24 October 2011

நொந்து போகும் ஓர்  இதயம் -9

//இந்தத் தொடரில் யாரும் அரசியல் பார்வையில் கருத்தை நோக்க வேண்டாம் உறவுகளே!//

அனுராத புரம் போகும் சொகுசுபஸ்க்கள் மதவாச்சியிலும் நிறுத்துவார்கள் .

இனித் தொடருக்குள்...,>>>>>>>>>


 அன்று அக்ரம் தாமதமாக வருவான் என்பதால் பியதாசவுடன் அவர்கள் வீட்டில் கதையில் இருந்துவிட்டு  அக்ரம் வீட்டிற்குல் நுழைந்தேன்.

 பானு இரண்டாவது மகனைப் பெற்று சில வாரங்கள் என்பதால் அதிகம் அவளுக்கு
சிரமம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை.

" நானா இன்று வாரது தெரியாது இல்லன உம்மாவை கூப்பிட்டிருப்பேன் என்று அவள் சொல்லும் போதே"".

 இல்ல பானு எனக்கும் திடீர் என்றுதான் திருகோணமலை போகச் சொல்லி பெரியவர் சொன்னார்..

.அக்ரமும் இந்தவாரம் அங்குதானே வேலை. அதனால் இருவரும் ஒன்றாகப்போவோம் என்றுதான் இங்கு வந்தேன் .
என்று நான் மதவாச்சிக்கு வந்த விடயத்தை விளக்கினேன்.

சில நிறுவனங்கள் திருகோணமலை,வவுனியா,மன்னார் பகுதியை ஒரு குடையின் கீழ் விற்பனைப் பிரதிநிதிகளிடம் கொடுப்பது நடைமுறை அதிக கிரயச் செலவினைத் தடுக்கும் வழிமுறையாகும்.

 இன்னொரு புறம் அதிகம் மனித வலுவினைக் குறைக்கும் வியாயார தந்திரம்.


நானா வரவர மாத்தாயா ஹரி லச்சனாய்! மாத்தயவகே எக்கனக் பதினே. ஜீவித்த சுந்தராய் !


என்று ஒரு குயில் கூவுது அதுவும் இலங்கையின் இளம்குயில் என்று பானு என்னிடம் பீடிகை போடும் போதே அக்ரமும் வந்தான்!

"உது எங்கே  போய் முடியுமோ தெரியாது? என்று நானும் ஜோசிக்கின்றன். என்றவாரே தன் கையில் இருந்த தாஸ்தாவேஸ் அடங்கிய பையினை மேசைமீது வைத்தான்" அக்ரம்.

 ஏன் பானு இன்று நான் தான் கிடைச்சனா கொத்துப் பரோட்டா போட?
 ரெண்டுபேரும் முடிவே பண்ணீட்டீங்களா? பக்கத்து வீட்டுக்காரனாகி வேலிச் சண்டை போட என்று நான் கேட்டதும் பானு ஏதும் சொல்லவில்லை.

 அக்ரமின்  தங்கை எனக்கும் அக்ரமுக்கும் கோப்பி கொண்டது வைத்தாள்.

 சரி நான் ஒன்றும் கேட்டகல இன்ஸா அல்லா!

நானும் அவர்கள் வீட்டில் இரவு சாப்பாடு முடித்து  வழமையாக அதிகாலையில் போகனும் என்பதால் அமைதியாக .
இரவு நித்திரை க்குச் சென்றேன் என்றாலும் என் சிந்தனை எல்லாம் எதிர்காலம் என்ற ரவியைப் பற்றியதாக இருந்தது.

 அவன் என்னிடன் இப்படி பேசியிருக்கக் கூடாது. இவ்வளவு நேரத்திற்கு ஒரு அழைப்பைக்கூட எடுக்கவில்லையே. அவனுக்கு இத்தனை விசமன் என்றாள் எனக்கு எப்படி இருக்கும் என்று ஜோசிக்கவில்லை என்ற சிந்தனையில் என் கண்கள் மூடிக்கொள்ள!

 அதிகாலை என்

அலராம் அடிக்க நானும் எழுந்து என் அன்றாட கடமை முடித்துக் கொண்டு அக்ரம் கூட அவனது காரில் திருகோணமலைக்குப் புறப்பட்டோம் .

அதிகாலையில் ஹபரன ஊடாக பயணம் செய்வது மனதிற்கு சந்தோஸம் என்றாலும்!

!அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்த பின்பே பயணங்களைத் தொடங்க முடியும்.

