31 May 2014

தாலியோடு தனிமரமாக தவிக்கின்றேன் ---33

வாழ்க்கை வாழ்வதற்கே ஆயிரம் சோகம் ,ஆயிரம் தடைகள் அலையென அடி கொடுக்கும் !

அதுக்காக போருக்கு அஞ்சி ஓடும் முன்களப்பணி வீரன் போல் இருக்கக்கூடாது!

எதிர்நீச்சல் போல எதிர்கொண்டே வாழும் கலையை கற்றுக்கொள்ளவேண்டும் நாம்!

அரசியலில் நீங்க ஆயிரம் தேர்தல் பிரச்சாரம் பார்த்து இருப்பீங்க. ஆனால் மகள் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தீர்களா ??

உங்க பேச்சுக்கெல்லாம் எதிர்ப்பதில் சொல்லி இருப்பாளா ஜீவனி? உங்க விருப்பத்துக்கு தலையாட்டி பொம்மைபோலத்தானே எல்லாத்துக்கும் !அதிகாரம் பலம் கொண்ட ஜனாதிபதி போல நீங்களும் விட்டுக்கொடுக்கவில்லை அவளின் ஆசை அறிந்து.

 இப்ப  வாழவேண்டிய காலத்தில் விவாகரத்து வாங்கிவந்து வீட்டில் இருக்கும் பெண் பற்றி கொஞ்சமேனும் சிந்தித்தீர்களா ??

பொது வாழ்க்கையும் வேண்டாம் என்று நீங்கள் ஒதுங்கியிருப்பது எதிர்க்கட்சிக்கு இன்னும் இளக்காரம் போல இருக்கும்.அரசியலில் தோல்வியும் வெற்றியும் சகயம் பொன்னாடைபோல!யானைப்பாகன் கூட பலதடவை தோற்றும் இன்றும் விட்டுக்கொடுக்காத தலைமைத்துவத்தில் மலையட்டை போல இருக்கும் போது அவனோடு கூட்டணி சேர்ந்த உங்கள்  தனிக்கட்சி மட்டும்


  தேர்தல் திணைக்கழத்தில் பதிவு செய்த கட்சியாக பெயரளவில் இருந்தால் சரியா ?,


எல்லாம் சிந்திக்காமல் இருப்பது தான் உயிர் இருந்தும் அசைவில்லாத கோமா நிலை  என்பது!  அது போலத்தான் இப்ப ஜவனியும்.

 ஜீவனியின் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டும் என்பதே என் ஆசை! சுற்றிவளைச்சுப் பேசாமல் விடயத்துக்கு வாரன் நான் ஜீவனியை தாரமாக் ஏற்றுக்க தாயார இருக்கின்றேன்.

 நீங்கள்தான் எடுத்துச் சொல்ல வேண்டும் ஜீவனியிடம். நானும் பேசுகின்றேன்!

  .தம்பி பரதன் நீ இப்படி தேர்தல் மேடைப்பிரச்சாரம் போல  பேசுவது அழகுதானோ?, என் மகள் இது வரை ஏன் விவாகரத்து வாங்கினால் என்றுகூட பெற்ற தாய் எனக்குத் தெரியாது !

அவளுக்கு இப்ப மனம் விட்டுப்பேசும்   நல்ல தோழிகள் யாரும்  இல்லை.

 இந்த வீட்டில் கூட ஒரு சிறைப்பறவை போலத்தான் வாழ்கின்றால்!


இந்த நிலையில் நான் எப்படிப்பேசுவது என்றாள் ஜீவனியின் தாய் மீனாட்சி!


ராம்குமார் நல்ல பையன் என்றுதான் எங்க குலத்தில் கட்டிவைச்சோம். அவனும் இவளைப்புரிஞ்சுக்கிடலை இன்னொரு துணைதேடி போய்விட்டான் ஆசை அறுபது நாள்  மோகம் முப்பது நாள்  என்பது போல!

 இவளோ இப்ப சமூகநலச்சேவை என்று குழந்தைகள் காப்பகத்தை நிறுவகிப்பதும், எதுவும் கேட்கமுடியாத   கையறு  நிலையில் நாமும் வெற்றி பெற்றும் ஆட்சியில் கூட்டணி  இல்லாத கட்சி போல!

 கேட்டாள்" கட்டிவைத்தவன் நல்லாத்தானே பார்த்துப் பார்த்து செய்தீங்க பேசாமல் என்னை ஜாதித்தீயிட்டுக் கொழுத்திவிட்டு"

 அரசியலில் மலின அரசியல் செய்து இருக்கலாம்! பிரதேசவாதம், இனவாதம் என்று வார்த்தையை தீயாக் கொண்டுபளிடம் எப்படி மனதில் உறுதி வேண்டும் படம்போல பேசமுடியும்?,

 நீ நல்லது செய்வியோ இல்லை உன் வழியில் போவாயோ தெரியாது! எங்கவிதியை நினைத்து நாங்களே நாலுசுவருக்குள் அழுவதும் அரசியலில் சிரிப்பதும் ஒரு நாடகம் தான்!


