31 October 2011

நொந்து போகும் ஓர் இதயம்-13

அயல் நாட்டு அமைதிப்படை என்கின்றபோர்வையில் வந்து செய்த அட்டூளியகள் பல.


 அமைதியாக இருந்த எங்கள் வாழ்வு அடுத்த வேலைச்  சாப்பாடு இல்லாமல் இடம் பெயர்ந்த போது கோப்பி குடிக்க சீனி இல்லாமல் தொட்டுக்கொண்டு குடித்தது பேரீட்சம் பழத்துடன்.


 அது பொறுக்காமல் நாங்கள் அழுதது பார்த்து. சீனிவாங்கச் சென்ற தந்தையை உளவு பார்த்த தாக சொல்லிக் கட்டிப்போட்டு அடித்த காட்சி கண்டு வெளிக்கிட்டுப் போன என் உறவு!

 அதன் பின் நான் கண்டது பல வருடங்கள் பின்.

 அன்று எனக்கு வந்த கோபத்தை கண்ணகி மட்டும் காட்டினால். மதுரை மீது !

என்னைத் தடுத்துவிட்டார் தந்தை. நீ வீட்டுக்கு ஒரு வம்சம் என்று.
 இன்று என் வம்சத்திற்கு புகைப்படமாக தத்தாவைக் காட்டும் துயரம் அனுபவத்தில் உணரனும்.

 வலியின் வேதனையை வருடங்கள் போனாலும் வன்மம் இருக்கு .புத்தன் சொன்னதும், கீதை சொன்னதும், நடைமுறையில் மறக்க மன்னிக்க மனசு விடுகின்றது இல்லை.

இலங்கையில் இருந்து பண்டமாற்றாக தேயிலையைக் கொடுத்து.
 பேரீட்சம் பழமும் பெற்றோலும் வாங்கும் தேசம் இலங்கை .

அரபுலகத்தில் இருந்து வரும் பொதி செய்யப்பட்ட பேரீட்சம் பழத்தைக் கொடுத்து பிரபு மீதான தன் காதலைச் வெளிக்காட்டினால் பார்த்திமா.


 பள்ளியில் பார்த்துக் கொண்டும் பேசிக்கொண்டும் காதல் கிளிகளாக வலம் வந்தார்கள்.

1987 ஆண்டின் பின் கல்வித்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் அன்பளிப்பில் வேலை பெற்ற ஆசிரியர்கள் தாம் கொடுத்த தொகை மீளப் பெறக் கண்டு கொண்ட வழி  தனியார்  வகுப்புக்களை ஊக்கிவிப்பதும் மாணவர்களிடையே  ரியூசன் என்கின்ற பேஸன்.
இதன் மூலம் தனியார் வகுப்புக்களை பல இடங்களில் தொடங்கினார்கள்.

 வவுனியாவில் பல தனியார் ரியூசன்(ரீயூட்டரி) வைரவப்புளியங்குளம் ,கோவில்குளம்,பண்டரிகுளம் என பல இடங்களில் இயங்கியது .
மும்மொழிகளுக்கும்  விசேட வகுப்புக்கள் இருக்கும்.

 அத்துடன்  கலை/வர்த்தகம்/விஞ்ஞானம் கணிதம் என உயர்தர கல்விக்கு பல ரியூசன் சென்ரர்கள் கடைவிரித்தது.

ரவியும் பார்த்திமாவும் இங்கு மேலதிகமாக ரியூசன் கல்வி கற்றார்கள்.

.நானும் சாலிக்காவுடன் அதிகம் உரையாடுவதற்கு இங்கு படித்த சகோதரமொழிதான் அதிகம்
கை கொடுத்தது.

காதல் வந்தால் பொய் சொல்வது இன்னொரு சிறப்பு .

இவர்களும் வீட்டில் மேலதிகவகுப்பு, சிறப்பு நிகழ்வுகள் என்று காதல் பாடம் படித்தார்கள்.

 பெற்றவர்கள் தம் பிள்ளைகள் அதிகமாக படிக்கின்றார்கள் .எதிர்காலத்தை திட்டமிடுகின்றார்கள் என்று நம்பியிருக்கும் போது அவர்கள் கனவுகளை கறையான் போல் அரித்துக் கொண்டிருந்தார்கள்!


பார்த்திமா மீது கொண்ட காதலினால் என் நேரமும் அவளைப் பார்த்துக்கொண்டு இருக்கனும் என்று எண்ணியதால்  !

