01 March 2013

விழியில் வலி தந்தவனே!!!-அங்கம் -9


தீர்வுத்திட்டம் என்று ஒப்பந்தம் போட்டு! ஓடோடி உலக நாடுகளுக்கு தமிழருக்கு தீர்வு கொடுக்கப்போறோம் .என்று சமாதான தேவதையைக்காட்டிக் கொண்டே !இனவாதிகள்  .

சர்வதேசங்களில் சஞ்சாரம் செய்து தம் யுத்த தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு மக்களின் அமைதிக் காலங்களுக்கு சாவுமணி அடிக்க. சமாதான தேவயையின் கழுத்திற்கு கயிறாக மாவிலாறு கதையை ஊடகங்களுக்கு திறந்த விட்ட போது சமாதான தேவதை தன் மரணத்தின் பிடியில் இருந்தாள்.

யுத்தமேகம் மெல்ல மெல்ல அவளை விழுங்கிக்கொண்டு இருந்தது.மாவிலாறு மீட்பு என்று கிழக்கில் இருந்து தொடங்க போக்குவரத்துக்கள் தடைப்பட்டன மீண்டும் வன்னி முடங்கிப்போனது !

தென் இலங்கையில் இருந்து சுற்றுலா போர்வையில் திருடிக்கொண்டு போன பொக்கிசங்களான கோயில் சிலைகளும் ,தளபாடங்களும்  ,ஒருபுறம் என்றால் !


திடீர் நவீன சுற்றுப்புற சுகாதாரிகள் பழைய குப்பை என்று இரும்புகள் ஏற்றிச் சென்ற வீதியும் ,இணைத்தலமை நாடுகளின் யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்களின் வாயில் ஓயாமல் ஒலித்த வீதியான A---9. ,விலங்கினைப்பூட்டிக்கொண்டது .இனவாத வெறியர்களின் வல்லமையால்.

வவுனியாவுக்கான பாதையும் வடக்கில் யாழ்பாணத்துக்கான பாதை முகமாலையிலும் முடங்கியது. கிளிநொச்சி,முல்லைத்தீவு இரண்டும் தனித்துபோனது இனி ஒரு விதி செய்வோம் என்பது போல ஈழப்போர் வரலாற்றில் கிளிநொச்சி,முல்லைத்தீவு இரண்டு மாவட்டங்களும் ஈடுஇணையற்ற ஒப்புவமை சொல்ல முடியாத பூமி .

ஆம் இங்கு வாழ்ந்த மக்கள் யுத்தத்தின் முழு சுமைகளையும் தங்கள் தலையில் சுமந்தவர்கள்.கலிங்கத்துப்பரணியைப் போல படித்து தெரிந்ததைவிட பார்த்து தெரிந்தவர்கள் அவர்கள் என்பதே வாழும் வரலாறு!

இங்குள்ள மக்களுக்கு யுத்தம் ஒன்றும் டாலர் தேசம் போல புதியது இல்லை என்வே சில ஆண்டுகள் நிலவிய சமாதானத்தை இனவாதிகளின் நாடகத்தை 1956 முதல் பார்த்தும் கேட்டும் வளர்ந்தவர்களுக்கு இந்த 2002 நாடகத்தையும் அவர்கள் மறக்க அதிக நாட்கள் தேவைப்படவில்லை.


புதிதாக தோற்றம் பெற்ற நவீன ஐரோப்பிய சொகுசு வடிவங்களான கட்டிடங்கள் ,மற்றும்  சுற்றுலாப் பயணிகளின் திடீர் வரவு இவைகளைத் தவிர சாமனிய மக்களுக்கு சமாதானம் வேறு எதையும் சொல்லவில்லை. 

அமைதிக்காலத்தில் ஐரோப்பாவுக்கும் ,அண்டை நாடுகளுக்கும் சொன்னது போலவும் விருந்துபவசாரம் செய்தது போலவும் எந்த வசந்தமும் வரவில்லை .


என்ன சில ஆண்டுகள் குண்டு மழையும் ,குருதி மழையும் இல்லை அவ்வளவுதான்.

ஆனாலும் ஆழஊடுருவும் படையணி அங்கென்றும் ,இங்கொன்றுமாகவும் ஆடியது கொலை வெறித்தாண்டவம்.

மீண்டும் யுத்தமேகம் சூழந்தாலும் தனது வழமையான வாழ்கை முறை மாறவில்லை இயல்பாகவே இருந்தது.

மீண்டும் தெருவுக்கு தெரு மரண ஓலம் கேட்கத்தொடங்கியது கார்க்கில் யுத்தம்  போல வன்னி மண்ணில்.

 இவரின் மகன் வீரச்சாவாம்,அவரின் மகன் வீரச்சாவாம்,இவன் வீரச்சாவம் அவன் வீரச்சாவாம்,கிபிர் அடிச்சு அவர் செத்துட்டாராம் இவர் செத்துட்டாராம் என்று மக்களின் பேச்சுக்களில் கலந்து போனது.மரணம் என்று நாளிதழலில் வரும் விளம்பரம்போல அல்ல இது உணர்வுடன் கூடிய கவலை ரேகை!

