06 May 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-23

அதிகாலையில் படுக்கையைவிட்டு எழும்பும் பழக்கம் நகரத்தைவிட கிராமத்தில் தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது.

 உறங்கி எழும் பறவையான் இன்றைய கைபேசி மணியடித்தல் போல கோழிகூவியதும் அடுப்படியில் தேநீர் தயாரிக்கும் பாட்டிமார்களை நடைமுறையில் பார்த்த இறுத்தித் தலைமுறை நாமாக்தான் இருப்போம்.!

 நாகரிக வளர்ச்சி கிராமத்தையும் தன் இயல்பில் இருந்து முன்னேற்றம் என்ற போர்வையில் முக்கிய வாசல் சம்பிராதயங்களை எல்லாம் தூசுதட்டி மலையேற்றம் செய்துவிடுகின்றது.

 காலமாற்றம் என்று கைகொட்டிச்சிரித்தாலும் காலம் காலமாக் கொழுந்து பறிக்கும் கைகளின் வாழ்க்கை மட்டும் வீதியில்  கொட்டிக் கிடக்கும் கொழுந்தைப் போல விடியாத புரியாத அவலத்தை பொது வெளியில் வேட்டி கட்டிய வேடதாரிகள். நெஞ்சைப் பிளர்ந்த நரசிம்மர் போல பிளப்பது இல்லை.


 இன்றும் 2012 இல் இந்த  மலைப் பாங்கான  வீதியில் கூடைக்கொழுந்துக்காக அதிகாலையில் பிள்ளை மடுவத்துக்கு  கைக்குழந்தையுடன் போகும் காட்சியை கண்டியில் இருந்து ரந்தனிக்கல ஊடாக பதுளை போகும் வழியில் காணும் போது!

 நினைவு ஜீவனியை மறந்து  பழைய கதாநாயகி  மோகம்  போய் புதிய இளவட்ட நாயகி மோகம் கொள்ளும் ஜொல்லு ரசிகன்  போல  ஈசனின் அத்தை மகள் கோகுலாதான் நினைவில் இன்னும்!


. கோகிலா மலையகத்தின் எழில் போல இயற்கை என்னும் இளைய கன்னி !அழகுக்கு தமிழில் தொகையை விபரிப்பது  என்பது பஞ்சம் தான் !மலையகத்தில் வேலை வாய்ப்பு போல! 

கோகிலாவுக்கு வயது என்னவோ அப்போது 1998 இல் 17  வயது பருவ நங்கை . சூரியன் படப்பாடல் பதினெட்டு வயது இளமொட்டு  போல இல்லை!

 குடும்ப வறுமையில்  பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி விட்டு நம்நாட்டின் முதுகெலும்பான  தேயிலையின் கொழுந்து பறிக்க தோட்ட வேலைக்குப்  போன அப்பாவி!!


ஆசையாகப் பேசுதலும், அன்பான பரிசாக அதிவுயர் இலத்திரனியல் பரிசுகளும் ,அதிக விலையுயர்ந்த  உடையும் கொடுக்கும் அயல் வீடு போன்ற லயம் முன் குடியிருப்பில் இருக்கும் சந்திரா என்ற பெரும்பாண்மை யுத்த வீர்ன் இங்கை இராணுவ  தொழிலாளி்யுடனான மோகம்     நினைவிருக்கும் வரை படம் போல பால்வினை நோய் என்ற அரகன் விடயமும்  வேதம் புதிது போல அப்போது புதிது! என்றாலும் ரந்தனிக்கல நீர் வீழ்ச்சி போல நெஞ்சில் ஒர் ராகம்! 


இன்று எயிட்ஸ் என்பது பலரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு நோய்!

 ஆனால் 2000 ஆண்டு முன் இது ஒரு பால்வினை நோய்! என்றும் விரைவில் மரணம் உறுதி என்றே பலரும் நினைத்தார்கள் .!

!போதிய விழிப்புணர்வு இல்லாமல் மார்ப்பு புற்று நோயையும், வாழ்வே மாயம் படம் போல இரத்தப்புற்று நோய் என்றும்! குணப்படுத்தக்கூடிய மூளைக்கட்டியை நினைவே ஒரு சங்கீதம் போல குணப்படுத்தும் வழி தெரியாத குடும்பங்களின் கதை எல்லாம் ஏட்டிலும் வராது,!



 தொலைக்காட்சியிலும் சொல்வதெல்லாம் உண்மை என்று சொல்லாத சோகம் எல்லாம் எழுத பல தொடர் இருந்தாலும் இந்த நாட்டில் வாரயிறுதி சஞ்சிகையில் 32 வது பக்கத்தில் ஹிட்சு இல்லை!

 ஆசிரியர் தீர்ப்புத்தானே! முதல் வாக்கு மூடியிருக்கும் வலைப்பின்னூட்டம் போல! இந்த மலையகத்து நிதர்சனம் பல இன்னும் இந்த மலையக முகட்டில் ஞாபகத்தில் வந்து போகின்றது.எழுதும் வரம் கிடைதால் நானும் எழுதுவேன் வளரும் முள்மரம் போல ஆனால் எனக்கு எழுதும் திறமையில்லை!ம்ம் !



