28 June 2013

என் உயிரே எண்ணுள் இருந்து விலகும் நொடி-8


தொழில் தேடி தொலைதூரம் போனவர்களையும்,
தொலைதேசம் ,போனவர்களையும் ,தோன்றும் நேரமெல்லாம்  விரும்பியவர்களுடன்!
விருப்பமாக; புலம்புவதுக்கு ;யாரோ ஒரு புண்ணியவான் கண்டுபிடித்த கருவி !

இன்று விலைகுறைந்த சாதனமாகி வீதியெங்கும் சிரிக்கும் கைத்தொலைபேசியில்!

 நீண்டநாட்களின் பின் தானாகவே மிரூனாவின் அழைப்பு இலக்கைத்தை அழுத்தியவாறே !
அருகில் இருக்கும் சோமபாணத்தை அருந்திக்கொண்டு ;வேலையால் வந்த அலுப்புடன் வந்தமர்ந்தான் சேகர்!


அறையின்  அருகில் இருக்கும் கணனியையும் ,இயங்கவைத்துக்கொண்டு .அப்போது அவன் எடுத்த அழைப்பில் எதிர்முனையில் இருந்து நீங்கள் சுழற்றிய நபரின் அழைப்பினை பூர்த்தி செய்ய முடியாத நிலை !
"தயவு செய்து மீண்டும் சரிபார்த்து சுழற்றவும் என்று சொல்லிக்கொண்டு இருந்தது சிங்களத்திலும், தமிழிலிலும் பின் ஆங்கிலத்திலும் அந்த டயலொக் இணைப்பு"

என்னடா சேகர் சிலோனுக்கு லைன் கிடைக்கவில்லையோ??

இங்கமாதிரி இல்லைத்தானே அஜய்!
 இலங்கைத்தொலைத்தொடர்பில் எத்தனை குளறுபடிகள் தங்க ,தங்க ஆட்களுக்கு முதலில் இணைப்புக்கொடுத்தல் ,கையூட்டல் ,சந்தேகத்தில் ஒட்டுக்கேட்டள் என இந்த தொலைபேசி பரிவர்த்தனை நிலையத்தில் இருக்கும் பல கதைகள் இன்னும் இணையத்தில் வரமறுக்கின்றது !


.இப்ப எல்லாம் அவுட்கோச்சிங்க என்று அலங்கார வார்த்தையின் பின் அழிந்து போகும் அன்றாட  வாழ்க்கை ,அடுத்த நாட்டு மனிதவலுபற்றி எல்லாம் ஆர் மச்சான்  அஜய் ஜோசிக்கின்றான் ,பேசுகின்றான் !

சமதர்மம் பேசும் கட்சிகள் எல்லாம் இனவாதம் பேசுது இதுதான் டிரேண்டாம் !

அதைவிடக்கொடுமை !



தொலைத்தொடர்புத் துறை அமைச்சரே அத்துமீறல் செய்து பத்திரிக்கையில் அடிபட்ட செய்தி எல்லாம் இன்னும் மறக்கமுடியாது நாட்டைவிட்டு அகதியாக ஓடி வந்தாலும் !



உனக்கு இந்த ஓட்டக்கார வீரங்கணி ஞாபகம் இருக்கா ?? அஜய்!!

இவங்களும் ஒரு சாதனிதான்!


கொஞ்சம் இரு மச்சான் தொலைபேசி  அழைப்பு போகின்றது  இப்ப எப்படியும் லைன் கிடைக்கும்,!

அப்ப இன்று அவள் பாடு கந்தல்தான் நான் வெளிய போறன் என்று அகர்ந்து சென்றான்  அஜய்.

அழைப்பில் இருந்த ரிங்டோன் அழகான பாடல் இசைத்தது அதை ரசித்த படியே காத்திருந்த சேகரின் அழைப்பை உள்வாங்கினாள் மிரூனா!!

வரப்போகும் அர்ச்சனைப்பூக்களின் ஆத்திரம் பற்றிய முன் உணர்தள் பற்றிய உண்மை புரியாதவள் எதிர்முணையில் ஹாலே என்ற போதே சேகரின் கையில் இருந்த சோமபாணம் இறங்கியது தொண்டைக்குள்
ஹாலோ மிரூனா நான் சேகர் !

ம்ம்ம் தெரியும்!!

 வெளிநாட்டு அழைப்பு என்றாள் எனக்கு உங்களைத்தவிர யார் இருக்கா அண்ணா !

ஆமா இந்த அண்ணா ,நொண்ணாவுக்கு எல்லாம் குறைச்சல் இல்லை ! 
ஏன்னா எப்போதும் சுடுதண்ணி போலத்தானா !
.
ம்ம் ஆமா எப்படி இருக்கின்றாய்?
ம்ம் இருக்கின்றேன்.
 இன்னும் சாகவில்லைஓ அப்படி ஒரு நினைப்பு வேற இருக்கோ ??வாழ்க்கைஒரு மலையேற்றம் போல ஏறிவிட்டாள் நீ தான் மலைமுகட்டின் முதல் ஆள் !

