31 May 2014

தாலியோடு தனிமரமாக தவிக்கின்றேன் ---33

வாழ்க்கை வாழ்வதற்கே ஆயிரம் சோகம் ,ஆயிரம் தடைகள் அலையென அடி கொடுக்கும் !

அதுக்காக போருக்கு அஞ்சி ஓடும் முன்களப்பணி வீரன் போல் இருக்கக்கூடாது!

எதிர்நீச்சல் போல எதிர்கொண்டே வாழும் கலையை கற்றுக்கொள்ளவேண்டும் நாம்!

அரசியலில் நீங்க ஆயிரம் தேர்தல் பிரச்சாரம் பார்த்து இருப்பீங்க. ஆனால் மகள் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தீர்களா ??

உங்க பேச்சுக்கெல்லாம் எதிர்ப்பதில் சொல்லி இருப்பாளா ஜீவனி? உங்க விருப்பத்துக்கு தலையாட்டி பொம்மைபோலத்தானே எல்லாத்துக்கும் !அதிகாரம் பலம் கொண்ட ஜனாதிபதி போல நீங்களும் விட்டுக்கொடுக்கவில்லை அவளின் ஆசை அறிந்து.

 இப்ப  வாழவேண்டிய காலத்தில் விவாகரத்து வாங்கிவந்து வீட்டில் இருக்கும் பெண் பற்றி கொஞ்சமேனும் சிந்தித்தீர்களா ??

பொது வாழ்க்கையும் வேண்டாம் என்று நீங்கள் ஒதுங்கியிருப்பது எதிர்க்கட்சிக்கு இன்னும் இளக்காரம் போல இருக்கும்.அரசியலில் தோல்வியும் வெற்றியும் சகயம் பொன்னாடைபோல!யானைப்பாகன் கூட பலதடவை தோற்றும் இன்றும் விட்டுக்கொடுக்காத தலைமைத்துவத்தில் மலையட்டை போல இருக்கும் போது அவனோடு கூட்டணி சேர்ந்த உங்கள்  தனிக்கட்சி மட்டும்


  தேர்தல் திணைக்கழத்தில் பதிவு செய்த கட்சியாக பெயரளவில் இருந்தால் சரியா ?,


எல்லாம் சிந்திக்காமல் இருப்பது தான் உயிர் இருந்தும் அசைவில்லாத கோமா நிலை  என்பது!  அது போலத்தான் இப்ப ஜவனியும்.

 ஜீவனியின் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டும் என்பதே என் ஆசை! சுற்றிவளைச்சுப் பேசாமல் விடயத்துக்கு வாரன் நான் ஜீவனியை தாரமாக் ஏற்றுக்க தாயார இருக்கின்றேன்.

 நீங்கள்தான் எடுத்துச் சொல்ல வேண்டும் ஜீவனியிடம். நானும் பேசுகின்றேன்!

  .தம்பி பரதன் நீ இப்படி தேர்தல் மேடைப்பிரச்சாரம் போல  பேசுவது அழகுதானோ?, என் மகள் இது வரை ஏன் விவாகரத்து வாங்கினால் என்றுகூட பெற்ற தாய் எனக்குத் தெரியாது !

அவளுக்கு இப்ப மனம் விட்டுப்பேசும்   நல்ல தோழிகள் யாரும்  இல்லை.

 இந்த வீட்டில் கூட ஒரு சிறைப்பறவை போலத்தான் வாழ்கின்றால்!


இந்த நிலையில் நான் எப்படிப்பேசுவது என்றாள் ஜீவனியின் தாய் மீனாட்சி!


ராம்குமார் நல்ல பையன் என்றுதான் எங்க குலத்தில் கட்டிவைச்சோம். அவனும் இவளைப்புரிஞ்சுக்கிடலை இன்னொரு துணைதேடி போய்விட்டான் ஆசை அறுபது நாள்  மோகம் முப்பது நாள்  என்பது போல!