நான் ஜீவனியிடம் பேசுகின்றேன்..தம்பி இங்க வேண்டாம் அவள் இருக்கும் குழந்தைகள் காப்பகத்தில் போய் நேரில் பேசுங்க!

தம்பி ஈசன் ஜீவனி  இருக்குமிடம் நீ அறிவாய் அங்கு போ!

 பேசுங்க நல்ல சேதியோடு வாங்க என் வீட்டிலும் வெளிச்சம் வரும் போல இருக்கு தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கிடைக்கும் என்பது போல!

வருவோம் அத்தை!

எதையும் அயல்நாட்டு   நிதர்சனநிலை  புரியாத  எதிர்கால வல்லரசுக் கனவுப் புதிய பிரதமர் போல முத்தையா !

இன்னும் தவிக்கின்றேன்....


27 May 2014

தாலியோடி தனிமரமாக தவிக்கின்றேன்.--32

ஆட்சியில் இருக்கும் போது அரசியல்வாதிகளின் வீடுகள் எப்போதும் ஊர்க்கோயில் திருவிழாகள் போல களைகட்டியிருக்கும்.



 ஆட்சிமாற்றத்தில் மக்கள் நிராகரித்து கட்டுப்பணம்கூட திருப்பதி உண்டியலில் போனது போல ஆனநிலையில்! மீண்டும் முன்னால் அரசியல்வாதிகள் வீட்டுப்பக்கம் சென்றால் சாதாரண கோயில் வீதி வைரபவர் நிலை போல இருக்கும் நிலையை நம் ஊடகம் ஏனோ இன்றைய் நிலையும், அன்றைய நிலையும் என்று கார்ட்டூன் போடாது சிரித்திரன் போல!



 கலகலப்பாக வேட்டிசால்வையில் எத்தனை முகங்களின் விடுப்புக் கேள்விகளின் அதிகார கோட்டைத்தாண்டி பார்க்கவேண்டிய் ஜீவனியின் அப்பா  முத்தையா வீடு இப்படி அமைதியாக இருக்கும் நிலையை என்றோ வாலி பொய்க்கால் குதிரையில் கவியாக்கியதை நினைவெல்லாம் நித்தியா போல மறக்க முடியாது! 



நீண்டகாலத்தின் பின் ஒரு முன்னால் கட்சித்தலைவரின் வீட்டுக்கு போகும் நிலையை இன்று ஆண்டவன் தந்து இருக்கும் நிலையை நினைத்து பச்சாதாபம் கொள்வதா ?

இல்லை பதவியில் இருக்கும் போது பார்த்த அதிகாரதோரணைக்கு காலத்தின் தீர்ப்பு என்று எண்ணுவதா ? 



வா மச்சான் உள்ளே என்று ஈசன் அழைக்கவும் மெல்லச்சிரியுங்கள் படம் போல மனசு உள்ளே ஜீவனியைத் தேடியது கண்கள்.சுவரில்லா சித்திரம் போல!

 யாரது என்ற குரல் இன்னும் இருக்கின்றேன் என்ற தன்நம்பிக்கையை காட்டுகின்றது ஜீவனியின் அப்பா முத்தையா குரல்.

 முன்பு ஒரு தடவை தூரத்தில் பார்த்த துருவநட்டச்சத்திரம் போல!


 வணக்கம் ஐயா நான் மடுல்சீமை தோட்டத் தலைவர் கோவிந்தன்சாமி மகன் என்று தூரப்பார்வை தெரியாத ஜீவனி அப்பா முத்தையா  கேள்விக்கு பதில் கொடுத்தவண்ணம் ஈசன் நுழைய.


 குருவைத் தொடர்ந்து செல்லும் சிஷ்யன் போல பரதனும் சென்றான் .


அடுக்குமாடிவீடு போல இல்லை ஜீனி வீடு தனித்தனி வீடுகள் பல இன்னும் இருக்கும் ஊர்களில் பதுளையும் ஒன்று!



. ஜீவனியின் சொத்து இந்த பங்களா தானோ என்பது போல 40 பேர்ச்சஸ் இடத்தில் அழகான வீடு பூவெல்லாம் உன் வாசம் ஜோதிக்கா வீடு போல இதில் எந்த அறையில் ஜீவனி வாசம்! 

                                           

பிரெஞ்சில் ஜீவன் தொடர் மாடிவீட்டில் நிசாவை பெண்கேட்ட நிலையும் !
நிசா அடுத்த அறையில் இருந்து அழுத குரலும் ஏனோ ஞாபகத்தில் வந்து செல்லுது! 

