05 February 2011

எனக்குப்பிடித்த வானொலி அறிவிப்பாளர்களில் ராஜேஸ்வரி சண்முகம் பிரதானமானவர்,இவர் இலங்கை வானொலியில் வரும் போது முகம்காணாதகூயில் கூடவருவதுபோன்ற உணர்வைத்தரும்.தேசிய சேவை,வர்ததகசேவை இரண்டிலும் இவரின் பங்களிப்பு உலமறிந்த ஒன்று ,இலங்கை மட்டுமல்லாது தமிழகம் கூட இவரின் குரலில் மயங்கிக்கிடந்தகாலம் அன்றையநாள்கள்,இன்று பல அறிவிப்பாளர்கள் அவரின் தமிழ் உச்சரிப்பு நேயர்களை அரவனைக்கும் விதம்,பாடல் தெரிவு,பாடலை மட்டும் ஒலிபரப்பாமல்,இடையில் தரும்,குட்டித்தகவள் ,என கற்கவேண்டிய விசயங்கள் பல.குட்டிக்கவிதையை ஈரடியை அறிமுகம் செய்தவர் .தேசத்தில் இருந்தபோது இப்போதைய தென்றலில் அவர் செய்யும் இரவின் மடியில் நிகழ்சியில் அம்மையார் வந்தாள் தூக்கம் விழித்து கேட்பேன்.கதம்பமாலை வித்தியாசமானதாக இருக்கும்.ஓவ்வொரு விளம்பர நிகழ்ச்சியையும் தவரவிடமாட்டேன் அந்தளவுக்கு அவரின் குரல் ஆளுமை.கணீர் என்ற அறிவிப்பு எங்கிருந்தாலும் வானொலிக்கு அருகில் வரவைக்கும்.இன்று புலத்தில் வானொலியொடு இனைவது மிக அரிது வேலைப்பளு காரணமாக .ராஜேஸ்வரியின் திறமை அறிவிப்பாளர் மட்டுமல்ல சிறந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,வானொலி நடிகை,பாடல்லாசிரியர்,மொழிபெயர்பாளர்,நாடக எழுத்தாளர் என பண்முகம் கொண்டவர்,இவர் செய்த ஒளிமஞ்சரி மிக பிரபல்யமான நிகழ்ச்சி.இன்று புதிய அறிவிப்பாளர்களுக்கு பயிற்றுவிப்பாளராக விளங்கும் முதல்தரமானவர் ஓவ்வொரு புதிய இலங்கை தேசிய,தென்றல் அறிவிப்பாளர்கள்  இவருடன் ஒரு நிகழ்ச்சியாவது சேர்ந்து செய்யனும்   என்ற ஆவா இருக்கும்.அறிவிப்பாளரிள் இவர்  இளையதம்பி தயானந்தாவை தனது  கலைவாருசு என ஒருபேட்டியில் கூறியது  நினைவுகூறத்தக்கது.

No comments :