 ஹபரன தாண்டி மன்னம்பிட்டியவில் தான் அதிக நேரம் சோதனைச் சாவடியில் காத்திருக்கனும்.

 கிழக்குமாகாணப் போக்குவரத்து பிரதான மார்க்கம் இந்த வழிதான்.

 பல பாதுகாப்புக் கண்கள், சில உறங்காத கண்மணிகள் பார்வை என எப்போதும் ஒரு அச்சம் மனதில் இருக்கும்.

 என் போன்ற சாதாரண பயணிகளுக்கு இந்தப்பாதை தாண்டும் வரை இராமனை சுமந்திரன் வனவாசம் அனுப்பி விட்டு அயோத்தி வந்த நிலை.


 ஒருவாறு நாம் இருவரும் பாதுகாப்பு சோதனைகள் தாண்டி. தம்பலகாமம் ஊடாக திருகோணமலை போக வெளிக்கிட்டம் .

தம்பலகாமம் இயற்கையான விவசாயப் பகுதி அதிகம் காடுகளாகிவிட்டது அங்கிருந்தோர் விரட்டப்பட்டதால். நல்ல கோரைப்புல்லும் குருஞ்சாய் இலைகளும் பார்ப்போர் மனதில் இந்த இடத்தில்!இருந்து மீண்டு போக விரும்பமாட்டினம்.

  சில இடங்களில் வழிவியாபாரிகள் கொண்டு வந்த  நல்ல எருமை மாட்டில் செய்த தயிர் கித்துல் கருப்பட்டியுடன் வைத்திருப்பார்கள்.  பரத்வாஜர் தவசிமாடத்தில் இன்சுவை உண்டோர் பரதன் படைபோல் அத்தனை சிறப்பு மிக்க  தயிர் இந்தப்பிரதேசத்தில் கிடைக்கும்.

 நானும், அக்ரமும் நமக்கு எப்போதும் பழக்கமான அந்த வியாபாரியிடம் வாங்கி .அருகில் இருந்த இலந்தப்பழ மரத்தடியில் நம் வாகனத்தை நிறுத்தி விட்டு குடித்துக்கொண்டிருந்தோம்!

"என்ன தனிமரம் ஒரே டல்லா இருக்கிறாய்" ஏன் சாலிக்கா அழைப்பு எடுக்கவில்லையோ?

 "உனக்கு குசும்பு கூடிப் போச்சு நான் இன்னொரு நண்பனைப் பற்றி ஜோசிக்கின்றேன்."

சும்மா ரீல் விடாத எனக்குத் தெரியும். நீ சாலிக்காவுடன் நேற்று படம் பார்க்கப் போனது . மனசுக்குள் ஏதும் இல்லை என்று பொய் சொல்லாத நானும் ஒரு குடும்பஸ்தன் மறந்திட்டியோ?

அக்ரம்
பாய்  நீ என்ன ஆமியில் சேர்ந்திட்டியோ விசாரிக்கிறாய் ?

"என்னக்குத் தெரியும் தனிமரம் இது அதுதான் அவள் கூட நீ பன்சாலைக்குப் போறாய் .

அவளின் தம்பி பண்டாரவுக்கு வேலை எடுத்துக் கொடுத்திருக்கிறாய் .

வங்கியில் கடனுக்கு ஏதோ பொறுப்புக் கடிதம் யாரிட்டையோ வாங்கிக் கொடுத்திருக்கிறாய் என்று எல்லாம் பியதாஸ அங்கில் சொல்லியிருக்கிறார் அவர் கூட உன்னை இப்போதெல்லாம் மிகவும் மரியாதையாக கதைப்பதைப் பார்த்தால்" எனக்கு அப்படி ஒரு ஐயப்பாடு வருகின்றது .
அக்ரம் பாய் மொட்டம் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதீங்க! .
 --

மாத்தயா ஹரி லஸ்சனாய்- அதிகாரி நல்ல அழகு

மாத்தயாவகே எக்கனக் பதின்னே- அவரைப்போல் ஒருவரைக் கலியாணம் முடிப்பது.
ஜீவித்த சுந்தராய்- வாழ்க்கை வசந்தம்

பண்சாலை- புத்தகோயில்/விகாரை/மடாலயம்.

இதயம் விரியும்....

30 comments :

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல பதிவு.. படங்களை கொஞ்சம் பெரிசா போடலாமே...

Anonymous said...

