10 May 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-வெள்ளிவிழா!!!

போர்க்களத்தில் புற முதுகு காட்டாமல் போரில் நெஞ்சில் குண்டு வாங்கி மாண்டானா?,
 என் மைந்தன் என்று பெருமை பேசிய புறநானூறு   தாய் கதைகள் ஏட்டில் இருந்தாலும்!


 இராணுவ வீரனும்/வீராங்கணையும் இந்த உலகு வகுத்து இருக்கும் மனித உரிமை என்ற பாடத்தை மறந்தும்  படிக்காத பல போர் வீரர்கள் இந்த இராணுவ தொழிலை இழிநிலைப்படுத்திய வரலாற்றினை இலக்கியமாக ஈழத்தில்  படைக்க முடியாது!!
 இனவாத தணிக்கை ஒரு புறம், ,


பாதுகாப்பு விடயம், இராணுவ ரகசியம் என்றும். இராணுவ சேறுபூசல் என்றும் .
இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை என்றும் விதண்டாவாதம் பேசும் இலங்கை அதிகாரிகளும்.. !


அயல்தேச அனுபவத்திற்கு வாசகர் கேள்விக்கு பதில் கடிதம் என்று வெற்றுக் கோஷ்ம் போடும் வெற்றிமோகன்களும். ஈழத்தில் இந்திய இராணுவத்தின் யுத்த அத்துமீறல்களும் பாலியல் வன்முறைகளும் பட்டியல் போட்டாள் பாரதமாதாவும் கண்ணகி போல பத்தினியா?, என்று படைத்தளபதிகள் பல்லு இளிப்பார்கள்.
                                                         

 பதவி மோகத்திற்கும் படைத்துறையின்  ஆளணி இருப்புக்காகவும் பாலியல் வேட்கைக்கு வடிகாலக வீதியில் போகும் அப்பாவிளும் விடுதலைப் புலி என்றும். விசாரணை என்றும் வீதீயில் வல்லுறவு செய்து வாழ்க்கையை சீரழிச்சஅப்பாவி யுவதிகளின்  வழக்குகளுக்கு எல்லாம் இன்றும் விசாரணையும் இல்லை, விலங்கிடலும் இல்லை!
                    

 இந்திய இராணுவத்தின் யுத்தமீறல்களுக்கு நிகராக இனவாத இனவேட்கையில் போரியல் நீதியை மீறிய சளைக்காத இலங்கையின் இராணுவத்தின் பாலியல் வக்கிரத்துக்கு எதிராகவும். .படைத்துறையின் ஊழல் எதையும் புதினம் என்று நாளிதழில் எழுதினால்.

 புதிய நிரூபர் தமிழ்ப்புலியோ என்று சோளாத்தொட்டிபோல செய்த சித்திரவதை எல்லாம் கதைபோல எழுதினால்!

 மணிப்பூரில் மங்கையரின் சேலை உருவும் கூட்டமும் சேர்ந்து இலங்கையின் மனிதவுரிமை நேசிப்புக்கு ஓத்து ஊதுவார்கள் ஐநா மாநாட்டில் நம் வீரர்கள் எல்லாம் சுதந்திர நேசிப்பு மன்னின் மைந்தர்கள்  புத்த்னைப்போன்று அஹிம்சாவாதி என்று

!இது எல்லாம் கிந்து ராம் எழுதமாட்டார் அவர் இரவு இலங்கை அதிபர் வீட்டில் குமட்டவே நேரம் போக்கும்  போலத்தான் குமார் நாளை உன் தங்கை கோகிலாவும் வாயும் வயிறுமாக  ஒரு வாரிசை கொண்டு வந்தால்?

 நீ நாள் எல்லாம் பெளர்ணமி படம் பிரபுபோல அருவாளை தீட்டுவாய் .இல்லை நாம் ஒருதாய் தேசத்து பிள்ளைகள் என்று பாரதவிலாஸ்  ஏம் ஆர் ராதா போல் சகிப்பு வாழ்வில்  கதை பேசுவாயா?,

 நான் அறியேன்!

