18 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி-43

வசந்தகாலத்தின் எப்பணூய் (epauoui)மரம் போல

வசந்தம் வீசும் நிசாவின் முகத்தில்
கார்காலத்தின் கலரி(galerie) மரத்தின் சோகம் ஒப்பிய பார்வையில்



 வந்தால் நிசா கதவைத் திறந்து ஆஸ்பத்திரிக்கு !



முன்னால் சோதிமாமா வரப்பின் நிசா வந்தாள் .முதுகு வலியில் எழும்ப முடியாமல் படுத்து இருந்தாலும் மரியாதை நிமித்தம் அசைய வேண்டிய நிலையில் ஜீவன்.

வாங்க சவா(ca-va) சோதிமாமா .நிசா சவா,ஓம் இங்க சவப்பா(சுகமில்லை என்றாலும் )சவா என்று தானே சொல்ல வேண்டும் வந்திட்டமே!


இங்க எல்லாம் படலைக்குப் படலைதானே .


ஊர் கெட்டுப்போய் இருக்கு இந்த நேரத்தில் ஏன் ஜீவன் இந்த ஆடம்பரப்பொருட்கள் எல்லாம் .ஊரில் அம்மா அப்பா எப்படிக் கனவுகான்பார்கள் !

நீ இங்க பாதை மாறிப் போவது சரியோ ?என்றது அவரின் மனதில் இருக்கும் கோபத்தைக்காட்டியது.

என்றாலும் உதவ வந்த இடத்தில் ஏன் வாய்ர்தர்க்கம் என்று அமைதிகாத்தான் .

நிசா என்னாச்சு ஒலிக்கீற்றுப்பார்த்தாயா ?

என்று பேச்சினை மாற்றினான் ஜீவன் .

ம்ம் பார்த்தேன் .

இந்த ஒலிக்கீற்றுத்தான் புலம்பெயர்வர் நம் இளைய சமூகத்தின் முகத்தையும், இன்னொரு பரிமானத்தையும் வெளிச்சம்போடுகின்றது

. நிச்சயம் இந்த நிகழ்ச்சிக்கு வாக்குப் போட்டு ஊக்கிவிக்க வேண்டியது நம்மவரின் கடமையாக இருக்க வேண்டும் .

அயல்நாட்டு திறமைக்கு மட்டும் அன்னக்காவடி தூக்காமல் நம் குழந்தைகள் ஊனம் என்றாலும் தூக்கி வைக்க வேண்டியது நம் கடமை

.சின்ன சின்ன கைதட்டல் தான் நாளை இந்த சமூகம் எங்களாலும் முடியும் சாதிக்க என்று சொல்லும் புன்னகை தேசமாக மாறமுடியும் எதிர்காலத்தில் !

விதண்டா வாதமும் ,விட்டுக்கொடுக்காத ,வரட்டுக்கவுரவமும் நல்ல கலைஞர்கள் நலிவடைந்து போவது மூத்தவர்களின் பிடிவாதக் குணத்தினாலும் தான் நிசா !.

ஜீவன் நீ என்ன சொன்னாலும் நம் கலைக்கு எத்தனை மதிப்பு இருக்கு ?யார் பாட்டு கேட்கப்போறாங்க ?

அடையானுக்கு சொந்த இசை இருக்கு ,,சிங்களவனுக்கு சொந்த இசை ,இருக்கு,,ஹிந்திக்காரனுக்கு பங்காரா இருக்கு,!

நமக்கு இருப்பது என்ன ?

இங்க உங்க பாட்டு என்ன என்று பள்ளியில் கேட்டாள் ?

சொல்வது எல்லாம் "ஊத்திக்கிட்டு படுத்துக்கிடலாமா என்று குத்து தானே "

போங்கப்பா இந்த இசை,கலை என்று எதுவும் வேண்டாம் ஜீவன் .

முதலில் உடம்பை பார்த்துக்க முதுகுதான் இங்க தூண் அது இல்லையோ ஆம்பிள்ளை இல்லை !

அம்மா நிசா நீ ஜீவனுடன் பேசிக்கொண்டு இரு .

நான் உனக்கு லண்டன் போக டிக்கட் பார்த்திட்டு வாரன்!

கார்டி நோர்ட் பக்கத்தில் தானே!

சோதி மாமா போனதும் நிசா என்ன விசயம் ஒன்றும் புரியல.

அது இருக்கட்டும் இதில் எந்தப் பாட்டு முதலி வந்தது இந்த வாரம்!





தொடரும்!

6 comments :

ஹேமா said...

படலைக்குப் படலை ரசித்தேன் நேசன்,முடிய வரும் காணொளி கண் கலக்கிவிட்டது.....கதை இன்னும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்...இன்னும் இருக்கு !

MANO நாஞ்சில் மனோ said...

இங்க எல்லாம் படலைக்குப் படலைதானே//

புரியலை நேசன்...?

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்,
நலமா?

அழகோவியமாய்
நிதர்சன ஆக்கமாய்
பிரெஞ்சுக் காதலி....

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பாடல்கள்...

தொடர்கிறேன்...
tm2

K.s.s.Rajh said...

ஜுவனின் காதல் முடிவு எப்படியியிருக்கும் என அறிய ஜ ஆம் வெயிட்டிங் தொடருங்கள்

தனிமரம் said...

படலைக்குப் படலை ரசித்தேன் நேசன்,முடிய வரும் காணொளி கண் கலக்கிவிட்டது.....கதை இன்னும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்...இன்னும் இருக்கு !

18 November 2012 12:57 
//வாங்க ஹேமா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில் .காணொளி !ம்ம் வாசித்த பின் கருத்தைச் சொல்லுங்கோ !நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!