14 August 2012

மின்நூலும் அன்பு மழையும் -2

வணக்கம் உறவுகளே !

ஒரு சமூகத்தின் குரலாக ஒரு தொடர் முடிந்து போன விடயமாக இருந்தாலும். !

அதில் இருக்கும் குறைநிறைகள் பலருக்குப் போய் சேர வேண்டும் என்பதே என் ஆவல்! அந்த ஆவலுக்கு ராகுல் கேட்டதைச் செய்தேன் என்ற பெருமிதம் ஒரு புறம் என்றால் நாஞ்சில் மனோவின் அவரின் ஆசியுரையைத் தொடர்ந்து !

இந்த தொடரில் அறிமுகமான அன்பு அண்ணன் மகேந்திரன் அவர்கள் தன் பல்வேறு பணிகளுக்கும் இடையில் அனுப்பியிருந்த நூல் அறிமுக உரை மின்நூலில் அணிந்துரையாக அலங்கரிக்கின்றது.


வணக்கம் சகோதரர் நேசன்,
இதோ என்னுடைய நூலுரை...
ஏதேனும் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள்...

மலையகத்தில் முகம் தொலைந்தவன்
என்ற வாசகத்தில் இருக்கும் உயிர்ப்பை சொல்லி மாளாது.
நட்பு என்பது ஒரு குடைக்காளான் போன்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.



