23 February 2011

Tirumpiparkiren-2

மறுநாள் வந்தவர் எல்லோரையும் வெளிக்கிடும்படி கூறினார் நாங்களும் எங்கள் உடுதுணிகளை மாற்றிக்கொண்டு உணவருந்திவிட்டு  அவர் சென்னது போலவே  ஓவ்வொருத்தராக  அந்த ஹோட்டலில் இருந்து  வெளியாகி அவரின் உதவியால் பின்னால் பசுவைத்தொடரும் கண்று போல் எமது உடுப்புப்பையை தூக்கிக்கொண்டு நடந்தோம் எமது பயணம் தெரியாமல்.உதவியாளர் எங்கள் அனைவரையும் ஓரு இருதட்டு பேருந்தில் எற்றினார் நாங்களும் எல்லாருக்கும் பொதுவான கடவுளை வேண்டிக்கொண்டோம்.முன்னால் அந்த உதவியால் அமர்ந்து கொண்டார் பயணம் தொடர்ந்தது.மறுநாள் மதியம்  தாய்லாந்தின் மலேசியாவின் எல்லைக்கரைக்கு வந்து சேர்ந்தோம்.விரைவாக இறங்கும் படி அவர் சைகை காட்டினார் தாய்மொழி தெரியாது நமக்கு.நாங்களும் இறங்கினோம் நாட்டில் ராணுவம் சுற்றிவலைத்த்தால் உதைத்தானே செய்வினம்.  மீண்டும் ஓரு தட்டி வாகணத்தில் ஏற்றினார்.கூடவந்த நண்பன் செண்னான் ஊரில் கொடிகாமம் போக இந்தமாதிரி வாகணத்தில் பயனித்ததாக.நானோ சிந்தனை உடல்நலமில்லாத தந்தையின் நிலையை எண்ணிக்கொண்டிருந்தேன்.வாகணம் நீண்ட பயணத்தின் பின் சந்தடி மிக்க அந்தபாதையுடாகப்போய் பெரியஹோட்டல் வளாகத்தில்  நின்றது.எல்லொரும் இறங்கினோம் சிற்பந்திகள் எங்கள் பைகளை வாங்கிக்கொண்டார்கள் எல்லொருக்குமாக 2ரூம் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக உதவியால் கூறினான் தலையாட்டிப்பழகியவர்கள் நாங்கள் என்பதை அவனுக்கும் உணர்த்திவிட்டோம்.என்னுடன்  6நண்பர்கள் ,மற்றவர்கள் 7 பேர் இன்னொரு அறையில் இருபிரிவாக அனுப்பினார்கள்.என்னுடன் ஓன்றாக தேசத்தில்   இருந்துபயணித்த சிறுவன்  பயணக்களைப்பில் என்னுடைய உடை எல்லாம் வாந்தியெடுத்து அழுக்காக்கிவிட்டான் அதை சுத்தம் செய்யும் அவசரத்தில் நான் விரைந்து ஹோட்டலில் குளிர்த்து கட்டிலில் சாய்த போதுதான் அலுப்பு புரிந்தது இருட்டிவிட்டது எல்லொரும் உதவியால் வாங்கித்தந்த சாப்பாட்டை சாப்பிட்டோம்.அவன் யாரையும் ஓன்றாக வெளியில் திரியக்கூடாது ரூமில் அதிகம் கதைக்கக்கூடாது என்றவன் தான் 3நாட்களுக்கு சாப்பாட்டுக்கு  சொல்லிவிடுவதாகவும் விரைவாக 5நாட்களில் வருவதாகக்கூறிச் சென்றான். ........தொடரும்

No comments :