20 February 2011

Anjali-1

வீர்த்தாயே நீங்கள் போனசெய்தி வலையில் வந்தபோது ஓருநிமிடம் நம்பமுடியவில்லை இருந்தும் துயரங்களை தாங்கி வாழும் தமிழர் நாமும் தாங்கிக்கொள்கிறம் .தாயே நாங்கள் புறநானுறும் .,கம்பராமாயமும் புத்தகத்தில் படித்தோம் வீரமகணை .நீங்கள் எங்களுக்கு நேரில் பெற்றுத்தந்தீர்கள்.தாயே என்று உங்களுக்கு பலர் இரங்கல் கூட்டம் போடுவினம் ,தந்தியடிப்பினம் ஏன் கவிதை தீட்டுவினம்.உங்களின் பாதம் பட்டால் பதவிபோய்விடும் என்று பதறியவர்கள்.உங்களின் வாழ்வில் புறநாறுத்தாயைவிட  அதிகம் அவலைப்பட்ட வேதனையை எமக்காக தாங்கினீர்களே உங்கள் பாதம் பணிகிறேம்.வீரமகனை தந்ததாயே.தசதரசக்கரவத்தியின் புத்திரசோகத்துக்கு மேலாக புத்திபாசம் உங்கள் அந்திம காலத்தில் அலைமோதியிருக்கும்.நாங்கள் பாவிகள்வீரத்தாயை  வழியனுப்ப முடியாமல் புலம்பெயர்ந்து  தவிக்கிறோம்.கடைசிப்பிள்ளை கொல்லி இடுவான் என்ற இதிகாசங்களை வகுத்தவர்களே  உங்களுக்கு எம்தலைவனின் கையால் கொல்லிபோடவிடாமல் செய்தபாவிகளை உங்கள் நல்லமனசு மன்னிக்குமா?  மீண்டும் உங்கள் வயிற்றில் பிறக்கனும் என்று சொல்லும் கரிகாலன்  கதறுவான் எத்தனை சேனைப்படைகளை உங்கள் மகன் முறியடிதான்  உங்கள் மரணத்தறுவாயில்  அருகில் இல்லை என்ற  கவலையில் உயிர் போயிருக்குமா,தாயே நிம்மதியாக கண்ணயறுங்கள்.இப்பிறப்பில் சான்றோன் தலைவணை பெற்றதிற்காக நீங்கள் பட்டவேதனைகள் அந்த கோசலையின் வேதனையைவிட ஓருபடி மேலானது.உங்கள் வீரத்தியாகத்திற்கு என் அஞ்சலிதாயே உன்பாதம் பணிந்து.

No comments :