ஆனால் நட்பு என்பது நற்கற்களில் செதுக்கிய சிற்பம் என்பது இந்த தொடரை படித்த பின் தான் தெரிந்துகொண்டேன்.
 தேடுதல் என்பது எப்போதும் நிற்காத ஒன்று. தேடுதலின் பொருள் அறிந்துகொள்ள விழைகையில் அதன் விளைச்சல்கள் யாவும் பாற்கடல் கடைய முற்பட்டு கிடைக்கும் பல்வேறு திரவியங்கள் போல விளைந்துகொண்டே இருக்கும். ஆயினும் விளையும் பொருளறிந்து தேடுவது ஒருவகை. இங்கே நட்பின் பிரபஞ்சத்தில் கையாளப்பட்ட தேடுதல்கள் மலையகத்தில் என்னை மலைக்கச் செய்தவை. போர்க்கால நெருக்கடிகளை நேரடியாய் கண்டதுபோல நெஞ்சை உருக்கும் காட்சிகளையும் மனதில் பஞ்சுப்பொதியாய் ஏற்றிவைத்திருக்கிறார் நூலாசிரியர். பொதுவாக ஒரு கதையில் வரும் கதாபாத்திரங்கள் பேசும் மொழிநடை மனத்தைக் கவரவேண்டும். அந்த வகையில் முழுக்க முழுக்க இலங்கைத் தமிழ் நடை கதை முழுதும் தீப ஒளியாய் நிறைந்து நிற்கிறது. வாழ்க்கைமுறை, நடை உடை பாவனைகள், கலாச்சாரம், பண்பாடு மற்றும் போற்றத் தகுந்த நாட்டுப்புறக் கலைகள் என எல்லா நிலைகளையும் அதன் நீல அகலங்கள் வரையறுத்து எழுதி இருக்கும் விதம் அஜந்தா ஓவியம் போல காலத்தால் அழியாதவைகள். கதாநாயகன் ராகுல் அறிமுகப் படுத்தப்பட்ட தினத்திலேயே நம் அகம் புகுந்து ஒட்டிபிறந்த இரட்டை போல அகத்தினில் கலந்துவிட்டார். மலையகத்தில் பல முகங்கள் தொலைந்திருந்தாலும் இந்தக் கதையின் நாயகன் அவரின் நினைவுகளை நம் நெஞ்சில் பதியமிட்டு சென்றுவிட்டார். நேசமிகு பாசமே மலையகம் விட்டு என்னகம் புகுந்த சகோதரர் நேசனே!! இக்கதை படித்தபின்னே எவ்வகம் நானிருப்பினும் செவ்வகம் தருவித்து மலையகம் வந்தடைந்தேன்!! தொலைந்துபோன நெஞ்சங்கள் அலையலையாய் என் நெஞ்சில் களைந்துவிட்டு போன கோலங்கள் ஏராளம்!! கோலங்களை ஒன்றிணைத்து கோளமாய் ஒருங்கிணைத்து கோமகன் நான் பாடிவந்தேன் மலையகப் புகழ்பாட!! தவறிப்போன தேடுதல்கள் தவிப்பாய் இருப்பினும் தடையிலாத நினைவுகள் தகதிமிதோம் போடுதே!! இன்றோர் ஆகமம் தேடுதலுக்காய் படைத்தாய் இன்னும் பல காவியங்கள் இயற்றமிழ் துணைகொண்டு இனிதாய் படைத்திடவே மனதிற்கினிய வாழ்த்துக்கள்!!
ஒரு மலைச்சாரலில் நடந்த கதையை வசந்த மண்டபம் வரை கொண்டு சேர்த்த பெருமை இந்த இணையத்துக்கு உண்டு! அதே போல மின்நூல் வெளியீட்டுக்கு எல்லாரையும் இணைத்த பெருமை இன்னும் என்ன தோழாவுக்கு உண்டு . அவரினைத்தொடர்ந்து மின்நூல் வெளியீட்டை கவிதாயினி குழந்தைநிலாஹேமா வெளியீடு செய்து வைத்தார். ! ஹேமா தளத்தில் இதில் வரும் சம்பவத்துக்கு காரணமான முக்கிய விடயங்களை கவிதையாக்கிய போது மின்னல்வரி கணேஸ் அண்ணா என்னைப்பாராட்டியதும் அவரின் நட்பும் இன்னொரு உந்து சக்தியானது.  அதே போல ஹேமா இந்த தொடருக்கு கவிதை விருந்து தந்ததும் இந்ததொடருக்கு ஒரு சிறப்பு நிகழ்வு.  கவிதை தந்த கரங்கள் மின்நூலையும் அவரின் வாழ்த்துரையுடன்.வெளியீட்டைச் செய்தார்!
முதலில் என் மனமார்ந்த வாழ்த்துகள் தனிமரத்துக்கு.தனிமரம் தனிமரமெண்டு பெரிய கூட்டம் வச்சிருக்கிறார்.அவரைப் புரிந்து அவர் இயல்போடு போனால் எம்மையும் புரிந்து இசைந்து கை கோர்க்கும் இனிய அன்பான சகோதரன்.மனம் நெகிழ்கிறேன் நேசன்.உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.நன்றி சொல்வதால் தூரமாகிவிடவில்லை.ஒரு சம்பிரதாயம் மட்டுமே ! "தனிமரம்" நேசனின் மடியில் "மலையகத்தில்
முகம் தொலைத்தவன்". மலையக குளிந்த நீரோடை வரப்பில் காற்றில் கை கோர்க்கும் சிநேகத்தின் சிறுகதை. புகையிலை மணமும் வரும் திடீரெனத் தேநீரும் தரும் உறவுகள் பின்னிப் பிணைக்க ஆச்சியும் வருவா அப்பு கள்ளும் குடிப்பார். அத்தையும் வருவா மாமாவுக்கு அடிக்கடி அடியும் நடக்கும் பெடியளுக்கு பேச்சும் விழும் பிறகு..... பெரும் சண்டையோடு குழறி அழுது ஒப்பாரி ஆனாலும் வெள்ளைத் தங்கமென கட்டிக் கொஞ்சும் அவள் கிழவி. எங்கள்..... ஈழமண்ணின் கடல் தெரியும் பின் கடும் போர் தெறிக்கும் இரத்தம் துடைத்தபடி கடல் கடக்கும் அகதிக் கதையும் கண்ணீருக்குள் கரையும். சின்னச் சின்னதாய் காதலும் வரும் ராகுலும் வருவார் காதலை இடைமறிக்க கரடிகளும் கடக்கும். விரியும் கதையில் பனித்துளியாய் நானும் இருந்தேன் யோகா அப்பா அம்பலம் ஐயா கலை ரெவரி கணேஸ் மகி மணி துஷி ரெவரி கலைவிழி சீனி ரமணி விச்சு நிரூ ஏஞ்சல் அதிரா எஸ்தர் k.s.s.ராஜா நாஞ்சில் மனோ என்று இன்னும் கனபேர்..... முதல் கோப்பி ஆருக்கெண்டு ஓடிப்போய் போட்டி போட்டுப் பாட்டும் கேட்டுக்கொண்டே தொடரும் வாசிப்பம் பிறகு கொஞ்சம் கும்மியும் அடிப்பம். மகரந்த ஒளி கக்கும் காதலனாய் ஆனான் மலையகத்தின் மணாளன் காலப்போக்கில் எங்களுக்கு!!! எழுத்து என்பது ஒரு தவம் விளையாட்டல்ல.மகிழ்வான நினைவலைகளையும் சேர்த்துக்கொண்டான் "மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் "மலையகத்தில் முகம் தொலைத்தவன்"அவனை....! அவனை நீங்களும் வாசித்து வாழ்த்தி வாழவைக்க வேண்டி மின்நூலாக வெளியிடுகிறோம்.நிரூ முன்னுரை சொல்லித் தொடக்கிவிட அத்தனை உறவுகளும் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்த இந்தத் தொடரை உங்களிடமும் கையளிக்கிறோம்.தனிமரம் நேசனின் ஞாபக சக்திக்கும் பாராட்டுக்கள்.அவரது அம்மாவும் முக்கிய உறுதுணை.எழுத்துப்பிழைகளைத் திருத்திய ஆசான் அம்மா அவருக்கும் நன்றிகள் சொல்லி இத்தொடரைப் பதிவிறக்க.....
 தொடரும்! 

20 comments :

செங்கோவி said...

வாழ்த்துகள் நேசரே..ஒரு தொடரை சுவாரஸ்யம் குன்றாது எழுதி வெற்றி பெற வைப்பது சாதாரண விஷயம் அல்ல..உங்கள் உழைப்பிற்கும் எங்களைக் கட்டிப்போட்டதற்கும் வாழ்த்துகள்...மின்னூலாக மட்டுமல்லாது புத்தகமாகவும் வரவேண்டிய தொடர் இது.

