15 February 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்.--3

தொலை  தூரத்துக்குப் போனவர்கள் எல்லாம் சன்நியாசி போலவும் தொலைந்து போனவர்கள் என்று எண்ணுவதும் எங்கனம் ?

பிழைப்புக்கா வெளிநாட்டு வேலை வாய்ப்புக்குப் போன  நட்புக்களிடம் நாகரிகமாகப்பேசி கொஞ்சம் காசு அனுப்பு  பிறகு தருகின்றேன் என்று பணம் பறிக்கும் நட்புக்கள் பலரில் இன்று பிறந்த தேசத்தில் கூடப்பிறந்தவர்களின் நன்மை தீமை பற்றி  ஒரு தகவலும் சொல்லாதவர்களுக்கு அன்நியன் பட கருட புராணத்தின்  படி என்ன தீர்ப்புக்கொடுப்பது??


வெளிநாடு வந்தபின் தான் வாழ்க்கையின் பிரதான பாடங்களை  பலருக்கு பல உறவுகள் படிப்பிக்கின்றது .கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் போல இங்க வந்த பின் தான் .


நானும் குருவிற்கு முதல் சீடன் போல முன்னிற்பது  நம் நாட்டில் பலரில் ஒருவன் இங்குதான் அனுபவத்தில் முத்தவன் என்று அருகில் வைத்து இருக்கும் குருசாமியைபற்றியும் ,குருசாமியின் உயர்ந்த பண்பினை பக்கத்தில் இருந்து பார்த்துப்புரிய வேண்டும் மார்க்ரீச அரசியல் தத்துவம் போல எல்லோருக்கும் சமத்துவம் என்றாலும் குருவே எல்லாத்தையும் தாங்க வேண்டும் நாம் சாரீரத்தை சுகமாகம் வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படி பரம்பொருளின் மூலத்தை அறிவது ?

குருவும் ஒரு மனிதர்தானே அவருக்கு மட்டும் என்ன உடல் இயந்திரமா ? உடன் இருந்து அவரின் வழிகாட்டுதல் கிடைக்கும் போது அதனைப் புரிந்துப்செயல் படுவதால் பரதனுக்கும் குருவுற்கும் குருசிஸ்யன் போல உறவுநிலை. .

ஆன்மீகத்திலும் அரசியல் போல தூற்றுதலும் , கட்சி மாறுதலும் ,நீக்கமற நிறைந்து இருக்கும் பல சேவா சங்கம் பற்றி இந்த ஐய்யப்ப சங்கம் அறியும் .

போட்டியும், பொறாமையும் ,ஆன்மீகத்தில் அடியோடு வேர் அறுக்கவேண்டிய பாழ்வினை.

பலர் அறியாது ஆடும் ஆட்டம் எல்லாத்தையும் அந்த ஆண்டவன் அடக்கிவைப்பான் ஒருநாள் இது புரிந்தாள் அவன் புனிதன் .


இதை எல்லாம் பொதுவில் பகிரக்கூடிய நண்பன் ஈசன் மட்டுமே !அவனால்தான் இந்த விடயங்களை மற்ற என் நட்புக்கள் எல்லாம் இவனும் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போல என்று நினைப்பவர்கள் என்பதையும் நான்  அறிவேன் .

ஐய்யனே ஈசன் அழைப்பில் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வீதியில் செல்லும் போதே அழைப்பினை உள்வாங்கினால் ஈசன் .

ஹாலோ.

 அவனின் ரிங்டோன் கர்ணா படத்தின் 'டெலிபேன் அடிக்குது டெலிபோன் அடிக்குது 'என்ற சினிமாப்பாடலினை ஒலிக்கவிட்ட வண்ணம் .

ஹாலோ நான் பரதன் பேசுறன் ஈசன் .

ஓ மச்சான் எப்படி இருக்கின்றாய் ?,என்னாச்சுடா தொலைபேசி இல்லை ?

முகநூலில் தொடர்பு இல்லை ?எங்க போட்டாய்?

 இன்னும் பிராசில்தான் இருக்கின்றீயா ?



முதலில் உனக்கு என் .!



நான் நல்லா இருக்குன்றேன் .

இப்ப விரதகாலம் என்பதை நீ மறந்திட்டியோ ??

அட ஆமா இல்ல  !

சாரி பரதன் சாமி.  மறந்தே போய்விட்டன் .

அரசியல்கட்சியின் தேர்தல் அறிக்கைபோல  அப்புறம் இந்த வருசமும் சாமி மலையேறுதோ ??

அருள்கிடைத்தால் போகலாம் நல்லதே நடக்கட்டும் உனக்கு .



ஆமா நீ ஏன் என்னிடம் எதுவும் சொல்லவில்லை ?

எதைப்பற்றி பரதன் சாமி.

 ஒரு நண்பனாக ஈசன் எப்போதும் உன்னோடு எல்லாம் மனம் விட்டுப்பேசுவேனே !மறைக்காம   ஊரில் இருந்த போது!

ம்ம் இருக்கலாம் ஆனால் மறந்திட்டியே ஜீவனி. ஜீ....வ...... னி



என்றதும் ஈசனின் குரலில் ஒரு தடுமாற்றம் ..   உள்வாங்க முடியும் நட்புவட்டத்தில்!


3 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

புரிந்து உணர்ந்து கொண்டால் புனிதன் தான் - தன்னை...

தனிமரம் said...

புரிந்து உணர்ந்து கொண்டால் புனிதன் தான் - தன்னை...//தனபாலன் சார் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Unknown said...

நன்று.தொடரட்டும்............