28 August 2016

யா-- சி--க்கும் --- ஏ----தி--லி =17

முன்னர்  இங்கே-http://www.thanimaram.org/2016/08/16.html

நேசங்கள் பொய் என்று
நேற்றைய காற்றுப்போல
நேயர் விருப்பம் தேர்வில்
நேசம் பாயும் உன்னை
நேசித்த நீ புரியாத என்
நேசிப்பு என்ற யாசகியே!
                                            ( யாதவன் நாட்குறிப்பில்)

  இனி.........

எனக்கு நம்நாட்டில் இருந்தது போல இப்போதும் நட்புக்கள் அதிகம்! இன்றைய நவீன வசதிகள் முகம் தெரிந்த /முகம் தெரியாத பலரை என்னிடம் நட்புடன் சேர்க்கின்றது  !ஆனாலும் உன்னைப்போல என்னைப்பிரிந்தவர்கள் ஒரு சிலரைத்தவிர !பலர்  மீண்டும் வந்து என்னோடு நட்பில் ஆனந்த யாழ்மீட்டுகின்றார்கள் .

எப்படி என் இயல்பான இளமைக்கால போக்குகள் ?,பாரிஸ் வாழ்வில் மாற்றம் கண்டது ?,என்று கேள்விகளால் ஒரு வேள்வி போல தோண்டி எடுக்கின்றார்கள்!


 ஆனாலும் எதுக்கும் பதில் புரியாத புதிர் போலத்தான் தொடர்கின்றது ! என்ன கேட்டாய் யாழினி?, எப்படி மாயாவை
 தாரமாக ஏற்றுக்கொண்டாய் என்று ?,


என் தந்தை என் கலியாணத்தை. விரைவில் காண ஆசையுடன் காத்து இருந்தார் !இல்லை எனக்கு யாழினிதான் வேணும் என்ற போது!

 இதைப்பாரு யாதவன் .

"உப்புசப்பு இல்லாத தொடர்கதை போல வாழ்க்கையை நீட்டிக்கொண்டே போகலாம் என்று நினைக்காத. எல்லாத்துக்கும் ஒரு முடிவு நிச்சயம் இந்த உலகில் இருக்கு."

"பருவத்தே பயிர் செய் என்ற மூத்தவர்கள் வார்த்தை ஒன்றும் வெறும் அரசியல்க்கட்சியின் தேர்தல் அறிக்கை போல அல்ல! இலங்கை இனவாத அரசியல்ச்சட்டம் போல எதையும் மாற்ற முடியாது யதார்த்த.
உலகில் நல்லாட்சி என்றாலும் சமாதான தேவதை  என்ற முன்னைய ஆட்சி என்றாலும் நீயும் சுதந்திரக்குடிமகன் இல்லை"

 என் பேச்சுக்கு கட்டுப்பட வேண்டியவன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் போல !

யாழினிக்கு காத்திருந்த காலம் இனிப்போதும் !என் தங்கை மகளைத்தான்  என் மருமகளைத்தான் நீ கைபிடிக்கனும். அதுதான் உன் விதியும்கூட.

 உனக்கு என்ன குறைச்சல் ?,யாழினி குடும்பத்துக்கதை , அவன் அப்பன் கதை எல்லாம் இனி என் காதில் விழக்கூடாது !சட்டமன்ற எதிர்க்கட்சி ச்ஸ்பெண்ட் விவகாரம் போல இல்லாமல் ஒரு தீர்க்கமான முடிவு எடு.



 உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் என்பது  போலவோ இல்லை ,இலங்கை அரசியல்
 சீர்திருத்தம் இதோ அதோ என்பது போலவோ போக்குக்காட்டிக்கொண்டு இருக்க வேண்டாம்.

 என் மகன் வாழ்க்கை எனக்கு முக்கியம்.

 இல்லை உனக்கு உன் காதல் முக்கியம், காலம் எல்லாம் காத்து இருப்பேன் என்று பல்லவி அனுபல்லவி ராகம் பாடாத  இதுதான் என் முடிவு.

இல்லையோ இந்த அப்பனுக்கும்  சமாதிகட்டியாச்சு என்று நினைத்துக்கொண்டு பாரிஸில் இருந்துவிடு என்று என் ஐயா அன்று தொலைபேசியை துண்டித்தது உனக்குத்தெரியாது!

 உரலுக்கு ஒரு பக்கம் இடி உலக்கைக்கு இரண்டுபக்கம் அடி போல ஆச்சு என் நிலை  யாழினி.  எனக்கே என் மீது அருவருப்பு!!


 உன்னைப்பார்க்க முடியவில்லை பாரிஸில்!உயர் படிப்பு என்று லண்டன் போனதாக சினிமா கிசுகிசு போல காதில் விழுந்தாலும் உன் வீட்டுப்பக்க  வீதியில்  ராசமகன் படப்பாடல் போல காத்து இருந்தேன் தனியே  என்று சொன்னால் புரியாத வலி  உனக்கு!  அந்த நேர காதல் பரவசம் அப்படி!



ஆனாலும் தந்தைக்கு தலைவணங்கும் காவியத்தலைவன் போல நானும் வேசம் போட முடிவு எடுத்தேன்!

 அதனால் ஒரு வழிப்பாதை போல என் முடிவும்  மச்சாள் மாயாமீது தோடி ராகம் பாட வெளிக்கிட்டேன் .

தொடரும்.........!


No comments :