02 October 2011

பிடித்த படத்தின் பின் நானும்//

திரைப்படம் என்ற ரயில் பயணம் என்னை எல்லா இடங்களுக்கும் சுமந்து செல்கிறது .
மேத்தாவின் கவிதையில் சொல்வது போல் இருட்டில் நிழலைத்தேடி ஓடும் மனம் என்ற வரிகள் எனக்குப் பிடித்தது.படம் பார்த்துக் கெட்டுப் போனவர்கள் வரிசையில் உன்னையும் சேர்க்கனும் என்று என் நண்பர்கள் திட்டும் அளவுக்கு நானும் சினிமா என்ற சக்கரத்தில் வளையமாக இருந்திருக்கிறேன்!

சகோதரமொழி நண்பர்களுடன் ஏற்பட்ட நட்பு. தமிழ் திரையைத்தாண்டி ஹிந்திப் பக்கம் தாவிச்சென்றது!1980 இல் இருந்த ரசனையும் 1990 இன் பிற்பகுதியில் அதிகமான காதலை மட்டும் அரைத்த வண்ணம் இருந்த தமிழ் சினிமாவின் வெறுப்பும் என்பதும் ஒருகாரணம்!

அவர்களுக்கு சகோதரமொழியில் வரும் படங்களை தாண்டி ஹிந்திக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் நாடறிந்தது இந்த மயக்கம் அசின் வரை பத்திக்கிச்சு!

நான் அதிகம் சாருக்கானின் படங்களை விரும்பிப் பார்ப்பேன் .என் அபிமான நடிகரும், கூட
 இந்த வரிசையில் கொழும்பில் பணியில் இருந்த போது ஒரு படத்தை வெற்றி கரமாக 60 காட்சிகள் திரையரங்கில் பார்த்தவன் நான் !வீனாப்போன ரசிகன் என்ற பட்டம்தந்தால் ஏறுக்கொள்வேன்!அந்தப் படம்!







தில் தோ பாஹல் ஹைய்(dil to pahal hai) சாருக்கானின் வெற்றிப் படவரிசையில் இது ஒரு முத்து .அழகான காதல் கதை நால்வரின் காதலை ஒவ்வொரு காட்சியும் ரசித்துப் பார்க்க வைத்த இயக்கம் யாஸ்சோப்ராவின் கைவண்ணம் ,படப்பிடிப்பு, நடிப்பு எல்லாம் பிடிக்கும் எனக்கு இப்படப் பாடல்கள் என்றும் என்கூடவரும் தாலாட்டு!

ஹிந்தியில் புகழ்பெற்றவர்கள் காதாநாயகர்கள் இருவர், மூவர் சேர்ந்து ஒன்றாக நடிப்பார்கள் இங்கே விஜய்காந்தும் ரஜனியும் சேர்ந்து நடிக்க மாட்டினம்!

இப்படம் கொழும்பில் லிபர்ட்டி மெஜிக் சிட்டி, கிரான்பாஸ் அசோக்கா மருதானை சென்றல் என சுற்றுவட்டாரங்களில் வெற்றிகரமாக ஓடியது யாஸ்சோப்ராவின் தயாரிப்பில் இக்காவியம் வெளிவந்தது சாருக்கானுடன் அக்சைக் குமாரும் போட்டிக்காக சில காட்சியில் வந்து போவார்!

எப்போதுமே பிடித்த மாதுரிடிக்சித்


 ,கரிஸ்மாகபூர் என முக்கிய கதாப்பாத்திரங்கள் கதைக்கு உயிர் கொடுத்தவர்கள் .நிஜத்தில் இக்கதையில் வரும் கரிஸ்மா ஏற்ற பாத்திரம் என் நண்பி ஒருவரின் உண்மை நிலை!

உத்தம் சிங் இப்படத்திற்கு அற்புதமாக இசை அமைத்திருந்தார் .ராஜாவிற்குப் பிறகு இவரின் இசை என்னை கட்டிப்போட்டு துள்ளிக்குதிக்க வைத்தது .காலத்தின் கோலம் நல்ல இசையமைப்பாளர் பரிதாபகரமாக படுகொலை செய்யப்பட்டார்!


ஹிந்தியுலகில் இவரின் இழப்பு பேரிழப்பு வெற்றிப்படியில் ஏறும் போது அந்தக் கொடுமையான மரணம் வந்துவிட்டது!
இவரின் இசையை பின்னாலில் லவ்டுடே சிவா காதல் சுகமானது படத்திற்கு" அடி சுகமா சுகமா சுடிதாரே" பாட்டுக்கு சுட்டுப் போட்டிருந்தார்!

ஆறு பாடலும் பிரபல்ய மாகியிருந்தது இரண்டு பாடல் சகோதரமொழி வானொலியான சிரச வில் பாடல் தரவரிசையில் top 20 ஞாயிறு இரவு 10மணி தொடக்கம் 12மணிவரையில் இடம் பெறும் நிகழ்ச்சியில் தொடர்ந்து 1,2 இடங்களை பெற்று முதல்தரவரிசையில் ஒருவருடம் நீடித்தது இது ஒரு சாதனையான விடயம் அன்நாட்களில் !!


