21 October 2011

என் உயிரைக் கொல்லாதே!

சிலபாடலின் பின் சில சுவாரசியமான, மற்றும் சில புரியாத விடயங்களும் பின்னால் ஒழிந்து இருக்கும்.

 அப்படியான விடயங்களை பலருடன் பகிரும் ஆவல் முன்னர் இருந்தது. இப்போதெல்லாம் சராசரி ரசிகனாகவும், சிலதை விலக்கியும் போகவேண்டிய உணர்வாளனாக காலச் சக்கரம் !

இந்த தனியார் வேலையில் சேர்ந்த பின் நானும் அதிகம் பணி நிமித்தம் சில பகுதிகளுக்கு  ஒரு வாரம் மற்ற நண்பர்களுக்கு உதவும் நோக்கில் பலபகுதிகளுக்குப் போய் இருக்கின்றேன்.

 அப்படிப் போன இடங்களில் சிலரைச் சந்தித்து அவர்களுடன் கொஞ்சம் பழகும் வாய்ப்பு வந்திருக்கின்றது.

 அப்படி நான் நுவரெலியாப்பகுதியில் வேலை செய்யும் போது அறிமுகமானவள் தாட்சாயினி..

தக்கனின் மகள் அல்ல சாதாரண தேயிலைத் தோட்டத்து கொழுந்து எடுக்கும்    சுப்பையாவின் கொழுங்கொடி.

 இவள் பேசுவதற்கும் பழகுவதற்கும் இனிமையானவள். வீட்டில் மூத்தவள் பொருளாதாரத்தில் முன்னேறவும் தான் கற்ற கணக்கியல் துறையை முடக்கிவிடாமலும் வருமானம் ஈட்டவும் தனியார் நிறுவனத்தில் பிரதம கணக்காளராக இருந்தாள்.

எங்களுடைய ஏகவினியோகஸ்தராக இருந்த அந்த தனியார் நிறுவனத்தின் கணக்கு வழக்கைப் பார்ப்பவள் என்பதால் . சில நேரங்களில் அதிகமான நேரம் எங்களுடன் பணிபுரிவதாள் தாமதமாகி பணிமுடியும் நாட்களில் அவளை அவர்கள் வீட்டில் கொண்டுபோய் விடும் நிலைகளும் இருந்தது .

சில நாட்களில் அவளும் பணிதாமதமானால் அன்பாக கேட்பாள் வீட்டிற்கு கூட்டிக்கொண்டே விடும்படி .

அந்தப்பகுதியில் சில சகோதர மொழி நண்பர்கள் வேலையற்று இருக்கும் வேங்கைகள் .இவளுக்கு வேட்பு மனுத்தாக்கள் செய்வதால் இது ஒரு தொல்லையாக அவளுக்கு இருந்த தாள்!

 நாங்கள் யாரும் இப்படி உடன் போகும் போது இம்சையாக இருக்காது என பின் ஒரு கோப்பி நேரத்தில் சொன்னாள்!

தட்சாயினி சுமாரான அழகு எதையும் ஆராய்ந்து பார்க்கும் கூர்மையான அறிவு.

 சில நேரங்களில் நாம் அவசரத்தில் விடும் விற்பனைப் பிழைகளை விரைவாக சுட்டிக்காட்டுவாள்.

 நான் அவளுடன் தயங்காமல்  விற்பனை பற்றி சிலநேரங்களில் அதிகம் பேசும்போது அவளுக்கு இம்சையாக இருக்கும் போது அருகில் இருக்கும் வானொலியில் மிகவும் சிறிய ஒலியுடன் பாடல் ஒலிக்கவிட்டு என் பேச்சை திசைமாற்றத் தெரிந்தவள்

.எனக்கு இருக்கும் பாடல் ரசனையைத் தெரிந்து பிடித்தபாடல் ஒலிக்கும் போது உங்கள் பாடல் போகுது சேர் என்பாள் வேடிக்கையாக.

  இப்போதும் போல் அப்போதும்  ஒரே பாடலை திருப்பித்திருப்பி என் வாகனத்தில் ஒலிக்கவிடுவதால்.

 என்னுடன் வரும் போது சில நேரங்களில் "இந்தப்பாட்டில் ஏன் இப்படி உங்களுக்கு ஈடுபாடு "என்பாள்?

 நானோ "சிலபாடலுக்கு தாட்சாயினி விளக்கம் கொடுக்க நினைத்தால் ஆயிரம் காரணம் சொல்ல முடியும் "என்றால் .

