22 February 2011

Tirumpiparkirean

வாழ்க்கைப்பயணத்தை சீரமைக்க வேண்டியகாலகட்டத்தில் இருந்தபோது  வெளிநாடு செல்வதென்ற முடிவில் இருந்தேன்.பொருளாதரத்தில் முன்னேறுவதற்கு இதைவிட எனக்கு மார்க்கம் தெரியவில்லை.தாயின் இருந்தவீடும், காணியும் ,யுத்தத்தில் சீரலிந்து அகதியாக இடம்பெயர்ந்து அலைந்து திரிந்தபோதுதான் இந்த சிந்தனை துளிர்விட்டு விருச்சமாக வளர்தது என்னுள்.எப்படி வெளிநாடு செல்வது என்றாள் பலலட்சங்கள் தேவை .எனது சகோதரி எற்கனவே புலம்பெயந்து சென்று சிலகாலம் .அக்காள் எப்படியும் என்னையும் தான் இருக்கும் இடத்துக்கு அழைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள்.அவளின் தூரநோக்குப்பார்வை தான் இன்று நானும் ஓரளவு சிறப்பா இருக்கக்காரணம் மற்ற உறவுகளிடமும் கடன்வாங்கி என்பயணத்தை தொடங்கினேன் .தேசத்தில் இருந்து வெளியாகி தாய்லாந்து வந்தேன் .அதுவரை தனியாக வந்த பலரும் ஓவ்வொருவராக அறிமுகமானேம்.எங்களை  கூட்டியந்த முகவர் என்னுடன் மேலும் 14பேரை ஓன்றாக ஓரு ஹோட்டலில்  3 அறைகளை வாடகைக்கு எடுத்து  தங்கவைத்தார்.நாங்களும் பயணக்களைப்பில் எல்லாரும் உறங்கிவிட்டோம்.மறுநாள் காலையில் வேற ஓருவர் வந்து அறிமுகம் செய்து கொண்டார் எங்கள் எல்லோருக்கும்  முதற்பயணம்,முன் அனுபவம் இல்லை வந்தவர் தேவதூதன் போல் தெரிந்தார் .அழகாக எல்லாரிடமும் கதைத்தார் தான் ஐரேப்பாவிற்கு உங்கள் அனைவரையும் விரைவில் அனுப்பி  விடுவதாகவும் அங்கே உள்ள தன் பெரிய முகவரிடம் தொடர்புகொள்வதாகவும் என்றவர் எங்கள் அனைவரின்  கடவுச்சீட்டையும் வாங்கிக்கொண்டார்.மறுநாள்வருவதாகவும்
கூறிவிட்டு சென்றார்.
                தொடரும்

No comments :