"ஈழத்தில் போர் தீர்ந்து கொடி முல்லை பூ பூக்கவேண்டும் "என்று ஒரு கவிஞன் சொன்னது போல அப்போது வன்னிமக்கள் விரும்பியது யுத்தம் இல்லாத ,பொருளாதார தடையில்லாத, பட்டினி இல்லாத உலகைத்தான்.!

உன் மண்ணுக்காக நீ என்ன செய்தாய் என்று யாரும் கிளிநொச்சி,முல்லைத்தீவில் வாழ்ந்த இருந்த மக்களை கேட்கமுடியாது ?விரும்பியோ ,விரும்பாமலோ , ஓவ்வொரு வரும் தம்மால் ஆன பங்களிப்பை நிச்சயம் வழங்கியிருந்தனர்.

அறிவாலயத்தில் முதுமையிலும்  பதவி ஆசைவிடாது ஈழத்தவரை வைத்து தனது அரசியல் இலாபம் தேடும் பஞ்சனையில் படுத்துறங்கும் தாத்தாவுக்கு தெரியுமா ?இங்கே அவரது வயதில் உள்ளவர் எல்லைப்படை பயிற்சி பெற்று களமுனைக்கு சென்றது.

யுத்தம் என்றால் மக்கள் சாவது இயல்பு என்ற அம்மாவுக்கு தெரியாது ?தன் சாவுக்கு கொல்லி இடுவான் என்று வளர்த்த பிள்ளை வீரச்சாவினைத் தழுவி வித்துடல் ஆகி வீடுவந்த போது கதறிய தாயின் வலி !

கல்லும் கரையும் இந்த அவலம் பார்த்தால் .கல் நெஞ்சுக்காரி காங்கிரஸ்காரி கட்டையில் போவாள் என்று கதறிய தாயின் குமுறல் எல்லாம் இனவாதப்பெருமை பேசும் ஊடகம் பேசியது இல்லை தென் இலங்கை மக்களிடமோ ,வெளியுல மக்களிடமோ தணிக்கை என்று தென் இலங்கையில் பொய் உரைக்க இருக்கு லங்காபுவத் .


போர்களம் என்பது எல்லோரும் பார்கமுடியாத ஒரு இடம் அது நாட்டுக்காக உயிர் நீக்க துணியும் வீரர்கள் மட்டுமே பார்க்ககூடிய வீரம் விளைஞ்ச பூமி!

ஆனால் கிளிநொச்சியில் ,முல்லைத்தீவில் இருந்த ஓவ்வொறு மக்களும் போர்களத்தை கண்டவர்கள். அதற்காக இவர்கள் எல்லோறும் புலிகள் என்று தென் இலங்கை அரசு கூறியது போல அர்த்தம் இல்லை .பிறகு அவர்களது வாழ்விடமே போர்களமாக மாறுகின்றபோது தன் இருப்பை தக்க  வைக்க என்ன செய்யமுடியும்.?

ரகுவின் உயந்தர வகுப்பு காலம் ஓர் ஆண்டுகள் ஓடிவிட்டது.!

சுகி பத்தாம் தரத்தில் இருந்து பதினோராம் தரம் இந்த வருடம் அவளுக்கு பதினோரம் தர பரீட்சை இருக்கின்றது .இதில் கவனம் செலுத்தி படித்தால் தான் உயர்தரத்தில் நுழைய முடியும் .ஆனால் அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை இந்த ஒருவருடத்தில் ரகு தன்னை தன் காதலை புரிந்துகொள்ளவில்லையே ?என்ற வருத்தம் அவளுக்கு.




"என்னவனே உன் நினைவில் உருக்கும்
என் இதயத்தின் வலியை நீ அறிவாயோ?
அறிய மாட்டாய் !
கல்நெஞ்சக்காரன் நீ
என் பெண்மையின் நாணம் விட்டு
உன் மனதில் வாழ்க்கை வரம்
யாசித்துக் கேட்டேன்.

காலம் எல்லாம் உன் மடியில்
கிடக்கும் ஒரு குழந்தையாக
வரம்  தருவாயா அன்பே ?என் மணளா
அன்பில் உருகும் துணைவியாய்
என்றும் உன்னுடன் நான்!

என்னை திருடும் கள்வன் நீ
தினம் தோறும் என்னை 
திருடிச்செல்கின்றாய் கனவில் மட்டும்
நேரில் எப்போதடா?
கைபிடிப்பாய் ரகுவம்சம் 
காண்பது எப்போது??

தொடரும்...

16 comments :

மகேந்திரன் said...


இனிய வணக்கம் நேசன்...
நலமா??
நீண்ட நாட்களுக்குப் பின்னர்
தனிமரத்தின் பசுமையான
நிழலில் ஒதுங்கி இளைப்பாற வந்தேன்...