இங்கு எது நடந்தாலும் விடுப்புக்கேட்கும் பாரிஸ் வெட்டிப்பயல் தனிமரத்திடம் சொல்லக்கூடாது என்று ஈசனிடமும் சொல்லிவைக்க வேண்டும்! வேட்டியை உருவி விடுவான் தொடர் என்ற போர்வையில், பின் முகநூலை மூடிவிட்டு ஓடவேண்டிதுதான் திவாலான நிதிக்கம்பனி போல 


.வா மகனே கோவிந்தன் எப்படி இருக்கின்றான்?,

 இந்தப்பக்கம் வருவதே இல்லை! இந்த தம்பியை எங்கோயோ பார்த்து இருக்கின்றேனே??

 உடனடி ஞாபகத்து வருகுதில்லை!

 இவன் தான் மடுல்சீமை கணக்குப்பிள்ளை ..சேனாதிராஜாவின் .மகன் !

ஓ ஜீவனிக்கு காதல் கடிதம் கொடுத்தவன்!

 ம்ம்ம் இப்ப ஞாபகம் வருகின்றது.

 என்ன தம்பி இவ்வளவு தூரம் என் மகள் இப்படி நிற்கும் காட்சியை காண வந்தாயோ??



அன்று ஒருநாள் சேனாதிராஜாவை தனிமரம்மாகிவிடுவாய் என்று மிரட்டினேன் இன்று  என் வீட்டில் இப்படி ஒரு காட்சி! 

விதி என்பதா?, சாபம் என்பதா ?

 ஐயா மனசைத்தளரவிடக்கூடாது உங்களிடமும். உங்க சம்சாரத்திடமும் நேரில் பேசத்தான் வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கின்றேன் !

நீங்க கோபப்படாமல் செவி மடுப்பீர்களா பதவி நீக்கப்பட்ட அமைச்சர் போல ஏக்கப்பார்வையுடன் பரதனை ஏறிட்டார்  முத்தையா!


இன்னும் தவிக்கின்றேன்.......!

25 May 2014

கிறுக்கலும் கீதமும் -5

நகத்தின் பூவில் வருடிய வலியை
விட பூவின் வலி
அதிகம் இல்லை!
 நீ பிரெஞ்சு ரோஜா கரம் தந்த வலி
 இன்னும் நெஞ்சில் .
ஆனாலும் 
இன்னும் சிரிக்கின்றேன் !!
காதலி்ல்  ரோஜா அழகுதான் 
உன்னைபோல தூர  ரசிப்பதில்!
  
----------------------------------------------

  புறாவும் புல்வெளியும்
   புடைசூழ்ந்த நிலையில்
   புது ரோஜா போல
   பூத்த நட்பு  இன்று
   புது அரசியலில் புலனாய்வு
   போர்வையில். பிரிந்தாலும்
   புதுக்கடைச்சிறையில் 

   
    
   இன்றும் வாழும் உன் நினைவு.

-----------------------------------
 வடலியில் வெட்டிய குருத்து  போல இல்லை
 என் காதல் மரத்தில் வெட்டிய கதியாள் போல
 இன்னும் வாழுகின்றது.
 நீயோ பறவையாக எந்தக்கூடில்
என் நேசம் இன்னும் மரத்தில்!
 நீயும் பறவையோ??


------------------------------------

என் இதயக்கூட்டில் நீ ஒரு பறவையாக 
என் வாசல் வெளியில் நீ பறந்துவரும்
 காலத்துக்காக பூவோடு காத்து இருக்கின்றேன் 
காதல் வானில் பறவையாக  ஜோடியாக பறக்க!

----------------------------------
ரோஜாவைத்தேடும் காதலன் போல
 நானும் உன்னை வண்டு போல 
சுற்றி வருவது காதலில்  .
நீயும் ஒருகாதல்  பறவையோ?,
 என்றும் பூவுடன் ஒரு மரம்!
 ///           
முன்னம் கீதம்   ரசிக்க -http://www.thanimaram.org/2014/05/4.html-

23 May 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-31

ஆட்சியும் அதிகாரமும் என்ற மாயமான்கள் எப்போதும் நிரந்தரம் இல்லை. இந்த உலகில் ஆட்சி கையில் இருக்கும் போது நல்லதுகள் செய்யும் நினைப்பு வராவிட்டாலும்!

 கெட்டது செய்யமட்டும் பலர் பின் நிற்பது இல்லை நண்பா!

 ஒரு காலத்தில் ஜீவனியின் அப்பா தன் அரசியல் அதிகாரத்தையும், இனவாத பொலிஸ் உதவியையும் கொண்டு என் ஐயாவிடம் மிரட்டல்பாணி வன்முறையினால் இந்த ஊரைவிட்டு என்னையும், என் காதலையும் கொழுந்து பறிப்பது போல பறித்ததும் நிஜம்



. ஒரு புறம் மகன்மீதான பாசம் இன்னொரு பக்கம் மகன் உயிர் என்ற ஆதங்கத்தில் ஐயாவையும் இந்த ஊரில் இருந்து விரட்டியது ஜீவனியின் அப்பாவின் இராஜதந்திரம் .


கோழை போல ஓடவைப்பதில் என்னை இடம்பெயர்த்துவதில் ஜீவனியின் அப்பா வெற்றி பெற்று இருக்காலம் ஒரே கல்லில் இரு மாங்காய் போல .