 ஆனால் சந்திரா ஒரு பால்வினை நோயாளி என்று லயத்தில் பேச்சு அடிபடுகின்றது சினிமா நடிகையின்  கிசுகிசு போல அதுவும் பல பெண்களிடம்  சொக்கு என்ன சிவலிங்கம் என்ன நக்கும் நாய்க்கு .

உன் தங்கை பொண்டாட்டி என்று புதிய் பாதை சீதா போல பொதுவில் கதை பேச வெளிக்கிட்டாள் மலையகத்தில் பெண்புலி என்று ஓப்புக்கு குண்டு வைக்க ஆயிரம் வசதி உண்டு அதையும் ஜோசி !

அதுக்காக சந்திரா சில  சுயக்கட்டுப்பாடு இல்லா பல  ஆமிக்காரன் போல கேவலமான இராணுவச்சிப்பாய்  இல்லை. ஒழுக்கத்தில்  அவனும் புத்தன் பாதையில் போகும் ஒரு சீடனோ? நான் அறியேன் குமார்!

 எதுக்கும் உன் வீட்டில் பேசு .இங்க வந்த காலத்தில் ஈசனைப்போல நீயும் ஒன்னொரு நட்பு எனக்கு.
   

தொடரும்..

15 comments :

MANO நாஞ்சில் மனோ said...

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் கலங்க வேண்டாம்.

தனிமரம் said...

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் கலங்க வேண்டாம்.//நம்பிக்கைதான் வாழ்க்கை! நன்றி மனோ அண்ணாச்சி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் ஒரு பால்க்கோப்பி பரிசாக!நன்றி மனோ அண்ணாச்சிக்கு!

Unknown said...

ஹூம்.....எழுத,எழுத தீராது.உணர்ச்சியற்ற ஜடங்களுக்கு எப்படிச் சொன்னாலும் 'எருமை' மாட்டில் மழை பெய்தது போல் தான்!///நன்றாக நகர்கிறது,தொடரட்டும்.

Unknown said...

25-ஆவது பாகத்துக்கு வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

காலம் ஒரு நாள் மாறித்தான் ஆகவேண்டும்
மாற்றம் ஒன்றே நிரந்தரம்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கவலைகள் வேண்டாம் காலம் பதில் சொல்லும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தீர்ப்பு ஒரு நாள் கண்டிப்பாக உண்டு...

தனிமரம் said...
This comment has been removed by the author.
தனிமரம் said...

ஹூம்.....எழுத,எழுத தீராது.உணர்ச்சியற்ற ஜடங்களுக்கு எப்படிச் சொன்னாலும் 'எருமை' மாட்டில் மழை பெய்தது போல் தான்!///நன்றாக நகர்கிறது,தொடரட்டும்// என்ன செய்வது ஐயா!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யோகா ஐயா.

தனிமரம் said...

25-ஆவது பாகத்துக்கு வாழ்த்துக்கள்!// வாழ்த்துக்கு நன்றி யோகா ஐயா.

தனிமரம் said...

காலம் ஒரு நாள் மாறித்தான் ஆகவேண்டும்
மாற்றம் ஒன்றே நிரந்தரம்//மாறும் என்று நம்புவோமாக நன்றிகள் கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் .

தனிமரம் said...

வணக்கம்

கவலைகள் வேண்டாம் காலம் பதில் சொல்லும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றிகள் ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நல்ல தீர்ப்பு ஒரு நாள் கண்டிப்பாக உண்டு...//நம்புவோம் தனபாலன் சார்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

முற்றும் அறிந்த அதிரா said...

வாழ்த்துக்கள் ... தோப்பாகப் போகும் தனிமரத்துக்கு :).

தனிமரம் said...

வாழ்த்துக்கள் ... தோப்பாகப் போகும் தனிமரத்துக்கு :).// வாழ்த்துக்கு நன்றிகள் அதிரா நீண்ட விடுமுறையின் பின் தனிமரம் வலை வருகைக்கும் சேர்த்து!