20 April 2016

தூற்றுவோம்....!தூ.

துளிர்விட்டு மரமாக
துணிவுடன் இன்றும்
தூர தேசத்தில்
தூர்வார்கின்றபோதும்!
தூக்கி நின்ற வேர்கள் நீங்கள்
தூற்றுவது தூ என்று
துப்புவது  விழுகின்றது காதில்!


தூக்கனாம் குருவிகள் போல
தூரத்து சொந்தங்கள் இன்று!


தூக்கி உங்களை எறிந்தாலும்
துவண்டு போகின்றேன்
துழையிட்ட மூங்கில் போல
துட்டுக்காய் இன்று வரும் சேதிகள்
துயரங்கள் என்றாலும்!


துன்பியல் வரலாற்றை
துணி போல நெய்து
தூக்கில் இட்ட தேசங்களை
தூற்றிக்கொண்டே இருப்போம்
துளிர்க்கும் வரலாறாய்!
துறவறம் போகும் காலத்தில்
தூக்கிவைத்தோம்  கதிரையில்.


துடிப்பில்லாமல் பேசத்தானா?,
துரோகியாகுவாரோ?,
தூயவன் இல்லாத பூமியில்.!




7 comments :

Ajai Sunilkar Joseph said...

அருமையான வரிகள் நண்பரே....
தூற்றுவோம்....

Yarlpavanan said...

அருமையான எண்ணங்களின் பகிர்வு

உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

KILLERGEE Devakottai said...

அருமை கவிதை நண்பரே
காணொளி மிகவும் வேதனையான வரிகளே....
தமிழ் மணம் 2

வலிப்போக்கன் said...

தூ என்று
துப்புவது அவ்வளவு தூரத்தில் கேட்கிறதா....???????

Thulasidharan V Thillaiakathu said...

வரிகள் அருமை தனிமரம் நேசன்....காணொளி வேதனை....

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான வரிகள்
தம +1

putthan said...

[quote]துறவறம் போகும் காலத்தில்
தூக்கிவைத்தோம் கதிரையில்[/quote]

துணிந்து பேசுவார் என நாம்
துறவறம் செல்லு காலம் வரை காத்திருப்போம்