04 April 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கிறேன்.-15

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும் மச்சான் !அது போலத்தான் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும் .

எனக்கு அரசியல் விஞ்ஞானம் பிடிக்கும் அதை உயர்தரத்தில் படிக்கின்றேன் . உனக்கு தமிழ் இலக்கியம் பிடிக்குது பரதன் அது ஏன் ?,என்று நான் அறியேன். ஜீவனி மீதான ஈர்ப்பு போல !

ஆனால் இன்று நவீன காலம் கணனியுகம் தொடங்கி விட்டது
ஆனாலும் நம்மூரில் எத்தனை பேரிடம் கணனி இருக்கு?
 ஏன் அடிப்படையில் தொலைபேசி ,இணையம் என்று நாம் எத்தனை தூரம் முன்னேறி இருக்கின்றோம் ??

நல்லா ஜோசித்துப்பார் !

நீ வடகிழக்கில் யுத்தம் என்ற கொள்கையில் பார்த்த பூமி வேறு !

இனவாத அடக்கு முறையில் கவனிப்பார் அற்ற இனம் போல வாழும் இந்த மலையக நிலை வேறு மச்சான்.

 இந்த ஊர் பற்றி ஊடகத்தில் எழுத எனக்கும் ஆசை அதனால் தான்.
 நான் படித்துக்கொண்டே விகடனின் மாணவ நிருபர் போல செயல் பட நாட்டின் முக்கிய ஊடகத்திற்கு விண்ணப்பித்தேன் ஆசையில் ஒர் கடிதம் போல !

ஆனால் தலைநகரத்திற்கு நேரடி பயிற்ச்சிக்குப் போய் வந்த பின் தான் இன்னும் தெளிவு பிறந்தது  வைகாசி பிறந்தாச்சு படம் போல இன்னும் நாம் விடலைப் பையன்கள் என்று.

 எழுத நினைப்பது எல்லாத்துக்கும் யாதார்த்த அரசியல் இடம் கொடுக்காது !.தெளிவாகவும் ,நடுநிலையிலும் எழுத வேண்டும் என்று கனாக் கண்டாலும் நிஜத்தில்  வீட்டுக்கு நுழையும் போது காலுறையை கழற்றிவிடுது போலத்தான் ஊடகத்தில் முதுகெலும்பு இல்லாது  எழுதினால் தான் இங்கு இயங்க முடியும் !


இனவாத ஊடக தணிக்கை ஒரு புறம் என்றால் !ஒன்றும் அறியாத மக்கள் என்று சொல்லியே அரசியல்வாதிகளின் கொத்தடிமையின் பின் ஆமாம் சாமி போடும் நிலை எல்லாம் துணிந்து எழுத நமக்கு என்று ஒரு ஊடகம் இல்லை மச்சான் .

துணிந்து எழுதினால் இனம் தெரியாத நபரினால் இந்த உலகம் விட்டுப்போனவர்கள் பட்டியல் நீளுமடா இது எல்லாம் புரியாது !

உங்க அப்பாவின் இந்த ஊர் நேசிப்பு எல்லாம் நிஜத்தில் புரியாமல் நீயும் காதல் என்ற தேர்வில் அதுவும் .

நாம் அரசியலில் தூர நோக்கில்லாமல் செயல்படும் மக்கள் விரோதியாக எண்ணும் அப்பையாவின் மகளுடன் கல்யாணத்தேன் நிலா காய்க்காத பால்நிலா என்று பாட நிணைக்கும் உன்னிடம் நான் என்ன சொல்ல!


 உன் ஆசையை முதலில் உங்க அப்பாவிடம் சொல்லு .ஏன் தெரியுமா? நானும் இந்த ஊர் என்பது போலத்தான் அவரின் செயல்களும்.

 எனக்கும் உங்க அப்பா இன்னொரு நண்பன் போல !உன்னைவிட அவரிடம் நானும் கற்கும் பாடம் அதிகம்  என்னுயிர்த்தோழன் படம் போல

!நீயோ சின்னப்பூவே மெல்லப்பேசு என்று காதல் போதையில் இருந்தால் §


பின் ஒருநாள் பிரபு போல தனிமரத்தில் கீறித்தான் வாழ்க்கையைப் போக்கும் நிலை வேண்டாம்!

அட போடா புண்ணாக்கு உன் அரசியல் பார்வையும் வேண்டாம் நட்பும் வேண்டாம் நான் ஜீவனியுடன் பேசுகின்றேன்!

என் முகத்தில் முழிக்காத! போடா உன் முகத்தில் இடம் இல்லை என்றாலும் என்னை மீறி உன்னால் வெற்றிவிழா காணமுடியுமா!?,

ஓஓஓஓ நான் விதையானாலும் தரு போல வருவேன் போடா !
ஹீஈஈ!

தரு வையும் இயந்திர துப்பாக்கியால்  வேட்டையாட முடியும் அதுவும் அரசியலில் எல்லாம் சார்த்தியம்!


இன்னும் வரும்!!!

தரு--மரம்



4 comments :

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

உள்ளத்தின் எண்ணத்தை ஊா்காணத் தந்துள்ளாய்!
வெள்ளத்தின் போக்காய் விரைந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

திண்டுக்கல் தனபாலன் said...

முதுகெலும்பு இல்லாது போல் உண்மை - சிலவற்றில்...

Anonymous said...

vanthutten ...இனிமேல் ஆவது தொடர முயற்சிப்பேன் ...

Unknown said...

அழகு,அறிவு,யதார்த்தத்தைப் புரிய வைக்கும் பாங்கு .........நன்று!சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?பார்க்கலாம்!///வந்திருக்காங்க தெள்ளு தமிழ்ப் பண்டிதை!ஹ!ஹ!!ஹா!!!