05 May 2020

கவிதை போல கிறுக்கல்!

பானையில்   இருப்பது
பறவைக்கும்   பசிபோக்கி
பத்திரமாத்து   தங்கம்போல
பாடல்களும்   பாடி
பறந்த   வாழ்வில்
பறவை  போல
பறந்து வந்து  உணவு  இட்டு 
பலாலியில்   குடிகொண்ட
பாரதேச  படையின்  வருகை
பசியாற்றியதா ?
பரதேசியாக்கியதா ??
பாரில் நாமும்
பலஉறவு தொலைந்து
பந்தல் இட்ட 
பழைய  பொங்கல்  போல
பரணி  பாடுவேனோ?
(யாவும்கற்பனை)

———-/-//———-/--------------------------------------------------


சிரிப்பைக் கடன்வாங்கி
சிறைச்சாலையில் 
சிங்களம்  கற்கவைத்தாளே!
சீதனம் என்ன
சிலோன் பாடல் தானே?
சிறப்புச் சித்திரம்  என்றெல்லாம்
சிந்திக்க  வைக்கத்தானே?
சிறப்புத் தேர்ச்சிஎன்று?
சீனாவிலும் இருந்து
சில  வைரஸ் 
சீக்கிறம்  இறக்குமதி  செய்தாயோ?


யாவும்கற்பனை)
--------------------------------------------------------------------------------------/——
முடிவெடுத்த   நீயே
முடிவிலி  வரை
முடியாத  சுமைகள்  எல்லாம்
முற்றும்  துறந்தவன்போல
முடித்துவிடு!
முயற்ச்சி என்ற  கீரீடம்
முகம்தொலைந்தவனுக்கும்
முதல்ச்சிறைபோல!
முதல்முறை
முகம்  பார்த்து  அழுதான்
முன்னால் 
முகநூல்நட்பு

!(யாவும்கற்பனை)
///---------------------------------------

நீண்ட காலம் கேட்க மறந்த பாடல்களை எல்லாம் கொர்னா தேடிக்கேட்க வைக்கின்றது! இதுவும் ஒரு சுகமே. இப்பாடல் கங்கை அமரன் இசையில் இளையராஜாவுடன் ,எஸ் .ஜானகி பாடியது. இலங்கை வானொலியில்  90களின் பின் அதிகம் ஒலித்த பாடல் 
கேட்டு  ஒரு கடிதாசி எழுதுங்கள்  தனிமரத்திற்கு![[[[[[[.

3 comments :

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் நண்பரே வாழ்த்துகள்.

நாகு கணேசன்... said...

அருமை... நண்பரே!

putthan said...

அருமையான பாடலுடன் கவிதைகள்
எம்மவ‌ருக்கு
சிங்கள தேசத்து சிங்கள திணிப்பு
பாரத தேசத்து பரதேசியாக்கல்
சிறப்பு