16 November 2014

பிரிவோம் சந்திப்போம்....

என்னையும் என் தனிமரம் வலையையும் 5 கண்டத்திலும் அறிய  ஏதோ ஏதிலி தமிழ் ஆசையில் கிறுக்கும் தொடர் என்றாலும் ,கவிதை போல மொக்கை என்றாலும், தனிமரம் நேசன் யார் என்றே புரியாத நட்புக்களுக்கு முகம் கொடுத்தது ஐபோன் என்பேன் !






ஆனாலும் துரஸ்திஸ்ரம் ஏன் எனக்கு ஐபோன் ஆசை வந்தது ஏன் ,?????,



தனிமரம் என்று இந்த வலைக்கு வந்தேன்??,






 இந்தவலையில் நான் ஏன் தனிமரம் ஆனனேன் ???சமரசம் இல்லாத கோபமா இல்லை ,நடுநிலை முக்கியம் என்பதால் தானா ??அல்லது ஹிட்சு என்ற மாயமானை பிடிக்கும் தொழில்நுட்ப வசதி அறியாத படிக்காதவன் என்பதா?, ஆனாலும் இன்னும் இருக்கின்றேன் ..





தனிமரம் வலையில் இது என் சுயம் பேசும் ! யாருக்கும் ஜால்ரா போடத என் பாதையில் இந்த வலை தந்த உள்குத்து இன்னும் நினைவில் இருக்கு!






 ஆனாலும் சூடு போட்டு என்னை வலையில் வளர்த்த மூத்தவர்கள் இன்றுவலையிலும் இல்லை. புதிய வருகை என்ற  முகநூலிலும் இல்லை !ஆனாலும் தனிமரம்  நேசன் இன்னும் இருக்கின்றேன் இரண்டிலும் !ஹீ





 அதுக்கு காரணம் என்னையும் ஒரு நட்பாக ஏற்ற நிஜமான வலையுறவுகள் என் பேன்! ஆனாலும் முகநூல் மூலம் வலைக்கு  வந்தது  முதல் என்கையில் இருந்து 2 ஐபோன் களவு போனதும் என் தோல்விதான். ஆனாலும் என்னையும் நேசிக்கும் முகம் தெரியாத உங்கள் பலருக்கு தனிமரம் கமடியன் என்றாலும் வலை மூலம் உறவான் என் தங்கை வாத்து சொல்லுவா நான் ஒரு வழிப்போக்கன் பாசமான் அண்ணா என்று!





 அந்த பாசத்துக்கு முன் இன்றுவரை தனிமரம் ஏதிலிதான் கலை என்று வலையில் வரும் கருவாச்சி கறுப்பா /சிவப்பா/படிப்பு என்ன ஊர் ஏது என்று இன்றுவரை அறிய முயலும் தேவையில்லாத ஒரு உறவை இந்த வலையுறவு உண்மையில் தரமுடியுமா ??,


என்றால் முடியும் என்பதுக்கு தனிமரம் ஒரு உதாரணம் என்று சொல்வேன் தங்கையும், அண்ணாவும் கவிதை எழுதினால் அன்பில் வரும் கவிதை தனித்துவம்.இது சிலருக்கு கோபம் தரும் என்றாலும் கும்மி அடிக்க என் தங்கை போல முடியாது என்னாலும் !






ஆனாலும் என் தங்கைக்கும் அன்பில் சினேஹாமீது  கோபம் கொள்வது நம் குடும்ப இயல்பு!


ஹீ
 சரி விடயம் இதுதான்.

 இந்த வருடத்தில் தனிமரம் அதிகம் வலைப்பதிவு எழுதவில்லை தனிப்பட்ட இல்லற/பொருளாதார மாற்றம்  இது எல்லோருக்கும் வரும் இயல்பு எனக்கும் இந்தாண்டு பல பாலபாடம் படித்தேன்/ கற்றேன். அதுவே என் திருப்புமுனை  என்றாலும்.