தில் தோ பாகல்கேயும், ஹரரே ஹரகுச்சு கோகயா கோகின்ன பேரானா , பாடல்களை உச்சரிக்காத சகோதர மொழி வாலிப உள்ளங்கள் அன்று கிடையாது


!நீண்டதூர பேரூந்துப்பயணங்களில் ஒலிநாடா அறுந்து போகும் வரை ஒலிக்கும்,

அந்தளவுக்கு வானொலியிலும் ஒலித்து ஒய்ந்தது.ஹரிஹரன் இப்படத்தில் titile பாடலை மிக இயல்பாக பாடி அதிகமாக வடஇந்தியாவில் பிரபல்யமாகியிருந்தார்

பிறகுதான் தமிழில் புகழின் உச்சிக்குப் போனார்.
வட இந்தியாவின் இசைக்குயில் லதாமங்கேஸ்கர் இதில் இருபாடல் பாடியிருப்பார் .ஒருபாடலின் இடையே அவரின் ஹம்மிங் தமிழில் ஜொன்சியிக்குப் பிறகு அதிகம் கவர்ந்தது .கரிஸ்மாவின் ஒருதலைக் காதலுக்கு இசைவாக வரும் பாடலில் இந்த ஹம்மிங் இசைக்குயிலின் குரல் ஊடாக முன்னால் நண்பனின் முன்னால் தோழியின் நினைவு வந்து போகிறது.

இன்னொருபாடல் மழையில் பாடுவார்கள் இதை தமிழில் அறிந்தும் அறியாமல் படத்தில் இரண்டாவது ஹீரோவிற்கு கொடுத்து மூலப்பாடல் காட்சியை கொத்துப் பரோட்டாவாக்கியிருப்பார்கள்!

படத்தில் கரிஸ்மாகபூர் நடிப்பில் ஒரு காட்சியில் அவரின் காலில் ஏற்படும் நரம்பு விலகும் காட்சியில் கமரா அவரின் காலைச் சுற்றி ஓடும் சில கனங்களில் காட்டும் பாவனை


 மயூரி படத்திற்குப் பின் என்னை மிகவும் பாதித்தது


 .வெற்றியடையும் போதுவரும் தடங்கள் ஆண்மாவை உலுக்கும் அப்படித்தான் இதில். கரிஸ்மா பரம்பரை நடிப்பில் தன் தந்தையை நிரூபித்திருப்பார்!

மதுரிடிக்சித்தின் நடிப்பை சொல்ல இரண்டு பதிவு போடலாம்! ஏற்ற பாத்திரத்தை பானுப்பிரியா போல் சிறப்பாக செய்யக்கூடியவர் .இவரும் சன்சய்தத்தும் நிஜத்தில் ஜோடி சேரப் போவதாக அன்நாளில் நாளிதழ்கள் பத்திவெச்சது!
சாருக்கானின் நடிப்பை குறும்பை, ரசித்துப்பார்த்தேன்!

இவர்களைத் தாண்டி இப்படத்தில் அக்சைக்குமார் வந்துபோகும் காட்சி செய்யும் தியாகம் என் முன்னால் நண்பனுடன் காலிமுகத்திடலில் மாலையில் தோன்றிய வாக்குவாதம் இரவு கொழும்பு-12 இல் வந்து சேரும் வரை. இரு மொழிகளில் ஆட்டோக்காரன் காதை மூடிக்கொள்ளும் அளவுக்கு நீண்டது. என் நட்புக்கு முடிவுரை எழுதிய கனங்கள்..!

இப்படிபல விடயங்கள் இப்படத்தோடு என் நினைவில் வந்து போகிறது .எப்போதும் மனதிற்குள் சிலரை நினைக்கும் போது என் அலுமாரியில் இப்படத்தை தேடி எடுத்து சில காட்சிகள் ரசித்தால் சில வருடங்கள் பின்னோக்கிப் போகிறது மனசு!

இப்படத்திற்கு தமிழில் யாரோ ஒருவர் யாருக்காகவோ எங்கேயும் எப்போதும் காத்திருப் பார்களாம்! காலம் சரியாகத்தான் மொழி பெயர்த்திருக்கு போல்!

32 comments :

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான படமும், மாதுரி மார்க்கெட்டை கரிஷ்மா தட்டி பறித்ததும் இந்த படத்தில்தான்....

MANO நாஞ்சில் மனோ said...

ஐ அண்ணே எனக்குதான் வடையா...???

K said...

இது டெம்ப்ளேட் கமெண்டு அல்ல நேசன் அண்ணே!

உண்மையிலேயே பாடல்களும் பதிவும் அருமை!

சுதா SJ said...

நீங்களும் ஹிந்தி பாடல் படம் பார்ப்பீங்கள???
சூப்பர் பாடல்.... நீங்கள் குறுப்பிட்ட படத்தை நானும் பார்த்து உள்ளேன்
படம் பிரமாதம்....... உண்மையில் நல்ல பதிவு நேசன் அண்ணா.