காதல் என்றாலே கவலைதானா?? ஊரைவிட்டு ஒதுங்குவதுதான் பொக்கிஷ்ம் என்பது போல என் ஐயாவும் என்னை இங்கு இருந்து புலம்பெயர வைத்தாலும் நெஞ்சில் ஜீவனி மீது பூத்த காதல் ரோஜா இன்னும் கொய்யாமலே என் இதயத்தில் இன்றும்  இருக்கு.


 இடையில் இந்த மிரட்டல் பற்றி என் ஐயா தொலைபேசியில் சொல்லியதுண்டு! ஆனாலும் புலம்பெயர்ந்தபின் எனக்கு என்று ஒரு தகமையை .தகுதியை. உருவாக்க வேண்டும் என்ற வேட்கை. என்னை ஜீவனியிடம் முதலில் எதையும் சொல்லும் வரம் கிடைக்கவில்லை.

 என் ஆசைக் காதலுக்கு வழிகாட்டவேண்டிய நண்பன் நீ ஒரு வார்த்தையும் ஜீவனியிடம் எனக்காக பரிந்து பேசலையே ??

பிரச்சார அரசியலில் நீயும் புதைந்து போனாயா ?

அவள் மனதில் என்நிலை என்ன என்று ஒரு வார்த்தை நான் அகதியாக் வெளிநாட்டுக்கு  தாய் தேசத்தில் எல்லா  வசதி இருந்தும் ஏதிலியாக  புலம்பெய்ர்ந்த பின்!


 ஒரு பொய்யாவது சொல் கண்ணே நண்பனுக்கு என்று கேட்டாயா ??என் காதல் கடிததுக்கு என்ன பதில் என்றுகூடத்தெரியாமல் தான் நானும்

!உயிரை இங்குவிட்டுவிட்டு உடல்கொண்டு மட்டும் புலம்பெயர்தேன்.


 அதனால்தான் பிரெஞ்சில் எவளைப் பார்த்தும் மருகவும்மில்லை, உருகவும்மில்லை . என் நண்பன் ஜீனுக்கும், எனக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்குடா ஈசன்.

 என் இன்னொரு நட்பு ஜீவன் உன் பார்வையில் வெட்டிப்பயலாக இருக்கலாம்! உனக்கு முக்கியத்துவம் தரவில்லை முகநூலில் காத்து இருப்பது இல்லை என்பதுக்காக அவனை நீ நிந்திப்பதை நான் விரும்பமாட்டேன்!

 எனக்கு நீயும், அவனும் இருகண்கள் போல நல்ல நட்புக்கள் எந்த ஒழிவு மறைவும் இருக்கக்கூடாது. அப்பத்தான் எதிலும் சேர்ந்தே பயணிக்கலாம்.

 இது அரசியல் அல்ல வெற்றி பெற்றதன் பின் கைகழுவிட   ஈசன் .!

எனக்கு இங்கு நிற்கும் நாட்கள் எண்ணிக்கையில் குறைவு!இடையில் நடந்தவை எதையும் புலனாய்வு போல விசாரிக்க எனக்கு விருப்பமில்லை, தேவையும் இல்லை மச்சான் .

நான் ஜீவனியின் குடும்பத்துடன் பேசப்போறன் அவங்கள் முகவரிக்கு என்னைக்கூட்டிச் செல்வாயா ?

அவர்கள் வீட்டில் சொல்லமறந்த கதைபடம் போல செருப்படி விழுந்தாலும், இல்லை வானத்தைப்போல அவமரியாதை செய்தாலும்!

 நீ மெளனம் காக்க வேண்டும் என் நட்புக்காக!

 நான் ஜீவனியிடம் பேசுறன் மச்சான் ! 



எனக்கு உதவி செய்வாயா? எனக்கு அரசியலில் தான் ஜீவனி அப்பாவைப்பிடிக்காது  பரதன்.

 இப்ப அவர் பல்லுப்புடிங்கியபாம்பு போல நாளைக்கு காலையில் அவர்களின் வீட்டை போவோம் எங்க வீட்டில் இப்ப ஏதும் பேசாத சரி மச்சான்!
.......

விரைந்து தவிக்கின்றேன்....

22 May 2014

தெரு சொல்லும் கவனம்!

போருக்குப் பின்னான நம்தேசத்தின் மக்கள்தொகையின் இழப்பில் முதலிடத்தில் இருப்பது வாகனவிபத்து என்றால் மிகையில்லை!

 சாலைவிதிகளை மதியாதமையும், போதிய சமூகப்பொறுப்பின்மையும், நவீன தொடர்பாடல் வசதியின் கட்டுப்பாடற்ற பாவனைகளும் என்றும் தான்  இன்று நாளந்தம் பத்திரிக்கையின் வாயிலாக பகிரும் செய்திகள்.


