02 November 2015

முகம் காணும் ஆசையுடன் -32

முன்னம் வாசல் இங்கே-http://www.thanimaram.org/2015/11/31.html.
இனி வீட்டில் சாணி .

பாலியல் வல்லுறவு செய்த படுபாதகன் கொண்டையா !  இவன் புத்தன் வழி வந்த ஒரு கொண்டையாவா  ??இவனுக்கு  வழக்கு மேடைக்கு வரும் சட்டதரனிக்கும் விரைவில் விசாரணை என்று கொக்கரிக்கும் புத்தன் வழி வந்த இலங்கை காவல்துறை அதிகாரி கூட இலங்கை இனவாத இராணுவத்துறை இளம் வீரர் அனுராதபுரத்தில் இளம் சிறுமிக்கு இது தான் என் ஆண்மை என்று அரிப்பு எடுத்து  தன் உடல் உறுப்பை காட்டிய கதையை. பொதுவில்  இப்படி நடந்த வரலாறு தெரியுமா பாதுகாப்பு பேச்சாளரே  என்ற சாதரண  நிரூபர் கேள்விக்கு !


அப்படியா !நான் அறியேன் !?,விசாரிக்கின்றேன் ! ஆமா இவரும் தந்தையாக இருக்கும் போது இவர் வீட்டு  குடும்பத்து  குத்துவிளக்கு இன்னொருத்தன் சீரழித்தால் தான் நாயகன் பட பொலிஸ் அதிகாரி கிட்டி போல வருந்துவாரோ ?,அல்லது தன்மகன்  உல்லாசம் போன இடத்தில் நடந்த கதை மதகதயானைக்கூட்டம் போல பேசாமல் வாங்கும் சம்பளத்துக்கு ஓப்பாரி வைக்கும் இன்னொரு ரஷ்ய விமான விபத்து போல அடுத்த என்ன கேள்வி என்று நடிகை சினிமா பற்றி கேளுங்கள் தனிப்பட்ட விடயம் வேண்டாம் என்பது போலத்தான் இன்று!

 முகநூல் வலை என்று எங்கும் பாலியல் தேடல் அல்லது பாலியல் தொழிலாளிபற்றி முகம் சுளிக்கும் ஊத்தமர்கள் எல்லாம் ஏன் இலங்கை என்ற போர்வையில் இனவாத ஆட்சியாளர்கள் ஈழத்தில் போர் என்ற போர்வையில் இளம் சந்ததி மீது கட்டவிழ்த்த மூர்க்கமான பாலியல் வேட்டை பற்றியும் அதை கேளிக்கை சீடி இதோ !பார்க்கலாம் நம் வெற்றி வெறி என்று கொக்கரிக்கும் மமதை!ஒருபக்கம்.


இதனை  பல ஆயிரம் ஈரோவுக்குஅவுஸ்ரேலியா. ஐரோப்பா, அமெரிக்கா இணையத்தளம் ஏன் அண்டை  நாடு பெரியாண்ணா  இலங்கைக்கு மறைக்கும் தன்  இன்னொரு வேஷம் வடக்கின் பக்கத்தில் இருக்கும் டெல்லி வரை இணையத்தில் விக்கும் ஈனப்பிறப்பு! வியாபாரத்துக்கு கூட இங்கு இணைய  அலைவரிசை தனி  இருக்கு !

அப்பா அதிபர் மைந்தன் வேட்டை வரலாறு தனித்தொடர்  என்பது போல இதை பொதுவெளியில் எழுத வெளிக்கிட்டால் இங்கு அடுத்த நொடி  நிமிடத்தில் அவுஸ்ரேலியா போன கப்பலில் காணமல் போகும் பட்டியல் அதிகம்  ஈழத்தில் இருக்கு!


