இணைய வானொலிகளின் நிகழ்ச்சிக்கு எழுதியவை வலையில் சேமிப்பாக! நன்றி லங்காசிறி எப்.எம், புரட்ச்சி எப்.எம் !
---------
நீ கடல்கடந்த போதும்! உன்
கருவிழிப்பார்வையில்
கலந்து, கரைந்து போன என்
காதல் !இன்னும் வாழ்க்கைக்
கரையைத்தேடும் பயணி போல
காத்து இருப்பதை உன்
உயர்கல்வி என்றாவது
உணர்த்துமா ?என்ற
காத்திருத்திருப்பில்
உருப்படாதவன் இவன்!
----------------------------------------------
இழந்தவை எல்லாம்
இழந்தவை எல்லாம்
இன்னும் பெரிதல்ல
இருந்தாலும் !உன் துரோகம் தான்
இதயத்தை நெருடுகின்றது
இப்போதும் நேசிக்கும் நண்பனாக!
இதுவே உன்னிடம்
இனிமையாக உறுதியுடன் கூறுவேன்!
இவன் தொலைத்தது
இன்நாட்டு நாணயம் போல
இதுவும் கடந்து
இங்கிலாந்து நாணயம் எல்லாம்
இங்கு வீடு கட்டலாம் ஏய்த்த
இசைபோல என்றாலும்
இனிக்கும் என்றாலும்
இவன் எழுந்துவிட்டான்
இனிய உதயம் என்பது போல
இதையும் காலம்
இருத்தி வைக்கும் உன்
//////
பூக்களைத்தாங்கும் நார் போல
பூத்திருந்தேன் !
பூங்குயிலே நீயோ உதிர்ந்துபோகும்
பூவாய் என்னி என்னை
புதைத்துவிட்டுச்சென்றாயே!
புரண்டு அழுகின்றேன்
--------------------------------------------------------------------------------------------------
விரும்பித்தான் உன்னைப்பிரிந்தேனடி!
விரும்பிய செல்வம் ஈட்டி,
வீடு ,வாசல் ,விளைநிலம் எல்லாம்
விலைக்கு வாங்கி .உன்னைச்சேர
விண்ணப்பித்துக் காத்திருந்தேன்!
விண்ணப்பித்துக் காத்திருந்தேன்!
விரும்பாத நீ நேசிக்கும் இன்றைய
விடுதலைக்காலத்தில் இவனோ
விட்டுவரமுடியாத! புலம்பெயர் தேசத்தில்
விழுந்துகிடக்கும் சருகு!
(யாவும் கற்பனை)
--------------------------------------------
தினமும் கவிதை எழுதி
தினம் தினம் கொல்லும் உன்மேலான
தீராதக்காதலை திறந்தே காட்டும்
என் இருவிழிகளைக் காண !
திடீர் என்றாவது ஒருதடவை
தோன்றிடு திங்கள் போல
என் ஜீவனே!
7 comments :
மனதை தொடும் கவிதைகள்.சோகங்களும் நினைத்துப் பார்க்க சுகமானவைதான்
அருமை நண்பரே
முரளிதரன் ஐயா அவர்கள் சொல்வதைப் போல் சோகங்கள் கூட சுகமானவைதான்
சோகம் மிக்க ஆனால் மனதைத் தொட்ட கவிதைகள் நேசன்....அதுவும் அதற்கு ஏற்றாற் போல பாடல் பகிர்வு...மனதைப் பிழிந்துவிட்டது தனிமரம்...கண்ணில் நீரை அடக்க முடியவில்லை...
அருமையான வரிகள்
தொடருங்கள்
மனதை வருடுயது கவிதை வரிகள்
வந்திட்டமல்ல ...திரும்பிவந்திட்டமல்ல ....கவிதை பகிர்வுக்கு நன்றிகள்
Post a Comment