  இதய வால்பு மாற்றுச் சத்திரசிகிச்சையான  சாதாரண சிகிச்சையான  கண்ட நாள்முதல் படம் போல எல்லாம் இயலுமான நோய் நிவாரணிகூட இந்த மலையகத்து வாசலுக்கு இன்னும் மடைதிறக்கவில்லை!

 திறந்தது எல்லாம் மாவிலாறு நோக்கி நாம் வெல்வோம் என்ற இனவாத படைத்திறப்பும் இன்னும் பலசேனா என்ற இன்னொரு மேலாண்மை மகுடியும் தான் §

இதுவும் முன்னர் ஆட்சியில் சிங்கள வீராவித்தான என்ற இனவெறியான  ]பிரெஞ்சு சோங்குலோத்துங்கின்   தோற்றத்தின் இன்னொரு மறுவடிவமோ!

 ஆட்சியாளர்களின் கைப்பிள்ளையாக இனவெறியோ  இதுவும் தென்னாலிராமன் வேசம் போட தன் வாழ்வை தொலைத்த ஹீரோ தான் அறிவான்!   

//


இன்னும் தவிக்கின்றேன்...
குறிப்பு....

லயம்-மலையக மக்கள் குடியிருப்பு வீட்டு அமைப்பு.
பிள்ளை மடுவம்-குழந்தை பாராமரிப்பு நிலையம்.
கண்டி- செங்கலடி பழைய் பாதைஏ -5  இந்த ரந்தனிக்கல வீதி.
சிங்கள வீரவிதாரன ஒரு இனவாத  அமைப்பு /அதன் செயலாளர் -சம்பிக்க ரணவக்க! இன்று ஆளும் கட்சியில்!ஹீ 
பலசேனாஇன்று2014 புதிய பெளத்த இனவாத வேஷ காவிகள் இவர்களை இயக்கும் செயலர்!ஹீ இன்னும் நாடு கானும் ஆசையுண்டு ஏதிலிகளுக்கும்!ஹீ!


தமிழ் மொழி சொல்லும் ஆசான் இங்கு-http://thalirssb.blogspot.com/2014/05/How-is-your-Tamil-knowledge-54.html

6 comments :

MANO நாஞ்சில் மனோ said...

அதிகாலையில் படுக்கையைவிட்டு எழும்பும் பழக்கம் நகரத்தைவிட கிராமத்தில் தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது//

ஊரில் இப்போதும் ஆறு மணிக்கு மேலே எங்களை அம்மா உறங்க விடுவதில்லை, ஆனால் அதே மும்பையில் லீவு நாட்களில் சொன்னால் நம்ப மாட்டீர்கள், மதியம் ரெண்டு மணி வரை சத்தமே காட்டாமல் என் மகன் தூங்கிட்டு இருப்பான், நாங்க எழும்புவதோ பத்து மணி...!

ஊர் இப்பவும் உயிர்ப்பாதான்ய்யா இருக்கு, நான்கு ஐந்து மணிக்கே மக்கள் எழும்பி விடுகிறார்கள்...!

திண்டுக்கல் தனபாலன் said...

எழுதும் திறமை இல்லாதவர்கள் தான் அப்படி சொல்வார்கள்...

Unknown said...

அப்பா........எவ்வளவு யதார்த்த நிகழ்வுகள் பசுமரத்தாணி போல் பதிந்து...............!நன்று.

தனிமரம் said...

அதிகாலையில் படுக்கையைவிட்டு எழும்பும் பழக்கம் நகரத்தைவிட கிராமத்தில் தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது//

ஊரில் இப்போதும் ஆறு மணிக்கு மேலே எங்களை அம்மா உறங்க விடுவதில்லை, ஆனால் அதே மும்பையில் லீவு நாட்களில் சொன்னால் நம்ப மாட்டீர்கள், மதியம் ரெண்டு மணி வரை சத்தமே காட்டாமல் என் மகன் தூங்கிட்டு இருப்பான், நாங்க எழும்புவதோ பத்து மணி...!

ஊர் இப்பவும் உயிர்ப்பாதான்ய்யா இருக்கு, நான்கு ஐந்து மணிக்கே மக்கள் எழும்பி விடுகிறார்கள்...!!ம்ம் என்ன சொல்வது காலமாற்றம் அண்ணாச்சி! நன்றி முதல் வருகைக்கு நாஞ்சில் மனோ ஒரு பால்கோப்பி குடியுங்கோ§!

6 May 2014 17:11 Delete

தனிமரம் said...

எழுதும் திறமை இல்லாதவர்கள் தான் அப்படி சொல்வார்கள்...// ஆஹா நான் அறியேன் தனபாலன் சார்!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அப்பா........எவ்வளவு யதார்த்த நிகழ்வுகள் பசுமரத்தாணி போல் பதிந்து...............!நன்று.//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.