சின்னவயது நண்பன் வந்தான்
சிரித்துக்கொண்டு முகநூலில்
சீக்கிரம் ஒரு சின்னக்கவிதை
சினிமா சேர்த்துச் சொல்லு
சிலேடையும் ,சிந்திக்கவும்
சிரிக்காத சிவனே என்று!
சிரிக்காமல் சிந்தித்தேன்.
சிலோனுக்கு இன்று சுதந்திரம்!!
சிறையில் இன்னும் நம் இனம்!
சீச்சீ இன்னும் சிறப்பாக வேணும் !
சினிமாவுக்கு போன சித்தாளு போல
சினிமாவும் சிரித்திரணும் போல
சின்னக்கவுண்டர்கள் என் நம் தேசத்தில்
சீரழியும் சின்னத்தளபதிகள்
சீர் போற்றும் சிந்தனைவாதிகள்
சிறிலாங்காவில் சினைப்பர் தாக்குதல் முதல்
சின்ன ஒரு இடத்தில் இரத்தம்
சிந்தி சிதறுண்ட போது
சிறு கையெழுத்து போடாத
சினிமா கதாநாயகனுக்கு .
சிறுவிமர்சனம் என்று சிந்தாத
சிறுபத்திரிக்கை வாசலில்
சினம் கொண்டு நம் இனம்
சிறுபிள்ளை போல சிரித்தாயா நீ!ஹீ!!!
சிறிலங்கா யுத்தத்தில் வென்ற பின்
சிலோனில் சுதந்திரம் சீர்கெடவில்லை
சினிமா மோகம் சீர்பரப்பி
சிந்தனையில் நவநாகரிகம்!
சிதறுவானே சின்னக்கவிதை சொல்லுடா!
சிந்திக்கின்றேன் சின்னையா
சீவன் போகுதடா
சிருங்கார சீர்வரிசை
சிலிமாக இருக்க வேண்டும்.
சிரித்தாள் நடிகை
சிரிப்பளகி சங்கீதா போல
சின்னக் கன்னக்குழியில்
சிறு பள்ளம் விழவேண்டும்.
சீறி எறியும் சிக்பேக்ஸ் போல
சின்னக்கவிதை
சில நிமிடத்தில் சிந்திவிடு
சில்லறை எண்ணிய சின்னவனே!
சிந்தை எங்கும் நீ ஒரு
சினேஹா மோகம் பிடித்தவனே
சிரிப்பில் இன்னும் சிறிமா: மகள் போல
சிலைபோல சின்னவயதில்
சிகிரியாவில்
சின்னமாமியின் சின்னமகள்
சிலகாலமாய் சிறையில் காத்து இருக்கின்றாள்
சீக்கிரம் வா சில கோடியுடன் சிறை மீட்க
சில செய்தி சில இணையத்தில்
சிறிங்கா பற்றி சிந்திவிடாதே.
சீக்கிரம் வருது ஐநாகூட்டம் அதில்
சில பிராந்திய் அரசியல்/
சீச்சீ நீ சிரி
சினேஹாவுக்கு இப்போது சீர்மந்தம்
சின்ன மாமா கருணாநிதி சீர்மந்தம் பின்னே
சிதம்பரம் மாமனார் சின்னாத்தா!
சிலோன் வாழவைத்த சோனியா
சிறப்பித்த சீமந்த விழா
சீக்கிரம் வாடா!
சில நாளில் நீயும்
சில இணையத்தொடர் எழுதுவியோ??
சீக்கிரம் சொல்லு. பலர் அறியா
சிலர் அறிந்த தனிமரம் சிந்தனையில்
சினேஹா சீர்கெட்ட உதவாக்கரை நீயடா!
சிரிக்கின்றேன் சீக்கிரம் நீ
சிறிலங்கா நீ வருவாயா!
சிந்திக்கின்றேன்!
சிறைநாட்களை!
!
15 comments :
வணக்கம்
கவிதையின் கற்பனைவரிகள் என்னுடைய அடிமனதை அள்ளிச் சென்றது.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சி சி எனும் சிந்தனை வரிகளுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
சினேஹாவுக்கு இப்போது சீர்மந்தம்
சின்ன மாமா கருணாநிதி சீர்மந்தம் பின்னே
சிதம்பரம் மாமனார் சின்னாத்தா!
சிலோன் வாழவைத்த சோனியா
சிறப்பித்த சீமந்த விழா
சீக்கிரம் வாடா!//
சிலோன் வாழவைத்த சோனியாவா ?சோனியா வாழவைத்த சிலோனா ?
எழுத்தில் வழிந்தோடும் வேதனை, கார்கால மேகம் போல கொட்டக் காத்து இருப்பது புரிகிறது நண்பா !
அண்ணா ரொம்ப வித்தியாசமாய் இருக்கிறது..
அந்தநாள் சின்னமாமியின் சின்ன மகளையும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்
வாழ்த்துக்கள்
வித்தியாசமான கவிதைகள்! ’சி’வரிசையில் இத்தனை வரிகள் எழுதி கலக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
கவிதை நல்லாருக்கு அண்ணா.. தமிழ் நாட்டு சிரிப்பழகியை தலைப்பில்.. இலங்கை சிரிப்பழகி உள்ளே.. சமகால நிகழ்வுகளையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
நல்ல சிந்தனை!கொட்ட வேண்டியவர்களுக்கு நல்ல கொட்டு!!வாழ்த்துக்கள்...!!!
வணக்கம்
கவிதையின் கற்பனைவரிகள் என்னுடைய அடிமனதை அள்ளிச் சென்றது.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//வாங்கள் ரூபன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
சி சி எனும் சிந்தனை வரிகளுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...//வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன் சார்.
சினேஹாவுக்கு இப்போது சீர்மந்தம்
சின்ன மாமா கருணாநிதி சீர்மந்தம் பின்னே
சிதம்பரம் மாமனார் சின்னாத்தா!
சிலோன் வாழவைத்த சோனியா
சிறப்பித்த சீமந்த விழா
சீக்கிரம் வாடா!//
சிலோன் வாழவைத்த சோனியாவா ?சோனியா வாழவைத்த சிலோனா ?
எழுத்தில் வழிந்தோடும் வேதனை, கார்கால மேகம் போல கொட்டக் காத்து இருப்பது புரிகிறது நண்பா !
5 February 2014 18:26//நன்றி வருகைக்கும் அன்பான புரிதலுக்கும் மனோ அண்ணாச்சி.
அண்ணா ரொம்ப வித்தியாசமாய் இருக்கிறது..
அந்தநாள் சின்னமாமியின் சின்ன மகளையும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்
வாழ்த்துக்கள்//நன்றி ஆத்மா வருகைக்கும் கருத்துரைக்கும்.
வித்தியாசமான கவிதைகள்! ’சி’வரிசையில் இத்தனை வரிகள் எழுதி கலக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!//நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் சுரேஸ்.
கவிதை நல்லாருக்கு அண்ணா.. தமிழ் நாட்டு சிரிப்பழகியை தலைப்பில்.. இலங்கை சிரிப்பழகி உள்ளே.. சமகால நிகழ்வுகளையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.//நன்றி ரியாஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.
நல்ல சிந்தனை!கொட்ட வேண்டியவர்களுக்கு நல்ல கொட்டு!!வாழ்த்துக்கள்...!!!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
அறிமுகம்செய்தவர்-காவிகவி
பார்வையிட முகவரி-வலைச்சரம்
அறிமுகத்திகதி-23.07.2014
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment