவனுக்கு நீ தான் புத்திமதி சொல்லணும். நிசாவை விட்டுவிடு அவள் இன்னும் கணக்கியலில் பட்டதாரி ஆக்க வேண்டும் என்ற கனவில் நிசாவைப்படிப்பிக்கின்றேன். அந்த கனவில் கல்லெறிய வேண்டாம் என்று சொல்லு முதலில்! இவனுக்கு ஒப்ரா வேற அடைக்கலம் நிராகரித்த நிலையில் இனி நாட்டைவிட்டு வெளியேறு என்று கடிதம் வரும் தெரியாதோ உனக்கு ?
மாமா நீங்க படிக்காத படிப்பை உங்கமகள் மீது திணிக்கின்றீங்க. இலங்கையில் தரப்படுத்தல் வந்ததால் நீங்கள் பட்டதாரி ஆகவில்லை. அதன் நீட்சியை உங்க மகள் மீது தினிப்பதும் ஒரு அடக்குமுறையின் இன்னொரு வடிவம் தான் .இன்னொன்று மாமா ஒப்ரா அடைக்கலம் கொடுக்காட்டி இருக்கின்றது கொமிசன் மறந்து போச்சோ?? அகதிகளுக்கான மேல் முறையீட்டுக்குழுவிற்கு(commission des recours des refugies) ஒப்ரா நிராகரித்த காரணத்துக்கு எதிராக சட்டப்பிரகாரத்தின் ஒரு சத்தியக்கடுதாசியை மேலதிகமாக இணைத்து கொடுத்தால் இந்த ஆணைக்குழு விசாரனை செய்யும். மணுச்செய்த நாளில் இருந்து அந்த ஆணைக்குழுவினர்தான் தீர்மாணிப்பார்கள் எப்போது இந்த வழக்கினை விசாரணை செய்ய வேண்டும் என்று அதுவரை அடைக்கலம் கோரிய நபராக இந்த நாட்டில் பாதுகாப்புடன் வாழமுடியும் சட்டபூர்வமாக.. ஆனால் தொழில் புரியமுடியாது என்றும் தெரியும் சோதிமாமா!

அப்ப நிசாவின் முடிவு என்ன என்று கேட்டீங்களா? அவள் என்ன சொல்வது என் மகள் என் பேச்சை மீறமாட்டாள். பிரெஞ்சில் வாழ்ந்தாலும் இன்னும் கண்டிப்புடன் தான் வளர்க்கின்றேன்.மாமா இந்த நாடு சுதந்திர தேசம், அவளின் முடிவில் தெளிவான பதிலை தேடுங்க ஒன்றுமட்டும் சொல்லுவன் என் நண்பன் ஜீவனைப்போல ஒரு மாப்பிள்ளையை நீங்க நிராகரிப்பது நிசாவின் எதிர்கால சுபீட்சமான வாழ்வை சீரழிப்பது போல ஆகும். நாளைக்கே நிசா வேற நாட்டுக்காரணையோ இல்லை வேற பொடியனையோ தெரிவு செய்தால் நீங்க அனுமதிக்காட்டியும் அவள் தனிக்குடித்தனம் நடத்த இந்த நாட்டுச்சட்டம் இடம் கொடுத்து இருக்கு என்பதையும் மறக்க வேண்டாம்.
நீ உபதேசம் செய்ய வேண்டாம் ரவி முதலில் சபரிமலைக்கு போற வழியைப்பாரு. முடிந்தால் உன் நண்பனுக்கும் விசா கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள் கிடைத்தால் அந்த நேர்த்தியையும் பூர்த்தி செய்துவை !





. நான் போட்டு வாரன் இது தான் நடந்திச்சு மச்சான்!'




அப்ப நிசாவின் நிலை இன்னும் தெரியாது அப்படித்தானே?

ஓம் எதுக்கும் நான் நிசாவைப் பார்க்கின்றேன் நாளைக்கு.. இப்ப வழக்கு விடயமாக லாச்சப்பல் போறன்.
ரவி நீ யோசிக்காத, என்னால் உனக்கு கஸ்ரம் வராது. ஆனால் ஒன்றுமட்டும் சொல்லு, இந்த நாட்டில் விசா மட்டும் தான் காதலை தீர்மானிக்குமா? ஏன் என்னமாதிரி உண்மையான நேசிப்பையும் புரிந்துகொள்ள மறுக்கின்றார் சோதி மாமா ??ஜீவன் இந்த நாட்டில் எந்தக்காரியம் செய்யவும் முதலில் தேவை விசா !
சரி மச்சான், விசாகிடைத்தால் நிசாவை கட்டிவைப்பாரா மாமா? கேட்டுப்பார் உன்னைவிட்டால் வேறு யார் எனக்கு கதி!
அடப்போடா, நானே என் ஐயனை கதியாக எண்ணுகின்றேன்; பார்ப்போம் அவர் சரி உன் வாழ்வில் மாற்றம் தாருவாரா என்று!