 இந்தவருடம் எனக்கும் ஒரு விருது கிடைத்தது ஒரு தொடருக்காக!ஆனால் பலருக்கு பின்னூட்டம் போடவில்லை காரணம் மொய்க்கு மொய் என்றும், ,வலையில் வரவேற்பது இல்லை தனிமரம்!.


ஆனாலும் பின்னூட்டப்புயல் தனபாலன்சார் .மற்றும் யோகா ஐயா போன்றோரின் தொடர் ஊக்கிவுப்பும் அஞ்சலின் ,அதிரா,ரூபன்.கரந்தை ஜெயக்குமார், சொக்கலிங்கம் ஐயா, மகேந்திரன்,நாஞ்சில் மனோ,துளசிதரன், யாழ்பாவண்ணன், சீனி. தளிர்சுரேஸ்  என்று இன்னும் பலர் அடிக்கடி உசுப்பியதால் ஏதோ கொஞ்சம் எழுதியாச்சு ஹீ .




  இது தனிமரம் பதிவு 612!!அத்தோடு பின் தொடர்வோர் பட்டியல் 177 இதுவும் ஒரு ஹிட்சு தனிமரத்துக்கு!ஹீ!


 என்றாலும் தொடர்ந்து தொடர் எழுதுவேன் விரைவில்!!




 ஆனாலும் என் தனிப்பட்ட இன்னொரு தேடல் !!


நாளை தொடங்கும் நிலையில் §



இனி மீண்டும் தனிமரம் உங்களை நாடி புதிய ஆண்டில் சந்திக்கின்றேன் .முடியும் போது வலையில் உறவுகளின் பகிர்வுக்கு பின்னூட்டம் வரும் இனி மேல் தனிமரத்தின் வலையில் இருந்து  பதிவு வராது  !வலையுறவுகளே ,வாசகர்களே!!!!


! மீண்டும் வலையில் சந்திப்போம்! புத்தாண்டில்! என்னையும் நேசிக்கும் உறவுகளே எப்போதும் தனிமரம் என்றும் காத்து இருப்பேன்  முகம் தேவையில்லை உண்மை நேசிப்புக்கு§§

மீண்டும் சந்திப்போம் புத்தாண்டில் புதிய தொடரில்


  வழிப்போக்கன்
 தனிமரம் நேசன்.
 பாரிஸ்
16/11/14...

31 comments :

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆஹா அதுக்குள் என்னாச்சு நேசன்? மகன் பதிவெழுத விடுறாரில்லையோ? சரி சரி புது வருடத்தோடு தொடருங்கோ இடைக்கிடை ஓய்வும் தேவைதான்.

எல்லோரும் ஒரேயடியாக ஓய்வெடுக்காமல், வலையுலகில் மாறி மாறி ஓய்வெடுப்பதும் நல்லதே.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

அதுசரி உந்த அட்ரஸுக்கு கார்ட் போட்டால் வந்து கிடைச்சிடும்தானே? இன்னொரு சங்கதி.. புலியை இன்னும் பிடிக்கேல்லையாமே.. டிஷ்னிப் பக்கம்தான் உலாவுறாராம்ம்.. அந்தப் பயத்திலதான் பதிவெழுதாமல் ஒளிச்சிருக்கப் போறீங்களோ?:)..

கவனம் இருட்டில போகும்போது ஜாக்க்ர்ர்தை:).

ஆத்மா said...

மலைக்குப் போகப் போறீகளோ...
ஆகட்டும் ஆகட்டும்
மீண்டும் சந்திப்போம்

திண்டுக்கல் தனபாலன் said...

சிறிது ஓய்வு தேவை தான்...

புத்தாண்டில் சந்திப்போம்...

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தாண்டில் புதுப் பொலிவுடன் வருக நண்பரே
காத்திருக்கிறோம்

இளமதி said...

