02 April 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --14

இலங்கை நீதிமன்றதில் ஆட்கொனு மனுவுக்கு இருக்கும் அசட்டையினம் போலத்தான்! ஜீவனியும் பரதனின் கேள்விக்கு ஆமா ,இல்லையா என்ற உடனடிப் பதிலை கொடுக்காத நிலையில்.


 ஈசனும் அன்று பள்ளியில் ஓய்வான பாடவிதான நேரத்தில் என்ன மச்சான் ?என்ன சொல்லுறாங்க உன் இதய தேவதை ?

"பம்பாய் படம் போல ஊரைவிட்டு ஓடுவதோ ?
இல்லை காதலுக்கு மரியாதை போல இப்படியே பிரிஞ்சிருவம் என்று சொல்லுறாங்களோ ?

நீ வேற அடிக்கடி ஜானாதிபதி செயலகம் போல "இங்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திருக்கின்றது என்பது போல "

யதார்த்தம் புரியாமல் இருக்கின்றாய் !

கடிதம் கொடுத்து ஒரு வாரம்  பள்ளிக்கு வாராமல் இருந்துவிட்டு .மீண்டும் இன்றுதான் வந்து இருக்கின்றாள் !

இப்ப போய் என்ன கேட்க ?
வராத ஒரு வாரம் அலைகள் ஓய்வதில்லைப் படப்பாடல் போல தருசனம் கிடையாதா ?என் மேல் கருசனம் கிடையாதா ?என்று மனம் ஏங்கிய  நிலை உனக்கு புரியாதுடா !

நீயும்   ஒருத்தியை காதலித்துப்பார் அப்ப புரியும்!


 "அவள் வருவாளா உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா என்று உனக்கும் பாடத்தோன்றும் "

ஆமாடா நீ பாடுவாய் . "நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் என்று ஜீவனியிடம் சிறைப்படம் போல"

 முதலில் இன்னும் ஒழுங்கா பொருளியல் சந்தை அமைப்பே இன்னும் புரியவில்லை . அதுக்குள்ள பொம்பள மனசு புரிஞ்சிடுமா ?
மறந்தே போச்சுடா அந்தப்படத்தில் கூட அருமையான பாட்டு இருக்கு!

 ஐயோ இழவுடா  நீ பரதன்.
 நான் என்ன லலித்தாவின் பாட்டுக்குப் பாடா அறிவிப்புச் செய்கின்றேன்.?
 இங்க பார் ஜீவனி பற்றிய எண்ணத்தை மூட்டைக்கட்டி விடு  ரணிலின் ஜானாதிபதி கனவு போலத்தான் .

முதலில் உன்னை

.என் காதலை அவமதிப்பதுக்கு!

. ஆமாடா. ஆ ,ஊ என்றால் அரசியலில் இதுதான் கெதியா ?ஒன்று தெரியுமா ?பரதன் ஜீவனியின் அப்பா ஒரு பிரபல்யமான அரசியல்வாதி பதுளையில் !

இங்கு எத்தனை  அரசியல் கட்சி இருக்கு என்று சொல்லு பார்ப்போம் ?
இது என்னாடா கேள்வி .
இங்கு ஆணையும் (ஐ.தே.க),கதிரையும் (சிறிலங்கா சுதந்திரக்கட்சி ), சேவலும்(இ.தொ.கா) தானே ??


மிச்சக்கட்சி எல்லாம்  என்ன சினிமா ரசிகர் மன்றம் போலவா??

இங்க வெற்றிலை கூட்டணி (பொதுஜன ஐக்கிய முன்னணி )
மணிச்சின்னம் (ஜேவிபி)
 தனிமரம்  (மு.கா  அதன் கிளை நூ /ஆ)
 ஏணி (மலையக மக்கள் முன்னணி ,) பம்பரம் ,வீடு ;சங்கு வில்லு என்று இன்னும் எல்லாம் சுயேற்ச்சைகளும்  வலம் வரும் ஊருடா இது !

எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை மச்சான்.ஆனால் உங்கள் அப்பாவுக்கு இருக்கடா .நடந்து முடிந்த தேர்தலில் உங்க அப்பா ஜீவனியின் அப்பாவின் கட்சிக்கு எதிராத்தான் செயல் பட்டார் தெரியுமா ?

 இது எல்லாம் அறிய மாட்டியே .

கண்டதும் கண்ட நாள் முதல் என்று கவிதை எழுத வேண்டியது. போடாங்! பேப்பரில் என்ன கவிதையா ?
ஆமா மலையக சேவைக்கு எழுதிய அனுப்பப்போறன் .

பொய் சொல்லாத இது ஜீவனிக்கு எழுதியதுதானே?

காத்திருப்பதும்
கவிதை வடிப்பதும்
கண்ணீர் விடுவதும்
கடைசியில் !
கல்லறையில்
கதறுவதுதான் விதியோ?
காதலியே !

 நீ திருந்த மாட்டாய் உங்க அப்பாவிடம் செந்தூரப் பாண்டியில் தளபதி போல பெலிட் அடி வாங்கப்போறாய்!
           
...........இன்னும் தவிக்கிறேன்.....
/////


7 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல் வரிகள் எல்லாம் ரசிக்கத்தக்கவை... எத்தனை திரைப்படக் காட்சிகளைக் தான் ஞாபகம் வைத்துள்ளீர்கள்...? !!!

இமா க்றிஸ் said...

வந்தேன் மீண்டும்.
நேசன் இந்த முறை ஏலம், கறுவா, கராம்பு என்றில்லாமல் புதிதாக ஏதாவது போட்டு இருக்கிறீங்களோ என்று செக் பண்ணுவம் என்று வந்தேன். :-) ரசித்தேன். மீண்டும் வருவேன். :-)

Unknown said...

நன்றாகத் தொடர்கிறீர்கள்,இலங்கை ஜனநாயக?!அரசியலையும் கிண்டலடித்து!

தனிமரம் said...

பாடல் வரிகள் எல்லாம் ரசிக்கத்தக்கவை..//பாடல் ரசிப்பதில் அண்ணாச்சியும் என் போலத்தான்!

. எத்தனை திரைப்படக் காட்சிகளைக் தான் ஞாபகம் வைத்துள்ளீர்கள்...? !!ஹீ அந்த நாளில் தியேட்டரில் தான் அதிக் நேரம்.ஹீ. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பியுடன் வழி யணுப்புகின்றேன்!

தனிமரம் said...

வந்தேன் மீண்டும்.
நேசன் இந்த முறை ஏலம், கறுவா, கராம்பு என்றில்லாமல் புதிதாக ஏதாவது போட்டு இருக்கிறீங்களோ என்று செக் பண்ணுவம் என்று வந்தேன். :-) ரசித்தேன். மீண்டும் வருவேன். :-)ஹீ அடிக்கடி நேரம் கிடைக்கும் போது ஆமி போல செக் பண்ணுங்கோ இமா!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றாகத் தொடர்கிறீர்கள்,இலங்கை ஜனநாயக?!அரசியலையும் கிண்டலடித்து!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

இமா க்றிஸ் said...

;)) எனக்கும் ஒரு 'போல' சொல்லியாச்சா நேசன்!! ;)