புவியல் பாடத்தில் இருந்து தமிழ்பாடத்திற்கு மாறியிருந்தான் ரவி .
நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று கலைஞர் எழுதியது போல் !தமிழ் ஆசிரியையும் ரவியை வரவேற்று நல்ல பெறுபெறு எடுக்கனும் தமிழிலில் என்று ஊக்கிவித்தார்

.பார்த்திமாவின் பார்வையின் பின் குறிஞ்சித் தென்னவனும்,சில்லையூர் கவிராயரும்  ரவியின் நண்பர்கள் ஆனார்கள்.

 எங்கள் நட்பு வட்டத்தில் இருந்து விலகிக் கொண்டான் .பார்த்திமா நம் நண்பர்கள் நட்புக்களை விரும்பவில்லை என்று சொல்லி விட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் ஆளும் கட்சியில் சேர்வது போல் எங்களை திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் ஆக்கினான்.

 இவையாவும் நடந்து கொண்டிருந்த போதும் நான் ஏதும்
கூறவில்லை .என் நினைவில் கிழிந்த பனை ஓலை ஞாபகம் வந்தது  அந்த நூல் பார்த்திமாவுக்குப்  பிடிக்கும் என்பதால்!

பள்ளியில் புத்தகத்தின் ஊடே இவர்கள் கடிதம் பரிமாறுவது தொடர்ந்து கொண்டிருந்தது.

 முதல் வாங்கில் இருபக்கமும் இவர்கள் இருப்பது கடைசி வாங்கில் இருக்கும் சுபைர்க்கு இவர்கள் லீலை தெரியும் !

அவன் என்னிடம் காதில் ஓதினான் எல்லாம் தெரிந்தும் அமைதி என் வேலையில் கவனத்தை திசை திருப்பினேன்.

வஞ்சி அவள் காதல் பார்த்தும் ,நோக்கியும் தீராத உணர்வுகள். வாலிபத்தின்  தீ மனதில் தூண்டிச் செல்ல !

பார்த்திமா என்னும் பேதையை. தொட்டுப் பேச என்னிய ரவி அழைத்துச் சென்றது சிதம்பரபுரம் போகும் வழியில் இருக்கும் கல்வாரிக்கு!

சிலுவைப்படலத்தில் தேவனின் வலிகளைப் படிப்போர் உரிகிப்போகும் விடயத்தை .

இங்கு மலைபோல் கோட்டு ஓவியமாக வரைந்து அழகிய வேலைப்பாடுகளுடன் கிருஸ்தவக் கோயில் காட்சி கொடுப்பது கல்வாரியில் .

வவுனியாவில் இருக்கும் பலருக்கும் இந்த இடம் தெரியாது !

இன்னொரு மாற்றுக்குழுக்கள் இந்தப்பகுதியில் தளம் அமைத்து இருப்பதும் ஒரு காரணம். அதிகமானவர்களுக்குத் தெரியாமல் போவதற்கு.!

 மாலை வேலையில் அதன் அண்டிய பகுதியின் அருகாமையில் .வன்னிமரங்கள் கிளர்ச்சி ஊட்ட.
 அருகில் ஓடும் ஓடைகள் கீதம் இசைக்க.
 ரவியும் தனிமையில் இருந்த பார்த்திமாவிடம் எல்லைமீறும் மோகத்தீயில்.
 கன்னங்கள் தொட்டுச் செல்லமாக தன் ஆண்மையின் உணர்வுகளை உதட்டோரம் முதல் எச்சிலை முத்தமாக கொடுத்தான்.
 கட்டிக்கப்போகும் அவள் தன் தாரம் என்றும்! நிக்கா இவனுடன் தான் என்று ஆசைக்கனவில் அவளும் இடம் கொடுத்தால். அருகில் யாரும் இல்லை என்ற தைரியத்தில்.


அந்திப் பொழுதில் மந்தமாருதம் வீசும் வேலையில்.
மெல்லியவள் பூவாசம்.
தேன் இனிக்கும் பால்வாசம்.
 பார்த்தாலே ஆவேசம் பாய்போட்டால் !

மாலையில் வரும் கீதம் இசைக்கும் அந்த நேரத்தில்.
 அந்திநேரச் சிந்துடன் வர்த்தகசேவையில் நாகபூசனி கருப்பையா ஒலிக்க விட்ட.

 இந்தப்பாடலைக் கேட்டுக் கொண்டு இந்தப்புரம் இரு கண்கள் நோக்க.
 மறுகரையில் இரு கண்கள் நோக்குவதை அவர்கள் கானவில்லை!

________________________________________:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

குறிஞ்சித் தென்னவன்- மலையக கவிதையின் முக்கியமான ஒருவர்.
சிதம்பரபுரம்- வவுனியாவில் ஒரு திட்டமிட்டமுகாம் பகுதி!

27 comments :

அம்பலத்தார் said...

