30 April 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-21

ஊடக ஆசைக்கு முதலில் உறவுகள்தான் எதிர்ப்பு அரசியலைக்கொண்டு வருவார்கள்!
 எங்கே தம் பிள்ளையின் வாழ்க்கையும் வீண இனவாத  அரசியல் வில்லங்கத்தையும் கேள்விகளையும் இந்தத்துறை கொண்டு வருமோ ??

என்ற சந்தேக சங்கடத்தில் தவறும் இல்லைத்தான் இந்த நாட்டில் மட்டுமா ?,,

இனவாத யுத்தம்! மதவாத/ மொழிவாத யுத்தம் நடக்கும் பூமி எங்கும் முதலில் ஊடகத்தின் மீதுதான் தீப்பொறிபோல குண்டு வைக்கப்படுகின்றது.




 ஊடகப்படுகொலைகள் கண்டிக்கப்பட்டாலும் உலக நாடுகளில் ஊடகத்தின் முகத்தையும் இன்றைய உலகம் சந்தேகம் கொள்வதில் தப்பிள்ளை என்றே சொல்ல முடியும் §


சுடச்சுட செய்தி என்று சொல்லும் அவசர உலகில் நடுநிலமை எல்லாம்?? செய்தியை உருவாக்க நினைக்கும் ஊடக வியாபார ´ அதிபர்கள் எல்லாம் வாஞ்சிநாதன் பட பிரகாஸ் ராஜ் போல பலர் உண்டு!

 தினத்தந்திக்காக தீயில் போனவர்கள் எல்லாம் மதுரை  அன்பிள் கண்கள் பணித்து நெஞ்சம் குளிர்ந்தது என்று இதிகாச பரம்பரை மறந்தாலும் சென்னையில்  தீர்க்கப்படாத வழக்குத்தான்! அது போல்  ஈழத்தில்  பல ஈழகேசரி  இந்திய இராணுவ அத்துமீறல்  தாக்குதல் முதல் இலங்கையில் தனியார் உடமையாளர்  இடதுசாரி உப்பாலி முதல்  இது ஊடகத்தில் பால பாடம்!




 !என்ன பரதன் படிப்பைவிட்டுவிட்டு பேப்பருக்கு எல்லாம் கடிதம் போடுகின்றாயாமே??

அதிகம் எதுவும் பேசாத ஐயா இன்று என்னிடம் நீதிக்கு தண்டனை போல கேள்வி கேட்கும் நிலைக்கு என் ஊடக எழுத்து வளர்ந்துவிட்டதா??

 இல்லை யாராவது சந்தேககோட்டைக்கீறிவிட்டார்களா?? 

புலன்விசாரணை என்ற போர்வையில் ??

என்னப்பா என் கேள்வி புரியலையோ ?,

தேள்கொட்டிய் திருடன் போல முளிக்கின்றாய்,,

 அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ஐயா §

என் படிப்பு நல்லாத்தான் போகின்று.

 எப்படி தென்றல்வரும் தெரு கஸ்தூரி என்றா?,
 இல்லை  பூவெல்லாம் உன் வாசம் போலவா?? !



உன் தேர்வு அறிக்கை எல்லாம் மிக மோசம் என்று உன் வாத்தியார் இன்று என்னிடம் பேசினார்!உன்னை இங்கு அழைத்து  வர மறுபக்கத்தில் ஒருவனை பிணைவைத்துத்தான் விட்டு வந்து இருக்கின்றாள் உன் அம்மா

!


நீயும் சுயநலவாதி அரசியல் வாதி போல உன் நிலை  மறந்திடாத! உனக்கு இங்க பதுளையில்  எல்லா சுதந்திரமும் இருக்கு என்பதுக்காக நம் நிலையை உணராமல் ஒரே கோப்பையில் தேனீர் குடிக்கலாம் என்று கனவு கானாத !


உனக்கு விருப்பம் இல்லை என்றாலும் நாளைக்கே நாம் கொழும்பு போறம் நீயும் வெளிநாட்டுக்கு போறாய் !

நீ முன்னால் போ!

 நான் பின்னே வாரேன் உரட்டை மெனிக்கேயில்!!!

 உன் அம்மா அத்ன் பின் வன்னி போறா இது தான் கோட்டை வாசல் !இதைக்கடந்து நீ மலையகம் என்  வாழ்க்கை என்றால் நானும் என் கணக்கியல் அதிகாரித்துறை தூந்து என்னைத் தொடரும் சந்தேக இனவாதிகளை வெறுத்து என் தாய் பூமி வடக்குக்கு போகின்றேன்!


 என் மன உளைச்சல் எல்லாம் ஒரு மகன் அறியான் ! இது சத்தி வாக்கு! தெய்வ வாக்கு போல! எப்போது ஒரு மகன் தானும் தந்தை ஆகும் போது அவனும் இன்னொரு  வேலை தேடி இன்னொருத்தரிடம் இரங்கும் போது  என் ஞாபகம் வந்தால்!


 அப்ப என் முடியில் இருக்கும் நம்பிக்கைக்கை நீயும் புரிந்தால் நீயும் மலைகத்தில் ஒரு முள்முருக்கு மரம் தான்!



 அதுவரை என் ஐயா ஒரு பட்டதாரி என்று பொதுவில் நீ உன்னையும்!
 இல்லை என்னையும் சொன்னால் நான் உன்னிடம் வெளிநாட்டுக்காசில் பிச்சை வாங்குவதை விட  தூக்கில் தொங்குவேன்!




 எனக்கு மானம் முக்கியம் !அரசியல் ஓட்டு இல்லை என் மகன் ஒரு படிக்காதவன் என்பதைவிட அரசியல் தெரியாதவன் என்பதுதான் எனக்கு நாற்றம்! !  இல்லை நாளை இரவு நீ வெளிநாடு போறாய்  !

எனக்கு பணம் முக்கியம் இல்லை ஆனால் என் வாரிசு உயிர் வாழனும்! எனக்கு யார் கொல்லி வைப்பார்களோ நான் அறியேன் !என் வாழ்க்கை ஈழத்தில் போனாலும் அடக்குமுறை போல வாழும்  காலம்! நீயும் சிங்களம் படித்தவன் ஏதாவது எழுது இந்த ஊர் கதை ஊடகத்தில் வரவேண்டும் மை சன்!ஐயா நான் எப்படி எழுதுவேன்  ஐயா!

வெளிநாடு போ அங்கே உன் இன்னொரு அண்ணா இருக்கின்றான் இன்னும் உனக்கு பிரெஞ்சு நாட்டில் சொல்லித்தர !ம்ம்
!தொடரும்..................

3 comments :

Anonymous said...

வணக்கம்

நாளுக்கு அமைவாக பதிவு நன்றாக உள்ளது தொடருங்கள்
மேதின வாழ்த்துக்கள்..

என்பக்கம் கவிதையாக

எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

annaaaaaaaaaaaaaaaaaaaa

Unknown said...

வெளிநாடு போ, அங்கே உன் இன்னொரு அண்ணா இருக்கின்றான்.இன்னும் உனக்கு பிரெஞ்சு நாட்டில் சொல்லித்தர !ம்ம்....///நன்று!எப்போ வருகிறார்?