தொடரும்!
சவா- நலமா !
கொன்றோல்-பரிசோதனை!
/////////////////////////////
// கார்த்திகை 1 இல் ஐயன் வழியில் போகும் சாமிகளே நல்ல குருவை நாடி நலம் வேண்டி கன்னிசாமி கவனம் சாமி!!! 

13 comments :

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்...
நான் தான் இன்று முதல் வரவு...

மகேந்திரன் said...

பிரபஞ்ச ஒளித் தேடலில்
நவநாகரீகத்தை
செயலில் கொண்ட
பிரெஞ்சுக் காதலியின்
கலாச்சார முனைப்புகள்
அழகு...

திண்டுக்கல் தனபாலன் said...

கார்த்திகை 1 - சரியான பகிர்வு....

சுவாமியே சரணம் ஐயப்பா....

தொடர்கிறேன்...
tm3

K.s.s.Rajh said...

எல்லோர் மனங்களையும் கொள்ளை கொள்ளும் பிரஞ்சுக்காதலி சுவாரஸ்யமான கட்டத்துக்கு வந்துள்ளாள்
தொடருங்கள் தொடர்கின்றோம்

முற்றும் அறிந்த அதிரா said...

ஆ... மீ த 1ஸ்ட்டூஊஊஉ:)

நான் முதலில் கேட்டது சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயாஆஆஆஆஅ.. பாடலைத்தான்... நல்ல பாடல்..

முற்றும் அறிந்த அதிரா said...

அலைகடல் கடந்து அகதியாக வந்தேன்
அன்பே உன்னில் தொலைந்து போகவா?//

ஹா..ஹா..ஹா..
சூப்பர் வரிகள்/..

விசா இல்லாத பிரச்சனை ஒருபக்கம், காதல் மயக்கம் ஒருபக்கமாக:).. அழகாகப் போகுது .. உண்மைச்சம்பவங்கள் என்பதால் படிக்க படிக்க சுவாரஸ்யம்.

தனிமரம் said...

வணக்கம் நேசன்...
நான் தான் இன்று முதல் வரவு...// வாங்க மகி அண்ணா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

பிரபஞ்ச ஒளித் தேடலில்
நவநாகரீகத்தை
செயலில் கொண்ட
பிரெஞ்சுக் காதலியின்
கலாச்சார முனைப்புகள்
அழகு...//நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும் மகி அண்ணா!

தனிமரம் said...

கார்த்திகை 1 - சரியான பகிர்வு....

சுவாமியே சரணம் ஐயப்பா....

தொடர்கிறேன்...// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எல்லோர் மனங்களையும் கொள்ளை கொள்ளும் பிரஞ்சுக்காதலி சுவாரஸ்யமான கட்டத்துக்கு வந்துள்ளாள்
தொடருங்கள் தொடர்கின்றோம்

15 November 2012 20:54 //நன்றி ராச் வருகைக்கும் உற்சாகமான பின்னூட்டத்துக்கும்.

தனிமரம் said...

நான் முதலில் கேட்டது சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயாஆஆஆஆஅ.. பாடலைத்தான்... நல்ல பாடல்..

16 November 2012 01:40 / நன்றி அதிரா அக்காள் பாடல் கருத்துக்கு!

தனிமரம் said...

அலைகடல் கடந்து அகதியாக வந்தேன்
அன்பே உன்னில் தொலைந்து போகவா?//

ஹா..ஹா..ஹா..
சூப்பர் வரிகள்/..// நன்றி பாராட்டுக்கு அதிரா அக்காள்.

தனிமரம் said...

விசா இல்லாத பிரச்சனை ஒருபக்கம், காதல் மயக்கம் ஒருபக்கமாக:).. அழகாகப் போகுது .. உண்மைச்சம்பவங்கள் என்பதால் படிக்க படிக்க சுவாரஸ்யம்.

16 November 2012 01:42 // நன்றி அதிரா அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும்.