12 February 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -2

கைபேசிக்கு ரிங்டோன் கண்டுபிடித்தவன் எவனோ நான் அறியேன்! அவன் கண்டுபிடிப்பு விசித்திரமானது .அதுவும் சினிமா பாடல்களை ரிங்டோனாக சேர்த்து இருக்கும் பாவனையாளர்கள் பலவாறு சிந்திப்பது இல்லை.


 மறுமுனையில் இருந்து அழைபபவர் எப்படியான சூழ்நிலையில் இருந்து தொடர்பை தொடர்கின்றார் என்று யார் அறிவார்?, மரண துக்கத்தைப் பகிரும் அழைப்புக்கு "வாடி வாடி கியூட் பொண்டாட்டி நான் நீ இல்லாமல் தூங்கமாட்டேன் " என்றும் ; "டாடி மம்மி வீட்டில் இல்லை,"கலியாணம்தான் கட்டிக்கிட்டு ஒடிப்போலாமா ? "  வை திஸ்கொல்வெறி  ?கொல வெறி ?என்று இசைச்செருகளை கேட்கும் போது எப்படி இருக்கும்? எதிரில் இருந்து அழைத்தவன் மனநிலை.


 இது எல்லாம் யார் சிந்திக்கின்றோம்!  நவீன உலகில் நாம்படும் பாடு  எல்லாம் ஆடம்பரத்திற்கா?  உடலின் இன்னொரு மாதொருபாகன் போல கைபேசிக்கு  அடிமையாகி நவீன ஆடம்பர உலகிற்குள் ஆட்பட்டுவிட்டோம் என்பதா??

"எந்த மலை சேவித்தாலும் தங்க மலை வைபோகம் எங்கயும் நான் கண்டதில்லை என்று ஆன்மீகத்தில் சரண்  புகும் பீடத்தில் கூட மற்றவர்களுக்கும் மனம் உருகி பிரார்த்தனை செய்ய வழிவிட அகன்ற கொட்டை எழுத்தில் அறங்காவலர் சபையின் அறிவிப்பனா ஆலயங்களில் கைபேசியின் செயலைத் தவிருங்கள் என்பதை நாம் கவனிப்பது இல்லை.

  பரமபிதாவை வேண்டி பிரார்த்திக்கும் பீடங்களில் எல்லாம் கைபேசியில் படம்பிடிப்பதும் ஆலய அமைதியை  சீர்கெடுப்பதுவுமே நம் சித்த வேலைகள் சீடர் என்ற போர்வையில் சிக்கிய ரஞ்சிதா போல.

சித்தர்கள் வாழ்ந்த பூமியில் சித்தாந்தம் எல்லாம் சந்திசிரிக்கின்றது  நிந்தியானந்தா காஞ்சிபீடாதிபதி செயல்கள்  எல்லாம் 100 வது நாள் வெற்றிவிழா என்ற சினிமாப்படம்போல.

 நம் ஆலயங்களில் வழிகாட்டவேண்டிய  அந்தணர்கள் கூட அமைதியைக் கெடுக்கும் வண்ணம் இந்த ரிங்டோனில் "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் " என்று நவீன மீள்கலவை பாடல் போட்டு பக்தர்களுக்கு சிந்தனையை சீர்குலைக்கும் செயல் கூடாது


. உண்மையான ஐய்யப்பன் பக்தன்  நெஞ்சுருகி சிந்தையை பரமார்த்தா மீது வைக்கும் போது !



பாசம் தடுப்பது போல ரிங்டோன் சிந்தனையை இடைஞ்சல் செய்யும் நிலையை குருநாதர் அடிக்கடி சபையில் கண்டித்துச் சொல்லுவதால் தான் ஆலயத்துக்கு நுழையும் முன்னர் கைபேசியை அணைத்து வைத்துவிடுவது பரதனின் இயல்பு  .


 பூசை குறித்த நேரத்தில் ஆன்மீகம் முக்கியம்  பரம்பொருளின் முன் நாம் எல்லாம் அற்பர்கள் .அவன் இன்றி உலகில் ஒரு அணுவும் அசையாது என்பது அன்றோர் வாக்கு. கைபேசி அணைக்க  முன் ஈசனுக்கு வாழ்த்துச் சொல்ல அழைத்தபோது அவன் கைபேசியில் ஒலித்தது இந்தப்பாடல்.?

இன்னும் தவிக்கின்றேன்.......
இதன் அறிமுகம் இங்கே-http://www.thanimaram.org/2014/02/blog-post_6.html

8 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

பல சமயங்களில் முகம் சுளிக்க வைக்கிறது...! அவர்களுக்கும் தர்ம சங்கடம்... தேவையே இல்லை...

Unknown said...

வணக்கம்,நேசரே!நலமா?///என்ன செய்ய?இன்னும் கொஞ்ச நாளில்,அந்தணர்கள்/பூசாரிகள்/ஐயர்மார் கைப் பேசியில் மந்திரத்தை(!)பதிவு செய்து,கையால் தீபாராதனை காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

MANO நாஞ்சில் மனோ said...

அய்யா இங்கே பங்காளி [[பங்களாதேஷ்]] களுக்கு போன் பண்ணிட்டு நான் படுற அவஸ்த்தை இருக்கே, தாங்க முடியல பாஷையும் புரியல போங்க...!

அம்பாளடியாள் said...

சிந்திக்க வேண்டிய சிறப்பான செய்திகளை மிக நுட்பமாக தங்களின்
கதையில் வெளிக்காட்டி உள்ளீர்கள் சகோதரா .இடத்துக்கு இடம்
சூழ் நிலைகள் மாறு படும் ஆதலால் கை பேசி அழைப்பினால் வரும்
மனக் கஸ்ரங்களைத் தவிர்க்கும் வகையில் அழைப்பின் ஒலியை
மாற்றல் நன்றே ! அருமையான கதையின் தொடர் மேலும் சிறப்பாகத்
தொடர வாழ்த்துக்கள் சகோதரா .

தனிமரம் said...

பல சமயங்களில் முகம் சுளிக்க வைக்கிறது...! அவர்களுக்கும் தர்ம சங்கடம்... தேவையே இல்லை..//வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம்,நேசரே!நலமா?///என்ன செய்ய?இன்னும் கொஞ்ச நாளில்,அந்தணர்கள்/பூசாரிகள்/ஐயர்மார் கைப் பேசியில் மந்திரத்தை(!)பதிவு செய்து,கையால் தீபாராதனை காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!//வணக்கம் யோகா ஐயா நலம் .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அய்யா இங்கே பங்காளி [[பங்களாதேஷ்]] களுக்கு போன் பண்ணிட்டு நான் படுற அவஸ்த்தை இருக்கே, தாங்க முடியல பாஷையும் புரியல போங்க...//நன்றி நாஞ்சில் மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சிந்திக்க வேண்டிய சிறப்பான செய்திகளை மிக நுட்பமாக தங்களின்
கதையில் வெளிக்காட்டி உள்ளீர்கள் சகோதரா .இடத்துக்கு இடம்
சூழ் நிலைகள் மாறு படும் ஆதலால் கை பேசி அழைப்பினால் வரும்
மனக் கஸ்ரங்களைத் தவிர்க்கும் வகையில் அழைப்பின் ஒலியை
மாற்றல் நன்றே ! அருமையான கதையின் தொடர் மேலும் சிறப்பாகத்
தொடர வாழ்த்துக்கள் சகோதரா .//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.