 இவளோ இப்ப சமூகநலச்சேவை என்று குழந்தைகள் காப்பகத்தை நிறுவகிப்பதும், எதுவும் கேட்கமுடியாத   கையறு  நிலையில் நாமும் வெற்றி பெற்றும் ஆட்சியில் கூட்டணி  இல்லாத கட்சி போல!

 கேட்டாள்" கட்டிவைத்தவன் நல்லாத்தானே பார்த்துப் பார்த்து செய்தீங்க பேசாமல் என்னை ஜாதித்தீயிட்டுக் கொழுத்திவிட்டு"

 அரசியலில் மலின அரசியல் செய்து இருக்கலாம்! பிரதேசவாதம், இனவாதம் என்று வார்த்தையை தீயாக் கொண்டுபளிடம் எப்படி மனதில் உறுதி வேண்டும் படம்போல பேசமுடியும்?,

 நீ நல்லது செய்வியோ இல்லை உன் வழியில் போவாயோ தெரியாது! எங்கவிதியை நினைத்து நாங்களே நாலுசுவருக்குள் அழுவதும் அரசியலில் சிரிப்பதும் ஒரு நாடகம் தான்!


நான் ஜீவனியிடம் பேசுகின்றேன்..தம்பி இங்க வேண்டாம் அவள் இருக்கும் குழந்தைகள் காப்பகத்தில் போய் நேரில் பேசுங்க!

தம்பி ஈசன் ஜீவனி  இருக்குமிடம் நீ அறிவாய் அங்கு போ!

 பேசுங்க நல்ல சேதியோடு வாங்க என் வீட்டிலும் வெளிச்சம் வரும் போல இருக்கு தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கிடைக்கும் என்பது போல!

வருவோம் அத்தை!

எதையும் அயல்நாட்டு   நிதர்சனநிலை  புரியாத  எதிர்கால வல்லரசுக் கனவுப் புதிய பிரதமர் போல முத்தையா !

இன்னும் தவிக்கின்றேன்....


12 comments :

ஒன்னும் தெரியாதவன் said...

நண்பா இப்போதுதான் கண்டேன் முழுவதையும் வாசித்துவிடுகிறேன், சூப்பர்

கரந்தை ஜெயக்குமார் said...

//எதிர்நீச்சல் போல எதிர்கொண்டே வாழும் கலையை கற்றுக்கொள்ளவேண்டும் நாம்!//
உண்மைதான் ந்ண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

// உயிர் இருந்தும் அசைவில்லாத கோமா நிலை // அருமை...

”தளிர் சுரேஷ்” said...

தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

Unknown said...

பெண்கள் மனது புரியாத புதிர் தான்,கலிகாலத்திலும்!பார்ப்போம்.

காற்றில் எந்தன் கீதம் said...

nesan i know who is jeevani i think... but no idea about barathan... mmm parkkalaam...

தனிமரம் said...

நண்பா இப்போதுதான் கண்டேன் முழுவதையும் வாசித்துவிடுகிறேன், சூப்பர்// வாங்க இலியாஸ் முத்ல பதிவுக்கு வருகைக்கும் முதல் என் தளத்துக்கு வருகைக்கும் பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நண்பா இப்போதுதான் கண்டேன் முழுவதையும் வாசித்துவிடுகிறேன், சூப்பர்// நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

உயிர் இருந்தும் அசைவில்லாத கோமா நிலை // அருமை...// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

1 June 2014 04:12 Delete// நன்றி சுரேஸ் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

பெண்கள் மனது புரியாத புதிர் தான்,கலிகாலத்திலும்!பார்ப்போம்.//ம்ம் நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

nesan i know who is jeevani i think... but no idea about barathan... mmm parkkalaam..//ஹீ வாங்க தோழி படியுங்கோ பாருங்கோ!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் காற்றில் என் கீதமே!