தனிமரம் said...

வாழ்த்துகள் நேசரே..ஒரு தொடரை சுவாரஸ்யம் குன்றாது எழுதி வெற்றி பெற வைப்பது சாதாரண விஷயம் அல்ல..உங்கள் உழைப்பிற்கும் எங்களைக் கட்டிப்போட்டதற்கும் வாழ்த்துகள்...மின்னூலாக மட்டுமல்லாது புத்தகமாகவும் வரவேண்டிய தொடர் இது.

14 August 2012 12:09 // வணக்கம் செங்கோவி ஐயா நீங்களா நீங்களா முதல் பால்க்கோப்பி வேண்டி தனிமரத்திடம் வருவது!ம்ம் உங்க ஆசிர்வாதம் போதும் புத்தமாக விரைவில் தருவேன் என ஐயன் வழிவிட்டால் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

ஹேமா said...

இன்னும் மீட்டிக்கொண்டே இருக்கிறீர்கள் நேசன்.வாழ்த்துகள்.இன்னும் இன்னும் எழுதும் வலிமை பெறுகிறீர்கள் என்பது மட்டும் உறுதி !

கவி அழகன் said...

Aha atputham valthukkal

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா உங்கள் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் என்னை பிரமிக்க வைக்கிறது மக்கா....!!!

வாழ்த்துகள் பலகோடி...!

Seeni said...

vaazhthukkal !
sakotharaa!

செய்தாலி said...

வாழ்த்துக்கள் தோழரே

Unknown said...

இது தொடர்பாக நானும் ஒரு தொடர் எழுதி வருகிறேன். வந்து பார்த்து கருத்து சொல்லுங்க நண்பரே.... எனது தளம்..
http://varikudhirai.blogspot.com

கடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் ........
சாதி அடிப்படையில் இழுத்து வரப்பட்ட தமிழர்கள்]
மண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3

K.s.s.Rajh said...

இந்த தொடரின் மூலம் பல உறவுகள் கிடைக்கப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பாஸ் இன்னும் பதிவுலகில் நீங்கள் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு

திண்டுக்கல் தனபாலன் said...

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...(TM 3)

தனிமரம் said...

இன்னும் மீட்டிக்கொண்டே இருக்கிறீர்கள் நேசன்.வாழ்த்துகள்.இன்னும் இன்னும் எழுதும் வலிமை பெறுகிறீர்கள் என்பது மட்டும் உறுதி !

14 August 2012 12:52 //எல்லாம் வலை உறவுகளின் ஆதரவுதான் ஹேமா இந்தளவு தனிமரம் வளற ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

Aha atputham valthukkal// நன்றி கவிக்கிழவன் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

ஆஹா உங்கள் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் என்னை பிரமிக்க வைக்கிறது மக்கா....!!!

வாழ்த்துகள் பலகோடி...!

14 August 2012 14:02 // அண்ணாச்சியின் ஆசிர்வாதம் .ஆதரவும் தான் இந்தளவு துணிவு ! நன்றி மனோ அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

vaazhthukkal !
sakotharaa!// வாழ்த்துக்கு நன்றி சீனி அண்ணா!

தனிமரம் said...

வாழ்த்துக்கள் தோழரே// நன்றி செய்தாலி வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

இது தொடர்பாக நானும் ஒரு தொடர் எழுதி வருகிறேன். வந்து பார்த்து கருத்து சொல்லுங்க நண்பரே.... எனது தளம்..
http://varikudhirai.blogspot.com

கடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் ........
சாதி அடிப்படையில் இழுத்து வரப்பட்ட தமிழர்கள்]
மண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3

14 August 2012 17:40 // நன்றி அருன்பிரசாத் தகவல் பகிர்வுக்கு

தனிமரம் said...

இந்த தொடரின் மூலம் பல உறவுகள் கிடைக்கப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பாஸ் இன்னும் பதிவுலகில் நீங்கள் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு

14 August 2012 18:50 // நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும் .

தனிமரம் said...

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...(TM 3)// வருகைக்கும் கருத்துரைக்கும்.நன்றி தனபாலன்

ஹாலிவுட்ரசிகன் said...

வாழ்த்துக்கள் நேசன். நமக்கு ஒரு பதிவை ஆரம்பித்து முடிப்பதற்குள் மூச்சு முட்டுது. அதுவும் பாதிக்கு மேல் மொக்கையாக வந்துவிடுகிறது. ஒரு தொடரை சுவாரஸ்யமாக கொண்டு போய் முடித்தும் விட்டீர்கள்.

பிரெஞ்சுகாதலியை ஆரம்பத்திலிருந்து தொடர்கிறேன். அதுவும் மின்னூலாக வர வாழ்த்துக்கள். :-)

ஆத்மா said...

நூல் வெளியீட்டையே ஒரு தொடராக பதிவிட்டு ஒரு புதுமையை ஏற்படுத்திவிட்டிர்கள்