08 April 2015

முகம் காண ஆசையுடன்..-7


முகம் காண ஆசையுடன்..6
இனி...


இனவாத அதட்டலும், ஆட்சியின் அதிகார தோரணை மிரட்டல்களும் பொதுவெளியில் பேசமுடியாது  ஊமையாகிப்போன ஊமைவிழிகள் போல கதைகள் பல அச்சிலும் ,ஊடகத்திலும் அறியாத நிலைகள் ஈழத்தின் சாபம் போலும்.!!

இன்னும் சிறைகளில் வாழ்கின்றார்கள் என்ற கடவுள் போல நம்பிக்கையுடன் வாழும் நம்மவர் நிலையை எல்லாம் எந்த அரசியல் சட்டமும், வாக்குறுதிகளும், இன்னும் விடுவிக்கவில்லை.! 100 நாட்கள் நெருங்கும் நிலையிலும் .இனவாதம் எல்லாம் வாக்கு வங்கியில் அக்கரையுடன்  புலம்பும் தேசம் தானே நம்பூமி.


 வாழ்கின்றார்களா ?? இல்லை இனவாத  உக்கிர வதையில் மூச்சை அடக்கியவர்கள்  என் ஆசை மச்சான் பட ரேவதி போல அடக்கியவர்கள் நிலையை எந்த ஊடகமும் இன்னும் பொதுவெளியில் பேச மறுக்கின்றது அகிலன்.



 போலி விளையாட்டுக்கும். சினிமாவுக்கும் விளம்பரம் தேடும் பலரின் ஊடகப் பார்வையில் இன்னும் எழுதாத ஆயுத எழுத்து இன்னும் அதிகம்.


  இருக்கலாம் மச்சான் அசுரன். ஆனால் இலங்கை  சிறையில்  சொத்துப் போன பலரை  எல்லாம் ஊடகத்தில் உன்னால்  எழுதமுடியுமா.?



அகிலன் !


எல்லோரும் யுத்த அவலுத்துடன் தான் இன்னும் மெளனம் பேசியது போல  சிலதை மறந்து .அல்லது மறைத்து வாழ்கின்றோம்.

 நம்மவர் தேசத்தில் முக்கிய பதவியில் இருப்போரிடம் இன்னும் சில பொதுவெளியில் சொல்லப்படாத யுத்த தேச  சில பரம  இரகசியம் இருக்காலம் .பதவி மோகம் போய் அவர்களின் அந்திம காலத்தில் சரி.

 அப்பாவி மனிதர்களின் உயிர் மகிமையின் பெறுமதி என்றாவது ஒருநாள் வெளியீடு செய்யலாம்!



அது போலத்தான் நம்மவர் தேசத்தில் சிறையில் இருந்து வெளிவந்தவர்கள் தாம்  சந்தித்த நம்மவர்களின் கதையை எங்காவது பதிவு செய்லாம் கற்பனை ஊடாக  !



அதன் மூலம் சரி என் பூஜாவின் நிலை என்ன என்பதை  அறிந்து கொள்ளும் ஆசையில் தான் முகநூல்/ வலையில் என்று தேடலில் சிலருடன் தனிப்பட்ட அழைப்பை நாடிப்போறன் !

 அதுக்காக என் சுயத்தை இழந்து அல்ல . முகநூலில் அல்லது வலையில் இச்சையுடன் யாரையும் தேடவில்லை அகிலன் .

 மச்சான் அசுரன் உன்னை நான் சந்தேகிக்கவில்லை  ஆனால் ஸ்கைப் அழைப்பிள் சுமா வருவாள் என்று நீ  உருகுதே மருகுதே என்று துடிப்பதைத்தான் நெருடலாக இருக்கு

.இல்லை மச்சான் சுமாவும் ஈழத்தில் சிறையில் சீரழியும் நம் இனத்தின் முகத்தினை நம்நாட்டில் ஊடகத்தில் துணிந்து எழுதும் ஒரு பத்தி எழுத்தாளினி.

 அது போல வலையில் ஒரு பதிவாளினி முகநூலில் வெட்டி பேசும் நாட்டாமை பட செந்தில் போல போலியாக  இருந்தாலும்  சுமாவிடம் பூஜா பற்றி ஏதாவது தகவல்  அறியும் ஆர்வத்தில் இருக்கின்றேன்...


இன்னும்  முகம்   காணலாம்............

8 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

எழுத்தாளினி பற்றி அறியும் ஆர்வத்தில் இருக்கிறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

வலிகள் என்றும் மாறாத வடுக்கள்தான், என்ன செய்ய ? ராஜ தந்திரம் என்ற பெயரில் இனவாதிகள் செய்யும் அநியாயத்தை.

KILLERGEE Devakottai said...


தொடர்கிறேன் நண்பரே,,,,
தமிழ் மணம் 3

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.

என்ன செய்வது இறைவன் சித்தம்..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
த.ம4

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுமா போன்ற எழுத்தாளர்களின் மூலம் உண்மை நிலையை நிச்சயம் அறிய வேண்டும்

Yarlpavanan said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

yathavan64@gmail.com said...

அன்பு நண்பரே!

வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

புதுவை வேலு