"சார் நீங்க இந்த வேலைக்கு வராமல் அங்கேயே போயிருக்கலாம் என்பாள்"

நான் பட்டு நொந்ததை இவளிடம் சொல்லி ஏன் புலம்பவைப்பான். என்று விட்டு சொன்னே!

" நான் விரைவில் நாட்டை விட்டுப் போய் விடுவேன் பிறகு எதற்கு என்று"

" அது எப்படிச் சேர் உங்களப்போல சிலர் இந்த சந்தைப்படுத்தலில் இருந்து விட்டு வெளிநாடு ஓடும் "சூட்சுமம் என்றாள்?

.இது நாட்டையாளுவோரின் தூரநோக்கு இல்லாமையால் இப்படி ஓடவேண்டியிருக்கு என்று மட்டும் சொன்னேன்.

" நீங்கள் எல்லாம் சுயநலவாதிகள் சேர்" . அவள் மனதில் இருக்கும் எண்ணத்தை என்னால் மாற்ற முடியாது.

 நான் மீளவும் என் நிரந்தர  பணியாற்றும் இடத்துக்கு (வவுனியாவிற்கு )திரும்புவதால் அவளை மீண்டும் காணவில்லை .

அவளுக்கும் இப்பாடல் பிடிக்கும் என்பது மட்டும் நிஜம்!

இந்தப்படத்தில் எல்லாப்பாடலும் பிரமாதம். பழனிபாரதியின் கவிதை கிறங்கடிக்கும்!எனக்கு எல்லாப்பாடலும் பிடிக்கும் .

இந்தப்பாடல் அதிகம் பிடிக்கும் !
பாடல் பாடும் சித்திராவின் குரல் வளம் ஏற்ற இறக்கத்தில் காட்டும் பாவம்.

கோபால் ராவ் குரல் தடித்தது என்றாளும் ஒரு ஆண்மகனின் கம்பீரம் தெரியும் !

இசையில் இவர்கள் பாடலின் உயிரை தந்து இருப்பார்கள்.

ரகுமான் அறிமுகப்படுத்திய பாடகர்களில் கோபால் ராவ் ஒருவர். பாடகராக இருந்தவர் இந்தப்படத்தில் இசையமைப்பாளராகவும் சேர்ந்து கொண்டார்.

இந்தப்படம் வெளியாகி இருந்தால்
 இன்னொரு வாரிசு தமிழ்த்துறையில் சில படங்கள் நடித்திருக்கும் .

சிம்ரனுக்கு இன்னும் சில படவாய்ப்புக்கள் கிடைத்திருக்கும்.
அந்தப்படம் கோடீஸ்வரன்! வாரிசு எமி குஞ்சுமேனன்.

இன்று சங்கர் என்ற இயக்குனரை தமிழ்சினிமாவுக்கு தந்தவர் K.T.குஞ்சுமேனன் அவர் தூக்கிவிட்டவர்கள் பலர் இன்று பிரபல்யமாக இருந்தாலும் இந்த நொந்து போய் இருக்கும் தயாரிப்பாளர் பற்றி யாரும் அக்கறைப்பட்டதாக தெரியவில்லை!

அந்தப்படத்தில்  மூவர் இசையமைப்பாளர்கள்.


 கோடீஸ்வரன் இசை  ஆகோஸ்.

 இதன் விரிவு --ஆ-ஆனந்த்




                                    கோ- கோபால்ராவ்
ஸ்-ஸ்வரசர்மா.


 இவர்களின் முக்கூட்டணிதான் ஆகோஸ்.




 அதன் பின் வேற படங்களுக்கு இசையமைத்த தாக தெரியவில்லை .

ஆனந்த முதலில் கொடுத்த வெற்றிகள் கூட இந்தப்படம் வெளிவராமல் போனதால் கானமல் போய்விட்டார்!

பாடல்காட்சி எப்படி இயக்கியிருப்பார்கள் என்று ஒரே ஆர்வமாக இருந்தேன் விடியாத இரவாகிப்போனது வெளிவராத இந்தப் படம்.


 ஆனாலும் என்னிடம் இப்படத்தின் முழுப்பாடலும் விருப்பத்தேர்வாக இத்தனை வருடங்கள் ஒரு உடலின் இரத்தோட்டம் போல் ஓடுகின்றது.

 மனதில் எழும் சலனங்களின் இப்பாடலைக் கேட்கும் போது மனசு அதிகாலை ஆற்றினைப் போல் அமைதியாக இருக்கின்றது!


