04 June 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-5


கவிதை ,மற்றும் காட்சிப்படம் தந்த அன்புத்தோழி காற்றில் என் கீதம் பதிவாளினி அவர்களுக்கு  என்றும் நன்றிகளுடன் பதிவுலகில் படிக்காதவன் 
நேசன் !

இனி  தொடருக்குள்!!

.////////////////////////////////////////////////////



                 
எதிர்பார நேரத்தில் ,எதிரில் வரும் சில முகத்தை எங்கேயோ ?எப்போதோ ??பார்த்த உருவம் போல இருப்பது பிரம்மையா ?இல்லை .உண்மையில் பார்த்த முகம் தானா ?என்று அருகில் வந்த பின் தான் தீர்மானிக்க முடியும். அதுவும் தெரிந்தவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் பின் நேரில் சந்திக்கும் போது நெஞ்சிலும், முகத்திலும் ஓடும் நினைவு ரேகைகள் என்ன சொல்லும் .என்பதை பலரும் பல வியாக்கியாணம் சொல்வார்கள் அது போலத்தான் !

 பதுளையின் மணிக்கூட்டு வீதியில் வந்து முடியும் சவுத் லேன் என்று சொல்லப்படும் தெற்கு வீதிக்கு எதிரில் இருக்கும் அந்த கெமினிக்கேசன் நோக்கி குணா வந்து கொண்டு இருக்கும் போதே ?அவன் வருவதை எதிரில் கவனிக்காத அந்தக்கால அப்பாஸ் போல தலைவாரிய  அந்த உருவம் குணாவை கவனிக்காது தன்  கழுத்தில் இருக்கும் கழுத்துப்பட்டியை சரி செய்த வண்ணம் கொமினிக்கேசன் நோக்கி வரவும் ,அப்போது நேரம் என்ன என்று மணிக்கூட்டுக் கோபுரத்தை வானவில்லைப் பார்ப்பது போல திரும்பிப் பார்த்த பாபுவின் விழிகளிலும் விழுந்தான் முகுந்தன்!!

யார் யாரை ஏன் இப்படி சந்திக்கும் சூழல் வரும் என்று யாரும் திட்டமிட்டு வந்த கட்சியின் எழுச்சி மாநாடு போல இல்லை அந்த இடம் .

சேகருக்கு அழைப்பு எடுக்க வந்த பாபு ஒரு புறம் என்றால் ,சேகரின் கைபேசி  அழைப்புக்கு மதிப்புக்கொடுத்து ஆட்டோவில் அங்கு வந்த குணா இன்னொரு புறம் என்றால் ,முகுந்தன் இவர்களுக்கு பள்ளிக்கூட அந்திம காலத்தில் ஏற்பட்ட முரண்பாட்டில் கூட இருந்து எதிலும் கலந்துகொள்ளத நிலையில் பலரால் எதிரியாகவும் ஒரு சிலர் இன்னும் தப்பாக எண்ணும் நிலையிலும் !


முன்னர் பள்ளி நண்பர் என்ற ஒரே கட்சியின் உறுப்பினர்களான முகுந்தனும் வந்தது எதிர்பாராமல் கிடைத்த தேசியவிருது போல ஆச்சரியம் தான் குணாவுக்கும் பாபுவுக்கும் .!

என்றாலும் முகுந்தன் இப்போது இந்த ஊரில் ஒரு பல்தேசியக்கம்பனிக்கு விற்பனைப்பிரதிநியாக பதுளை தொடக்கம் பண்டாரவளை வரைக்கும் பணியில் இருக்கும் ஒரு விற்பனைப்பிரதிநிதி .

கொழும்பில் இருக்கும் தலைமைக்காரியாலயத்துக்கு தன் மாதாந்த விற்பனை வரவு செலவு கணக்கினை பாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைத்துக்  கொண்டு வரும் போது இவர்களை அந்த காலை நேரத்தில் நேர காணுவன் என்று முகுந்தனும் முன்நினைக்கவில்லை !

பள்ளியில் ஒன்றாக பின் வாங்கில் இருந்தாலும் ,ஒரு தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் போலத்தான் !
இந்த தேசிய கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்ற வட்டத்துக்குள் இருந்தாலும் ,முறையான நட்பு தொலைந்து பல வருடங்களின் பின் நேரில் காணும் போது .நலம் விசாரிக்க நினைத்தாலும் இன்னும் முள்ளாக கடந்த கால நினைவுகள் வந்து தீ மூட்டும் நிலையில் முகுந்தனும் முகம் பார்க்காமல் அந்த கொமினிக்கேசன் உள்ளே நுழைந்தான் .

வெளிவாசலில் இருந்து அவன் போவதைப்பார்த்துக்கொண்டு இருந்த குணாவும் ,பாபுவும் தங்களுக்குள் நினைத்துக்கொண்டார்கள் .

"படிக்கும் காலத்தில் தேவையில்லாத நட்புகள் என்று பலரைக் கடந்து போனவன் இப்ப தனியார்துறையில் இப்படி இருக்கின்றானே   ?"


என்னமச்சான் திடீர் என்று பதுளைப்பக்கம் நீ வந்தே 5 வருசம் ஆச்சே  பாபு!

இப்ப கொழும்பு வாசிபோல கெட்டப்பு  மாறினாலும் இன்னும் உனக்கு நம் ஊர் ஞாபகம் இருக்கின்றதோ???


மீண்டும் 

விரைந்தோடும் வாகனத்தோடு
பின்னோடும் மரங்களூடு
மீண்டும் ஊருக்கே ஓடிப்போய்  விடுகிறது 
மனம்...

என்று கதை கொடுத்தான் குணால் !என்னாச்சு ஒரு போன் இல்லை ,ஏன் கொழும்பில் ஏதாவது  செக்கிங் பிரச்சனையா ?? 

இல்லை மச்சான் .
உனக்கு புரியாது! உன்னால் இதை சோல்பண்ண முடியாது .
இதைச் சரிசெய்யக்கூடியவன் சேகர் மட்டும் தான் .


தொடரும்.....

10 comments :

கவியாழி said...

நட்பும் தொடரட்டும் உங்கள் கதையும் தொடரட்டும்..

கரந்தை ஜெயக்குமார் said...

அடுத்தப் பதிவிற்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றேன். என்னவாயிற்று நட்பிற்கு

திண்டுக்கல் தனபாலன் said...

/// ஒரு தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் போலத்தான் ! /// சூப்பர்...

ஆவலுடன்...

Unknown said...

ஹூம்,ஆண்டுகள் கடந்தாலும் பகை/பழி..........................தொடரட்டும்,தொடர்வோம்!!

வெற்றிவேல் said...

கதை தொடரட்டும்...

தனிமரம் said...

நட்பும் தொடரட்டும் உங்கள் கதையும் தொடரட்டும்..//நன்றி கவியாழி சார் முதல் வருகைக்கும் முதல் காப்பிக்கும் பின் முதல் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அடுத்தப் பதிவிற்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றேன். என்னவாயிற்று நட்பிற்கு

4 June 2013 18:00 //நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

ரு தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் போலத்தான் ! /// சூப்பர்...

ஆவலுடன்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஹூம்,ஆண்டுகள் கடந்தாலும் பகை/பழி..........................தொடரட்டும்,தொடர்வோம்!!

4 June 2013 23:13 //நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

கதை தொடரட்டும்...

5 June 2013 10:29 //நன்றி இரவின் புன்னைகை வருகைக்கும் கருத்துரைக்கும்.