 ஆனாலும் நமக்கு கிடைக்கும் புலனாய்வு செய்தியைக்கூட எழுத்தக்கூடாது என்று வாஞ்சிநாதான்  பட வில்லன் பிரகாஸ் ராஷ் போல  இங்கேயும்  பாதுகாப்பு வேலி போடும் நிலையில் பார்த்தவர்கள் பழகிய நட்புக்களின் கதை பல இருக்கு இணையத்தில் தொடர் கதை எழுத குப்பை கிளற!

 ஆனால் நீயும் ஒரு   பதிவு ஹிட்சு வெறிக்கு விலை போகமாட்டாய் என்பதை அந்த முகநூல் குழுமத்தில் தனியாக வெளியேறிய போது அறிந்தேன்! உன் கோபம் ,உன் தேடல், நீ தனிவழி போகும் எம்மா நீயா அரசாங்கம் படம் பானுச்சந்தர் போல  !ஆனாலும் முகநூல் குழுமத்தில் என்  இருப்பு இருக்கு .!


ஆனால் நீ எல்லா வட்டத்தையும் கடந்து போகும் தனி ஒருவன் போல என்பதை அறிந்த பின் தான் உன்னோடு முகநூலில் சாட் செய்கின்றேன்
.

 நான் தரும் செய்திகள் நீ என்றாவது வலையில் தொடராக எழுதனும்.

 அப்போது என் உயிர் இளமை ஊஞ்சல் ஆடுவது போல அல்ல முதல்மரியாதை நடிகர் திலகம் போல என் இணைய நட்பு அசுரன் பதிவர் இலங்கை வருவான்!

 .அவன் வரும்போது உயிர் போகும் என்று ஆசையில்லை !



நான் ராதா போல படகோட்டி அல்ல ஆனால் அனுப்பிய செய்திகள் எல்லாம் பரந்த இணையத்தில் பல தேசம் எங்கும்  போக வேண்டும்! .அப்படி போகும் நாளில் நானும்  என் சிங்கள ஊடகத்தோழி சாலிகாவும் எங்கே எந்த நிலையில் என்ன நிலையில் இருப்போம் என்பதை உன்கற்பனைக்கு விட்டுவிடுகின்றேன்.


 நான் கோடு போட்டாள் கற்பனை ரோடு போடும் நீ பாடலில் வெட்டியான் என்று சொல்ல ஆசையில்லை .!


அவசரமாக ஒரு செய்தி தேடி வெளியில் போறன் !வந்தால் மீண்டும் சந்திக்கின்றேன் அன்புடன் சுமா விழியில் காணும் பதிவாளினி!

அன்று போட்ட செய்தி அவள் அழுத்தி எழுத சொன்னா போது எனக்கு அவசரம் புரியவில்லை .அப்பாவி அவளையும் புலனாய்வு படை கண்காணிக்கும் நிலை!அதை பாலனிடம் சொல்லும் ஆசையில்லை!


தொடரும்......


6 comments :

Thulasidharan V Thillaiakathu said...

ம்ம்ம் உங்கள் வருத்தம் அந்தக் கவிதை வரிகளில் தெரிகின்றது நண்பரே.

ஆம் புத்த வழியில் வந்தவர்கள்? ஆச்சரியம்தான். அப்படித் தோன்றவில்லையே. நிகழ்வுகள்!இல்லையா ..வேதனைதான்...

தொடர்கின்றோம் உங்கள் பதிவினை உங்கள் கதாபாத்திரங்களின் வழி வருபவற்றை..

மீரா செல்வக்குமார் said...

அருமையான பதிவு..தொடருங்கள்...தொடர்வேன்

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! கவிதைகள் எல்லாம் அருமையாக இருக்கிறது! படிக்க படிக் அதேதான்! தொடர்கின்றேன்!

உங்கள் முகநூல் முகவரி என்ன சகோ!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

மனதை கீறல் இடுகிறது.... படித்த போது. தொடருங்கள்.த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

எத்தனை அசிங்கங்கள்! எத்தனை துயரங்கள்! தொடர்கிறேன்!

KILLERGEE Devakottai said...


மனம் கணக்கிறது நண்பரே தொடர்கிறேன் கவிதை நன்று
தமிழ் மணம் 3