ஏண்ணா இப்படி எல்லாம் நாம் எதிர்பார்ப்பது எதுவும் நடக்குது இல்லை. எனக்கு மட்டும் தானா ?இல்லை என் போன்ற பெண்களுக்கே இப்படித்தானா??சேகர் அண்ணா!

அட எண்ணாச்சு இப்ப ?

இன்னும் என்ன ஆகணும் ?முன்னர் போல இல்லை பாபு முகம் கொடுத்துப்பேசியே பல நாள் !

எல்லாம் உங்களாள் தான்!

 ஆமா நீங்கதானே என்னை!
ம்ம்

என்னாலா ஹீ ஹீ .நல்ல கதை ஏன் நானா அவனைக்காதலிக்கச் சொன்னே ??நான் தூது வந்தது மட்டும் தான் !


முடிவு நீங்க ரெண்டு பேரும் தானே எடுத்தீங்க!

 அப்பவே சொன்னேனே காதல் என்ற தேரை இழுக்க முன் ஜோசியுங்கோ இந்தத்தேர் சந்தியில் நின்றாள் !ஊர்சிரிக்கும்;உறவு பழிக்கும் ;என்று நான் காதலுக்கு காவடி தூக்கிய ஒரு வழிப்போக்கன் .

ஆனால் தேரில் வரும் தேவி நீ என்றாள் வடம் இழுக்கும் மன்னவன் பாபுதான் .

.ஐயோ அண்ணா நீங்க வார்த்தையில் வித்தை காட்டும் விற்பனையாளு என்று எனக்குத் தெரியும் .சாதரண,புகையிலையையும்  கோடாவில் புகையிலை என்று  சொல்லிக்கொண்டு சிரிச்சுப்பேசும் உங்க பேச்சு என்னிடம் வேண்டாம் !

எங்க சொல்லுக்கேட்காமல் ஏரிக்கரை ஊடகத்துக்குப் போய் இப்ப ஊரைவிட்டு ,நாட்டைவிட்டே .நடுத்தெரிவில் நிற்பது போல நானும் இருக்க விரும்பவில்லை .

மாலையில் டியூட்டி உங்களுக்கு இந்த  பதுளை ஊருக்கு  எப்போதும் வரக்கூடாது என்ற பிடிவாதம் போல எனக்கும் இருக்கு பிடிவாதம் .

நான் போனை வைக்கின்றேன்!
ஒரு நிமிசம் மிரூனா அவன் தொடர்வதுக்கு
முன்னே அவள் தொடர்பைத் தூண்டித்தாள்!


தொடரும் !!

12 comments :

Anonymous said...

aaaaaaaaaaaaa enakku thaan paal kaappi

Anonymous said...

padichinaan anana konjam puriyala muthan mauthalaa enbathalaa ...


inimel thoranthu vara muyarchi pannuven...

தனிமரம் said...

அட வாத்து வாம்மா மின்னலு முதலில் ஒரு பால்க்கோபி குடியுங்கோ:)))

தனிமரம் said...

padichinaan anana konjam puriyala muthan mauthalaa enbathalaa ...


inimel thoranthu vara muyarchi pannuven...
//ஆஹா சரி கலை அப்ப நாம பழையபடி மீண்டும் கும்மி அடிக்க முயற்ச்சிக்கின்றேன் :!:))) !நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் கலை!

தனிமரம் said...

அதிகநேரம் இணையம் வேண்டாம் போய் கண்ணுறங்கு வாத்து காலையில் அண்ணாவுக்கும் வேலை:))))

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்க்கை ஒரு மலையேற்றம் போல...

தொடர்கிறேன்...

Unknown said...

வணக்கம்,நேசன்!நலமா?///புது ஆளுங்க எல்லாம் கமெண்ட் போடுறாங்க?ஹி!ஹி!!ஹீ!!!///தொடர்ந்து வருகிறேன்.கும்மி....................ஹூம்,பார்க்கலாம்!

தனிமரம் said...

தொடர்கிறேன்//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வாழ்க்கை ஒரு மலையேற்றம் போல...

தொடர்கிறேன்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம்,நேசன்!நலமா?///புது ஆளுங்க எல்லாம் கமெண்ட் போடுறாங்க?ஹி!ஹி!!ஹீ!!!///தொடர்ந்து வருகிறேன்.கும்மி....................ஹூம்,பார்க்கலாம்!

29 June 2013 03:05 //வணக்கம் யோகா ஐயா நாம் நலம் தாங்கள் அவ்வண்ணமே என் எண்ணுகின்றேன்.ம்ம் கும்மி நானும் நேரம் ஒதுக்கி ம்ம் பார்க்கலாம்! நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஐயா!

இராய செல்லப்பா said...

படிக்க சுவையாகத்தான் இருக்கிறது. எழுத்துப்பிழைகளைக் கொஞ்சம் கவனியுங்களேன்!