16 June 2013

உனக்கு புரியுமா!!!!!!!!!!!!!!!

உனக்கு என  இதயத்தில் ஒரு
உருக்கமாக  உதிர்த்தது
உண்மையாக ஒரு காதல் ரோஜா!
உன்னிடம் உள்ளன்போடு
உதிர்க்க உன்னை நினைத்து
உன்னை யாசித்து உன்னை எனக்கு
உரியவள்  என்று உன்னிடம் வந்தேன்!!


உன் தாயிடம் உன் குறிப்பு கேட்டு
உனக்கும் ஆசை என் மேல் என்று
உந்தன் பாட்டி சொன்னா!
உண்மையில் ஒரு கோயிலில்

உன் படிப்பு  உயர் படிப்பாம்
உன்னக்கா உதவாக்கரை
உண்மையில் காத்திருந்தேன்
உன் முடிவு  கேட்டு!உன்முன்னே  !!
உதிர்ந்தது காதல் ரோஜா!!
உனக்கு தெரியுமா அதன் உண்மை ஆயுள்
உன்முன்னே உதிரும் உதவாக்கரை இல்லை
உண்மையில் அவன் இப்போது !
உற்ற தோழியான உன் கதை அறிந்த
உத்தமி் முன்னே உடன் பாடுகின்றேன்
ஊர்  அறிய ஒரு பாட்டு உனக்கு புரியாத!
உன் நாட்டு மொழியில்!!!


6 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Seeni said...

ada..

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை அய்யா

Unknown said...

வணக்கம்,நேசன்!நலமா?///அருமை.உ வரிசையில்..!பாராட்டுக்கள்!!!!

K said...

ஹாய் நேசன் அண்ணா, கவிதை கலக்கல்!

உன் தாயிடம் உன் குறிப்பு கேட்டு
உனக்கும் ஆசை என் மேல் என்று
உந்தன் பாட்டி சொன்னா!///

பாருங்க ச்சும்மா பொழுது போகலைன்னு அந்த பாட்டி உங்கள உசுப்பேத்திவிட்டிருக்கா :))

reverienreality said...

நலமா நேசரே?

கவிதையில் உ காதல்...

தொடரட்டும் நேசரே...