அரசியல் அறியாதவன் தனிமரம் அன்பு நண்பனுக்காக அலைகடல் கடந்து
ஆசையில் எழுதுகின்றேன் ஒரு தொடர் !நட்பின் வேண்டுதலில் அதுவே என் பணி! ஐயா நான் ஒரு கைநாட்டு!
இனி........./
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
மக்களுக்கு செய்த சேவை இத்துடன் போதும் இனி எனக்கு ஓய்வு தேவை என்று ஒதுங்கக் கூட விரும்பாத ஒரு துறை இருக்கும் என்றால் அது அரசியலில் மட்டும் தான் .
ஒருவனுக்கு ஆட்சிபீடம் ஏறும் போதைக்குள் புகுந்து விட்டாள் பின் மீளுவது இயலாத காரியம் திராவிடதின் கொள்கை நீட்சி போல.
! இந்த ஊரிலும் மாகாண ஆட்சி கடந்து மக்களுக்காக சேவை என்று மத்திய ஆட்சியான இலங்கை பாராளுமன்றம் போகும் சிறுபாண்மை மக்களின் நன்மதிப்பு பெற்ற எத்தனையோ உறுப்பினர்கள்?
இந்த ஊர் வளர்ச்சிக்கு என்ன செய்து இருப்பார்கள் ?,
எல்லாம் வெள்ளை யானை தான் மக்களுக்கு சேவை என்று வெளிக்கிட்டு மக்களையே மந்தை போல நினைத்து மயக்கும் இந்த போதைக்கு சில தலைவர்கள் என்ற பதவி மட்டும் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல அரசியல் வியாபாரமாகிவிட்டது.
இங்கு எல்லாம் சாரயக்கடை திறக்கமட்டும் மத்திய அரசு உதவியது என்பார்கள் தங்களின் பலவீனம் சிறுபாண்மையென்று இன்னொரு சப்பைக்கட்டு. இனவாத ஊதாரி ஊடகத்தில் இதையும் கூட பூடகமாகச் சொல்லுவார்கள் எங்க ஜானாதிபதிக்கு இது எல்லாம் கவனத்துக்கு கொண்டு வரவில்லை என்று பெரும்பாண்மைக்கு சாமரம் வீசியபடி .
தெரியாமத்தான் கேக்கின்றேன் நண்பா இதிகாச பரதன் ஆட்சியில் பற்றில்லாத பணிபுரிய வேண்டும் என்றுதான் அன்று ராமனின் தம்பி பாதுகையுடன் பட்டொளி வீசீனான்.
இன்று இந்த ஊரில் என்ன இருக்கு ??ஜாதிக்கு ஒரு தலைவர் அவருக்கு பிடித்த நபர்கள் பொது வேட்பாளர்கள் .அதுவும் காசு இருந்தால் அரசியல் வியாபாரிகள். தத்தம் ஜாதிக்கு அரச கரும கோட்டாவில் வேலைவாய்ப்பு.
இதன் மூலம் குண்டர் படை போல ஒரு பக்கம் இன்னொரு கவசம் போல நற்பணிமன்றம் என்ற போர்வையில் துதி பாடிகள். வாக்குச் சேர்க்கும் வங்குரோத்து அரசியலில் அபிமஞ்ஜூ போல சித்தத்தில் மாஜாலாம் எல்லாம் அறிந்தவர்கள் .
சாமானிய தோட்டத் தொழிலாளர் தயவில் பாராளுமன்றம் போகும் நம்மவர்களின் நிலைக்கு ஏற்ப! எப்போதும் ஆட்சியில் பங்கு .
அதுக்கு ஏற்ற அரச பதவி என்று அடகு வைக்கும் கலாச்சாரம் எப்போது மாறும்?? அப்பையாக்களும் ,சூலாயுதங்களும் செய்ய முடியாத அபிவிருத்தியை அதிகம் மக்கள் விருப்பு வாக்கு நேர்மையில் பெறாத இவர்கள் போல !
பொது நோக்கில் இந்த ஊரை அபிவிருத்தி செய்யும் காலம் எப்போது வரும் ?,
எங்கள் வாக்கின் பலத்தில் ஆட்சியில் அமர்ந்து பணம் ,பட்டம், பதவி ,பெற்று எங்களை மேய்க்கும் இவர்களுக்கு அடிமையாக இருப்பதை விட இனவாதக்கட்சிகளின் வேட்பாளர்களாக பாராளுமன்றம் போவதே மேல் !
நம்ம நாட்டில் தான் மச்சான் எப்போதும் எங்கும் இன அரசியலைப் புகுத்தி இந்த வளமான தேசத்தை இப்படி குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல ! இத்தனை காலங்கள்!
தங்களின் சுஜத்திற்காக இனவாதம் பேசும் நம்மவர்கள் எல்லாம் தம் பிள்ளைகளின் வாழ்க்கை மட்டும் முன்னேற்றக் கல்வியை ஆங்கிலமொழி என்றும் ,அத்தோடு சிங்களத்தையும் அப்பளுக்கற்ற முறையில் கற்க வைத்துவிட்டு அன்றாடம் தினக்கூலியானவர்களை மட்டும் அதிகம் தாய்மொழி என்ற தாரகத்தை .
மகுடி ஊதி தந்தை போல பாட்டுக்கட்டி ,பாதை எங்கும் உணர்ச்சிக்கவி பாடி உயிர் போகவைத்துவிட்டு உல்லாசமாக கடிதம் எழுதுவதும் அறிக்கை விடுவதும் என ஆயிரம் கதையளக்கும் .
இந்த முன்னேற்றம் பேசும் முகங்களை முதலில் இந்தியன் தாத்தா போல இடுப்பில் குத்தணும். இதன் மூலம் இந்த ஊர் இன்னும் வளமாகும் என்று நினைக்கும் உங்க அப்பாவை உன் ஆசைக்காக அரசியல்வாதியிடம் அடிமைப்பட்டு சம்மந்தம் பேச சம்மதிக்க வைக்கலாம் பூவே உனக்காக போல என்று நினைக்கின்றாயா பரதன்.??
அப்படி ஒரு எண்ணம் சொல்லத் துடிக்குது மனசு போல இருந்தால் சின்ன ஜமீன் போல இப்பவே சீரழித்துவிடு!
5 comments :
வணக்கம்!
நாட்டில் உலவும் நாிகளை மாய்த்திட
ஏட்டில் உாிமையைத் தீட்டு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
உண்மைகள்...
நன்றாகச் சாடுகிறீர்கள்,கதையோடு ஒன்றித்து,அரசியல் வியாதிகள் அனைவரையும்!உலகெங்குமே வியாபித்திருக்கிறது 'இனம்' என்ற துவேஷம்,ஹூம்...........!
இங்க தான் அரசியல் .....
கொஞ்சம் குழப்பமும்
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்,நேசன்&குடும்பத்தினர் அனைவருக்கும்!!!
Post a Comment