மகேந்திரன் said...

உங்கள் பதிவுகளில் யதார்த்தம் மிகவும் அப்பட்டமாக இருக்கும்...
நடந்த சம்பவங்கள் தான் வரலாறு என்று உரைக்கும்
பதிவுகள் உங்களது..
இதோ மீண்டும் நிரூபிக்கிறீர்கள்...

மகேந்திரன் said...


இறுதியில் பதிவிட்ட கவிதை மிகவும் அழகு...
காதலால் கசிந்துருகும் ஒரு பெண்ணின் மனதை
கண்ணாடி போல காட்டுகிறது...

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

தனிமரம் அன்று! தமிழ்மரம் என்பேன்!
கனிமரம் என்பேன் கணித்தே - இனியவனே!
தந்த பதிவால் தழைக்கும் இனப்பற்று!
சந்தக் கவிஞனின் வாழ்த்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை அழகு...

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

Visit : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_2.html

செங்கோவி said...

சமாதானத் தேவதை சாகடிக்கப்பட்டதை நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

Yoga.S. said...

பகல் வணக்கம்,நேசன்!நலமா?///ஆரம்பத்தில் யதார்த்தம் உரைத்து 'விழியில் வலி' தந்த விதம் அருமை!

அம்பலத்தார் said...

சமாதானத்தின் மரணம் உங்க பதிவில் அப்படியே அம்மணமாக தெரிகிறது. உண்மை சொல்லும் உங்க வரிகளுக்கு தலைவணங்குகிறேன் நேசன்.

தனிமரம் said...

இனிய வணக்கம் நேசன்...
நலமா??
நீண்ட நாட்களுக்குப் பின்னர்
தனிமரத்தின் பசுமையான
நிழலில் ஒதுங்கி இளைப்பாற வந்தேன்...

1 March 2013 15:28 //வாங்க மகி அண்ணா நான் நலம் வாங்க முதலில் ஒரு பால்க்கோப்பி குடிப்போம்!

தனிமரம் said...

உங்கள் பதிவுகளில் யதார்த்தம் மிகவும் அப்பட்டமாக இருக்கும்...
நடந்த சம்பவங்கள் தான் வரலாறு என்று உரைக்கும்
பதிவுகள் உங்களது..
இதோ மீண்டும் நிரூபிக்கிறீர்கள்...

1 March 2013 15:28 //ம்ம் இன்றைய நிகழ்வுகள் நாளைய சரித்திரம் என்பதை அறிந்த சிறுபிள்ளைத்தனம் தான் என் தொடர்கள் அண்ணா!

தனிமரம் said...

இறுதியில் பதிவிட்ட கவிதை மிகவும் அழகு...
காதலால் கசிந்துருகும் ஒரு பெண்ணின் மனதை
கண்ணாடி போல காட்டுகிறது...

1 March 2013 15:29 //ம்ம் நன்றி மகி அண்ணா வருகைக்கும், கருத்துரைக்கும் பாராட்டுக்கும்!

தனிமரம் said...

வணக்கம்!

தனிமரம் அன்று! தமிழ்மரம் என்பேன்!
கனிமரம் என்பேன் கணித்தே - இனியவனே!
தந்த பதிவால் தழைக்கும் இனப்பற்று!
சந்தக் கவிஞனின் வாழ்த்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு

1 March 2013 16:33//வந்தனம் ஐயனே!பாரதிதாசன் யான் பாமரன் தனிமரம் தந்தவை எல்லாம் சருகுகான் புற்றில் போகும் இலைகள் இதுவும் கடவோம் தங்களின் ஆசியினால் பர்னசாலை பெருக்கும் விளப்பம் போல!ம்ம் நன்றி கவிப்புலவனே வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

கவிதை அழகு...

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

Visit : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_2.html

1 March 2013 18:19 //வருகைக்கு நன்றி தனபாலன் சார்! வாழ்த்துக்கும் முதலில் விடயத்தை பகிர்ந்ததுக்கும் நன்றி சார்!

தனிமரம் said...

சமாதானத் தேவதை சாகடிக்கப்பட்டதை நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.//நன்றி செங்கோவி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

பகல் வணக்கம்,நேசன்!நலமா?///ஆரம்பத்தில் யதார்த்தம் உரைத்து 'விழியில் வலி' தந்த விதம் அருமை!

2 March 2013 03:52 //வணக்கம் யோகா ஐயா நான் நலமே!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

சமாதானத்தின் மரணம் உங்க பதிவில் அப்படியே அம்மணமாக தெரிகிறது. உண்மை சொல்லும் உங்க வரிகளுக்கு தலைவணங்குகிறேன் நேசன்.

2 March 2013 11:06 //வாங்க அம்பலத்தார் ஐயா நலம் தானே!நன்றி உற்சாகமான பின்னுட்டத்துக்கு!