நடத்துணர்கள்   என்று திருந்துவார்கள்  என்று அங்கலாய்ப்பைத் தருகின்றது தினசரி பத்திரிக்கை .

 இந்த  போதிய விழிப்புணர்வை நம்தேசத்து ஓட்டுணர்களுக்கும். உரியவர்களின் உதவியாளர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்!

 அரசியலில் மோடிக்கு வைகோ எழுதும் கடிதம் போல யார் இன்று நம்நாட்டு போக்குவரத்துக்கு மணிகட்டுவது  மனதை பாதித்த இந்த குறும்படத்தை ரசியுங்கள் உறவுகளே படக்குழுவுக்கு தனிமரத்தின் வாழ்த்துப்பூ.
                                               குறும்படம் ரசிக்க!
                                              
                                                   

20 May 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-30

நல்ல நட்புக்குள் வரும் புரிந்துணர்வு என்பது அதியமான் .ஒளவையார் நெல்லிக்கனி போல் அதுபோல யாரைக்காணமுடியும் இன்றைய நவீன உலகில்!

 ஒவ்வொரு நட்புக்குள்ளும் ஏதோ ஒரு எதிர்ப்பார்பு சேர்ந்தே நட்பு என்ற உறவு பயணிகின்றது. என்ன ஈசன் அமைதியாக இருக்கின்றாய்?? இல்லையே!

 காலமாற்றம் உன் முகத்திலும்; நட்பிலும் பல மாறுதல்களைத்தந்து இருக்கு போல!

 பரதன் நீ எதை மனசில் வைத்து பேசுகின்றாய் என்று ஊகிக்க முடிகின்றது.

 ஆமா ஏன் இப்ப ஜீவனியைப்பார்க்கணும் என்ற நினைப்பு உனக்கு இங்கு இருந்து போய் 13 வருடத்தில் ஏன் இப்ப வந்தது??!

 உன்னில் எத்தனை மாற்றம் வந்து இருக்கும் வெளிநாட்டின் வாழ்க்கையில்.

நீ  அன்று பள்ளியில் பார்த்த ஜீவனியின் வாழ்வில் எத்தனை மாற்றம் இன்று 2012 இல்  வந்து இருக்கும் என்று ஏன்  சிந்திக்கவில்லை பரதன்?

 நீ வெளிநாட்டில் வாழ்வதால் இன்று பொருளாதார் ரீதியில் பல சமூகசேவை அமைப்புக்கு சுயதம்பட்டம் கருதி நன்கொடை ,அன்பளிப்பு ,என்று பணத்தை கொடுக்கலாம்.


வாங்குவோர் நீ ஒரு பெரும்புள்ளி விளம்பரப்ப அரசியல்வாதி போல என்று பொதுவாழ்வில் பலர் போல  தப்பாக் நினைக்கலாம்.


 ஆனால் நீ வெளிநாட்டில் படும் கஸ்ரம் சிந்திப்பது இல்லை. ஊழல் பணம் என்று ராசா போல நினைப்பார்கள்.

 உன்னை மட்டுமல்ல உன் போன்ற சமூகநலன் விரும்பிகள் வெளிநாட்டில் இருந்து  அனுப்பும் காசு எல்லாம் தீயவழியில் சேர்த்த பணத்தை தாய் நாட்டுக்கு சமூக உதவி என்று  அனுப்புவுவதும் ஒரு அரசியல் மூதலீடு போல சுவீஸ் வங்கி போல!

 இருக்கும் நாட்டில் மூதலீடு செய்யாமல். பிறநாட்டு நோக்கி  அனுப்பும் பணம்  மக்களுக்கு சேவை என்று    வாழும் நாட்டு அரசுக்கு நிதிபாதீடுட்டு  அறிக்கை போல வருமான வரி கட்டும்முறையில் இருந்து அரசை ஏய்க்கும் வழிமுறை என்று உன் போல பலரிடம் நிதி வாங்கும் அமைப்புக்கள் நினைக்கும் !


ஆனால் உண்மையான் சமூக சேவை அமைப்புக்கு இது தெரிந்து இருந்தாலும்! சுயவிமர்சனம் குறித்த நபர் மீது  தேவையும் இல்லை .

இதுதான் நிஜம் மை பிரென்டு !

 இன்று நீ புலம் பெயர்ந்த பின் முகநூல்,  தனிமடல். இன்னும் டுவீட்டர் என்று சமூகத்தளத்திலும் இயங்கினாலும் .இந்த ஊரில் இன்னும் அடக்குமுறையும், கட்டுப்பாடும் பற்றியும் அறியமாட்டாய்!

 ஒரு பக்கம் எப்படி அவலத்தில் கொத்துக்குண்டில்  உயிர்பிரிந்தது என்று நிதர்சன இயல்பு இங்கு தெரியாத நிலை !

