26 February 2011

Tirumpiparkiran-3

தாய்லாந்தைப்பற்றிச்சொல்லியாகனும் என்றாள் வாலிபத்தேவையை பணம் கொடுத்தால் தீர்த்துவைக்கும் சிற்றின்ப தேசம்.இயற்கை அழகும் இனிய சிறு தீவுகளை இயல்பாக கொண்டநாடு உல்லாசபுரியின் சொர்க்கம் இந்த தென்கிழக்காசியாவின் நகரம் அழகிய பட்டாயா தீவு,புக்கிட்தீவு ,என சுனாமி கரம் பற்றிய பூமி .5 நாட்களின் பின் வந்த உதவியால் என்னுடன் வந்த சிறுவனை அழத்துச் செல்வதாகவும் மறறவர்களை விரைவில் மலேசியாவிற்கு அழைத்துச்செல்வதாகவும் கூறியவர் எல்லாறும் சந்தோசமாக இருங்கள்.உங்களை அனுப்பி வைப்பதாக அரசியல்வாதிபோல் வாக்குறிதி தந்துவிட்டு சிறியவனுடம் சென்றார்.நம்பயணத்தில் ஓருவன் விலகிவிட்டான் அவனின் நல்லகாலம் என்று எண்ணிக்கொண்டோம். அதன்பின் வருவதாக கூறியவர் வரவில்லை எங்களிடம் பணம் அதிகமாக இருக்கவில்லை.மொழிபுரியாது. நாங்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடமோ பரத்தைகள் வாழும் நகரம் இரவு முழுவதும் பாட்டும் கூத்தும் மாது ஓருபுறம்,மது ஓருபுறம் என்று அலையும் இந்திரலோகம்.வருவார் என்ற நம்பிக்கை  கையில் உள்ள பணம்போல் வரவரகுறைந்து ஓருகட்டத்தில் அனைவரும் ஏமாற்றப்பட்டதை புறிந்து கொண்டோம்.துயரங்கள் ஏழையின் பங்காளி என்பதை காலம் உணர்த்தியுள்ளது எண்பதை ஜிரனிக்க முடியவில்லை எம்மால் முடிந்தளவு ஜரேப்பாவில் உள்ள உறவுகளிடம் எமது இருகொள்ளி நிலையை உணர்த்தினோம்.அவர்கள் அங்கே உள்ளவரிடம் தொடர்பு கொண்டார்கள்.அதன்விலைவாக நம்வழிகாட்டி மீண்டும் எம்முன் கடவுள்போல் வந்தார் தனக்கும் ஜரேப்பாவில் உள்ளவருக்கும் பணவிடயமாக கருத்து முரன்பாடு என்றும் அழைத்துச்சென்ற சிறியவன் பிரான்ஸ் போய்சேர்ந்துவிட்டதாகவும் கூறினான்.தான் உங்களை மலேசியாவிற்கு அழைத்துச்செல்ல வழிசெய்துவிட்டுத்தான் வந்ததாகவும் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று கூறிமனசுக்கு பால்வார்த்தான்.இன்று தான் இங்கே தங்குவதாகவும் தன்நண்பர் வருவார் என்றான்.எங்களுக்கு யார்வந்தாளும் எங்களை உறிய இடத்துக்கு அனுப்பினால் போதும் என்றநிலையில் காத்திருந்தோம்.அவரின் நண்பர்மாலையில்  வந்து எங்களை சந்தித்தார்  .எங்களை  எல்லையைகடந்து செல்வதற்கு  தான் உதவிபுரிவதாகவும் ஆளுக்கு 300வெள்ளி மலேசியன் காசு தரும்படி கூறினார்.இது என்னபுதுக்கதை எனநண்பர்கள் திகைத்து நின்றோம் இறங்கிய பின்காசு என்ற பேச்சின் அடிப்படையில்தான் பயணம் தொடங்கியது.ஓருகிழமை என்ற வாக்குறிதி 3மாதங்களை தாண்டிவிட்டது.இனி என்ன செய்யலாம்   என்ற ஜொசனை வந்தவர்கள் மலாய்மொழியில் ஏதோ  கதைத்தார்கள்.பின் எங்களிடம் 6 பேரை நாளை அழைத்துச்செல்வதாக கூறினார்கள் நானும் மற்ற 5பேரும் விடப்பட்டோம் முதலில்  போறவர் எங்களுடன் தொடர்பை பேனுங்கள் என்று மட்டும் கூறினோம் வந்தவர்கள் மதுவையும்,மாதுவையும் தேடி சென்றுவிட்டனர்.        ................      தொடரும்

No comments :