21 June 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-7


என்னிடம் மட்டும் எல்லாம் சொல்ல நினைக்கும் 
என் நண்பனே என்ன தெரியும்?
 என் அகதி நிலை !

எங்கோ போக வெளிக்கிட்டு 
என்னையே தொலைத்தேன் என்று .
எல்லாம் அறிந்தவன் நீ !

என்றாலும் எல்லாவற்றையும் என்னிடம் 
எதிர்பார்ப்பதும்
எனக்கு புரியாத புதிர் 
என்னாள் ஏற்ற முடிந்தது
ஏதிலி என்ற பின்!
என்னால்உன் காதலுக்கு
ஏற்ற முடிந்தது!

எண்ணெய்  தீபம் போல ஒரு வெளிச்சம் தரும் மொழுகைப்  போல !
என் நிலை இதுதான் !

ஏதிலி ஆனபின் 
என்னையே காதலில் கருகும் தீபம் ஆக்கும் என் கதையை என்று அறிவாயோ?? ??

என்ராலும் எடுக்கின்றேன் என் நண்பனுக்கு என்ன ஆச்சோ என்ற தவிப்பில்.

((( சேகர் நாட்குறிப்பில் இருந்து)2009!!

 செவ்வாணம் குளிரைப்போர்க்கும் மாலைப்பொழுது போல  கவர்ச்சி நடிகை இழுத்துப்போர்த்து இனி இப்படித்தான் நடிப்பேன் என்று கண்டிசன் போட்டது போல இந்த இரவையும் எதிர்பார்த்து இரவியும் போய் ஓய்வு எடுத்தான் .இனிய நிம்மதியோடு  பதுளையில்.

அப்போது தவிப்போடு  வெளிநாட்டு அழைப்புக்கு காத்திருந்தான் பாபு . அழைப்பு எடுக்கின்றேன் என்ற சேகர் எத்தனை மணி என்றாலும் நிச்சயம் அழைப்பான் அதன் பின் ஸ்கைப்பில் வருவான் என்ற நம்பிக்கை அவனுக்கு தேர்தலில் நாம் ஜெவிப்போம் என்ற கட்சியினர் நம்பிக்கை போல காத்திருந்தான் பாபு.

 அந்த கொமினிக்கேசன் மூடும் நேரம் நெருங்கிக்கொண்டு இருக்க பாபுவுக்கும் மனதில் தயக்கம் நீண்டுகொண்டே போனது உடரட்டை ரயில் போல !

என்றாலும் உற்ற தோழன் உதவாமல் போக மாட்டான்  என்ற உணர்வோடு காத்திருந்தான் .காலம் எல்லாம் காதல் வாழ்க முரளிபோல "ஒருமணி அடித்தாள் உன் ஞாபகம் நினைப்பில்" அவன் நினைப்பில் காடையர்கள் போல  தீ வைக்காமல் !

பாரிசில் மாலை உணவக வேலைக்கு போக முன்னர் நாரிப்பிடிப்புக்கு ஒத்தடம் போல ஒரு வேலை முடிந்து வந்தாள் ஒரு தூக்கம் போட்டுவிட்டு மறு வேலைக்குப் போகும் இயல்பு கொண்ட சேகர்.

 கைபேசியில் அழைப்பு எடுத்தான் பாபுவுக்கு.
 என்னடா மச்சான் ?என்னாச்சு ?
குணால் மெசேச் போட்டான் !

நீ கொஞ்சம் குழம்பிப்போய் இருப்பதாக  .ஒரு கட்சியில் இருந்து மறு கட்சி மாறும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களபோல என்று .

அதனால் தான் நீ உடனே பேசணும் என்ற போதும்அதிகாலை வேலைக்குப் போகும் அவசரத்தில் இணையத்தின் ஊடே முகம் காட்டவில்லை .
சாரிடா பாபு!

சொல்லு என்ன பிரச்சனை ?
நான் என்ன சொல்ல ?மிரூனா என்கூடப் பேசி ஒரு வாரம் ஆகுது !
டெலிபோன் எடுத்தா பேசுறதில்லை நேரில் போனா டியூட்டி டியூட்டி என்று விலகிப்போறா .என்ன செய்யிறது என்று புரியல மச்சான்!

 மனசு எல்லாம் ஒரே குழப்பம் !

அதுதான் உன்னோடு பேசுறன் இன்று எனக்கு நட்புக்கா நீதானே ! 

என்னடா நீ இப்ப்டி அரசியலில் இறங்கின வடிவேலு போல !

ஏன் மிரூனாவுக்கு பிடிக்காத விசயம் ஏதாவது செய்தீயா மச்சான் ?
இல்லடா !
ம்ம் 

ஆமா நீ எப்படிடா  இருக்கின்றாய் பாரிசில்?
என்ன கத ??சேகர்!