கிரீக்கட் விளையாட்டு போல இல்லை! கிரீக்கட்டும் .தொடர்நாடகமும் ஒருபக்க மக்களை போதைபோல சுயசிந்தனைக்கு மீளாதாவண்ணம் இருக்கும் செயலை கச்சிதமாக ஊடகமும் அரச வால்பிடி ஜால்ரா  அமைப்புக்களும் செய்வது புலம் பெயர்ந்த பின்  நீ நன்கு அறிந்து இருப்பாய்!  


ஆனால் ஜீவனி வாழ்க்கைவிடயம் உனக்கு சொல்லாததுக்கு பலகாரணம் இருக்கு

! முதலில் நீ ஏன் கலியாணம் கட்டவில்லை 32 வயது வந்தும் சொல்லு?? ஏன் ஆன்மீகம் என்று சபரிமலை யாத்திரை உன் நட்புக்களுடன்  போறாய் உருகும் பிரெஞ்சுக்காதலி  உன் நண்பன் வெட்டிப்பயல் உனக்கு முக்கியமா?, இல்லை நான் முக்கியமா??

உங்க ஊரில் உனக்கு கோடியில் சீதனம் ;கொழும்பில் வீடு; யாழில் கடை என்று வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு விலைபேசும் நிலையில் இருந்து நீ ஏன் ஒதுங்கினாய்! செய்வாயா?,  செய்வாயா?, என்று கேட்க இது என்ன தேர்தல் நேரமா மச்சான்?,
!

இன்று உனக்கு உலகத்தில் பலர் முகம் தெரியாமல் நீ பதுளை வந்து இருப்பதும் அறியாமல்; முகநூலில் நிலைத்தகவல் மற்றும் ;கும்மி அடிக்கலாம் மச்சான்!

 ஆனால் என் நண்பன் அமைதியாக நல்லாக வாழவேண்டி நினைப்பது என் மனசு!

அதுதான் ஜீவனி பற்றி இன்று பேசவில்லை இது முகநூல் போல இல்லை எதுவும் பேசலாம் விருப்பு வாக்கு வாங்கலாம் என்பது போல இல்லை .


ஜீவனியும் அவங்க அப்பாவும் முரண்பட்ட நிலை உனக்கு நான் சொல்லவில்லை ஒரு நண்பனாக !

ஆனால் உங்க அப்பா உனக்கு  இன்றுவரை சொன்னாரா ??
இல்லையா என்று நான் அறியேன் நண்பா  அதுதான் பொறுப்பு; எதிர்பார்ப்பு; பாசம் இது உனக்கு புரியுமா??

! நண்பா இப்ப சொல்லு ஒரு வாழவெட்டி ஜீவனிக்கு நீ வாழ்வு கொடுக்க நீ என்ன அவள் வருவாளா அஜீத்தா மச்சான்?,

ஈழத்து  புதுநாவல்   படித்திருப்பாய் சிலநேரம்   ஒரு நாவல் சொல்லும் செத்தவன் பொண்டாட்டியை கட்டினாலும் விட்டவன் பொண்டாட்டியை கட்டுவது தொல்லை என்று இதுதான் ஆணாதிக்கம்!!!


\


இன்னும் தவிக்கின்றேன்......

19 May 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-29

எதிர்பாராத நேரத்தில் முன் தோன்றி என் நண்பன் இவன் என்று அவன்தோளில்  கைபோடும்போது நட்புக்குள் வரும் சந்தோஸமும், சங்கடமும் வார்த்தைகளினால் விபரிக்கமுடியாத உணர்ச்சிப்பெருக்கு புன்னகைதேசம் தருன் போல ! 

என்ன ஒரு திடீர்திருப்பம் பரதன்? உன்னை இங்கு எதிர்பார்க்கவில்லை!
 ஒரு வார்த்தையும்  தொலைபேசி/ ஸ்கைப்பில்  ஏதும் பேசலையே ?,

நண்பா வா வா முதலில் வீட்டுக்குள் என்று ஈசன் அழைகவும்!

, அவன் தாய் செல்லம்மா என் கண்களை நம்பமுடியுது இல்லை! என்ன தம்பி ?இப்படியா திடீர் என்று ?ஒரு கடதாசியோ ,ஒரு அழைப்பிலோ ஒரு வார்த்தை வருவதாக் சொல்லி இருந்தால் உங்களை வரவேற்க விமான நிலையம் வந்து இருப்போம் நாம்.

 சொல்லாமல் வருவதுதானே உண்மையான உறவுக்கு அழகு அம்மா !இருந்து பேசுங்க ஒரு தேனீர் போடுகின்றேன் என்று அடுப்படிப்பக்கம் செல்லமா உள்நுழைய.

 அம்மா ஒரு கோப்பை தேனீரும் ஒரு கூடைத்தேசமும் போலவா ??இன்னும் கவிதை படிக்கின்றீயோ பரதா ?

நீ விட்டுப்போன கவிதைத்தொகுதி இன்னும் என்னிடம் இருக்கு
! ம்ம்!!

 அப்புறம் சொல்லு பரதா என்னடா ஒரு விசயமும் சொல்லாமல் கொள்லாமல் இப்படி குசேலன் பட ரஜனிபோல வந்து இருக்கின்றாய்? 

