பிடிவாதம் தளர்ந்து போகுமோ பாசத்தில்
பிடித்தவர்கள் முன் பிள்ளைபோல இவன்
பிழையில்லாதவன் என்று
பிள்ளைப்பருவத்தில் தத்து எடுத்தவர்கள் தெரிந்து கொள்வார்களா?
பிடித்த தன் காதலையும் தொலைத்து
பின் உருகிய கதையும் கண்டு
பின்னும் கலங்குவார்களோ??
பிறவி நீத்தலிலும் இந்த
பூமியில் இவன் வருவானோ?
பிடிவாதக்காரன் அவன் உதவாக்கரை என்றாலும் அவன்
பிடியிருக்கு இன்னும் இந்த ஊர் உறவுகளிடம் அவனுக்கு சிலர்
பிடிக்காவிட்டாலும் பிடிக்கும் இந்த துங்கிந்த பாயும்
(சேகர் நாட்குறிப்பில் இருந்து)
அவன் தான் இங்க வரமாட்டானே ?நிஜம் தான் குணால் ஆனாலும் தலைவன் நேரில் வரமுடியாவிட்டாலும் தம்பி ஒரு பாதாணியுடன் எல்லையில் ஆட்சி செய்த வரலாறு நீ மறந்தாலும் நான் மறக்கவில்லை .
சேகருக்கு என் நிலை அத்தனையும் அறிவான் நான் இதுவரை என் காதலில் எதுவும் சொல்லாமல் மறைத்தது இல்லை மச்சான் .
குணால் உன்னிடம் பேசமுடியாத பலவிடயங்கள் அவனிடம் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கின்றேன் .
பல செய்திகளுக்கு அவன் வாழும் சாட்சி என்ன இந்த நாட்டுக்கு வரமாட்டான் என்று தான் நான் நினைக்கின்றேன் .
அவன் பிடிவாதம் நன்கு அறிந்தவன் என்றபடியால் ஆனால் வந்தாலும் இங்கு வருவது சந்தேகம் வர .
ஆமா நீ எங்க இந்த நேரம் ?
ஆ நானோ ?
நீ செத்துடுவன் என்று உன் யாசசகமான நண்பன் சேகருக்கு சொன்னீயா ?
அதுதான் அவன் என்னை காலங்காத்தாலேயே அலைய விட்டிருக்கின்றான் !
"நீ தூக்கில் தொங்கின்றாயோ ?இல்லை டமரோன் குடிக்கின்றாயோ ?இல்லை இந்த தெய்யனாவ ஆற்றில் குதிக்கின்றாயோ ?
என்று பார்த்து வரச்சொன்னான்!
போடாங் நாதாரி .
பக்கத்தில் இருக்கும் எங்களை மறந்துட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் உதவாக்கரை நண்பன் உனக்கு உதவ முடியுமா ??
அப்படி என்ன தான் பிரச்சனை உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை குணால் நீ போ உன் வேலையைப்பாரு ஆனால் நான் சாகும் அளவுக்கு கோளையில்லை!
சரி அழாத வா சல்காது ஓட்டலில் மாலுப்பாணும் டீயும் குடிப்பம் இப்ப பாண் விலைகூடினாலும் இன்னும் அந்த பால்யகால ஞாபகம் இதயக்கனி போல இருக்கு இல்லடா குணால் எனக்கு இப்ப டீகுடிக்கும் மூட் இல்லை !
ஏன் காலங்காதலேயே ஒரு சொட் போட்டுவிட்டியோ ?
போடா இப்ப எல்லாம் குடிப்பதுகூட குறைந்துவிட்டது எல்லா நண்பர்களும் இருக்கும் இடங்களே தெரியாதநிலை சரி வா நான் பில்கொடுக்கின்றன் பாபு .
என்னடா நான் காசு இல்லை என்றா சொன்னேன் குணால் ?
