16 August 2016

காற்றில் வந்த கவிதைகள்!!!

நேசம் கொண்டு
 நெருங்கிவருகின்றேன்
நேற்றைய காற்றுப்போல
நீயோ நெடுநல்வாடை போல
தொலைவில்
நெருங்கம் இல்லாமல்!



----------------------------------------------------------


மதியை(நிலவு)மதிக்கவும் தெரியும்,
மானத்தை காக்கவும் தெரியும்!
மதியிழந்து போவேனோ
மாமியார்வீட்டில்?
மல்லுக்கட்டிய நாட்களை
மறவேன் !
மயிர் நீப்பின்
மரணிக்குமாம் மான்
நானும் மான் போலத்தான்
மதியாதார்வீட்டிற்கு
மிதியாத பாதம் கொண்ட
மருமகன்!





---------------------------------------------

நினைவுகளுக்கு மட்டும்
நினைவில் ஒரு கல்லறை இருக்கும் எனில்
நீங்காத  உன் நினைவுகளையும்
நிச்சயம் அதில் புதைப்பேன்
நீ பிரிந்த அந்த நொடிகளை!



-----------------------------------------------------------------------------


அடுப்படி வெப்பத்திலும்
அனல்போல என் காதல்
அகதி உன்னைத்தேடியே
அலைந்து திரிகின்றது
ஆயுள்ச்சிறையில் என்றாலும்
அணைத்துக்கொள்!
அடுத்த பதிவு எழுத
அயிரம் சிக்கல்[[[
அன்பே தொடர்வேன்!
அகதி இன்னும் வாழ்கின்றேன்!
அடுத்த சாப்பாடு பட்டியல்
அடுக்கடுக்காய் காத்து இருக்கு!!
அட்டவணை போல[[



6 comments :

ஆத்மா said...

ஆஹா வித,,, கவித,,
அண்ணா கவித :)

கரந்தை ஜெயக்குமார் said...

அருமைநண்பரே

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதைகள்!கவிஞர் முத்துக்குமாருக்கு சிறப்பான அஞ்சலி! நன்றி!

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் நண்பரே

வலிப்போக்கன் said...

அந்த நல்ல மருமகன் வாழ்க!....

Thulasidharan V Thillaiakathu said...

அருமை தனிமரம்..கவிதை.....பாடல் மிகவும் பிடித்த பாடல்...அழகே அழகே....