24 February 2014

சின்னச்சின்ன கீறல்கள்.

எத்தனை பாடல்கள் உந்தன்
ஏழ்மையான இதயத்தில்
எழுத்திச்செல்ல ஏதிலியாக
ஏழுகடல் தாண்டினேன்
என்னையும் தொலைத்தாயே
என் காதலியே இன்று
என்னையும் நினைத்து
ஏனோ அழுகின்றேனடி!
   


///////////


உனக்கென நானும்
எனக்கென நீயும்
உருகிப்போவதில்
உணர்கின்றோம் 
உண்மைக்காதல்.../

///////////////////////////////////////////////////////////////

மலையோரம் மங்கை அவள்
மலைநாட்டின் நங்கையவள்
மடியில் சாய்ந்து மரணம் வரை
மகிழ்ந்து இருப்பேன் என்றாள்!


மறந்தாள்  பின் மறைந்தாள்!!
மருகின்றாள் இப்போது
மன்னவன் நீயாக
மாலையிட்டு இருக்கிலாம் 
மறந்த  பின் காதலா??
மனமே மயங்காதே!//





3 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

மயங்காதே மனமே மயங்காதே...

Muruganandan M.K. said...

மறக்காது காதல்
மறைந்ததுபோல தெரிந்தாலும்
நிறைந்திருக்கும் ஆழ்மனதுள்
இனிய கவிதை
வாழ்த்துக்கள்

Unknown said...

இது கொஞ்சம் கூட சரியில்ல,ஹ!ஹ!!ஹா!!!!