நட்புக்குள் என்ன கணக்கு என்னிடம் இருக்கும் போது நான் கொடுக்கின்றேன் உன்னிடம் இருக்கும் போது நீ கொடுக்கின்றாய் !நட்பைப் புரிந்து கொள்வது தான் முக்கியம் மச்சான்!
ஆமா சேகருக்கு மட்டும் எப்படிடா நீ இப்படி ஆத்ம நண்பன் ஆனாய் நீ அவனுக்கு இந்த நாட்டைவிட்டுப்போனாலும் உன் குடும்பத்தில் மட்டும் இருக்கும் அக்கரையை என்னால் புரிஞ்சுக்க முடியல!
உனக்கு மட்டும் அவன் எப்படி எல்லாம் இருக்கின்றான் என்று போட்டோ எல்லாம் அனுப்புகின்றான் .
எங்களுக்கு ஒரு தகவலும் அனுப்புகின்றான் இல்லையே இப்படியா நாம் முன்பு பழகினோம்! உண்மைதான் மச்சான் ஆனால் வெளிநாட்டு வாழ்க்கை வேற உலகம் அது சொன்னால் புரியாது நாம் தமிழ் ஹிந்தி படத்தில் பார்க்கும் போல ஆடம்பரம் இல்லை !அதன் பின்னே இருக்கும் வெளிநாட்டு அழுக்கு சாதாரன வாசிப்புக்கு கமடியாக இருந்தாலும் உள்வாங்கி வாசித்தால் புரியும் அதன் பின் எல்லாம் இருக்கும் காதல் வலி ! அது எல்லாம் நமக்கு ஹில்மா ?ஹிட்சா ?என்னதெரியும் ?
மகேல ஜெயவர்த்தன வெண்டானா ,அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ,அடுத்த கனவுக்கன்னி யார் என்று தானே நம் வாழ்க்கை??!ம்ம் ஆனால் சேகர் வேதனை மிரூனா போல நாம் யாரும் அறிய மாட்டோம் ஏன் நான் கூட!
அந்தளவுக்கு சிரிப்பில் அவன் ஒரு மகா நடிகன்! ம்ம்ம்
தொடரும்!!!!
மகேல ஜெயவர்த்தன வெண்டானா ,அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ,அடுத்த கனவுக்கன்னி யார் என்று தானே நம் வாழ்க்கை??!ம்ம் ஆனால் சேகர் வேதனை மிரூனா போல நாம் யாரும் அறிய மாட்டோம் ஏன் நான் கூட!
அந்தளவுக்கு சிரிப்பில் அவன் ஒரு மகா நடிகன்! ம்ம்ம்
தொடரும்!!!!
8 comments :
தொடர்கிறேன்
நட்பைப் புரிந்து கொள்வது தான் முக்கியம்... தொடர வாழ்த்துக்கள்...
காலை வணக்கம்,நேசன்!///ம்.......அன்புக்கு ஏது அடைக்கும் தாள்?தொடர்கிறேன்.
ஆஹா தொடர் பதிவும் கவிதையாக ஆரம்பிச்சாச்சோ சூப்பர்.
சிரிப்பு வருது.. சோங் நன்றாக இருக்கு.
தொடர்கிறேன்//ம்ம் வாங்க கரந்தை ஐயா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில்!!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
நட்பைப் புரிந்து கொள்வது தான் முக்கியம்... தொடர வாழ்த்துக்கள்...
10 June 2013 19:24 //நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்!!
காலை வணக்கம்,நேசன்!///ம்.......அன்புக்கு ஏது அடைக்கும் தாள்?தொடர்கிறேன்.
10 June 2013 22:45 //வணக்கம் யோகா ஐயா நாம் நலம்!!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
ஆஹா தொடர் பதிவும் கவிதையாக ஆரம்பிச்சாச்சோ சூப்பர்.
சிரிப்பு வருது.. சோங் நன்றாக இருக்கு.
11 June 2013 06:12 //வாங்க அதிரா நலமா!கவிதை போடு என்று என் நண்பன் சொல்லிவிட்டானா!ஹீ அதுதான்!ம்ம் !நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment