முன்னம் இங்கே-http://www.thanimaram.org/2016/04/5.html
இனி--
முகம் தொலைந்து
முத்தாட வந்தேன் உன்னிடம்
முழ்க்கிபோன படகு போல
முனங்கும் என் காதல்
முடிவு ஏது!!!
( யாதவன் நட்குறிப்பில்)
என்ன யாதவன் இலங்கை நல்லாட்சியின் தீர்வுத்திட்ட அமைதிச்செயல் போல அமைதி காக்கின்றாய்?, என்ற செல்லமா பாட்டிக்கு ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் விளம்பர அறிவிப்பு போல!
இல்லை வேலையில் இருக்கும் போது அவசரம் தொலைபேசி எடு என்று தாய் நாட்டில் இருந்து கட்டளை போல அழைக்கும் சொந்தங்களுக்கு ஒரு நேரகாலம் தெரியாது .
இங்க வேலையில் கவனக்குறைவு என்று முதலாளி திட்டும் நிலை எல்லாம் சொன்னால் புரியாது சொல்லுக்குள் அடங்காது நீங்க எல்லாம் என் மேல வச்ச பாசம் பாடல் போல இல்லை. பணியில் இருந்து ஆட்களை இடை நிறுத்தும் சட்டவசதிக்கு கூட இன்று தொலைபேசி அழைப்புகள் காரணியாக அமைகின்றது .
இன்று பாரிசில் நிலவும் பொருளாதார வீழ்ச்சி ,வேலைவாய்ப்பின்மை, குறைந்த சம்பளத்துக்கும் பணியாற்றத் தயாராக இருக்கும் ஊழியர் நிலை என்று இந்த நாடு போகும் பாதையை உணராமல்!
காசேதான் கடவுளடா, உன் பணம் அது என் பணம் என்றா, மணி துட்டு பணம் பணம் என்று அங்கிருந்து கொண்டு. இங்குள்ளவர்களை சுரண்ட நினைப்பதும் ஒருவித கொடிய நோய் எனலாம்.
இரண்டும் கெட்டநிலையில் புலம்பெயர் வாழ்க்கை ஒரு வரமல்ல சாபம்!
அப்படிச்சொல்லாத யாதவன் கஸ்ர காலத்தில் உதவுவதுதான் நம்கடமை.
இங்கு நாம் நல்ல வசதியில் இருப்பதாக அவர்கள் எண்ணுவதுக்கும், வழிகாட்டியது யார் ?,நம் புலம்பெயர் உறவுகள் தானே !
அடுத்தவர்களின் வாகனத்தை தன்வாகனம் போல செல்பி எடுப்பதும், நண்பர்களின் வீட்டை சினிமாவுக்கு சூட்டிங் விடுவது போல தன் புதிய வீடு என்று வீடியோ எடுத்து அனுப்புவதும், வட்டிக்கு காசு வாங்கி வசதியானவன் போல வெள்ளவத்தையில் வீடு வாங்குவது.
அந்தக்கடன் கட்ட தன் வசதியான நண்பர்களுக்கே நம்பிக்கைத்துரோகம் செய்வது என்று தீராத வலிகள் இருப்பதை துணிவுடன் அங்கு இருப்போருக்கு சொல்லாதாது யார் பிழை ??
சைக்கிளில் போனவர்களை எல்லாம் மோட்டார் சைக்கிளிலில் பறக்கவும், எடுத்ததுக்கு எல்லாம் ஆட்டோவில் ஏறு என்று அதிகம் வசதிபடைத்தோர் அம்பானி வாரிசுகள் போல ஆடம்பரமனிதர் ஆக்கியது எல்லாம் இந்த வெளிநாட்டில் இருப்போர் தானே?,
எத்தனை பேர் இன்று தன்நிலை மறந்து பகட்டு வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்று நம்மவர்களை கொழும்பில் போய்ப்பார்த்தால் புரியும்!
அதை எல்லாம் பேசிப் பயனில்லை.
பேசாமல் யாழினி போல சுதந்திரமாக சிறுவயதில் புலம்பெயர்ந்து இருந்தால் இந்த வீன் அவஸ்தை தேவையில்லை !
ஆப்பிரிக்க கவிஞன் சொன்னான் பார்த்தியில் இருந்து பிடிங்கி நடும் செடி போல அல்ல அகதி வாழ்க்கை .
என் துயரம் யார் அறிவார்கள்?, முகநூலில் ஜல்சா ,வாட்சப்பில் குலுக்கள் எப்போதும் போனும் கையுமாக பவுசாக வாழ்கின்றான்!
கஸ்ரத்திலும் இயக்கத்துக்குக்கு போகவிடாமல்! இராணுவக்கட்டுப்பாட்டுப் குதிக்குள் கவனமாக வளத்தத்தோம் மருமகன் போல அல்ல எங்கபிள்ளை போல என்று சுற்றுலா வருவோரிடம் புலம்பும் தாயின் இரத்த உறவுகள் எல்லாம் என்று திருந்துவார்கள் ?,யதார்த்தம் புரியாமல்?,
கண்டதெல்லாம் நினைச்சு நீ ஏன் கவலைப்படுகிந்றாய் உன் வழியில் முன்னேறு !அது சரி முன்னேற வழி ஏதும் தெரியல யாழினி போல ஜாலியாக இருக்கனும் ஹீ ஹீ!
ஏய்யா?, இது வரை நல்லாத்தே போகின்றது! அவளை ஏன் வம்புக்கு இழுக்கின்றாய் ?,வாய்க்கொழுப்பு கூடிப்போச்சு உனக்கு.
.நடந்தவை நல்லதுக்காக என்று நினைக்க வேண்டியதுதான் !
இறக்கம் வந்தாச்சு.பார்த்து இறங்கி வாங்க ரயிலில் இருந்து! இப்ப பஸ் இருக்குமா யாதவன் கோயிலுக்கு போக?, .
இருக்கும்!
ஏன் நீங்க பஸ்ஸில் போவதில்லையா யாதவன் ?,
நான் போகும் போது பஸ் வந்தால் ஏறுவேன்! அதிக நேரம்காத்து இருப்பது என்றால் நிச்சயம் காத்து இருக்க மாட்டேன் யாழினி அந்தளவு பொறுமையில்லை.காதில் பாட்டைப்போட்டால் போகும் தூரம் தெரியாது!
அது சரி நீங்க காத்து இருக்க மாட்டீங்க !பொறுமையில்லாத அவசரக் குடுக்கை தானே)))
இதில் ஏதும் உள்குத்து இல்லையே யாழினி?,
தொடரும் .....
6 comments :
தொடர்கிறேன் நண்பரே
தொடருங்கள் நண்பரே....
நாங்களும் தொடர்கிறோம்...
தொடருங்கள் வாசிக்க ஆவலாய் உள்ளோம்....வாழ்க்கையே அரசியலாக போய்விட்டது
தொடர்கிறேன் நண்பரே காணொளி அருமை ரசித்தேன்
தமிழ் மணம் 2
காணொளி வெகு ஜோர். ரசித்தோம். தொடர்கின்றோம்...
அருமை
Post a Comment