பழனிபாரதியின் ஆங்கில வரிக்கலப்பில்லாத அற்புதப்பாடல்களில் இதுவும் ஒன்று

!பழனியின் கவிதை ஒரு பெண் எப்படி ஆணுக்கு தன் அழகின்  அதிகாரத்தையும் மயக்கத்தையும் கொடுப்பாள் என்பதையும் சவால்விடக்கூடிய தன்மையுள்ளவள் என்பதை மிகவுல் நளினமாக சொல்லியிருப்பார் !

கிளியோபட்ரா பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும் அவள் ஒரு அழகு தேவதை என்பதை மட்டும் நானும் நம்புகின்றேன்!

கவிஞர்களுக்கும் , வாசகருக்கும் ஒவ்வொரு உணர்வைத் தரக்கூடியவள் கிளியோபட்ரா!

 தபால் அட்டை போய் தொலைபேசி வந்தாலும் இன்னும் மனசு அந்த தபால் அட்டை அனுப்பிக் கேட்ட பாடல்களைத்தான் பிரிந்து வரமுடியாத காதலியின் வழியணுப்பைப் போல் மீளவும் நாடுகின்றது .

  நீங்களும் கேளுங்கள் தனிமரத்தின் வலையில்.

http://s01.download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Kodeswaran/Naan%20Kezy%20Naattu%20-%20TamilWire.com.mp3








                       

44 comments :

மாய உலகம் said...

k.T குஞ்சுமோன் என்ற ஒரு தயாரிப்பாளர் இன்று மறந்ததும்...தனது மகனை வைத்து பெரும் செலவில் எடுத்த இந்த படம் நின்று போனதால் தான்... இந்த படத்தை பற்றி நிறைய தெரிந்துவைத்துள்ளீர்கள்.... வாழ்த்துக்கள்.... தட்சாயினியுடன் பழகிய நடை நளினம்... சூப்பரா இருக்கு பாஸ்... பதிவு... வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

நின்றுபோன ஒரு படத்தின் காவியம் உங்கள்
கட்டுரையில் தெரிகிறது. கே.டி.குஞ்சுமோன் வந்த
புதிதில் அவரின் ஆதர்சனத்தை காணவே மிகவும்
கம்பீரமாக இருக்கும். மகனை வைத்து ஏகப்பட்ட
செலவு செய்து பண நொடியில் வீழ்ந்தவர்.
உங்கள் கட்டுரை நினைவுகளை மீளச் செய்கிறது.
நன்றி நண்பரே.

Unknown said...

கட்டுரை அருமை

K.s.s.Rajh said...

அட அண்ணன் ப்ளாஸ்பேக்குக்குள் போய்ட்டீங்க போல..............

K.s.s.Rajh said...

உங்கள் பாடல் ரசினை வியப்பைத்தருகின்றது பாஸ்

Unknown said...

பகிர்வுக்கு நன்றி மாப்ள!

Yoga.S. said...

காலை வணக்கம்!அருமை.தெளிந்த நடை.நல்ல பெயர் சூட்டியிருக்கிறீர்கள்!

SURYAJEEVA said...

ரசிக்கும் மனம் உள்ள தயாரிப்பாளர்கள், சில நேர தவறுகளால் அதல பாதாளத்தில் உருண்டு விடுகிறார்கள்... உச்சியில் இருந்து விழுபவன் அடி பெருசாக தான் இருக்கும்... என்ன செய்வது..

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல பகிர்வு. நன்றி தனிமரம்

MANO நாஞ்சில் மனோ said...

K.T.குஞ்சுமேனன் //

குஞ்சுமேனன் அல்ல குஞ்சுமோன்'ன்னு நினைக்கிறேன்....

தனிமரம் said...

நன்றி மாய உலகம் வருகைக்கும் கருத்துரைக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

சிம்ரனுக்கு இன்னும் சில படவாய்ப்புக்கள் கிடைத்திருக்கும்.//

ஆஹா மிஸ் ஆகிருச்சே, கிரானைட் இடுப்பு ஹி ஹி...

தனிமரம் said...

நன்றி மகேந்திரன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி வைவரை-சதீஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சில நேரங்களில் கடந்தகால நினைவுகள் வந்து போகின்றது ராச்!

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி அருள் வருகைக்கு!

தனிமரம் said...

நன்றி விக்கியண்ணா வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

நன்றி சூர்யஜீவா வருகைக்கும் கருத்துரைக்கும் கோடியில் வாங்கும் அந்த ஹைடேக் இயக்குனர் கொஞ்சம் தூக்கிவிட நினைக்கலாம்  அறிமுகம் செய்த நன்றிக்காக ஆனால்????

தனிமரம் said...

நன்றி தமிழ்வாசி வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

நன்றி மனோ தவறினைத் திருத்தியதற்கு குஞ்சுமோன் என்று தான் அழைக்க வேண்டும்.

தனிமரம் said...

என்ன செய்வது படம் மிஸ்தான் அதனால் தான் பின் மிஸ்சிஸ் தீபக் ஆகினாங்க சிம்ரான் .
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மனோ அண்ணாச்சி.

rajamelaiyur said...

நிறைய புது செய்திகள் ..நன்றி

Riyas said...

ஆஹா உங்கள் பதிவை மிகவும் ரசித்தேன்..

கோடிஸ்வரன் திரைப்படம் வெளிவரவேயில்லையா!

இப்படத்தில் இடம்பெற்ற "தொலைவினிலே வானம்" என்ற பாடல் என்னைக்கவர்ந்த பாடல்களில் ஒன்று,,

அப்போது கலக்கிய பழனிபாரதியை இப்போது கான முடிவதில்லை,,

தட்சாயின் என்று சொன்னதும்.. உன்னைத்தேடி படத்தில் இடம்பெற்ற "தட்சாயினி கொஞ்சம் தயை காட்டு நீ" என்ற பாடலை சொல்ல போறீகளோன்னு நினைத்தேன்..

இராஜராஜேஸ்வரி said...

பழனிபாரதியின் கவிதை கிறங்கடிக்கும்!எனக்கு எல்லாப்பாடலும் பிடிக்கும் .

இந்தப்பாடல் அதிகம் பிடிக்கும் !/

பாடல்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

shanmugavel said...

அருமை அய்யா! நினைவுகளை மீட்டுகிறது.நன்றி.

நிரூபன் said...

அண்ணே பாடல் கலக்கல்...

கீழ் நாட்டு கிளியோபட்ராவா...

மூன்றாம் உலகப் போர...

கொஞ்சம் புரிந்தும் புரியாத இரட்டை அர்த்தம் அல்லவா இருக்கு.

நிரூபன் said...

நினைவுகளை மீட்டிப் பார்க்கும் கலக்கலான பதிவு பாஸ்.

மதுரை சரவணன் said...

nalla pakirvu...vaalththukkal

தனிமரம் said...

நன்றி என் ராஜபாட்டை ராஜா வருகைக்கும் கதுத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி ரியாஸ் வருகைக்கும் கருக்துரைக்கும்.
கோடீஸ்வரன் படம் வெளிவரவில்லை.
எல்லாப்பாடலும் அருமை பழனிபாரதிக்கு சிலருடன் ஏற்பட்ட முரண்பாட்டால் திரையை விட்டு ஒதுங்கியிருப்பதாக ஒரு தகவல் மஞ்சரி ஒன்றில் வாசித்தேன் உண்மையில் நமக்குத்தான் நல்ல பாடல்களை இவர் மூலம் இப்போது கேட்க முடியுது இல்லை ஆனால் அதிகம் நூல் வெளிவருகின்றது.

தாட்சாயினி பிரபல்யமான வரிகள்

தனிமரம் said...

நன்றி இராஜேஸ்வரி அம்மா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி சண்முகவேல் ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கவிஞர் காலத்தை முன் உணர்ந்தவர்கள் என்பதை பழனிபாரதியும் கனித்து இருக்கிறார் எகிப்து நாட்டின் எல்லை வழிதானே முக்கிய தளங்களுக்கு படைகள் நகர்த்துவதால் மூன்றாம் உலகப் போருக்கு முக்கிய இடமாக இருக்கும் என்று ஜோசித்திருக்கிறார் போல நிரூ.

தனிமரம் said...

நன்றி நிரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி மதுரை சரவணன் வருகைக்கும் கருத்துரைக்கும்.வாழ்த்துக்கும்.

கவி அழகன் said...

கடைசி பாடல் தானே நல்லா இருக்கு

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோ .....

ADMIN said...

அப்படியே அள்ளிக்கொடுத்தருக்கிறீர்கள்.. நிறைவாக இருக்கிறது..!!

N.H. Narasimma Prasad said...

அருமையான பதிவு. உங்கள் எழுத்து நடை மிக அழகாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

Chitra said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

Mahan.Thamesh said...

பகிர்வுக்கு நன்றி சகோ