உங்கள் முயற்சி யாவும் இனிதாக அமைய இறையருள் துணையுண்டு நேசன்!

நலமோடு புதிய சக்திப் பொலிவோடு மீளவும் வாருங்கள்!

நல் வாழ்த்துக்கள்!

கார்த்திக் சரவணன் said...

மன்னிக்கவும் நண்பரே, என்னால் உங்களது பதிவுகளுக்கு அதிகம் பின்னூட்டம் அளிக்க முடியவில்லை. வருந்துகிறேன்... புத்தாண்டில் புதுப்பொலிவுடன் வரப்போகும் தனிமரத்துக்கு தவறாமல் வருகை தந்து கருத்துக்களைக் கூற முயற்சிக்கிறேன்...

Thulasidharan V Thillaiakathu said...

என்னப்பா ஆச்சு? இந்தப் பிரிவு....ம்ம்ம்ம் சில சமயங்களில் அதுவும் தேவையோ?! ம்ம்ம் சரி மீண்டும் மகிழ்வுடன் இதே புத்துணர்வுடன் சந்திப்போம்...நண்பரெ!

Yaathoramani.blogspot.com said...

ஆவலுடன் தங்கள் அருமையான
பதிவுகளை மீண்டும் எதிர்பார்த்து...
வாழ்த்துக்களுடன்...

Yaathoramani.blogspot.com said...

ஆவலுடன் தங்கள் அருமையான
பதிவுகளை மீண்டும் எதிர்பார்த்து...
வாழ்த்துக்களுடன்...

yathavan64@gmail.com said...

ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)

செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு

Yoga.S. said...

நன்று!சென்று ,மீண்டு(ம்) வருக!

Yarlpavanan said...

புத்தாண்டில் மீண்டும் சந்திக்கக் காத்திருக்கும் உறவுகளுடன் நானும் ஒருவன்!
தங்கள் பதிவுகளைத் தொடரும் வேளை
எமது ஒத்துழைப்பும் தொடரும்

ஊமைக்கனவுகள் said...

உங்களின் மீள் வருகையையும் பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி அய்யா!

விச்சு said...

புத்தம்புது பொலிவோடு எழுதுங்க.. ரயில் சினேகிதம்போலதான் இதுவும். இடையில் வருவோர் இடையில் போவார். எப்போதும்போல தொடர்ச்சியாக எழுதுங்கள். காக்கா கருவாச்சியை நலம் விசாரித்ததாகச் சொல்லவும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புத்தாண்டில் தொடங்கவுள்ள உங்களின் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.

Geetha said...

வாருங்கள் காத்திருக்கின்றோம் தனிமரம் தோப்பாக..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மூன்று ஆண்டுகளாக உங்களை நான் அறிவேன். உணர்வு பூர்வமான எழுத்துக்கு சொந்தக்காரர் நீங்கள்.விரைவில் வருகைதர வேண்டுகிறேன். நலமே விளையட்டும்

சிவகுமாரன் said...

வாழ்க வளமுடன்

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_7.html?

Anonymous said...

Late happy christmas and happy new year......2015
Vetha.Langathilakam.k

ஊமைக்கனவுகள் said...

அய்யா
வணக்கம்.
புதிய பதிவுகள் புத்தாண்டிலேனும் வருமா?
எதிர்நோக்குகிறோம்.
நன்றி

மகிழ்நிறை said...

சகோவிர்க்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

விச்சு said...

தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனம்நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Thulasidharan V Thillaiakathu said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

அன்புடனும், நட்புடனும்

துளசிதரன், கீதா

Yarlpavanan said...

தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

yathavan64@gmail.com said...

எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

"புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

என்றும் நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

http://bharathidasanfrance.blogspot.com/ said...

பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

சீராளன்.வீ said...



தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நேசன் வாழ்க வளமுடன்
நன்றி !

saamaaniyan said...

இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

இளமதி said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!