சுதா SJ said...

உங்களுக்கு ஹிந்தி படம் புடிக்கும் என்றால் சொல்லுங்கள்.
என்னிடம் ஒரு டஜன் ஹிந்தி பட கலெக்ஷன் இருக்கு
தருகுறேன்......

மாய உலகம் said...

கானோளியோடு கலக்கலான அலசல் சகோதரா

Anonymous said...

நல்ல பதிவு நேசன்...எனக்கும் பிடித்தது...வாழ்த்துக்கள்...

K.s.s.Rajh said...

அட பாஸ் நானும் நிறைய ஹிந்திப்படங்கள் பார்ப்பேன் ஆரம்பத்தில் ஜஸ்வர்யாராய்க்காக பார்க்கத்தொடங்கி அப்பறம் நிறைய ஹிந்திப்படம் பார்க்கத்தொடங்கிவிட்டேன்...ஷாருக்கான்,மாதுரி தீட்ஜ் சொல்லனுமா என்ன

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் தகவலுக்கும்!

தனிமரம் said...

அண்ணாச்சி வடை இல்ல உங்களுக்கு பால் கோப்பிதான் தனிமரம் தரும் !அவ்வ்

தனிமரம் said...

நன்றி ஐடியாமணி சார் வருகைக்கும் கருத்துக்கும்!
ஏன் ஐயா இந்த குசும்பு நான் எப்போது சொன்னேன் டெம்பிளேட் பின்னூட்டம் என்று?

தனிமரம் said...

நன்றி துஸ்யந்தன்  வருகைக்கும் கருத்துரைக்கும் !
நான் அதிகம் ஹிந்திப்படம் பார்த்தது ஒரு காலத்தில் இப்போது நேரம் கிடைப்பது இல்லை .

நிரூபன் said...

இனிய பிரெஞ் காலை வணக்கம் பாஸ்,

பிடித்த படத்தின் ஊடாக ஞாபகங்களை மீட்டியிருக்கிறீங்க.

எனக்கும் சாருக்கானின் படங்கள் பிடிக்கும்,
நீங்கள் விளக்கிய படத்திற்கான தமிழ் மொழி மூல அர்த்தம் கண்டு கிறங்கிப் போனேன்.

தனிமரம் said...

துஸ்யந்தன் உங்களிடம் போடர் என்ற படத்தில் தூச்சலோம் என்ற பாடல் இருந்தால் லிங் தாருங்கள் அந்தப்பாடலை தனிமரத்தில் பின்னால் கதையுடன் ஒலிக்கவிடும்!

தனிமரம் said...

நன்றி மாய உலகம் வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

நன்றி ராச்  வருகைக்கும் கருத்துக்கும்!

Unknown said...

எங்க தனிமரத்தை காணலியே
நீங்க படம் பார்த்துக் கொண்டிருந்தீர்.
நான் பேசாம ஓட்டுப் போட்டு
விட்டு திரும்பி விட்டேன்




புலவர் சா இராமாநுசம்

Yoga.s.FR said...

தனிமரம் கூறியது...

அண்ணாச்சி வடை இல்ல உங்களுக்கு பால் கோப்பிதான் தனிமரம் தரும் !அவ்வ்§§§§§
எங்கயும் "கோப்பி ஷொப்"பில வேலை செய்யிறாரோ?

கவி அழகன் said...

நன்றி

M.R said...

எனக்கும் ஷாருக் படங்கள் மிகவும் பிடிக்கும் நண்பரே

இராஜராஜேஸ்வரி said...

காலம் சரியாகத்தான் மொழி பெயர்த்திருக்கு போல்!

பாடல்களும் பதிவும் அருமை!

ம.தி.சுதா said...

ஃஃஃஃ1980 இல் இருந்த ரசனையும் 1990 இன் பிற்பகுதியில் அதிகமான காதலை மட்டும் அரைத்த வண்ணம் இருந்த தமிழ் சினிமாவின் வெறுப்பும் என்பதும் ஒருகாரணம்!ஃஃஃ

அடடா நீங்களே இப்புடிச் சொல்லலமா?

ம.தி.சுதா said...

பரவாயில்லை ரசிச்சதும் நல்ல பாட்டா ரசிச்சதால பிழைச்சுப் போங்க...

தனிமரம் said...

நன்றி நிரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

யோகா ஐயா கோப்பிக்கடையுடன் கூடிய சாப்பாட்டுக்கடையில் வேலை!ஹீ ஹீ!

தனிமரம் said...

நன்றி கவி அழகன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி M.R வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி இராஜேஸ்வரி அம்மா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

உண்மையைச் சொன்னேன்  மதிசுதா என் ரசனையில் அப்படி ஒரு பார்வை !

தனிமரம் said...

நன்றி மதிசுதா வருகைக்கும் கருத்துரைக்கும். நீங்கள் கும்ம வில்லை தப்பித்தேன்!