இல்லை ஈசன் 10 நாளில் தாய்நாட்டை மீண்டும்  பார்த்துப் போவம் என்ற ஆசைதான். அது புலம்பெய்ர்ந்த  ஈழ்த்து பிறப்பு  பலருக்கு இருக்கும் தீராத ஆசை அல்லது ஏக்கம் இது  எல்லாருக்கும் கிடைக்காத வரம்  அது தனிக்க்தை மச்சான் அது எழுதியோ! சொல்லியோ!! புரியாது பலருக்கு அயல்நாட்டு வெளியுறவுக்கொள்கை போல

!ம்ம் ஆனாலும் விதிவிலக்காக எனக்கு இங்கு வர சந்தர்ப்பம்  கிடைச்சு இருக்கு!



 . ஆமா எங்க அப்பா?

 அப்பா  கொழும்பு போய் இருக்கின்றார் ஒரு வேலையாக

 ! இந்தாங்க தம்பி இதையும் சாப்பிட்டுப்பாருங்க .

 எனக்கு தொதல் இன்னும் பிடிக்கும் என்று எப்படி அம்மா தெரிஞ்சு வைத்திருக்கின்றீங்க ?

 அதுதான் பாரிசில் இருந்து ஸ்கைப்பில் பேசும் போதெல்லாம் ஞாபகப்படுத்துவீங்களே!

 . ஆமா பரதா உன் அப்பா அம்மா எப்படி இருக்கின்றாங்க? 
நல்லா இருக்கின்றாங்க ஊரில்.

 ஏன் அவங்களை கூட்டியரல ?
 இல்லை நான் இங்க வந்துவிட்டு இனித்தான் ஊர் போவதாக திட்டம் அம்மா .

 முதலில் ஈசனைப் பார்த்துட்டுப்போக ஆசையாக இருந்திச்சு.

 என் இனிய நண்பன் அவன் தானே ! 

அவன் என்னை மறந்தாலும் நான் மறக்கமாட்டேன் ! 

எம்புள்ளை ஈசன் உங்க புராணம் தான் இங்க எப்போதும் சாப்பிடும் போதும்கூட உங்க பள்ளி பிரென்ஸ் யார் வந்தாலும் விகடகவி போல் கதையளக்கும் .

நீ பாரிசில் இருப்பது பற்றி. அதுசரி .

ஏனோ சிலவிடயத்தை மறைச்சிட்டான் ! 



ஓ உங்க நட்புக்குள் சமாதான தூதுவர் போல நான் வரல.

 இருங்க தம்பி சாப்பாடு தயார் செய்கின்றேன் . 

ஆமா எங்க தங்கி இருக்கின்றீங்க ?

உங்க உறவுக்காரங்க எல்லாம் இங்க இருந்த கடைகள் மூடிப்போய் மிச்ச வருசமாகுதே? 

ஆமா காலமாற்றத்துக்கு ஏற்ப தங்களை புதுப்பிக்க முடியாதவங்க ஒரு காலத்தில் பிரபல்யமான சினிமா ஹீரோ போலத்தான்! தங்களின் காலம் முடிய இடத்தைக்காலி செய்ய வேண்டியநிலை.

நான் இங்க வாடிவீட்டுல் தங்கி இருக்கின்றேன் அம்மா .

என் பாரிஸ் நண்பன் இங்கு சுற்றுலா வருவான் அதுனால் முன்னாடியே நான் இங்கு உதவியாக தங்குமிட வசதி செய்து தருவதாக பாரிசில்  ஏற்கனவே சொல்லியிருந்தேன்.. சமயத்தின்போது பொய் சொல்வதும் தப்பில்லை என்று வள்ளுவரே சொல்லியிருக்கின்றார் .

என்று மனதில் நினைத்துக்கொண்டான் பரதன்.

.அப்புறன் ஈசன் வா வெளிய போய்ட்டு வருவோம். இப்பவா ?,

அதுதான் தம்பி பரதன் கூப்பிடுகின்றானே? நீ என்ன கங்காணிவேலையா பார்க்கின்றாய் ?,

சத்த வெளிய போய்ட்டுவா என்று ஈசனை அம்மா விரட்டியது பரதனுக்கு தனிமையில் பேச சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்று சந்தோஷப் பாட்டாலும்! ஈசனுக்கு இவனின் உள் நோக்கம் அறியாமல் அம்மா என் தலையை அல்லவா நுழைக்கின்றா தேரதலில் தோற்ற கட்சித்தலைவர் நிலையில்.

 என் இப்போதைய  நிலையில் வெளியில் செல்ல முடியாது. ஊடகவியலாளர் கேள்விபோல அல்லவா!

 இவன் இன்று கேள்வி கேட்கப்போறான்! எப்படியும் ஜீவனியை பற்றி விசாரிக்கப்போறான்!

 கடவுளே நீதான் எனக்கும் துணைவரவேண்டும் !
இவன் மீண்டும் ஜீவனி  நீதானே என் பொன் வசந்தமே  என்று பாடாமல் விடணும்!




தொடரும்.....

//கங்காணி- மேற்பார்வை தொழில் .விளக்கம் பரதேசி படம்!
தொதல்- அரிசிமாவுடன் சேர்த்து  தேங்காய்பாலில்  செய்யும் ஒரு பலகாரம்
சத்த-கொஞ்சம் 

16 May 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-28

"இந்த ஊருக்கு ஒரு நாள் வருவேன் அதுதான் எனக்கு திருநாள் "என்ற மாவை வரோதயம் பாடல் அவர் இன்று இவ்வுலகில் இல்லை என்றாலும்!

 ஈழத்து மெல்லிசையில் என்றும் உயிர் வாழும் !அது போல இந்த ஊரில் இருந்து என் தந்தை விலகிச்சென்றாலும் இன்னும் நெஞ்சில் ஞாபகபங்கள்  மெல்லிசை இன்று துள்ளிசையில் மீள்கலவை போல சுருதி மீட்டும்.



 முன்னர் பார்த்த நகரா இது,?, என்பது போல இன்று இந்த நகரம் அதிக அடிப்படை இயல்பை புதிய நிர்மான கட்டிடங்கள்,பல்பொருள் அங்காடிகள் என்று பதுளையும் நவீன திரையரங்குபோல் பளபளத்தாலும்!



 இன்னும் மக்களின் மனதில் தோட்டத்தொழில் மட்டும் மாற்றம் காணாத நிலயை என்ன சொல்வது? 

எப்போதும் புதிய  ஊருக்குப் போகும் போது விடுதியில் தங்கும் நடைமுறையை வெளிநாட்டு வாழ்க்கை தந்து இருக்கு !

அதுவும் தனித்துவத்தைப் பேணா உதவும் காரணியாக அமைந்துவிடுகின்றது.

 இந்த ஊரில் பல நட்புக்களின் வீட்டில் தங்கும் வசதி வாய்ப்பு நிச்சயம் எப்போதும் இருக்கும்
 ஆனால் என் தனிப்பட்ட விடயத்தினால்  யாருக்கும் எந்த அசெளரியங்களும் வரக்கூடாது என்பதே என் ஆசை.!


 நான் வணங்கும் என் குருவே.!

 எனக்கு வழித்துணை வரவேண்டும். 



பதுளையில் இருந்து பண்டாரவளை போகும் வீதியில் இருக்கும் வாடிவீட்டில் தங்கும் வசதியை ஏற்படுத்திவிட்டு கையோடு எடுத்து வந்திருந்த அன்பளிப்புடன் ஈசன் இருக்கும் புதிய வீடு பதுளைப்பிட்டி என்ற முகவரியைத்தேடி நடந்தான் பரதன் .

கருணாநிதியின் மனிதசங்கிலி பேரணி போல  முன்னர் இந்த இடங்கள் அறிந்தபடியால் நடைப்பயணமாக வீல்ஸ்பார்க ஊடாக நடந்தான் பரதன்!

 மீண்டும் நீயா?, ஊருக்குள் வந்துவிட்டாயா??
 என்று கேட்பது போல இருந்தது தேவனின் கோவில் நிலைத்தூண்!

 காலமாற்றத்தில் கோவில் நவீன மாற்றங்களையும், புதிய முகங்களையும் காணக்கூடியதாக இருந்தாலும்!

 இந்த ஊருக்கு இன்று ஒருநாள் முதல்வன் போல புதியவன் என்ற எண்ணத்தோடு விரைந்தவன் பயணத்தின் வேகத்தை அறிந்த இயற்கையும் அவனோடு வேகமாய் நேரத்தினை ராமராஜனின் பட சிலம்படிச்சண்டை போல சூழற்றியது !

இந்த வீதியில் இருந்த கல்லூரியில் தான் முன்னர் பலரின் வாழ்வில் பட்டதாரிகள் என்ற கனவையும் ஒரு மதவாதத்தீ எரித்த கதை எல்லாம் என் நண்பன் சொல்லியது இன்னும் ஞாபகத்தில்




! ஒரு கல்லூரியின் கதை போல !

இந்த கல்லூரி வாசல் கடந்து போன பைங்கிளிகளின் வாழ்க்கைப்படகு புலம் பெயர்தேசங்களிலும் இன்னும் பள்ளிக்கூடம் போல ஆட்டோக்கிராப் என்று மனதில் ஒரு பூஞ்சோலை தான்! 


ஒவ்வொருத்தரும் தங்களின் கதையை மீட்டினால் பாலச்சந்தரின்  ரயில் சினேஹம் நாடகம்  போலத்தான்..


 தேடிய முகவரி எதிரில் என்பதை உணர்ந்தவன் ஈசனின் வீட்டு வெளிவாசல் அழைப்பு மணியினை அழுத்தினான்! 

இன்னும் தவிக்கின்றேன் இப்படி!