அந்தநாள் ஞாபகங்களை நினைவுகூரும் படைப்பிற்கு நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

தனிமரம் நல்லா எழுதியிருகிங்க... அனுபவம் புதுமை...

Anonymous said...

அயல் நாட்டு (!) அமைதிப்படை..
-:)
பேரீட்சம் பழத்தைக் கொடுத்து பிரபு மீதான தன் காதலைச் வெளிக்காட்டி...

புது அனுபவம்...

தொடரட்டும் இப்பயணம்...வாழ்த்துக்கள்...

ஹேமா said...

பாட்டு மிகவும் பிடிச்ச பாட்டு எனக்கும்.நடந்த நிகழ்ச்சிகளை அணு அணுவாகக் கோர்த்தெடுக்கிறீர்களே !

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html

K.s.s.Rajh said...

////பார்த்திமா என்னும் பேதையை. தொட்டுப் பேச என்னிய ரவி அழைத்துச் சென்றது சிதம்பரபுரம் போகும் வழியில் இருக்கும் கல்வாரிக்கு////

அண்ணே இப்பவும் இந்த புனிதமான இடம் பல காதலர்களின் சங்கமாகதான் இருக்கு

K.s.s.Rajh said...

உங்கள் வர்ணிப்புக்கள் அழகு பாஸ்....பல உதாரணங்களை சொல்லி வர்ணிக்கும் வித சூப்பர்..

என்னிடம் கல்வாரி படம் இருக்கு கேட்டு இருந்தால் தந்திருப்பேனே.....

ஓரு சஸ்பென்ஸ் வைத்து முடித்திருக்கீங்க அடுத்த பகுதியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கு.....

செங்கோவி said...

பிரபுவின் பால்ய காதல் என்னவாகும்?..சீக்கிரம் சொல்லுங்க பாஸ்

செங்கோவி said...

சாலிக்கா இன்னும் தோழி தானா என்று யோசிக்க வைக்கிறது இந்தப் பகுதி.....

சக்தி கல்வி மையம் said...

அந்தநாள் ஞாபகங்களை நினைவுகூரும் பதிவு.

MANO நாஞ்சில் மனோ said...

அமைதியாக இருந்த எங்கள் வாழ்வு அடுத்த வேலைச் சாப்பாடு இல்லாமல் இடம் பெயர்ந்த போது கோப்பி குடிக்க சீனி இல்லாமல் தொட்டுக்கொண்டு குடித்தது பேரீட்சம் பழத்துடன்.//

நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த மானங்கெட்ட அமைதிப்படையால்....

MANO நாஞ்சில் மனோ said...

அனுபவங்கள் பலவிதமாக....!!!

rajamelaiyur said...

//
காதல் வந்தால் பொய் சொல்வது இன்னொரு சிறப்பு
//
காதலே பொய்தானே

தனிமரம் said...

வாங்க அம்பலத்தார் ஒரு பால் கோப்பி
குடியுங்கோ! 
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

 
நன்றி தமிழ்வாசி  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

 
நன்றி ரெவெரி   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

 
நன்றி ஹேமா   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்! இந்தப்பாட்டு உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என நினைத்து இருந்தேன் நீங்களே உறுதி செய்து விட்டீர்கள் நன்றி இன்னொரு முறை!

தனிமரம் said...

 
நன்றி ரத்னவேல் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

 
நன்றி ராச்  வருகைக்கும் கருத்துரைக்கும்! என்ன செய்வது புனிதம் என்பதன் அர்த்தம் தெரியாத  ஜந்துக்கள்!

தனிமரம் said...

கல்வாரியை நான் ஆன்மீகத்துடன் பார்ப்பவன் அதை இப்படி ஒரு காட்சியில் போட மனசு இடம் கொடுக்காது தம்பி!

தனிமரம் said...

சொல்லி விடுகின்றேன் இன்னும் சில நாட்களில் வாத்தியாரே!

தனிமரம் said...

சாலிக்கா விரைவில் முடிவு தெரியும் செங்கோவி அண்ணாச்சி நன்றி வருகைக்கும் கதுத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி வேடந்தாங்கள் கருன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

மனோ அண்ணாச்சி உங்கள் மீது அன்பு இருக்கு ஆனால் அந்தப்படை செய்ததை மறக்க முடியவில்லை இது வலி அண்ணா!

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி என் ராஜாபாட்டை ராஜா வருகைக்கும் கருத்துரைக்கும்!

நிரூபன் said...

எமது கடந்த கால அவலங்களைச் சுமந்த வாறு தொடர் நகர்கிறது.

வேதனை தான் இப்போது மிச்சமாக இருக்கிறது.