நானா ?நல்லா இருக்கின்றேன் !சந்தோஸமாக ,சுபீட்சமாக ,அமைதியாக ,ஆனந்ததமாக  ,குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்திக்கண்ணா என்று  இருக்கின்றேன் என்று சொல்ல இன்னும். ஆசைதான்! ஆனாலும் இன்னும் எதுவும் நல்ல .தகவல் இல்லை மச்சி!

ஓ அப்படியா!
ம்ம்!

நீ கொஞ்சம் மிரூனாவோட பேசு மச்சான் பிளீஸ்டா!

பாபு உனக்குத் தெரியாத விடயம் இல்லை நான் விரதம் தொடங்க இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு.
கார்த்திகை முதல் வர இன்னும் இரண்டுநாள் இருக்கு இல்ல!

 ஆமா !!

நீ சாமி ஆகமுன் என் நண்பனாக பேசு சேகர்!

ஆமா உதவிக்கு வரலாமா  என்றாள் அது எப்போதும் மிரூனாவுக்காகத்தான் !
ம்ம் நிச்சயம் நான் பேசுறன் பாபு நாளைக்கு மிரூனாவுடன்!

ஆமா ஒரு வாரம் ஒரு காதலி பேசாமல் இருக்கின்றாள் என்றாள் ஏதோ ஊடல் என்று படித்து இருக்கின்றேன் கவிதை.! நீ இன்னும் பாழான புத்தகம்  வாசிக்கும் விசயத்தை கைவிடலையா!\
ஹீஈஈஈ!
இப்ப நான்  சுதந்திரமாக கட்டுப்பாடு இல்லாத இணையத்தில் பலதை ப்படிக்கின்றேன் மச்சான்!
ம்ம்ம்! ஆமா பாபு!

அப்படி என்ன தான் செய்தாய் நீ ?மிரூனாவுக்கு கோபம் வர

நான் ஒன்றும் செய்யல சேகர் .
அதுதான் எனக்கும் புரியல மச்சான்!

என்கிட்டயே மறைக்கின்றாயா ?
என்னடா நீயும் என்னைப்புரிஞ்சுக்க மாட்டியா ???

ஹீ ஹீ உன்னை நான் புரிஞ்சளவுக்கு வேற யார் இருக்கின்றாங்க சொல்லு பார்ப்போம் பாபு!ஒரு படித்த மனிதன் இல்லை பண்பான மிருகம் ,ஒரு கீறல் விழுந்த மரம் சரி காட்டு!


 தொடரும்!!

8 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

/// ஒரு வெளிச்சம் தரும் மெழுகைப் போல... ///

வேதனை புரிகிறது... தொடருங்கள்...

Unknown said...

காதல் என்றாலே ஊடல் வர வேண்டுமாம்!எழுதாத விதி!!!ஹ!ஹ!!ஹா!!!

MANO நாஞ்சில் மனோ said...

செவ்வாணம் குளிரைப்போர்க்கும் மாலைப்பொழுது போல கவர்ச்சி நடிகை இழுத்துப்போர்த்து இனி இப்படித்தான் நடிப்பேன் என்று கண்டிசன் போட்டது போல//

இதையெல்லாம் எங்கே இருந்துய்யா கண்டுபிடிக்கிறீங்க சிரிச்சு முடியல...

கவிதைகள் மனதின் ரணம்.

K said...

அண்ணா - இது 7 வது அங்கம் வரை வந்துவிட்டது. தொடக்கத்தில் இருந்து படித்துவிட்டு, முழுமையக கருத்துச் சொல்கிறேன்!!

தனிமரம் said...

ஒரு வெளிச்சம் தரும் மெழுகைப் போல... ///

வேதனை புரிகிறது... தொடருங்கள்...

21 June 2013 18:54 //வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காதல் என்றாலே ஊடல் வர வேண்டுமாம்!எழுதாத விதி!!!ஹ!ஹ!!ஹா!!!

21 June 2013 22:20 // ஆஹா அப்படியா யோகா ஐயா நான் அறியேன்!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

செவ்வாணம் குளிரைப்போர்க்கும் மாலைப்பொழுது போல கவர்ச்சி நடிகை இழுத்துப்போர்த்து இனி இப்படித்தான் நடிப்பேன் என்று கண்டிசன் போட்டது போல//

இதையெல்லாம் எங்கே இருந்துய்யா கண்டுபிடிக்கிறீங்க சிரிச்சு முடியல..//ம்ம் அது ஏதோ தோன்றுது அண்ணாச்சி!ம்ம்.

கவிதைகள் மனதின் ரணம்.!ம்ம் அது காலத்தின் வலி!ம்ம் சிந்த்னையும் கூட்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

22 June 2013 08:54

தனிமரம் said...

அண்ணா - இது 7 வது அங்கம் வரை வந்துவிட்டது. தொடக்கத்தில் இருந்து படித்துவிட்டு, முழுமையக கருத்துச் சொல்கிறேன்!!

22 June 2013 23:19 //ம்ம் நன்றி மனீமனீ வருகைக்கும் கருத்துரைக்கும் !