இராமனை சுமந்திரன் வனவாசம் அனுப்பி விட்டு அயோத்தி வந்த நிலை//

பாதை தாண்டுவதில் உள்ள சிரமத்தை அழகாய் சொல்லியுள்ளீர்கள் நேசன்...தொடருங்கள்...இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

கவி அழகன் said...

ஹபரண மன்னம்பிட்டி தம்பலகாமம் திருகோணமலை

ஹபரணை பொலநறுவ கதுரு வெல புனானை மட்டக்களப்பு

எதனை நாள் இரவு பகல் பயணம் நினைக்கவே சந்தோசம்

யானைகள் குறுக்கால போகுங்கள் இரவுநேரம்

திருகோணமலை சேருவில பகுதில எருமை தயிர் விக்கும் இடம் என்று ஒரு கடலே போட்டிருக்கும்

மகேந்திரன் said...

நல்ல பதிவு நண்பரே.
இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்.

K.s.s.Rajh said...

கதை பல விடயங்களை தொட்டுச்செல்கின்றது பல விடயங்களை அறிய முடிகின்றது...தொடர்ந்து அசத்துங்க பாஸ்

மாய உலகம் said...

பகிர்வுக்கு பாராட்டுக்கள் நண்பரே!

மாய உலகம் said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

செங்கோவி said...

கதை முக்கியக் கட்டத்தை நோக்கி நகர்கிறது போல் உள்ளதே...

செங்கோவி said...

//"என்ன தனிமரம் ஒரே டல்லா இருக்கிறாய்" ஏன் சாலிக்கா அழைப்பு எடுக்கவில்லையோ?//

அக்ரம் சரியாகத் தானே கேட்கிறார்..நானும் குடும்பஸ்தன் தான்...என்கிட்ட சொல்லுங்க.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

நிரூபன் said...

ஆகா..தனிமரம் தியேட்டருக்கெல்லாம் சாலிக்காவுடன் போயிருக்கா..

தொடர் சுவையாக நகர்கிறது.

தனிமரம் said...

நன்றி தமிழ்வாசி வருகைக்கும் கருத்துரைக்கும் .
படத்தினை பெருசாகப் போட்டால் பதிவு நீண்டு விடுவதால் தயக்கமாக இருக்கின்றது பெரிதாக போட!

தனிமரம் said...

தமிழ்வாசிக்கும் குடும்பத்தாருக்கும் முன் கூட்டிய தீபாவளி வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.
தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும்.

தனிமரம் said...

கவி அழகனிடம் இத்தனை பின்னூட்டம் ஆஹா ஆஹா  இந்த மார்க்கத்தையே படமாக காட்டிவிட்டீர்கள் உண்மையில் சேருவில தயிர் கடை மறக்க முடியாது மன்னம் பிட்டி வழிப்பாதை என்னை மிகவும் கவர்ந்தன ஒரு காலத்தில்.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி மகேந்திரன் வருகைக்கும் கருத்துரைக்கும் .
உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும் .
உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

நன்றி மாய உலகம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் .
உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

செங்கோவி அண்ணாத்த இன்னும் முக்கிய விடயங்கள் வரவில்லை அதற்குள் என்ன அவசரம்.

தனிமரம் said...

ஆஹா அந்த நேரம் அப்படி டல்லா இருந்தேன் இப்போது இருக்கவே நேரம் இல்லாத ஓட்டம்.

தனிமரம் said...

நன்றி செங்கோவி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்.

தனிமரம் said...

வணக்கம் நிரூ.
நன்றி உங்கள் வாழ்த்துக்கு .
நிரூபனுக்கும் குடும்பத்து உறவுகளுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் முன்கூட்டியே!

தனிமரம் said...

வணக்கம் நிரூ.
நன்றி உங்கள் வாழ்த்துக்கு .
நிரூபனுக்கும் குடும்பத்து உறவுகளுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் முன்கூட்டியே!

தனிமரம் said...

நல்ல நண்பியுடன் தியேட்டர் போவது தவறில்லை இனி வரும் பகுதியில் இதற்கு பதில் வரும்.

shanmugavel said...

நேசனுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மதுரை சரவணன் said...

nalla pathivu..vaalththukkal

தனிமரம் said...

சண்முகவேல் ஐயாவுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

நன்றி மதுரை சரவணன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்  .ஐயாவுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

ஹேமா said...

நீங்கள் சொல்லும் இடமெல்லாம் நானும் பயணப்பட்ட ஞாபகம்.இனிய தீபாவளி வாழ்த்துகள் !

Anonymous said...

தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணாச்சி ..